என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும், வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது.
    திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள் தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். அன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள்.

    நிச்சயதார்த்தம் என்ற இந்த சடங்கு நாம் இருவரும் (ஆண்- பெண்) திருமணம் செய்துகொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டு விட்டோம் என்பதை உணர்த்துகிறது.
    “நிச்சயதார்த்தம் டூ திருமணம்” இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது.

    ஆனால், இந்த நேரத்தில் வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு அளவுக்கதிமாக மொபைல்களில் உரையாடுவது, டேட்டிங் செல்வது, அளவுக்கதிமான அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வது.



    அளவுக்கதிகமாக மொபைல்களில் உரையாடுவதன் மூலம், இக்காலத்து பெண்கள் மற்றும் ஆண்களின் மனது உடலுறவில் ஈடுபடுவதற்கு துடிக்கிறது.
    திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும், இதில் ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.

    ஏனெனில் இருபாலரும் தவறு செய்யும் பட்சத்தில், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். நிச்சயதார்த்தத்துக்குப் பின், திருமணத்துக்கு முன் என்ற இடைவெளியில் அதிகம் நெருக்கமும் தவிர்க்கப்பட வேண்டியது. பேசுவது, சந்திப்பது என்றபோதிலும், அதை ஆவணமாக மாற்றும் சாத்தியங்களை தவிர்ப்பதும் புத்திசாலி பெண்ணுக்கு அழகு.

    குறிப்பாக, சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். தனித்த படங்களை பகிர்ந்து கொள்வதிலும்கூட ஆபத்து இருக்கிறது. பேச்சு, நெருக்கம், பகிர்வு ஆவணம் அனைத்திலும் எச்சரிக்கையும் முன் யோசனையும் அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
    எண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை வராது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சங்கரா மீன் - 250 கிராம்,
    பெரிய வெங்காயம் - 50 கிராம்,  
    சிகப்பு மிளகாய் - 10 கிராம்,
    இஞ்சி - 20 கிராம்,
    பூண்டு - 5 கிராம்,
    கொத்தமல்லித் தழை - 15 கிராம்,
    சோயா சாஸ் - 5 மி.லி,
    உப்பு - ஒரு கிராம்,  
    வெள்ளை மிளகுத்தூள் - 2 கிராம்,  
    தண்ணீர் - 50 மி. லி.



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சங்கரா மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    சங்கரா மீனின் மேல் உள்ள தோலை அகற்றி விட்டு சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் கலந்த கலவையை மீனின் மேல் தடவி ஒரு தட்டில் வைத்து விடவும்.

    நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை நன்றாக சேர்த்துக் கலக்கி மீனின் மேல் வைத்து, சிறிதளவு நீர் விடவும்.

    இந்த தட்டை நீராவியில் வேகவைத்து எடுத்து, கொத்தமல்லி, சிகப்பு மிளகாய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஸ்டீம்டு சங்கரா மீன் (எண்ணெய் சேர்க்காதது) ரெடி.

    குறிப்பு : எந்த மீனில் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் ஹேர் டையை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இப்போதைய இளைஞர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், பர்கண்டி என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். ஹேர் கலரிங்கில் எல்லா வண்ணமும் உண்டு. முடிக்கு டை, ஹேர் கலரிங், ஹென்னா என மூன்று விதங்கள் உள்ளன.

    இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள். டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் பிபிடி சேர்த்திருப்பார்கள். முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும்.

    நாம் பயன்படுத்தும் ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தோல் அலர்ஜி, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இவற்றில் ஏராளம் உண்டு. பெரும்பாலும் இந்த ரசாயனத் தயாரிப்புகளை மண்டை ஓட்டில் படாமல் முடியில் மட்டும் படுமாறு தடவ வேண்டும். மூடிய அறைக்குள் ஹேர் டை, ஹேர் கலரிங் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் நெடி ஆஸ்துமா நோயாளிக்கு ஒவ்வாமையையும், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பிரச்சனைகளையும் உண்டு பண்ணும்.

    விலை மலிவான ஹேர் டைகளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக இயற்கை முறையிலான ஆர்கானிக் ஹேர் டைகளை பயன்படுத்தலாம் அல்லது ஹென்னா சிறந்தது. வீட்டிலேயே ஹென்னா செய்ய நினைப்பவர்கள், மருதாணியுடன் கத்தா பவுடர், ஆம்லா பவுடர், பீட்ரூட் சாறு, லெமன் சாறு, கறிவேப்பிலை, டீ டிக்காஷன், தயிர், முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது ஒயின் ஆகியவற்றைக் கலந்து தகர டப்பாவில் முதல் நாள் இரவு போட்டுவைத்து மறுநாள் தலையில் தடவலாம். முடி மென்மையாகவும் அழகாகவும் கருப்பாகவும் இருக்கும்.
    சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.
    சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.

    தங்கள் பெற்றோரிடம் முரட்டுத் தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். சின்ன விஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள். கெட்ட வார்த்தைகள்கூடப் பேசுவார்கள்.

    குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாகத் தங்கள் தவறுகளுக்கான தண்டனை யிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.

    கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதைப் பார்க்கலாம்.

    பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான்.

    இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும்.



    ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கைக் கைவிடாது.

    ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களைப் பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கற்றுக்கொடுப்பது அவசியமானது.

    விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, ரூபிக் சதுரம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தைக் குழந்தைகளிடம் படிப்படியாகக் குறைக்க முடியும். வெற்றியைக் கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும்.

    கணிப்பொறியில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும்போது சுவிட்ச் ஆஃப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில் அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.

    குழந்தைப் பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்புண்டு. அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடமும் அது வன்முறையாக நீட்சி அடையும்.

    குடும்ப வன்முறை என்பது ஆண்களால் மட்டுமே பிரயோகிக்கப்படுவது என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கை. ஆனால் அது உண்மை அல்ல. பெண்களும் உடல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க முடியும். அதனால் குழந்தைப் பருவத்திலேயே இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வது அவசியம்.
    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது இந்த ஓட்ஸ் கார உருண்டை. இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - ஒரு கப்,
    காய்ந்த மிளகாய் - 4,
    தேங்காய் - ஒரு துண்டு,
    கறிவேப்பிலை - சிறிது,
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து, மிக்சியில் போட்டு ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    பின்னர் அதில் ஓட்ஸ், உப்பு சேர்த்து, குறைவாகத் தண்ணீர் ஊற்றி, நன்றாக கிளறி இறக்கவும்.

    சூடு ஆறிய பின்னர் சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். இப்படி எல்லாவற்றையும் செய்து கொண்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சத்து நிறைந்த ஓட்ஸ் கார உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் இந்த ஆசனத்தை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வந்தால் கூபக எலும்பு நன்கு விரிவடைந்து பலம் பெற்று சுகப்பிரசவம் ஏற்படும்.
    பெயர் விளக்கம்: பத்த கோணாசனம் என்றால் கட்டப்பட்ட கோண நிலை என்று பொருள்.

    செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும், இரு முழங்கால்களையும் மடக்கி உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும்படி வைக்கவும். கைவிரல்களை ஒன்றாக சேர்த்து, ‘உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு நேராக நிமிரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும்.

    இது பத்த கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்நிலையில் 5 முதல் 10 நிமிடம் சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்க வேண்டும். 5 நிமிடம் கூட ஆசனத்தில் நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யலாம். வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த ஆசன பயிற்சியை செய்யலாம்.

    பயிற்சிக்குறிப்பு: ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.

    தடைக்குறிப்பு: இந்த ஆசன நிலையில் இருந்து முன்னால் குளிக்ககூடாது.

    பயன்கள்: கூபக எலும்பு நன்கு விரிவடையும் மற்றும் பலம் பெறும் சுகப்பிரசவம் ஏற்படும். கருவுற்ற நான்காம் மாதத்திலிருந்து இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள யோகப் பயிற்சியை செய்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும். 
    கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம்.
    முதன்முறையாகக் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் தோன்றினால், உடனே பயம் பற்றிக் கொள்ளும். தனக்கோ, வயிற்றில் வளரும் குழந்தைக்கோ ஆபத்து வந்துவிடுமோ என மனம் பதறுவார்கள்.

    ஏற்கெனவே குழந்தை பெற்றவர்கள் மறுபடியும் கர்ப்பம் தரிக்கும்போது, காலில் வீக்கம் ஏற்பட்டால், ‘இதெல்லாம் இயல்புதானே, பிரசவத்துக்குப்பிறகு சரியாகி விடும்’ என அலட்சியமாக இருப்பார்கள். இந்த இரண்டு மனப்பான்மைகளும் கூடாது.

    கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது.

    கர்ப்பகால கால்வீக்கத்தை பிரச்சனை கொண்ட கால்வீக்கம், பிரச்சனை இல்லாத கால்வீக்கம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். கர்ப்பத்தின் மூன்றாவது டிரைமஸ்டரில் அதாவது ஏழாவது மாதத்தில் - கால் வீக்கம் வந்தால், பெரும்பாலும் பிரச்சனை இருக்காது. இயல்பான கால் வீக்கமாகத்தான் இருக்கும்.

    ஒரு சிலருக்கு மட்டுமே இதுவும் பிரச்சனை உள்ள கால்வீக்கமாக இருக்கும். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே கர்ப்பிணிக்குக் காலில் வீக்கம் தோன்றினால், கட்டாயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்.

    கர்ப்பத்தின்போது முதல் ஆறுமாதங்கள் வரை குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்கும். ஏழாவது மாதத்துக்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சி முழுமையடையப் போவதால், எடை கூடும். அப்போது கர்ப்பப்பை நன்கு விரிவடையும்.

    இது அருகிலுள்ள ரத்தக் குழாய்களை அழுத்தும். இதனால், காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் அசுத்த ரத்தம் முறையாக மேலே செல்ல முடியாமல் தடைபடும்.

    இப்படி ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, தோலுக்கு அடியில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் காலில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கமானது சிறிது நேரம் கால்களை நீட்டி உட்கார்ந்தாலோ அல்லது இரவில் படுத்து எழுந்தாலோ வடிந்துவிடும். இது இயல்பு.



    சிலருக்கு லேசான வீக்கம் இருக்கும். ஒரு சிலருக்கு அதிகமான வீக்கம் இருக்கும். எப்படி இருந்தாலும் ஓய்வெடுத்த பிறகு வீக்கம் வடிந்து விடுகிறது என்றால் அது ‘பிரச்சனை இல்லாத வீக்கம்’ என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே காலில் வீக்கம் ஏற்படுகிறது என்றாலோ, ஏழு மாதங்களுக்குப் பிறகு ஓய்வெடுத்த பின்னரும் கால் வீக்கம் வடிய மறுக்கிறது என்றாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளும் ஆய்வுக்கூடப் பரிசோதனைகளும் அவசியப்படும்.

    கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தில் உப்புச்சத்து(Blood urea) அதிகமாகும்போது, கால்களில் வீக்கம் ஏற்படும். கால் பாதங்களில் ஆரம்பிக்கும் இந்த வீக்கம் கணுக்கால், கால், தொடை, பிறப்புறுப்பு, கைகள், வயிறு, முகம் என உடல் முழுவதிலும் வியாபித்து விடும்.பெரிய வயிறுகர்ப்பத்தில் வளரும் குழந்தையின் எடை மிகவும் அதிகமாக இருந்தால், கர்ப்பிணிக்குக் கால்கள் இரண்டும் வீங்கும்.

    இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகள் என ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தாலும் கர்ப்பப்பை இயல்பான அளவைக் கடந்து விரிய வேண்டியது இருப்பதால், கர்ப்பிணியின் கால்கள் வீங்கும். பனிக்குட நீர் அதிகமானாலும் இம்மாதிரி கால்கள் வீங்கும்.

    கர்ப்பகால கால் வீக்கத்துக்கு முக்கியமான ஒரு காரணம் உயர் ரத்த அழுத்தம். கர்ப்பிணிகள் மாதம் ஒரு முறை தங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதே வேளையில் காலில் வீக்கம் தோன்றினால், வாரம் ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.

    ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, ரத்த அணுக்களில் மாற்றம் ஏற்படும். அணுச்சிதைவு உண்டாகும். அதன் காரணமாக புரதச்சத்து வெளியேறும். இது சிறுநீரகத்தின் வழியாகச் சென்று சிறுநீரில் வெளியேறும். இப்படி கர்ப்பிணியின் உடலிலிருந்து அதிகமான புரதச்சத்து வெளியேறிவிட்டால், அது கர்ப்பிணியின் உடலையும் பாதிக்கும்; வளரும் குழந்தையையும் பாதிக்கும். சிலருக்கு ஆரம்பத்தில் ரத்த அழுத்தம் சரியாக இருந்தாலும் சிறுநீரில் மட்டும் புரதம் வெளியேறும்.

    இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது மிகவும் இயல்பு. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து கருச்சிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள் என ரத்தசோகைக்குப் பலரும் ஆளாகிறார்கள். லேசான ரத்த சோகை இருப்பவர்களுக்கு அவ்வளவாக கால் வீக்கம் ஏற்படாது. கடுமையான ரத்தசோகை இருப்பவர்களுக்குத்தான் கால்களில் வீக்கம் வரும். கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தமும் ரத்த சோகையும் சேர்ந்திருந்து காலில் வீக்கம் ஏற்பட்டதென்றால் அது மோசமான நிலைமை. கவனமாக சிகிச்சை எடுக்க வேண்டும்.

    சில கர்ப்பிணிகளுக்குப் புரதச்சத்து குறைவாக இருக்கும். சரியான விகிதத்தில் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டால் புரதம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் குறைந்து காலில் வீக்கம் ஏற்படும். ரத்த சோகை உள்ளவர்களுக்குப் புரதச்சத்து குறைவதும், புரதம் குறைந்துள்ளவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதும் உண்டு. இதயக்கோளாறுகள் இருப்பவர்களுக்கு...

    இதயத்தில் பிரச்சனை என்றாலும் கால்கள் இரண்டும் வீங்கும். இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால், காலுக்குக் கீழ் உள்ள ரத்தம் கால்களிலேயே தேங்கிவிடும். இதனால் காலில் வீக்கம் ஏற்படுகிறது. பல பெண்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது முதன்முறையாகத் தெரிய வருவதே கர்ப்ப காலத்தில்தான்.

    ஏனென்றால், ஏற்கனவே இருக்கும் இதயக் கோளாறு கர்ப்ப காலத்தில் இன்னும் அதிகமாகும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் இதய நோய்ச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்களுக்கு...

    சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்குச் சாதாரணமாகவே கால்களில் வீக்கம் தோன்றும். கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு இன்னும் வீக்கம் அதிகமாகும். இவர்களுக்கு கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கால்களில் வீக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் சிறுநீரகச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.

    அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகு வலியில் இருந்து விடுபட 10 வழிகளை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து விடுபடலாம்.
    இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களிடம் உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. உட்கார்ந்த இடத்திலேயே 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதன் காரணமாக அவர்கள் முதுகுவலியில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. இதில் இருந்து விடுபட 10 வழிகளை மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இவற்றை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து விடுபடலாம் என்றும், இதனால் கவலை வேண்டாம் என்றும் தெரிவிக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

    1. தினமும் காலை 20 முறை, மாலை 20 முறை கைகளை மேல் நோக்கி நீட்டுங்கள்.

    2. அமரும்போது வளையாதீர்கள்.

    3. தினமும் 21 முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

    4. தினமும் குறைந்தபட்சம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

    5. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்.

    6. இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

    7. சுருண்டு படுக்காதீர்கள்.

    8. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

    9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

    10. 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள். 
    தோசை, இட்லி, சூடான சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வஞ்சிரம் மீன் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிரம் மீன் - 500 கிராம்,
    சின்ன வெங்காயம் - 200 கிராம்,  
    நாட்டுத் தக்காளி - 200 கிராம்,
    பெரிய வெங்காயம்100 கிராம்,
    பூண்டு - 1,
    புளி எலுமிச்சை அளவு,
    காய்ந்த மிளகாய் - 4,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - 100 மி.லி,
    வெந்தயம் - 1 டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
    கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு,
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    தேங்காய் - பாதி



    செய்முறை :

    தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    பெரிய வெங்காயத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தை போட்டு பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    பிறகு, மிளகாய்த் தூள், தனியா துள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும்.

    அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும்.

    அடுத்து அதில் கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். கிரேவி திக்கான பதம் வந்தவுடன் இறக்கவும்.

    பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்று அதிகரித்துவரும் நோய்களின் பின்னணியில் முக்கிய காரணியாக துரித உணவுகள் இருக்கின்றன. என்னென்ன காரணங்களால் ஃபாஸ்ட் ஃபுட் உடல்நலனுக்குக் கேடானது என்று அறிந்து கொள்ளலாம்.
    இயந்திர வாழ்க்கையின் அதிவேகம் காரணமாக துரித உணவுகள் பயன்பாட்டுக்கு வந்தன. சமைப்பது எளிது, வித்தியாசமான சுவை, குறைவான நேரம் என்ற காரணங்களால் துரித உணவுகளுக்கு மக்கள் மாறிவிட்டார்கள். ஆனால், இவ்வகை துரித உணவுகளில் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன. உணவின் சுவையை கூட்ட கலக்கப்படும் ரசாயனங்கள் முதல், சமைக்கும் முறை வரையிலும் பல பிரச்சனைகள் துரித உணவுகளில் இருக்கின்றன.

    பீட்சா, பர்கர், நூடுல்ஸ் ஆகிய ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களான, மீன், முட்டை மற்றும் காய்கறிகள், சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் புளி, தக்காளி, பச்சை மிளகாய் கலவை போன்றவை பல நாட்களுக்கு முன்னரே, சமைக்கப்பட்டு, பல நாட்கள் வரை கெட்டுப்போகாத வண்ணம் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படுகின்றன.

    இவ்வாறு உடல் நலத்துக்குக் கேடும் ஏற்படுத்தும் வகையில் சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் தீமைகள்தான் அதிகம். இவற்றில் எந்தவிதமான
    ஊட்டச்சத்தும் கிடைப்பது இல்லை. அதற்குப் பதிலாக கலோரிகள்தான் ஏராளமாக உள்ளன. கலோரிகள் மட்டுமே அதிகமாக காணப்படுகிற துரித வகை உணவுப்பண்டங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

    எனவே, ஒரு நாளாக இருந்தாலும் சரி, பல நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர் என யாராக இருந்தாலும் இதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். ஆனால், அதனை அன்றாட பழக்கமாக மாற்றும் போது பல உடல்நலக் கோளாறுகள் வரும்.

    உச்சந்தலை முதல் அடிப்பாதம் வரை பாதிக்கப்படும். மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், Sleep Apnea ஏற்படும். அதாவது, நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து, சோர்வு உண்டாகும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறட்டை அதிகளவில் வெளிப்படும்.

    இதயத்தில் கொழுப்பு படிவதால், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், கல்லீரலில் கொழுப்பு ஏராளமாக சேர்ந்து, எரிச்சல் உண்டாகி சுருங்கும் வாய்ப்பு உண்டு. மேலும் மலச்சிக்கல், எலும்புகள் பலவீனம் ஆதல், எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை தவிர, பெருங்குடலில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.



    இன்று இட்லி, தோசை, புட்டு ஆகிய பாரம்பரிய உணவுப் பண்டங்கள் ஒதுக்கப்பட்டு பீட்சா, ஃப்ரென்ச் ஃப்ரை, பர்கர் என பலவிதமான துரித உணவு வகைகள் நம்முடைய வாழ்வில் என்றோ நுழைந்து விட்டன. பீட்சாவில் காய்கறிகள் குறைவாக இருக்கும்.

    பர்கர் என்று பார்க்கும்போது, இதை செய்வதற்குத் தினமும் சாப்பிடுகிற சிறிய பன் போதுமானது. ஆனால், அன்றாடம் நாம் சாப்பிடுகிற பன்னைவிட, பர்கர் செய்ய பயன்படுத்தப்படும் பன் 3 அல்லது 4 மடங்கு அளவில் பெரியதாக காணப்படும். இதிலும், மீன், மட்டன், பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் கொஞ்சமாகத்தான் சேர்க்கப்படுகின்றன. எண்ணெயில் பல தடவை நன்றாக பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளைத்தான் ஃப்ரென்ச் ஃப்ரை என்ற பெயரில் ஃபாஸ்ட் ஃபுட்டாக சாப்பிடுகிறோம்.

    பொதுவாக, இந்த வகை உணவுப்பண்டங்களில் மைதா, கொழுப்பு சத்து போன்றவைதான் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த உணவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டி (Cheese) கொழுப்பின் அளவு அதிகரிக்க வழி செய்கிறது. பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் இவற்றுடன் குறைவாகவே சேர்த்து தரப்படுகின்றன.

    உணவகங்களில், நூடுல்ஸ், பீட்சா, பர்கர் என சாப்பிடும்போது குளிர்பானங்களையும் குடிக்கின்றனர். இந்த குளிர்பானங்களில் அதிக சர்க்கரை, கார்பன் டை ஆக்ஸைடு, சில ரசாயன கலவைகள் போன்ற உடலுக்குக் கெடுதியான விஷயங்களே இருக்கின்றன. ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடாதவர்களுக்கு இந்த குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் பொதுவாக இருப்பதில்லை.

    இதன் காரணமாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்க்க வேண்டும். நமது முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறையை இப்போது யாரும் பின்பற்றுவது இல்லை. அந்த உணவுப் பழக்கத்துக்கு மாறினால் உடல் ஆரோக்கியம் சீராகும்.
    குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது.
    மழையும் குளிரும் மாறி மாறிக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க, மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம்! லேசான தூறலோ, சில டிகிரி அதிகமான குளிரோ கூட ஒப்புக்கொள்ளாது பலருக்கு. சாதாரண சளி, இருமலில் ஆரம்பிக்கும். அப்படியே தொண்டையில் ‘கீச்... கீச்’ சத்தமும் சேர்ந்து கொள்ளும். அடுத்த கட்டமாக சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகி, மூச்சுத்திணறல் உண்டாகும்.

    விசிலை விழுங்கியது போல, மூச்சு விடும் போதெல்லாம் விசில் சத்தம் சேர்ந்து ஒலிக்கும். தூக்கம் தொலையும். பசி மறக்கும். ‘எப்போ சரியாகும்’ என உடலும் மனதும் அழும். சுருக்கமாக சொல்லப் போனால், அந்த அனுபவம் நரக வேதனை... அதுதான் ஆஸ்துமா!

    குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதைப் பல பெற்றோரும் தாமதமாகவே கண்டு பிடிக்கிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது, குழந்தையின் பேச்சுத் திறமை பாதிக்கலாம். அதாவது வாக்கியங்களாகப் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின் பேச்சு, நோயின் பாதிப்பால், வார்த்தைகளாகக் குறையும். கோபமும் பதற்றமும் அதிகரித்து, ஒருவித எரிச்சல் மனநிலையிலேயே இருப்பார்கள்.



    இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் பலருக்கு ஆஸ்துமா நோய் தாக்கம் ஏற்படுகின்றது.மாசடைந்த சூழழும் தூசி அலர்ஜி போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் உபயோகிக்கும், படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது.

    நோயெதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று நோயாலும் ஏற்படக்கூடும்.

    ஆஸ்துமா ஏற்படாமல் இருக்க சுத்தமாக வீடுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.புகை பிடிப்பவரின் அருகில் தூசி படியும் இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம்..நாய்,பூனை போன்றவைகளின் முடிகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. சில குழந்தைகளுக்கு சத்து குறைவினாலும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
    ராஜ்மா, பன்னீர் கறியை சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா  - ஒன்றரை கப், 
    பன்னீர் - 150 கிராம்,
    வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவில்),
    தக்காளி - 2,
    இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன்,
    மஞ்சள் போடி - அரை டீஸ்பூன்,
    மிளகாய்ப் பொடி - அரை டீஸ்பூன்,
    மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்,
    சீரகப்பொடி - அரை டீஸ்பூன்,
    கரம் மசாலா - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    கடைசியாக பன்னீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும்.

    சூப்பரான ராஜ்மா பன்னீர் கறி ரெடி.

    இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×