search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாலக்கீரை பருப்பு கூட்டு
    X
    பாலக்கீரை பருப்பு கூட்டு

    புரத சத்து நிறைந்த பாலக்கீரை பருப்பு கூட்டு

    பாலக்கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, இரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - 2 கைப்பிடி,
    துவரம்பருப்பு - 1/4 கப்,
    பூண்டு பற்கள் - 4,
    தக்காளி - 2
    ப.மிளகாய் - காரத்திற்கு
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    தாளிக்க :


    காய்ந்த மிளகாய் - 2
    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்.

    பாலக்கீரை பருப்பு கூட்டு

    செய்முறை :

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

    தக்காளியை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    துவரம்பருப்பை நன்றாக கழுவி மஞ்சள்பொடி, பூண்டு, சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு மலர வேகவைத்து எடுக்கவும்.

    வேக வைத்த பருப்புடன் பாலக்கீரையை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பாலக்கீரையை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி மத்தினால் மசித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து பருப்புடன் கீரையில் சேர்த்து நன்றாக கலந்து இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான பாலக் கீரை பருப்பு கூட்டு ரெடி.

    இந்தப் பாலக் கீரை கூட்டை சப்பாத்திக்கு சைடு டிஷ் ஆகவும், மதிய உணவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×