என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கோஸ் குருமா
    X
    கோஸ் குருமா

    கோஸ் குருமா செய்வது எப்படி?

    தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோஸ் குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைகோஸ் - கால் கிலோ,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 2,
    தேங்காய்த் துருவல் - 1 கப்,
    பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க:

    பட்டை, ஏலக்காய், லவங்கம் - தலா 1,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 4,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    பூண்டு - 1 பல்.

    கோஸ் குருமா

    செய்முறை :


    முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையையும் அரைத்துத் தனியே வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், சோம்பு, தனியா தூள், பூண்டை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும், முட்டைகோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

    இதனுடன் அரைத்த ப.மிளகாய், சோம்பு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.

    பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.

    சுவையான கோஸ் குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×