search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெள்ளைப் பூசணி முரப்பா
    X
    வெள்ளைப் பூசணி முரப்பா

    நாவில் கரையும் வெள்ளைப் பூசணி முரப்பா

    இனிப்புகளுக்கு பெயர் போன வட இந்தியாவில் பேதா எனும் வெள்ளைபூசணியில் செய்யும் இனிப்பு செய்வதற்கு சுலபம். அதேசமயம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளை பூசணி - 800 கிராம்
    தண்ணீர் - 2 லிட்டர்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 600 கிராம்

    வெள்ளைப் பூசணி முரப்பா

    செய்முறை :

    வெள்ளை பூசணிக்காயை தோல் சீவி, விதை நீக்கி, பெரிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு முள் கரண்டியால் நறுக்கிய துண்டுகள் முழுவதும் குத்தி எடுக்கவும். சர்க்கரைப்பாகை உறிஞ்சி கொள்ள ஏதுவாக இருக்கும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

    இந்த எலுமிச்சை நீரில் நறுக்கிய பூசணி துண்டங்களை 20 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நீரை வடிகட்டி துண்டங்களை எடுத்து தனியே வைக்கவும்.

    வேறொரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் பூசணி துண்டங்களை எலுமிச்சையின் புளிப்பு போகும் வரை அலசி எடுக்கவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து பூசணி துண்டுகள் வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கண்ணாடி போல் பூசணித்துண்டுகள் வேகும் வரை வேகவிடவும்.

    ஒரு பாத்திரத்தில் 600 கிராம் சர்க்கரைக்கு 400 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதிக்கும் சர்க்கரை நீரில் பூசணி துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.

    இந்த சர்க்கரை நீரிலே எட்டு மணிநேரம் விடவும்.

    எட்டுமணி நேரம் கழித்து வெள்ளை பூசணி துண்டுகளை ஒர் இரவு முழுவதும் உலரவிடவும்.

    தயாரான இனிப்பை குளிர்சாதன பெட்டியில் வைத்து கூட உண்ணலாம்.

    சுவையான வெள்ளைப் பூசணி முரப்பா

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×