search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா?
    X

    பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா?

    பழங்களில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும். ஆனால் இதில் வேறு பல நன்மைகளும் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    நாம் பெரும்பாலும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவையே தனி தான். அதுபோன்று பழங்களில் உப்பு தூவி சாப்பிடுபவர்களும் சிலர் உண்டு. இப்படி, பழங்களில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும். அதனாலயே இவ்வாறு சாப்பிடுகிறோம். ஆனால் இதில் வேறு பல நன்மைகளும் உள்ளன. அதாவது பழங்களில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் உள்ளன.

    நாம் உப்பு தூவி சாப்பிடுவதால் பழங்களை பிரஷ்ஷாகவும், அதில் உள்ள பாக்டீரியாக்கள் மேலும் வளராமலும் தடுக்கும். அதேபோன்று உப்பு கலந்த நீரில் பழங்களை கழுவினால், பழங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.



    திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் அசிட்டிக் அதிகமாக உள்ளது. அதேபோன்று நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன.
    அதனால் இதனுடன் உப்பு சேர்த்துக் கொண்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்கும். அதேபோல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

    குறிப்பாக பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களில் உள்ள புளிப்பு குறைவதோடு, பழங்கள் கனியாமல் இருந்தாலும் பச்சைப் வாசனை தெரியாது.

    உப்பானது உணவின் சுவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது உணவில் மட்டுமில்லாமல் பழங்களிலும் பயன்படுகிறது. எனவே புளிப்பு சுவையுடைய பழங்களை உப்பு தூவி உண்பது நல்லது. கழுவி உண்ணக்கூடிய பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவி உண்பது ஆரோக்கியமானது.
    Next Story
    ×