search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உத்தான பாதாசனம்
    X
    உத்தான பாதாசனம்

    கர்ப்பப்பையை வலுவாக்கும் உத்தான பாதாசனம்

    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் அடி வயிற்றில் அதிகமாக இருக்கும் தசைகள் குறையும். கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை : விரிப்பில் மல்லாந்து படுக்கவும். கால்களை ஒட்டி வைத்துக்கொண்டு கைகளையும் உடலோடு சேர்த்து வைத்துக்கொள்ளவும். இப்போது மெல்ல மெல்ல முழங்கால்களை மடிக்காமல் பாதங்களை மட்டும் தரையில் இருந்து ஓரடி உயரத்துக்குத் தூக்கவும்.

    நன்கு செங்குத்தாக 90* கோணத்தில் தூக்குவது எளிது. ஆகையால் அவ்வாறு தூக்காமல் தரையிலிருந்து ஒன்றரை அடிக்கு மேல் தூக்காமல் பார்த்துக்கொள்ளவும். அதிக நேரம் இவ்வாறு இருப்பது கஷ்டமானது. அடி வயிற்றில் நடுக்கம் போல் உணர ஆரம்பிப்போம்.

    அப்போது மெல்ல மெல்லப் பாதங்களைக் கீழே இறக்கவும். பாதங்களை மேலே தூக்குகையில் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு பாதங்களைக் கீழே இறக்குகையில் மெல்ல மெல்ல மூச்சை விட வேண்டும். பின்னர் சற்று ஆசுவாசம் செய்து கொண்டு மீண்டும் முயல வேண்டும். இம்முறை கொஞ்சம் அதிக நேரம் பாதங்களை உயரத் தூக்கி வைக்கப் பழகலாம். இந்த ஆசனம் செய்வது உண்மையில் கடினமான ஒன்று.

    பயன்கள் : அடி வயிற்றில் அதிகம் இருக்கும் தசைகள் குறையும். கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்கும். சிறுநீர்ப்பை தூண்டப்பட்டு தொந்தி இருந்தால் குறையும். இளம் மாணாக்கர்களுக்கு இது நல்லதொரு பயிற்சி. நினைவாற்றல் தூண்டப்படும்.
    Next Story
    ×