search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தியானம்
    X
    தியானம்

    தினந்தோறும் தியானம் செய்ய வேண்டுமா?

    தியானம் மேற்கொள்வதை மகிழ்ச்சியான பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடன் ஒரு பணியை மேற்கொண்டால், அந்த பணியை தொடர்ந்து எளிதாக செய்ய முடியும்.
    நாகரீக யுகத்தில் நகரங்களில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு வேலைப்பளு, அலைச்சல் போன்ற பல்வேறு சிக்கல்கள் காரணமாக மன உளைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மன நிம்மதி இழப்பதோடு, பல்வேறு நோய்களிலும் சிக்கி அவதிப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்ய தியானம் செய்வது ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. தினமும் தியானத்தை கடைபிடிப்பது கடினமான செயல் என கருதுபவர்களுக்கு சில எளிதான ஐடியாக்கள்...

    1) நீண்டநேரம் தியானம் செய்தால்தான் சிறந்த பலன் கிடைக்கும் என்பது ஒரு தவறான கணிப்பாகும். அதாவது தொடர்ந்து 20 முதல் 30 நிமிடம் வரை தியானம் மேற்கொள்ள வேண்டும் என நினைக்க வேண்டாம். சில நிமிடங்கள் மட்டுமேகூட தியானம் மேற்கொண்டால் கூட சிறந்த பலன் கிடைக்கும். ஆனால், அதனை வழக்கமாக கடைபிடிக்க வேண்டும்.

    2) தியானம் மேற்கொள்ளத் தொடங்கும்போது முடிந்தவரை ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிப்பது நல்லது. அதேபோல், தொடர்ந்து 11 நாட்கள் தியானம் செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 11 நாட்கள் தியானம் செய்து முடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை வழக்கமாக்கிக் கொள்வர்.

    3) தியானம் மேற்கொள்ளும்போது சில நேரங்களில் தடங்கல்கள் ஏற்படலாம். அதனைத் தவிர்ப்பதற்காக குறைந்த அளவிலான நேரத்தை எடுத்துக்கொண்டு, இடைவேளை விட்டுவிட்டு தியானம் செய்ய முயற்சி செய்யலாம்.

    4) தியானம் மேற்கொள்ள ஏன் தொடங்கினோம் என அடிக்கடி நினைத்து பார்த்துக் கொண்டு, நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம் மேற்கொள்ளவதால், நமக்கு ஏற்படும் பயன்கள் என்ன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், தொடர்ந்து தியானம் மேற்கொள்வதை வழக்கமாகக் கடைபிடிக்க முடியும்.

    5) தியானம் மேற்கொள்வதை மகிழ்ச்சியான பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடன் ஒரு பணியை மேற்கொண்டால், அந்த பணியை தொடர்ந்து எளிதாக செய்ய முடியும்.
    Next Story
    ×