search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாயு கஞ்சி
    X
    வாயு கஞ்சி

    வாயுத்தொல்லையை போக்கும் கஞ்சி

    வாயுத்தொல்லை இருக்கும் போதும், கர்ப்பிணிகள் மாதமாக இருக்கும் போதும் இந்த கஞ்சியை பருகலாம். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :
     
    புழுங்கல் அரிசி - 1 கப்
    முருங்கைக்கீரை - 1/4 கப்
    தேங்காய் பால் - 1 கப்
    பால் - 1 கப்
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - 1 துண்டு
    சீரகம் - 1 1/2 ஸ்பூன்
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    பூண்டு கஞ்சி

    செய்முறை

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    அரிசியை தண்ணீரில் சுத்தம் செய்து குக்கரில் போட்டு 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றவேண்டும். கஞ்சி செய்வதால் தண்ணீர் 4 கப் ஊற்றவேண்டும்.

    கஞ்சிக்கு போதுமான அளவு உப்பு , பூண்டு, சீரகம், வெந்தயம், பால் கால் கப் சேர்த்து வேகவிடவேண்டும்.

    கஞ்சி கெட்டியாக சோறு பதத்தில் வெந்து இருப்பதால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மீதமுள்ள பால், முருங்கை இலை, ஆகியவற்றை கலந்து மீண்டும் நன்றாக வேகவிட்டு உப்பு சரிபார்த்து இறக்கினால் வாயுக்கஞ்சி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×