என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
சிக்கன் உணவுகளில் பல வகைகள் உள்ளன. அதிலும் கபாப்பில் அதிகளவு அளவு வெரைட்டி உள்ளது. சிக்கன் கபாப் ரெசிபியில், தாங்ரி சிக்கன் கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 4 (லெக் பீஸ்)
தயிர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை

செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து இடைஇடையே கீறி வைக்கவும்
ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சுத்தம் செய்து கீறி வைத்த சிக்கன் லெக் பீஸில் இந்த பேஸ்ட்டை தடவி, ஒரு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஒரு மணிநேரம் கழித்து உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து, பிரட்டி வைக்க வேண்டும்.
ஊறிய சிக்கன் துண்டுகளை கிரில் மிஸினில் வைத்து, நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
இறுதியில் அதன் மேல் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, மீண்டும் 3 நிமிடம் கிரில் மிஸினில் வைத்து எடுக்க வேண்டும்.
சிக்கன் - 4 (லெக் பீஸ்)
தயிர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து இடைஇடையே கீறி வைக்கவும்
ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சுத்தம் செய்து கீறி வைத்த சிக்கன் லெக் பீஸில் இந்த பேஸ்ட்டை தடவி, ஒரு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஒரு மணிநேரம் கழித்து உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து, பிரட்டி வைக்க வேண்டும்.
ஊறிய சிக்கன் துண்டுகளை கிரில் மிஸினில் வைத்து, நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
இறுதியில் அதன் மேல் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, மீண்டும் 3 நிமிடம் கிரில் மிஸினில் வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான தாங்ரி சிக்கன் கபாப் ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ரேங்க் கார்ட்டில் கையெழுத்து கேட்கும்போது பெற்றோர் தவறாமல் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வகுப்பு ஆசிரியர் ரேங்க் கார்டைக் கொடுத்துப் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வர வேண்டும் எனச் சொன்னதும் வகுப்பின் பெரும்பான்மையான மாணவர்களுக்குப் பயம் தொற்றிக்கொள்ளும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்துவிட்ட மதிப்பெண்களுக்கு அப்பா/அம்மாவிடம் என்ன பதில் சொல்வது எனப் பதற்றமாகிவிடுவர். அந்தப் பதற்றமே சிலரை அப்பாவின் / அம்மாவின் கையெழுத்தைத் தானே போட வைத்துவிடுகிறது. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ரேங்க் கார்ட்டில் கையெழுத்து கேட்கும்போது நீங்கள் தவறாமல் கவனிக்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
1. முதலில், ரேங்க் கார்ட்டை உங்களிடம் காட்டுவதற்குப் பிள்ளைகளிடமிருக்கும் அச்சத்தை உதறச் செய்ய வேண்டும். துணிவோடு வந்து, ரேங்க் கார்டில் உள்ள மதிப்பெண்கள் குறித்துப் பேசுமளவுக்கான உறவை நீங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
2. ஒப்பீடு என்பது உங்கள் பிள்ளை இதற்கு முந்தைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும் இப்போதைய தேர்வில் எடுத்திருக்கும் மதிப்பெண்களுக்கும்தான் தவிர, மற்ற பிள்ளைகளின் மதிப்பெண்களோடு அல்ல. இதைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
3. ஐந்து பாடங்களில் எந்தப் பாடத்தில் மதிப்பெண்கள் குறைந்திருந்திருப்பது எது எனப் பாருங்கள். அதற்கான காரணங்களைப் பிள்ளையுடன் உரையாடுங்கள். பிரச்னை என்னவென்று தெரிந்துகொள்வதுடன் அதைச் சரிசெய்வது குறித்துத் திட்டமிடுங்கள்.
4. மதிப்பெண்கள் பெறுவதில் வகுப்பில் முதல் இடம் என்பது ஒருவருக்குத்தான் கிடைக்கும். அதனால், உங்கள் பிள்ளை ஒருமுறை முதல் இடம் பெற்றால், தொடர்ந்து அதேபோல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பில் இருக்காதீர்கள். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாரோ அதைப் பாராட்டி, அடுத்து இன்னும் அதிக மதிப்பெண்கள் எடுக்க ஊக்குவியுங்கள்.
5. 'மதிப்பெண்கள் குறைவாக இருக்கின்றன' என்பதைக் கூறி கையெழுத்து போடுவதற்கு மறுக்காதீர்கள். இப்படிச் சொல்வதே பிள்ளையிடம் அச்சத்தை விதைப்பதாகும். அடிப்பது, திட்டுவது போன்றவற்றைச் செய்யும்போது அடுத்த முறை ரேங்க் கார்டு தந்தால் பிள்ளைகளே பெற்றோரின் கையெழுத்தைப் போட்டுவிடுவர். அதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள்.
6. உங்களிடம் தரப்படும் ரேங்க் கார்டு கிழிந்தோ, மடிந்தோ, கறைபட்டோ இருந்தால் அதைப் பிள்ளைகள்தான் செய்திருப்பார்கள் எனும் முடிவுக்கு வந்துவிடாதீர்கள். பள்ளியில் தரும்போதோ, வாகனத்தில் வரும்போதோ அவ்வாறு ஆகியிருக்கலாம். ஒருவேளை பிள்ளைகளே அப்படிச் செய்திருந்தால் பேசி, அடுத்த முறை கவனமாக இருக்கச் சொல்லுங்கள்.
7. ரேங்க் கார்டில் Feedback பகுதியில் ஆசிரியர் குறிப்பிட்டுபவற்றை மறக்காமல் படித்து, அந்தக் குறைகளைச் சரி செய்ய முயலுங்கள்.
8. ரேங்க் கார்டில் மதிப்பெண்களத் தவிர, பிள்ளைகளின் வருகை நாள்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாத நாள்களின் எண்ணிக்கை எத்தனை என உங்களுக்குத் தெரியும். அதுவும் ரேங்க் கார்ட்டில் உள்ள விடுப்பு நாள்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கிறதா என்று சரி பாருங்கள். வித்தியாசம் இருந்தால், பிள்ளைகள் மற்றும் ஆசிரியரிடம் பேசி, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
9. ரேங்க் கார்டைத் திருப்பித் தரும்போது ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொல்லும் விதத்தில் உங்கள் பிள்ளையைத் தயார் செய்யுங்கள். தயங்கியோ, பயந்தோ வகுப்பில் நிற்கும் சூழலிலிருந்து காப்பாற்றுங்கள். முடிந்தவரை ரேங்க் கார்டை நீங்களே பள்ளிக்குக் கொண்டுசென்று கொடுத்து, ஆசிரியரிடம் பேசுங்கள்.
10. மதிப்பெண்கள் குறைவதற்கு, உங்கள் பிள்ளை சரியாகப் படிக்காதது மட்டுமே காரணம் என்று நினைக்காதீர்கள். கண் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருந்து அவரை வகுப்பின் இறுதியில் அமரச் செய்திருந்தாலோ, காது கேட்பதில் குறைபாடு இருந்தாலோ பாடங்களை உள்வாங்குவதில் பிள்ளைகள் சிரமப்படுவர். அதனால், அதுபோல ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள்.

ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. சுவிஸ் பால் பயிற்சிகளையும் அதனால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. ஸ்விஸ் பந்தின் மீது உட்கார்ந்து பயிற்சி செய்யும்போது, நம்மை அறியாமல் நமது உடல் சரியான போஸ்சரை தேர்ந்தெடுத்து தடுமாறாமல் காத்துக்கொள்ளும். உடலும் ஃபிட்டாகும்.
ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. காலையில் இந்த பயிற்சிகளை செய்யும்போது, உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் நடக்கிறது. இதனால், நாள் முழுவதும் ஃபிரஷ்ஷான உணர்வு கிடைக்கும்.
ஸ்குவாட் (Squat)
சுவருக்கும், முதுகுக்கும் இடையில் பந்தை வைத்து, தரையில் கால்களை அகட்டி நேராக நிற்க வேண்டும். கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, நாற்காலியில் அமர்வதுபோல, உட்கார்ந்து எழ வேண்டும். இப்பயிற்சியின் போது, மூச்சை சீராக உள்ளிழுத்து, வெளிவிட வேண்டியது அவசியம். இதை, 15 முறை செய்யலாம்.
பலன்கள்: உடல் முழுவதுக்குமான பயிற்சி இது. முதுகுத் தசைகள் மற்றும் தொடைத் தசைகள் வலுவடையும், ஃபிட்டாகும்.
அப்டக்டர் ஸ்குவாட் (Abductor Squat)
ஸ்குவாட் பயிற்சியில் நின்றதுபோல இருக்க வேண்டும். கால்களை அகட்டி வைக்கும்போது, விரல்கள் இரண்டும் வௌிப்புறம் நோக்கியபடி வைக்க வேண்டும். கையில் சற்று கனமான மெடிசின் பால் அல்லது கனமானப் பொருளைப் பிடித்து மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இதை 20 முறை செய்யலாம்.
பலன்கள்: கால்பகுதியில் அமைந்திருக்கும் வெளிப்புற தசைகளின் இயக்கம் அதிகரிக்கும். ரத்த ஓட்டமும் தூண்டப்படும். முக்கியமாக பிரசவத்தின்போது கால்தசைகள் விரிவடைய உதவும். டீன் ஏஜ் வயதில் இருக்கும் பெண்களுக்கு சிறந்த உடற்பயிற்சி இது.
அப்டாமினல் கிரன்ச் (Abdominal crunch)
கால்களை அகட்டி தரையில் நன்கு பதித்து, சுவிஸ் பந்தின் மீது நேராக அமர வேண்டும். கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளலாம். அப்படியே மெதுவாக பந்தின் மீது படுத்து, தலையை நன்கு சாய்க்க வேண்டும். இப்போது, கைகளை மேலே உயர்த்த வேண்டும். அதேநேரம் தலையையும் உயர்த்த வேண்டும். பின்னர், இயல்புநிலைக்குத் திரும்பலாம். இப்படி, 10 – 15 முறை செய்யலாம்.
பலன்கள்: புவி ஈர்ப்பு விசைக்கு (anti gravity) எதிராகச் செய்யப்படும் உடற்பயிற்சி என்பதால் மேல் வயிறு, இடுப்பு மற்றும் கைகளில் உள்ள கொழுப்பு கரையும். தசைகள் வலுவடையும்.
ரிவர்ஸ் கிரன்ச் (Reverse crunch)
தரையில் அமர்ந்து கால்களை சற்று அகட்டி வைக்க வேண்டும். கால்களுக்கு இடையே சுவிஸ் பந்தை வைத்து, பாதங்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தரையில் பதிக்க வேண்டும். இப்போது, மேல் உடலை சாய்த்து தரையில் படுக்க வேண்டும். பின்னர், மெதுவாக கால்களால் பந்தினை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இதை, 15 முதல் 20 முறை செய்யலாம்.
பலன்கள்: வயிறு, அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து, தசைகள் வலுவடையும்.
பட் மஸ்கல் கிரன்ச் (Butt muscle crunch)
கட்டில் அல்லது படுக்கும் வகையிலான நாற்காலியில், நுனியில் அமர்ந்து கொள்ள வேண்டும். பந்தை கால்களுக்கு இடையில், பக்கவாட்டுப் பாதங்களால் பிடித்துக் கொண்டு, கைகளை கட்டிலின் முனையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது மெதுவாக படுக்க வேண்டும். அப்படியே மூச்சை உள்ளிழுத்து, வெளியில் விட்டபடி பந்தை பிடித்தபடி கால்களால் உயர்த்தி, இறக்க வேண்டும். இதை 10 முறை செய்யலாம்.
பலன்கள்: உள்ளுறுப்புகள் பலப்படும். சிறுநீரகம் தொடர்பான தொந்தரவுகளை தீர்க்கும். இடுப்பு மற்றும் பின்புறத் தசைகள் வலுவடைந்து, ஃபிட்டாகும்.

குழந்தைப் பாக்கியம் என்பது ஒரு வரம் என்றே கூற வேண்டும். கருத்தரிக்க திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
குழந்தைப் பாக்கியம் என்பது ஒரு வரம் என்றே கூற வேண்டும். ஏனெனில் பல தம்பதியர் தற்போதெல்லாம் குழந்தைப் பாக்கியம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் சிலரோ குழந்தைப் பாக்கியத்தை இனிதே அனுபவித்து வருகின்றனர்.
திருமணம் ஆகி ஓரிரு மாதத்திலேயே கருவுறுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள், எவ்வளவோ முயற்சித்தும் குழந்தைப் பாக்கியம் இன்றி வாடுபவர்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள். பொதுவாக ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக் காலத்தின் போதும் 20 - 25 சதவீதம் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் இதன் மூலம் இனிதே குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று கூற முடியாது.
இருப்பினும் கருவுறுவதற்கான வாய்ப்பை 40 - 45 வீதமாக அதிகரிக்கச் செய்ய முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
* தொடர்ந்து புகைப் பிடிக்கும் ஆணாக இருந்தால் உடனடியாக புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். புகைப்பிடிப்பது விந்துக்களின் வீரியத்தை குறைக்கும். இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் புகைப்பிடிப்பது வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் நிலையைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதனால் கரு முட்டைகள் வலுவிழப்பதோடு கருவுற்றாலும் அடிக்கடி கருக்கலைதல் நிகழும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

* குறித்த தம்பதியருக்கு கருவுறுதல் எட்டாக்கனியாக உள்ளதெனில், அது மதுசாரத்தை உட்கொள்வதனாலாகவும் இருக்கலாம். மது அருந்தும் பழக்கம் இருக்கும் எனின் உடனடியாக அதனை நிறுத்த வேண்டும். குழந்தைப் பேறு தொடர்பில் சிகிச்சை பெறுவதற்கு முன்னரும் இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
* உடற்பருமன் அதிகமாக இருந்தாலோ அல்லது உடற்பருமன் குறைவாக இருந்தாலோ கருவுறுவது தொடர்பில் சில சிக்கல்கள் தோன்றலாம். எடை அதிகமாக இருந்தால் படிப்படியாக அதை குறைத்தல் வேண்டும். அதே போல் எடை குறைவாக இருந்தால் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பெறுதல் வேண்டும். பொதுவாக பி.டிம்.ஐ ஆனது 15.5 - 24.9 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
* வெள்ளைப்படுதல் என்பது ஒவ்வொருவருக்கும் நிகழும் சாதாரணமான விடயமாகும். சளியம் போன்ற காணப்படும் இந்த வெள்ளை நிற திரவத்தின் தன்மையை வைத்து எந்த நாட்களில் கருவுறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என்பதைக் கண்டறியலாம். நல்ல வழுவழுப்புத் தன்மை கொண்டதாக காணப்படும் நாட்களில் உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிக்க முடியும்.
* பொதுவாக ஆண்களுக்கு காலை வேளையில் விந்துக்களின் வீரியம் அதிகமாக இருக்கும். எனவே காலையில் எழுந்ததும் உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.

முருங்கை கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முருங்கைக்கீரை, கோதுமை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முருங்கை கீரை - ஒரு கப்,
கோதுமை மாவு - ஒரு கப்,
வெங்காயம் - 1
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா அரை கப்,
உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்,
தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 3,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பருப்பு வகைகளை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு களைந்து அதனுடன் மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரவென அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கோதுமை மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, முருங்கை கீரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சத்து நிறைந்த கோதுமை முருங்கை கீரை அடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இயற்கையான உணவுகளையும், காய்கறி, கீரைகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் சருமம் பொலிவாகி, முதுமையை தள்ளிப்போடும் அளவுக்கு இளமையுடன் வாழலாம் என்கிறார்கள், மருத்துவ வல்லுனர்கள்.
மழலை, இளமை, முதுமை என்ற வாழ்வின் மூன்று நிலைகளில், மழலை மற்றும் முதுமை பருவம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக நிறைய ‘கிரீம்’களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பது இல்லை. ஆனால் இந்த பிரச்சினைக்கு உணவு, உடற்பயிற்சிகளால் தீர்வு காண முடியும். நல்ல ஆரோக்கியமான, இளமை தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடல் நன்கு பொலிவோடு அழகாக இருக்கும். அதிலும் குறிப்பாக வைட்டமின் சி, ஏ, ஈ உள்ளிட்ட சத்துகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடன் இருக்கலாம்.
கோடைகாலத்தில் மாம்பழம் மலிவாக கிடைக்கும். இது சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும். கீரையையும் சாப்பிட்டு வந்தால், இளமையுடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில் சருமத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும் சத்துகளும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ உள்ளது. இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். நீர்ச்சத்து நிறைந்துள்ள இந்த பழங்களை சாப்பிட்டால், வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.
‘நடந்தால் நாடும் உறவாகும்
படுத்தால் பாயும் பகையாகும்‘
-என்ற பொன்மொழிக்கு இணங்க உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற இயற்கையான உணவுகளையும், காய்கறி, கீரைகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் சருமம் பொலிவாகி, முதுமையை தள்ளிப்போடும் அளவுக்கு இளமையுடன் வாழலாம் என்கிறார்கள், மருத்துவ வல்லுனர்கள்.

பச்சை இலை காய்கறிகள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும். குடைமிளகாய் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் ‘லைகோபைன்’ என்ற சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ உள்ளது. இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். நீர்ச்சத்து நிறைந்துள்ள இந்த பழங்களை சாப்பிட்டால், வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.
‘நடந்தால் நாடும் உறவாகும்
படுத்தால் பாயும் பகையாகும்‘
-என்ற பொன்மொழிக்கு இணங்க உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற இயற்கையான உணவுகளையும், காய்கறி, கீரைகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் சருமம் பொலிவாகி, முதுமையை தள்ளிப்போடும் அளவுக்கு இளமையுடன் வாழலாம் என்கிறார்கள், மருத்துவ வல்லுனர்கள்.
ஆவாரை இலை, பூ, பட்டை, வேர், வேர்பட்டை, பிசின், விதை ஆகிய அனைத்து உறுப்புகளும் தனித்தனி மருத்துவ குணம் கொண்டதாகும். ஆவாரை என்றால் கல்லீரலுக்கு மருந்து என்று பொருள் ஆகும்.
ஆவாரையை ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி, மேகாரி, ஆகுலி, தலபோடம் என்ற வேறு பெயர்களிலும் அழைக்கலாம். இதன் தாவரவியல் பெயர் காஸியா அரிகுலடா ஆகும். இதை ஆங்கிலத்தில் தி டினர்ஸ் காஸியா என்றும், தெலுங்கில் தாங்கெடு என்றும், மலையாளத்தில் ஆவரா என்றும், கன்னடத்தில் தாங்கடி - கைடா என்றும், ஆவரா - கைடா என்றும், சமஸ்கிருதத்தில் டெலபொட்டகம் என்றும், இந்தி மற்றும் துலுக்கில் தர்வார் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆவாரை என்பது குத்துசெடி இனத்தைச் சார்ந்தது. செடியினத்தைச் சார்ந்தது என்றால் அது சுமார் பத்து அடி உயரம் வரையும் மரம் போலவே இருக்கும். ஆனால் குத்துச் செடியினம் என்றால் குறைந்தபட்சம் ஒரு அடி உயரமும் அதிகபட்சம் 5 அடி உயரம் தான் இருக்கும். அதிலும் குத்து என்பது பல கிளைகள் இருக்காது. சுமார் பத்து முதல் முப்பது கிளைகள் வேரிலிருந்து கிளம்பிய ஒரு கிளை ஒரு மண்டையாக இருக்கும். அம்மண்டையில் கிளைகள் இருக்காது. இதே போல கிளையில்லாமல் பத்து முதல் முப்பது வரை குத்து குத்தாக செடிகள் இருப்பதையே குத்துச் செடியினம் என்கிறோம். இந்த குத்து செடியினத்தைச் சார்ந்தது இந்த ஆவாரையாகும்.
ஆவாரை தென்னிந்தியா முழுவதிலும் ஏராளமாக மஞ்சள் வர்ண பூவுடன் தங்கத்தட்டு போல் காட்சியளிக்கும். இதன் இலை, பூ, பட்டை, விதை, பிசின், வேர் ஆகியவை மருந்துக்கு பயன்படுகிறது. ஆனால் பூ மட்டும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் சுவை துவர்ப்பு ஆகும்.
ஆவாரம் பூவானது பல்வேறுபட்ட நோய்களை குணப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் நோய் உடலில் நோய்தடுப்பு மருந்தாகவும், கல்ப மருந்தாகவும் பயன்படும் மிக, மிக முக்கியமான பூவாகும். சித்தர்கள் “ஆவாரை பூத்திருக்க சாவாரை காண்பதுண்டோ” என்றார்கள். இதன் விளக்கம் சாராயம், பிராந்தி போன்ற போதை பழக்கத்தினால் உடலில் சோர்வு ஏற்பட்டு அதன் காரணமாக கல்லீரல் வீங்கியோ அல்லது கல்லீரல் பாதிப்போ ஏற்பட்டு ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட முடியவில்லை என்றால் ஆவாரம் பூவை காயவைத்து இடித்து சன்னமாக சலித்து கால் டீஸ்பூன் பவுடரை சுடுபாலில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை சேர்க்காமலும், சர்க்கரைநோய் இல்லாதவர்கள் பாலில் சர்க்கரை சேர்த்து ஆவாரம்பூ பவுடரை நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 21 நாள் அல்லது 48 நாள் சாப்பிட்டால் ரத்தத்திலிருந்து சாராயம், பிராந்தி போன்றவற்றால் ஏற்பட்ட நோய் நீங்கி உடல் பாதிப்பு நன்றாக மாறும்.
சர்க்கரை நோய் என்பது நான்கு வகைப்படும் அதில் ஒன்று நீரில் சர்க்கரை நோய், இரண்டு ரத்தத்தில் சர்க்கரை நோய், மூன்று பரம்பரை சர்க்கரை நோய், நான்கு கர்ப்ப கால சர்க்கரை நோயாகும். இதில் நீரில் காணும் சர்க்கரைக்கும், ரத்தத்தில் காணும் சர்க்கரைக்கும் நோயின் காலம், நோயின் தன்மை ஆகியவை வேறுபாடாக இருக்கும். நீரில் சர்க்கரை என்பது நாம் உணவை உண்டு நான்கு மணி நேரம் கழித்து உணவானது சிறுகுடலிலிருந்து கணையப் பைக்கு வந்தடையும்.
இந்த கணையப் பையானது மற்ற உறுப்புக்களைப்போல செயல்படுவதில்லை, மற்ற உறுப்புக்கள் ஒரு பகுதி வாங்குமானால் இன்னொரு பகுதியில் விடும். உதாரணம் இரைப்பைக்கு வந்தடையும் உணவை மேல்புறம் வாங்கவும், கீழ்புறம் விடவும் செய்யும். இதே போல் கண், காது, மூக்கு, வாய், மூளை, இருதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புக்களும் மேல் பகுதியிலோ அல்லது மேல்பரப்பிலோ வாங்குமானால் உள்பரப்பிலோ அல்லது உள்பகுதியிலோ கொடுக்கும் அல்லது வெளியேற்றும். ஆனால் கணைய திட்டானது மேல் பரப்பிலும் வாங்கும் உள்பரப்பிலும் வாங்கும். இத்தன்மை கணையத்திட்டுக்கு மட்டுமே உண்டு. அப்படி மேல்திட்டில் சமாணன் என்கிற வாயுவால் உணவிலுள்ள உயிர்ச்சத்தான வாயுவை வாங்கிக்கொள்கிறது.

கல்லீரலிலுள்ள ரஞ்சகம் எனும் பித்தம் கணைய திட்டினுள் சுரந்த பிறகே உணவானது கணையத்தின் உள்திட்டிலுள்ள அன்னத்தை பிரித்தெடுக்கும். இப்படி பிரித்தெடுக்கவில்லை என்றால் இது ரத்தத்தில் சர்க்கரையாகும்.இந்த இரண்டு சர்க்கரை நோய்க்கும் நீரில் சர்க்கரை என்றால் ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து சுடுபாலில் காலை, மாலை இரு வேளையும் தொடர்ந்து நோய் குறையும் வரை சாப்பிட்டு வந்தால் நீரிலுள்ள சர்க்கரையான சமாணன் என்கிற வாயுவை பிரித்து எடுக்க இந்த ஆவாரம்பூ மருந்து பயன்படுகிறது.
ஆவாரம் பட்டையை காயவைத்து இடித்து, சன்னமாக சலித்து சூரணமாக்கி வைத்துக் கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பவுடரை நான்கு டம்ளர் தண்ணீரில் போட்டு அத்தண்ணீரை ஒரு டம்ளராக சுண்ட கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி இளம் சூட்டில் வாய் கொப்பளிக்க பல் இறுகி கெட்டியாகும். ஆடுகின்ற பற்கள் ஆடாது, சொத்தை விழுந்த பற்களில் வலி உண்டானால் அந்த வலி உடனே நிற்கும். பல் ஈறுகளில் வீக்கம் இருந்தாலோ அல்லது பற்களின் ஈறுகளில் சீழ்பிடித்திருந்தாலும் இந்த நீரால் வாய் கொப்பளித்தால் இந்நோய்கள் நீங்கும்.
ஆவாரம் வேர் பட்டை ஐம்பது கிராம் பச்சையாகக் கொண்டுவந்து ஒன்றிரண்டாக இடித்து எட்டு டம்ளர் தண்ணீர் வைத்து இரண்டு டம்ளராக சுண்ட கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கியாழத்தை இருநூறு மில்லியும், வெள்ளாட்டு பால் இருநூறு மில்லியும், நல்லெண்ணெய் இருநூறு மில்லியும் ஆக மூன்றையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கூட்டி அடுப்பில் ஏற்றி சிறுதீயாக எரித்து வந்தால் கியாழமும், பாலும் சுண்டிய பிறகு எண்ணெய் மட்டும் இருக்கும். அந்த எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு, தோல் நோய் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை இந்த எண்ணெயில் கால் டீஸ்பூன் தலைக்கு தேய்த்துக்கொண்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
ஆவாரம் இலையை பச்சையாக கொண்டுவந்து அரைத்து தசை பிசகல், எலும்பு நகர்தல், மூட்டு நழுவுதல், எலும்பு உடைதல் ஆகியவைகள் பொருத்த மற்ற முறையில் பொருந்தியிருந்தால் அதை இந்த இலையில் அரைத்த விழுதை தயிர் அல்லது முட்டையின் வெண்கருவில் கலந்து அப்படி பொருத்த மற்ற முறையில் இருந்ததை சரி செய்து அதன்மீது பத்தாக இதை போட்டு துணி சுற்றி கட்டினால் எலும்பு முறிவு கூடிவிடும். மூட்டு நழுவியது மீண்டும் பழைய நிலைக்கு வரும், தசை பிசகல் குணமாகும்.
ஆவாரை இலை, பூ, பட்டை, வேர், வேர்பட்டை, பிசின், விதை ஆகிய அனைத்து உறுப்புகளும் தனித்தனி மருத்துவ குணம் கொண்டதாகும். ஆவாரை என்றால் கல்லீரலுக்கு மருந்து என்று பொருள் ஆகும்.
டாக்டர் கேபி.அர்ச்சுனன், இயக்குனர், இம்ப்காப்ஸ்

இன்றைய இளைய தலைமுறையினரின் முன்னால் நிற்கின்ற மாபெரும் சவால் டிஜிட்டல் யுகத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதுதான்.
இன்றைய இளைய தலைமுறையினரின் முன்னால் நிற்கின்ற மாபெரும் சவால் டிஜிட்டல் யுகத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதுதான். இணைய பயன்பாட்டின் போது மிகுந்த எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றையும் மீறி சில வேளைகளில் நமது ஆபாசப் படமோ, அல்லது ஆபாசமாய் மார்பிங் செய்யப்பட்ட படமோ இணையத்தில் வரும் வாய்ப்புகளும் உண்டு.
அப்படி ஒரு அதிர்ச்சிச் சிக்கல் நம் முன்னால் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் பதற்றத்தையும், பயத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும். உலகம் என்ன நினைக்கும், உறவினர்கள் என்ன நினைப்பார்கள், நமது பெயர் கெட்டுபோய் விடுமே என்பது போன்ற சிந்தனைகள் எதுவுமே தேவையற்றவை. வருகின்ற பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் எனும் மனநிலை தான் முதல் தேவை. நாம் தவறான முடிவெடுத்தால் தான் நமது பெயர் எல்லோருக்கும் தெரியவரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலில் வருவது அச்சுறுத்தலாக இருந்தால், கொஞ்சமும் பயத்தை வெளிப்படுத்தாமல் பேசவேண்டியது மிக மிக அவசியம். நமது பயம் தான் எதிராளியின் ஆயுதம். உங்கள் புகைப்படத்தையோ, வீடியோவையோ, உரையாடலையோ இணையத்தில் பதிவு செய்வேன், சமூக ஊடகங்களில் பகிர்வேன் என யாராவது மிரட்டினால் துணிச்சலாய் பேசுங்கள். இப்படிப்பட்ட பகிர்வுகள், மிரட்டல்கள் எல்லாமே சட்ட விரோதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
டிஜிட்டல் மிரட்டல் வந்தால் அவற்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வையுங்கள். குரலில் மிரட்டல் வந்தால் அதை ரிக்கார்டு செய்து வையுங்கள். அந்த நபரைத் தெரிந்தால் அவரைப் பற்றிய தகவல் களைச் சேமியுங்கள். முதலில் காவல்துறையில் வழக்கு பதிவு செய்வேன் என சொல்லுங்கள். மீண்டும் மிரட்டல் தொடர்ந்தால் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்யுங்கள்.
ஒரு வேளை உங்களுக்கு மிரட்டல் ஏதும் வராமலேயே உங்களுடைய படம் ஏதேனும் தளத்தில் பதிவானாலும் பயப்படத் தேவையில்லை. எல்லா வலைத்தளங்களுக்கும் ஒரு “காண்டாக்ட்” பகுதியும், மின்னஞ்சலும் இருக்கும். அனுமதியற்ற உங்களின் புகைப்படம் அவர்களுடைய பக்கத்தில் இருப்பதை ஸ்கிரீன் ஷாட் போன்ற ஆதாரங்களுடன் அவர்களுக்கு சமர்ப்பியுங்கள். விதிமீறல் நடந்திருக்கிறது என்பதை ‘அப்யூஸ்' பகுதியில் விளக்குங்கள். சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு முன் படத்தை முற்றிலுமாக அழிக்க கேட்டுக் கொள்ளுங்கள்.
வீடியோ தளங்களிலும் உங்களுடைய வீடியோக்களை பதிவுசெய்திருந்தால், அது அனுமதியற்ற, சட்ட விரோதமானது என்பதை விளக்கி கடிதம் எழுதுங்கள். அது நிச்சயம் நீக்கப்படும். நீக்கப்படாவிடில் சைபர் கிரைமில் உடனடியாக வழக்கு பதிவு செய்யுங்கள். இன்றைக்கு சைபர் கிரைம் துறை வலுவடைந்திருப்பதால் இத்தகைய சட்ட விரோத விஷயங்களை எளிதில் எதிர்கொள்ள முடியும்.
இப்போது தொழில் நுட்பத்தின் மூலமாக போட்டோ செர்ச் (தேடுதல்), வீடியோ செர்ச் செய்து உங்களுடைய படங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விடவும் முடியும். ‘கேம்பைண்ட்’ போன்ற பல ஆப்களும் இந்த பணியைச் செய்கின்றன. தவறான இடங்களில் இருந்தால் அதை நீக்க நடவடிக்கை எடுங்கள்.
இத்தகைய படங்கள், வீடியோக்களை இணையத்திலிருந்து அழிக்கவும், அவை ‘தேடுதல்' களில் வராமலும் இருக்கவும் கூகுள் உதவும் என அந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது. கூகுளின் ரிவர்ஸ் கூகுள் இமேஜஸ் ஆப்ஷன் இதற்கு உதவும். ஒரு வேளை பேஸ்புக்கில் இருந்தால் பேஸ்புக்குக்கு தகவல் கொடுங்கள், போட்டோ மேட்டிங் டெக்னாலஜி மூலம் அது அகற்றப்படும் என்கிறது பேஸ்புக் நிறுவனம்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பிய புகைப்படமாக இருந்தாலும் கூட உங்கள் அனுமதியில்லாமல் ஒருவர் அதை பிற இடங்களில் பகிர்வது சட்டத்தை மீறும் செயல். எனவே இத்தகைய சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட சிறந்தது வருமுன் காப்பது என்பதையும் மறக்க வேண்டாம்.
சேவியர்

குழந்தைகளுக்கு மாம்பழ கிரீம் புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த புட்டிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கிரீம் - 1/2 கப்,
கிரீம் சீஸ் -2 கப்,
சர்க்கரை - 2 கப்,
ஜெலட்டின் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் -1/4 டம்ளர் (ஜெலட்டின் கரைக்க)
மாம்பழ எசென்ஸ் - சிறு துளி,
கொட்டையில்லாத திராட்சைப்பழம் - 1/4 கிலோ
மாம்பழம் - 1 கப்.

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கிரீம் சீஸ், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து சுமார் 2 நிமிடம் அடித்து நுரைத்து வெண்ணெய் போல் வரும்போது எசென்ஸ் கலந்து அடிக்கவும்.
இப்போது ஃப்ரெஷ் கிரீம் அல்லது பாலேடு சேர்த்துக் கலக்கவும்.
ஜெலட்டினை சிறிதளவு வெந்நீரில் கரைத்து துளித் துளியாக அடித்த கிரீம் சீஸ் கலவையில் சேர்த்து கைவிடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
கடைசியாக மாம்பழத் துண்டுகளைக் கலந்து ஒரு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் கொட்டி ஃபிரிட்ஜில் 5 மணிநேரம் செட் செய்து சில்லென்று பரிமாறவும்.
சூப்பரான மாம்பழ கிரீம் புட்டிங் ரெடி.
மாம்பழ சீசன் முடிந்தவுடன், அதற்குப் பதில் பைனாப்பிள், கொட்டையில்லா திராட்சையைக் கலந்து செட் செய்து கொடுக்கலாம்.
கிரீம் - 1/2 கப்,
கிரீம் சீஸ் -2 கப்,
சர்க்கரை - 2 கப்,
ஜெலட்டின் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் -1/4 டம்ளர் (ஜெலட்டின் கரைக்க)
மாம்பழ எசென்ஸ் - சிறு துளி,
கொட்டையில்லாத திராட்சைப்பழம் - 1/4 கிலோ
மாம்பழம் - 1 கப்.

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கிரீம் சீஸ், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து சுமார் 2 நிமிடம் அடித்து நுரைத்து வெண்ணெய் போல் வரும்போது எசென்ஸ் கலந்து அடிக்கவும்.
இப்போது ஃப்ரெஷ் கிரீம் அல்லது பாலேடு சேர்த்துக் கலக்கவும்.
ஜெலட்டினை சிறிதளவு வெந்நீரில் கரைத்து துளித் துளியாக அடித்த கிரீம் சீஸ் கலவையில் சேர்த்து கைவிடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
கடைசியாக மாம்பழத் துண்டுகளைக் கலந்து ஒரு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் கொட்டி ஃபிரிட்ஜில் 5 மணிநேரம் செட் செய்து சில்லென்று பரிமாறவும்.
சூப்பரான மாம்பழ கிரீம் புட்டிங் ரெடி.
மாம்பழ சீசன் முடிந்தவுடன், அதற்குப் பதில் பைனாப்பிள், கொட்டையில்லா திராட்சையைக் கலந்து செட் செய்து கொடுக்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பழங்களில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும். ஆனால் இதில் வேறு பல நன்மைகளும் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
நாம் பெரும்பாலும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவையே தனி தான். அதுபோன்று பழங்களில் உப்பு தூவி சாப்பிடுபவர்களும் சிலர் உண்டு. இப்படி, பழங்களில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும். அதனாலயே இவ்வாறு சாப்பிடுகிறோம். ஆனால் இதில் வேறு பல நன்மைகளும் உள்ளன. அதாவது பழங்களில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் உள்ளன.
நாம் உப்பு தூவி சாப்பிடுவதால் பழங்களை பிரஷ்ஷாகவும், அதில் உள்ள பாக்டீரியாக்கள் மேலும் வளராமலும் தடுக்கும். அதேபோன்று உப்பு கலந்த நீரில் பழங்களை கழுவினால், பழங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் அசிட்டிக் அதிகமாக உள்ளது. அதேபோன்று நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன.
குறிப்பாக பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களில் உள்ள புளிப்பு குறைவதோடு, பழங்கள் கனியாமல் இருந்தாலும் பச்சைப் வாசனை தெரியாது.
உப்பானது உணவின் சுவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது உணவில் மட்டுமில்லாமல் பழங்களிலும் பயன்படுகிறது. எனவே புளிப்பு சுவையுடைய பழங்களை உப்பு தூவி உண்பது நல்லது. கழுவி உண்ணக்கூடிய பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவி உண்பது ஆரோக்கியமானது.
நாம் உப்பு தூவி சாப்பிடுவதால் பழங்களை பிரஷ்ஷாகவும், அதில் உள்ள பாக்டீரியாக்கள் மேலும் வளராமலும் தடுக்கும். அதேபோன்று உப்பு கலந்த நீரில் பழங்களை கழுவினால், பழங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் அசிட்டிக் அதிகமாக உள்ளது. அதேபோன்று நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன.
அதனால் இதனுடன் உப்பு சேர்த்துக் கொண்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்கும். அதேபோல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
உப்பானது உணவின் சுவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது உணவில் மட்டுமில்லாமல் பழங்களிலும் பயன்படுகிறது. எனவே புளிப்பு சுவையுடைய பழங்களை உப்பு தூவி உண்பது நல்லது. கழுவி உண்ணக்கூடிய பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவி உண்பது ஆரோக்கியமானது.
முகப்பரு வந்த பின்பு சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்பே அதை தடுப்பதே நல்லது. அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள்தான். அதனால் காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்கும் பெண்ணுக்கு முகத்தில் பரு ஏதாவது இருந்தால் அம்புட்டுத்தான், அன்று முழுவதும் பருவைப் போக்க என்ன செய்யலாம் என்றுதான் மனம் சிந்திக்கும், என்னென்னவோ செய்வார்கள்.
முகப்பரு வந்த பின்பு சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்பே அதை தடுப்பதே நல்லது. ஆம், முகப்பரு வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். அதாவது உணவு நன்கு ஜீரணமாகி வெளியேற வேண்டும்.
அதே போன்று தலையில் பொடுகுத் தொல்லை இருக்கவே கூடாது. மேலும், ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துதல் போன்ற அனைத்தையும் தடுக்க வேண்டும்.
வீட்டில் தலையணை உரை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லைக்கு முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்திவந்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப் போய் விடுவார்கள்.
ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டியது குழந்தைகளுக்குதான். தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப்போய்விடுவார்கள். தேவையான முக்கியத்துவம் கிடைக்காதபோது தங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று குழந்தைகள் நினைக்கத் தொடங்கிவிடும். அப்படி நினைக்கும் குழந்தைகள் யாரிடமும் பேசாமல் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மவுனமாகிவிடும்.
குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத்தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக் கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவையற்ற ஆயுதமாகும்.
குழந்தைகளை கண்டிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு மற்ற குழந்தைகள் முன் அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.