என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து சரிவிகித உணவாக தேர்வு செய்து உண்ணவேண்டும்.
    பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து சரிவிகித உணவாக தேர்வு செய்து உண்ணவேண்டும். அவற்றுள் சில.

    கருப்பு உளுந்து

    களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்து பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் இயங்கவும் கறுப்பு உளுந்து உதவும்.

    நல்லெண்ணெய்

    ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு நல்லது.

    நாட்டு முட்டை

    பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான புரதம், கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். பச்சை முட்டையை தவிர்க்க வேண்டும்.

    அசைவ உணவுகள்

    மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கீரை வகைகள்


    ரத்தச்சோகை வராமல் இருக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பாகற்காய், சுண்டைக்காய்


    சில பெண் குழந்தைகளுக்கு உடலில் ரத்த அளவு குறைவால் மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம்.

    உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. இந்த பூச்சிகளால் இரத்த சோகை ஏற்படும் என்பதால் மருத்துவரை அணுகி பூச்சி மாத்திரைகள் உண்ணலாம்.

    சத்துமாவு உருண்டை

    கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு என நவதானியங்களால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை தினமும் சாப்பிட கொடுக்க வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

    கொண்டைக்கடலை

    கருப்பு கொண்டைக் கடலையை வேகவைத்தோ அல்லது முளைக்க வைத்தோ வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

    சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும். சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும். 
    பாலக்கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, இரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - 2 கைப்பிடி,
    துவரம்பருப்பு - 1/4 கப்,
    பூண்டு பற்கள் - 4,
    தக்காளி - 2
    ப.மிளகாய் - காரத்திற்கு
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    தாளிக்க :


    காய்ந்த மிளகாய் - 2
    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்.

    பாலக்கீரை பருப்பு கூட்டு

    செய்முறை :

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

    தக்காளியை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    துவரம்பருப்பை நன்றாக கழுவி மஞ்சள்பொடி, பூண்டு, சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு மலர வேகவைத்து எடுக்கவும்.

    வேக வைத்த பருப்புடன் பாலக்கீரையை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பாலக்கீரையை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி மத்தினால் மசித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து பருப்புடன் கீரையில் சேர்த்து நன்றாக கலந்து இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான பாலக் கீரை பருப்பு கூட்டு ரெடி.

    இந்தப் பாலக் கீரை கூட்டை சப்பாத்திக்கு சைடு டிஷ் ஆகவும், மதிய உணவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கை, கால்களில் உள்ள எலும்புகளையும், தோள்பட்டை எலும்புகளையும் ஆஸ்டியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த எலும்புத் தொற்று தாக்கக்கூடும்.
    துடுக்குத்தனமும், அதிக சுறுசுறுப்பும் உள்ள குழந்தைகளை அனைவருமே விரும்புவர். ஆனால் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் மீது தனிகவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். குழந்தைகளுக்கு தவறி கீழே விபந்து அடிபட்டு, இரத்தக் காயம், வெட்டுக் காயம் போன்றவை ஏற்பட்டு விடுகிறது. மோசமான மிகவும் ஆழமான வெட்டுக் காயங்களால் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்த நோய் தொற்றுகள் சில சமயம் எலும்புகளைப் பாதித்து ஆஸ்டியோமைலிட்டிஸ் என்கின்ற எலும்பு தொற்று நோயை உருவாக்கும். இந்த எலும்பு தோற்றினை ஸ்டெப்பெல்லோ காக்கஸ் ஏரியஸ் என்கின்ற பாக்டீரியாவே பொதுவாக ஏற்படுத்து கிறது.மேலும் பல பாக்டீரியாக்களினாலும் கூட ஏற்படலாம். அவை நோயாளியின் வயது நோயாளியின் தாக்கப்பட்டுள்ள எலும்புகளையும் பொறுத்ததே.

    குழந்தைகளுக்கு கை, கால்களில் உள்ள எலும்புகளையும், தோள்பட்டை எலும்புகளையும் ஆஸ்டியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த எலும்புத் தொற்று தாக்கக்கூடும்.

    எலும்புகளில் தொற்று எப்படி ஏற்படுகிறது?

    எலும்புகளில் பாக்டீரியா தொற்றுவது பல வழிகளில் ஏற்படுகிறது. உடலில் பாக்டீரியாவனது ஒரு இடத்தில் தொற்றிக் கொண்ட பிறகு இரத்த நாளங்களின் வழியாக எலும்புகளுக்குள் நுழைகின்றன. இதற்கு யஹமட்டோஜெனஸ் ஆஸ்டியோ மைலிட்டிஸ் என்று பெயர் பெரும் பாலானவர்களுக்கு இந்தத் தொற்றே ஏற்படுகிறது.

    சில சமயம் நோயின் மேற்பகுதியில் ஏற்படும் மிக மோசமான/ஆழமான வெட்டுக் காயங்களின் வழியாக உடலுக்குள் நுழையும் பாக்டீரியா க்கள் திசுக்களின் ஊடாகவும், எலும்புகள் உடைந்து தோலின் மேற்பகுதி வரை தெரியுமளவிற்கு ஏற்படும் காயங்கள் மூலமும் ஆஸ்டியோமைலிட்டிஸ் உருவாக காரணமாக ஆகி விடுகிறது.

    வயதானவர்களிடம் கால் மற்றும் பாதங்களில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அந்த இடத்தில் நடைபெறும் ரத்த ஒட்டத்தினாலும் இந்தத் தொற்று ஏற்படலாம்.

    இதன் நோய் அறிகுறி குணங்கள என்ன?

    (ஆஸ்டியேமைலிட்டிஸ்) எலும்புகளில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விட்டது என்றால் பாதிக்கப்பட்ட எலும்புகளில் அதிக வலி ஏற்படும். அந்த இடத்தைச் சுற்றிலும் கதகதப்பாக இருக்கும். சிலபேருக்கு காய்ச்சல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படலாம். பாதிக்கப்பட்ட எலும்புகள் மேற்புறத் தோலில் புண்கள் ஏற்படலாம், அல்லது சிவந்து வீங்கியும். தடித்தும் இருக்கலாம்.

    ஆனால் குழந்தைகளிடம், பச்சிளம் சிறார்களிடமும் இது எந்த ஒரு வலியோ மேற்குறிப்பிட்ட அறிகுறிகளையோ இது வெளிப்படுத்தாது. மேலும் வயதான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக் குழாய்கள் நரம்புகளால் இந்த வலியை உணர முடிவதில்லை.

    மருத்துவ சிகிச்சைகள் என்ன?

    பாதிக்கப்பட்ட எலும்புகளில் வலி அல்லது வீக்கம், ஆனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரை கலந்து ஆலோசிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால் ஆஸ்டியோ மைலிட்டிஸ் நமது எலும்புகளுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கும் என்பதனை மறந்து விட கூடாது.

    நாம் மருத்துவரை அணுகும் பட்சத்தில், அவர் நமது உடலை பரிசோதித்து பாதிக்கப்பட்ட இடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காயங்கள், எலும்புகள் முறிவுகள் பற்றி சில கேள்விகளையும், விபரங்களையும் கேட்பர். அலர்ஜி, மற்றும் வேறு ஏதாவது நோய்க்கான சிகிச்சைகள் ஏதும் எடுத்துக் கொண்டிருக்கிறோமா என்பதனையும் தெரிந்து கொண்ட பிறகு, இரத்தப் பரிசோதனையை செய்ய வேண்டும்.

    இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையின் மூலமும் நோய் தொற்று உள்ளதா என கண்டறிய முடியும்.திடீரென தோன்றி மறையும் ஆஸ்டியோ மைலிட்டிஸ் எலும்பு எக்ஸ்ரே போன்றவற்றின் மூலம் கண்டறிய முடியும் என்றாலும், எலும்புகளில் பாக்டீரியா தொற்று இருப்பதை உறுதி கேட்பதற்காக மருத்துவர் போன் ஸ்கேன் செய்ய வேண்டும் என அறிவுறுத்துவர் எலும்பு ஸ்கேன் மூலம் துல்லியமாக நோய் பாக்டீரியாவை க்ணடறியலாம். சில பேருக்கு னியூணூ ஸ்கேன் எடுக்கச் சொல்வது ஏனென்றால் எவ்வளவு தூரம் எலும்புகளில் பாக்டீரியா பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது என்பதை கண்டறிவதற்காகத்தான்.

    இதற்கான சிகிச்சைகள் தற்போது தாராளமாக அனைத்து நகரங்களிலும் கிடைக்கின்றன. பாதிக்கப்பட்ட எலும்புப் பகுதியில் இருந்த ஊசி மூலம் பாக்டீரியாவினை எடுத்து அது எந்த வகையான பாக்டீரியா என சோதனை மூலம் கண்டறியப்படும் அதன் பிறகு அதற்கு தந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படும்.

    மேலும் சில பேருக்கும் எலும்புகளில் துளை சிதைவு ஏற்பட்டு, சீழ் பிடித்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட எலும்பு சிதைவுகளில் உள்ள சீழ், போன்றவற்றை வெளியே எடுத்து விடுவதன் மூலம், அந்த எலும்புப் பகுதி சுத்தம் அடைகிறது. இதனால் விரைவாக குணமடையலாம்.

    ஆஸ்டியோ மைலிட்டிஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தால் உங்களுக்குத் மருத்துவமனையில் தங்கி ரத்த நாளங்களின் ஊடாக ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டு தொற்றினை எதிர்த்து அழிக்க வேண்டியது இருக்கலாம். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் (வாய் வழியாகப் மாத்திரை மூலம் சில வாரங்களுக்கு ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோய் வருவதற்கு காரணமான ஆழ்ந்த வெட்டுக் காயங்கள் இரத்தக் காயங்கள் போன்றவை ஏற்படும். பட்சத்தில் சோப் அல்லது குழாயில் ஊற்றும் நீரினால் நன்றாக குறைந்தது 5 நிமிடம் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு காயம்பட்ட இடத்தில் ஆன்டிபயாடிக் கிரீம் தடவ வேண்டும்.

    அக்காயத்தை சுத்தமாக வைக்க கிருமிகள் நீக்கப்பட்ட வலைத்துணியால் மூட வேணடும். அதில் கிருமிநாசினி மருந்தை தடவ வேண்டும். ஒன்றில் மட்டும் கவனம் தேவை. காயம் ஆறாமல் இருந்தாலோ அல்லது அதில் தொடர்ந்து வலி இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
    எவ்வளவு அதிக எடை இருக்கிறீர்கள் என்று கணக்கிட்டு அந்த எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளைத் தீவிரமாகச் செய்ய வேண்டும்.
    தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையில் உடலுக்கு உடற்பயிற்சி என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

    என்ன தான் ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தாலும், உடற்பயிற்சியின் மூலமே உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

    எடையைக் குறைத்து உடலை சிக்கென வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகள் இருக்கின்றன. தொந்தி உள்ளவர்கள் மனிதனுக்கு இருக்க வேண்டிய இயற்கையான ஒரு நல்ல தோற்றத்தை இழக்கிறார்கள். அவர்கள் செய்யும் வேலையின் திறன் குறைகிறது. அசைவினிமித்தம் சில அவசர நேரங்களில் சில சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள்.

    பல விளையாட்டு வீரர்கள்கூட மிகவும் தீவிரமாய்ச் சில செய்துவிட்டுப் பின்னர்த் தொந்தியோடு வாழ வேண்டியுள்ளது. உடற்பயிற்சி, வயதிற்குத் தகுந்தபடி மாற்ற வேண்டும். தவிர, ஒரு நாளும்பயிற்சியை விட்டுவிடக்கூடாது. வயிற்றுக்கென்று பயிற்சிகள் செய்தால் வயிறு குறைந்து விடும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். முழு உடம்புக்கும் பல பயிற்சிகளையும் செய்து வயிற்றுக்கும் விசே பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

    எவ்வளவு அதிக எடை இருக்கிறீர்கள் என்று கணக்கிட்டு அந்த எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளைத் தீவிரமாகச் செய்ய வேண்டும்.

    l. Power Walking பவர் வாக்கிங் 35 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே இதைச் செய்யலாம். ஒவ்வொரு கையிலும் ஒரு பவுண்டு எடையை வைத்து கையை நீட்டி வேகமாக நடத்தல்.

    2. நீந்துதல் பயிற்சி

    3. படிகளில் ஏறி இறங்குதல்

    4. ஜாக்கிங் அல்லது மெதுவாக ஒடுதல்

    5. லெக் ரெய்ல் – தினசரி படுத்துக்கொண்டு கால்களை 90 டிகிரிக்கு இடுப்பிலிருந்து உயர்த்தி மெதுவாகத் தரைக்குக் கால்களை இறக்கும் பயிற்சி 10 தடவையாக 5 செட்டுகள் செய்ய வேண்டும்.

    6. கிரஞ்சஸ் (Crunches) கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு கால் மூட்டுகள் மடங்காமல் யாரையாவது பிடிக்க வைத்து இடுப்பிலிருந்து பின்மேல் உடம்பைத் தரையிலிருந்து மேலே கொண்டு வருவது, பின் தரையில் படுப்பது.

    7. குட்மார்னிங் பயிற்சி நேராக நின்று இடுப்பில் கைகளை வைத்துக் குனிந்து நிமிர்வது.

    8.சைட் பெண்ட்ஸ்(Side Bends) : @ TGöðr@ டம்பெல்களை இரு கைகளில் பிடித்துக்கொண்டு நின்று இரு பக்கங்களிலும் சரிந்து நிமிர்வது

    9. குனிந்து முழு உடலையும் வளைத்துத் தரையைத் தொட முயற்ச்சிப்பது.(Toe Touching)

    ஸ்டெப்பர் பயிற்சிகள்
    TWister இல் பயிற்சிகள்
    உட்கார்ந்து எழும்பும் பயிற்சி – Free Squats
    காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது வயிற்றை உள்ளிழுத்து இழுக்க முயற்சி செய்து மெதுவாக மூச்சுவிட வேண்டும்.

    Horizontal Bar இல் தொங்கிக் கொண்டு காலை 45 டிகிரிக்குத் தூக்குவது. அதிகாலையில் தண்ணிரில் சிறிது தேன் கலந்து அருந்தலாம். இனிப்பு வகைகள், கொழுப்புச் சத்துள்ள உணவுகள், எண்ணெய், நெய் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். உட்கொள்ளும் உணவின் கலோரி அளவுகளைக் குறைத்து உடற்பயிற்சி மூலம் எரிக்கும் கலோரிகளைக் கூட்ட வேண்டும். மனம் தளராது தினமும் 1 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்டமன் வைப்ரேட்டர் மூலம் வயிற்றுக்கு மசாஜ் கொடுக்கலாம். எண்ணெய் பூசி வயிற்றுப் பகுதியைத் தேய்த்து மாலிஷ் செய்யலாம்.

    நீங்களே உங்கள் வயிற்றை உள்ளுக்கு இழுக்க முயற்சி செய்து கைகளை வைத்து உரசி மசாஜ் செய்யலாம். எல்லா வயிற்றுக்குமுரிய பயிற்சிகளும் தினமும் செய்ய வேண்டும்.

    1. தண்ணிர் குடிப்பதைக் கட்டுப்படுத்தினால் தான் தொந்தி குறையும் என்பது தவறு.

    2. தண்ணிர் நிறைய குடிப்பது நல்லது. அதனால் தொப்பை வராது.

    3. மலச்சிக்கல் இருக்கக்கூடாது. அடிக்கடி காபி, டீ அருந்தக்கூடாது. அதில்சேரும் சர்க்கரை மூலம் அதிக கலோரிகள் உடலில் சேர்ந்து கொழுப்பாக மாறும். மேற்கண்ட காரியங்களைக் கைக்கொண்டு, எந்த

    வயதிலும் தொப்பை இல்லாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

    பணி புரியும் ஊர் அல்லது புற நகர் பகுதிகளில் வீட்டு மனை வாங்க விரும்புபவர்கள், இடத்தை தேர்வு செய்வதற்கு முன்னர் அடிப்படையான சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
    பணி புரியும் ஊர் அல்லது புற நகர் பகுதிகளில் வீட்டு மனை வாங்க விரும்புபவர்கள், இடத்தை தேர்வு செய்வதற்கு முன்னர் அடிப்படையான சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    அதனால் பின்னர் ஏற்படக்கூடிய பல சங்கடங்களை தவிர்க்க இயலும். அத்தகைய தகவல்கள் அடங்கிய ‘செக் லிஸ்ட்’ பற்றி ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதை இங்கே பார்க்கலாம்.

    * மனைப்பிரிவில் உள்ள தண்ணீர் வசதி

    * சாலை வசதிகள் அமைந்துள்ள விதம்

    * நகரின் முக்கியமான சாலைக்கும், மனைப்பிரிவுக்கும் உள்ள தூரம்

    * அடிப்படை மருத்துவ வசதிகள்

    * அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல வேண்டிய தொலைவு

    * மனைப்பிரிவு அமைந்துள்ள திசை

    * சாலைப் போக்குவரத்து வசதிகள்

    * நிலத்தடி நீர் மட்டம்

    * சாக்கடை வசதிகள்

    * மனைப்பகுதி இடத்தின் முந்தைய பயன்பாடு

    * அருகில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள்

    * அரசின் திட்டங்கள் அருகில் செயல்படுத்தப்பட உள்ள வாய்ப்புகள்

    * மனையின் அதிகபட்ச விலை

    * டி.டி.சி.பி அங்கீகார எண்

    இனிப்புகளுக்கு பெயர் போன வட இந்தியாவில் பேதா எனும் வெள்ளைபூசணியில் செய்யும் இனிப்பு செய்வதற்கு சுலபம். அதேசமயம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளை பூசணி - 800 கிராம்
    தண்ணீர் - 2 லிட்டர்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 600 கிராம்

    வெள்ளைப் பூசணி முரப்பா

    செய்முறை :

    வெள்ளை பூசணிக்காயை தோல் சீவி, விதை நீக்கி, பெரிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு முள் கரண்டியால் நறுக்கிய துண்டுகள் முழுவதும் குத்தி எடுக்கவும். சர்க்கரைப்பாகை உறிஞ்சி கொள்ள ஏதுவாக இருக்கும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

    இந்த எலுமிச்சை நீரில் நறுக்கிய பூசணி துண்டங்களை 20 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நீரை வடிகட்டி துண்டங்களை எடுத்து தனியே வைக்கவும்.

    வேறொரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் பூசணி துண்டங்களை எலுமிச்சையின் புளிப்பு போகும் வரை அலசி எடுக்கவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து பூசணி துண்டுகள் வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கண்ணாடி போல் பூசணித்துண்டுகள் வேகும் வரை வேகவிடவும்.

    ஒரு பாத்திரத்தில் 600 கிராம் சர்க்கரைக்கு 400 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதிக்கும் சர்க்கரை நீரில் பூசணி துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.

    இந்த சர்க்கரை நீரிலே எட்டு மணிநேரம் விடவும்.

    எட்டுமணி நேரம் கழித்து வெள்ளை பூசணி துண்டுகளை ஒர் இரவு முழுவதும் உலரவிடவும்.

    தயாரான இனிப்பை குளிர்சாதன பெட்டியில் வைத்து கூட உண்ணலாம்.

    சுவையான வெள்ளைப் பூசணி முரப்பா

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.
    கல்வியும், மருத்துவமும் வணிகமயமாகிவிட்டால் மிகப் பெரிய பண்பாட்டு வீழ்ச்சி ஏற்படும். மிருக உணர்வுகளும் வளர்ந்து விடும். எனவேதான், அரசு கல்வியையும், மருத்துவத்தையும் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றிருந்தன. இன்று அரசாங்க மருத்துவமனையை நம்பிச் செல்கிறவர்களைவிட, தனியார் ஆஸ்பத்திரிகளை நோக்கிச் செல்கிறவர்கள்தான் அதிகம் என்ற நிலை உள்ளது.

    ஒரே வகையான மருந்துகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப பெரும் விலை வேறுபாட்டுடன் சந்தையில் உள்ளன. மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் சில வகையான மருந்துகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. “ஜெனரிக் மெடிசன்ஸ்‘ (மூலப்பொருள் பெயரிலான மருந்துகள்) அதிகம் பிரபலமாகாத நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை.

    ஆனால், முறையான அனுமதி பெறாமல் இந்தியா முழுவதும் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருவதாக ஒரு மருத்துவர் தெரிவித்ததோடு, மேலும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளையும் கூறினார். உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள பல மருந்துகள் நம் நாட்டில் தங்கு தடையின்றி சந்தையில் விற்கப்படுகின்றன. காலாவதியான மருந்துகளையும் காசாக்கும் தகவல்கள் பதற வைக்கின்றன. காலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.

    மருந்துக் கடைகளில், காலாவதியாகி தேங்கிவிட்ட மருந்துகளை ஒரு கும்பல் சேகரித்துச் சென்று காலாவதி தேதியை மாற்றி, புது லேபிள் ஒட்டி, மறுசுழற்சி செய்கின்றனவாம். பொதுவாக மருந்தை வாங்கியதும், காலாவதி தேதியை முதலில் பார்ப்போம். தேதியே போலியானது என்றால் என்னதான் செய்வது?. எந்த மருந்து வாங்கினாலும், அதற்கு பில் வாங்க வேண்டும்.

    மருந்து குறித்து சந்தேகம் இருந்தால், மருந்தின் மேற்புறம் அச்சிடப்பட்டுள்ள பேட்ச் எண்ணை, மருந்து நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பதிவு செய்தால், உண்மையான காலாவதி தேதி தெரிந்துவிடும். ஒருசமயம், பேட்ச் எண்ணே போலியாக இருந்தால், எந்தத் தகவலும் வராது. அந்த விவரங்களை நகல் எடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். எல்லா நோயாளிகளுக்கும் இயல்கிற செயலா இது?.

    மருத்துவர்கள் எழுதும் மருந்துகள், அவற்றின் பயன்கள் குறித்து மருத்துவரிடம் நோயாளிகள் கேட்க வேண்டும். மருத்துவர் தரும் மருந்துச் சீட்டில் நோயின் தன்மை, பெயர் எழுதப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். இவ்வாறு நோய் குறித்த விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயம். வெளியூரில் அந்த மருந்து கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சில மருந்து நிறுவனங்கள் மருத்துவர் குறிப்பிடும் பெயர்களிலேயே மருந்து தயாரித்துத் தருகின்றனவாம். குணமாக்கும் மருத்துவத்தையும், மருந்துகளையும் கொண்டு பணமாக்க மட்டுமே பயன்படுத்துவது வேதனையானது என சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டாமல் இல்லை. 
    குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் குடிக்கும் போது, குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சி குறைவாக இருந்தால், இணை உணவுகளை 4-ம் மாதமே கொடுக்க ஆரம்பிக்கலாம்.
    தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைக்கு 4-5 மாதங்கள் ஆனவுடன் வாயில் உமிழ்நீர் ஒழுக ஆரம்பித்து விடுகிறது. கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து வாயில் வைத்து கடித்துப் பார்க்கிறது. தாய்ப்பால் தவிர மற்ற திட, திரவ உணவுகளை கொடுக்கும் நேரம் வந்து விட்டது. அவ்வாறு கொடுக்கும் உணவுகள் எல்லாமே இணை உணவுகள்தான்.

    குழந்தையின் ஜீரண மண்டலம் தாய்ப்பால் தவிர மற்ற திட உணவுகளையும் ஜீரணிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து விடுகிறது. 6 மாதம் வரையிலும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து விட்டு பிறகு இணை உணவை ஆரம்பிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் குடிக்கும் போது, குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சி குறைவாக இருந்தால், இணை உணவுகளை 4-ம் மாதமே கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    முதல் ஆறு மாதங்கள் வளர்வதற்கு தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் மட்டுமே போதும். அதற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு அதிகப்படியான கலோரிகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், தேவைப்படுவதால் இணை உணவு முக்கியமானதாக ஆகிவிடுகிறது.

    சரியான காலத்தில் இந்த இணை உணவை அறிமுகப்படுத்தாமல் காலம் கடந்து அறிமுகப்படுத்தினால் குழந்தைக்கு சத்துக் குறைவு ஏற்பட்டு இரத்த சோகை, வளர்ச்சியில் குறைவு முதலியன வந்து விடும். தேவையெனில் மட்டுமே ஆறு மாதங்களுக்கு முன்பு இணை உணவு கொடுக்க வேண்டும்.

    அதற்கு முன்பு அறிமுகப்படுத்தினால் குழந்தைக்கு தாய்ப்பாலின் சத்துக்கள் சென்றடையாது. மேலும் குழந்தைக்கும் இணை உணவு ருசியால் தாய்ப்பாலின் மீது உள்ள நாட்டமும் குறைந்து விடும். இணை உணவுகள் குழந்தைக்கு உணவை மென்று முழுங்கும் திறமையை மெல்லக் கற்றுக் கொடுக்கிறது. சரிவிகித சத்துக்கள் நிறைந்த உணவுகளை இணை உணவாக கொடுங்கள்.
    பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்க கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம். இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்!
    வழவழப்பான, பொலிவுடன் கூடிய முகத்தை பெறத்தான் விதவிதமான கிரீம்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் ஹார்மோன் குளறுபடி மற்றும் பிற காரணங்களால் பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். அதனை எப்படி நீக்குவது என்று பலவிதமான கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்ந்து விடாது. இயற்கை பொருட்களில் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு இரண்டும் வரப்பிரசாதம். இவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்!

    கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும்.

    உடனடியாக முடி நீங்கி விடாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நாளடைவில் போகும். ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது, சந்தையில் கிடைக்கும் ஹேர் ரிமூவர் லோஷன்களைப் போட்டு, இந்த தேவையற்ற முடிகளைப் போக்கிய பின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம்.

    தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், உலர்ந்த துளசி பவுடர் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    நாட்டு மருந்து கடைகளில் கோரைக்கிழங்கு பொடி கிடைக்கும் அதனை வாங்கி வந்து கை, கால்களில் நீரில் கலந்து தேய்த்து வந்தால் தேவையற்ற முடிகள் நீங்கும். நாளடைவில் முடி வளர்ச்சி மட்டுப்படும். 
    தினசரி ஒரே மாதிரி உண்ணாமல், வித்தியாசமான அதேசமயம் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த கேழ்வரகு, முருங்கைக் கீரை சேர்த்த தோசையை செய்து உண்ணலாம்.
    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - 1/4 கிலோ
    முருங்கைக் கீரை - கைப்பிடியளவு
    வெங்காயம் - 2
    பச்சரிசி - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    ராகி முருங்கைக்கீரை தோசை

    செய்முறை

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)

    பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

    அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.

    தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு விதமான புற்றுநோய்கள் பெண்களை தாக்குகிறது. ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் உஷாராகும் போது வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும்.
    பெண்களின் வலி தாங்கும் திறன் ஆணை விட அதிகம். நான்கைந்து அறுவைச் சிகிச்சை செய்த பெண் அசால்ட்டாக இருப்பாள். அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு குடும்பத்தினரை கவனிப்பாள். இரண்டு நாள் காய்ச்சலுக்கு வீட்டை அதகளம் பண்ணும் ஆண்களும் உண்டு.

    நாப்பது வயதை எட்டும் போது பெரும்பாலும் பெண்கள் உடலும், மனமும் சோர்ந்து வியாதிகளின் கூடாரமாக மாறிப்போவது தான் கொடுமை. வாழ்க்கைச் சூழல் குழந்தைகளையும், கணவரையும் வெளிச்சத்தில் நடமாட மனைவியை மெழுகாக உருக்கி விடுகிறது. ஏழை வீட்டு மனைவியும் எட்டடுக்கு வீட்டு கோடிஸ்வரன் மனைவியும் ஒரே விதமான மன அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள். புலம்பி எதுவும் மாறப்போவதில்லை பெண்ணே! நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

    பல்வேறு விதமான புற்றுநோய்கள் பெண்களை தாக்குகிறது. ஆரம்பக்கட்ட அறிகுறிகளில் உஷாராகும் போது வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும்.

    மார்பக காம்புகளில் ஏதாவது மாற்றம், தோல் சிவந்து அல்லது திடிரென ஆரஞ்சு பழத்தோல் மாதிரி சொரசொரப்பாக மாறுவது, நிப்பிள் இருந்து இரத்தம் கலந்த நீர் வடிதல், வலியற்ற கட்டிகள், வீக்கம், மார்பகங்கள் அளவில் மாற்றம்.

    சிறு மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாதீர்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மார்பக சுயப்பரிசோதனை செய்யுங்கள்.

    மெனோபாஸ்க்கு பிறகு ஏற்படும் இரத்தப் போக்கு ஓவரியில் உள்ள புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

    உடலுறவுக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு, மலம், சிறுநீரில் இரத்தத்திட்டுக்கள் வெளிப்படுவது.

    விடாத இருமல், தொடர்காய்ச்சல்
    திடீரென எடைக்குறைவு, பசியின்மை, சோர்வு
    அடிவயிற்றில் வலி
    அடிக்கடி காய்ச்சல் தோன்றுதல்
    கழுத்து, அக்குள், கை மடிப்பில் உள்ள தோலில் திட்டுக்கள் (skin bruises)
    மச்சத்தில் ஏதேனும் மாற்றங்கள்

    அறிகுறிகள் உடல் எதிர்க்கொள்ளவிருக்கும் அபாயத்தின் எச்சரிக்கை மணிகள் எனவே அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுங்கள்.
    தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
    நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கு சீரான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியமாகிறது. செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கங்களுக்கு உட்பட அனைத்திற்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.

    நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் இயக்கம் கொடுப்பதாக இருக்க வேண்டும், எனவே ஒருநாளைக்கு 30 முதல் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

    வியர்த்தால் தான் கொழுப்பு குறையும் என்பதற்காக வியர்க்க, வியர்க்க உடற்பயிற்சி செய்வதில் பலனில்லை. எனவே நல்ல காற்றோட்ட வசதி இருக்கும் இடத்தில் உடற்பயிற்சி செய்யலாம், அதேபோல் உடற்பயிற்சி செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    ஏனெனில் அவ்வாறான சமயங்களில் உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, அதை சமன்படுத்த போதுமான அளவில் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது.

    அதேவேளை குளிர்ச்சியான நீரை அருந்த கூடாது, அது உஷ்ணத்தை மேலும் அதிகரித்துவிடும். எவ்வாறாயினும் தவறாமலும், ஒழுங்காகவும் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.
    ×