என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கேளராவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். இன்று சூப்பரான இந்த வாழை இலை மீன் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன்  - அரை கிலோ
    சின்ன வெங்காயம்  - 10
    மிளகாய் பொடி  - ஒரு ஸ்பூன்
    கரம்மசாலா பொடி   - 2 ஸ்பூன்
    பூண்டு   - 4
    இஞ்சி - சிறிது
    புதினா, கொத்தமல்லி இலை - சிறிது
    கறிவேப்பிலை  - 2 ஆர்க்கு
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்   - 2 ஸ்பூன்



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

    சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

    வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழைஇலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான வாழை இலை மீன் வறுவல் ரெடி.

    குறிப்பு - மீனை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சோத்து கலந்து 5 நிமிடம் தோசை கல்லில் போட்டு வறுத்து அதன் பின்னர் மசாலா சேர்த்து செய்யலாம். மீனை தோசை கல்லில் போட்டு வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்தும் செய்யலாம். டயட்டில் இருப்பவர்கள். வயதானவர்கள் இவ்வாறு செய்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது.
    கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

    இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை அதிக மக்களின் விருப்பப்பட்டியலில் இடம் பிடித்தவை..

    கீரையில் அப்படி என்ன இருக்கிறது…

    * கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.

    * கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

    * இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ’ ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

    * கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்’ வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

    இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இதுதான்…

    * பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம்.

    * பள்ளி செல்லும் (4-6 வயது) சிறுவர்களுக்கு 50 கிராம்.



    * 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.

    * கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

    * பாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.

    * கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருளாகும்.

    * கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.

    * கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.

    * கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    * கோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுங்கள்.

    * நாள்தோறும் நம் உடலுக்கு அவசியமான சத்தாக சேர்க்கப்பட வேண்டிய கீரையை நாமும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் நலமே!
    எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) பிரச்சனையை கருப்பை அகப்படலம் நோய் என அழகுத் தமிழில் அழைக்கிறார்கள். பெண்களின் கருத்தரிப்பு உறுப்புகளில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை இது.
    கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) (Endometriosis) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக பல பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வெறும் கனவாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்சினைக்கு காரணம் ஆகும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இப்பிரச்சினையினால் மாதவிடாயின்போது இந்த அதிகப்படியான திசுக்களும் உதிரப்போக்குடன் சேர்ந்து வெளியாகும்.

    சில நேரங்களில் இந்த திசுப்படலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டியாகவும் மற்ற உறுப்புகளுடன் ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆகி விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதுடன், 25 முதல் 40 வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்குக் காரணமாகவும் இருக்கிறது. திருமணமான பெண்கள் பல வருடங்களாகியும் கருத்தரிக்காமல், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும், வேறு பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுக்கும்போது இப்பிரச்சினை தெரிய வருகிறது.



    கருப்பை அகப்படலமாக இருக்கும் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கும் வலியும் இருக்கும். இத்திசுப்படலம், கருப்பை வாய், கருப்பையின் மேற்புறம் அல்லது பின்புறத்தில் இருந்தால் தாம்பத்திய உறவின்போது வலி இருக்கலாம். இந்தப் படலம் சினைப்பையிலோ, கருக்குழாயிலோ இருந்தால் கருத்தரிக்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே குடல் பகுதியில் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, மலம் கழிக்கும்போது வலி மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    வயது வந்த பெண் முதல் மெனோபாஸ் வயதுப் பெண் வரை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்சினை வரலாம். அம்மாவுக்கோ, உடன்பிறந்த சகோதரிகளுக்கோ இப்பிரச்சினை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கருப்பை அகப்படலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம், அதிகமான உதிரப்போக்கு இருப்பது, 11 வயதிற்கு முன்பு பூப்பெய்வது, மாதந்தோறும் சீக்கிரமாக (27 நாட்களுக்கு குறைவான நாட்களில்) மாதவிடாய் வருவது, சிறு வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது. உடல் எடை மிகக் குறைவாக இருப்பது, மதுப்பழக்கம் போன்றவையும் இப்பிரச்சினைக்கு காரணங்கள்.

    ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம். ஹார்மோன்கள், மாத்திரையாகவும், ஸ்பிரே மூலமாகவும் ஊசியாகவும் கொடுக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையை குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியம் இல்லாதவர்களே எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டால் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.
    ரவையுடன் தேங்காய் சேர்த்து லட்டு செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த லட்டை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    ரவை - ஒரு கப்,
    தேங்காய் துருவல் - அரை கப்,
    சர்க்கரை - ஒரு கப்,
    வறுத்த முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    நெய் - 50 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
    பால் - சிறிதளவு



    செய்முறை:  

    ரவையை நெய்யில் சிவக்க வறுத்து கொள்ளவும்.

    தேங்காய் துருவலை வறுத்து கொள்ளவும்.

    ரவையுடன், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்கும் போது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.

    இப்போது இந்த பாகை ரவை கலவையில் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

    சூப்பரான ரவை தேங்காய் லட்டு ரெடி.

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழகலாம். அசைவத்தை எந்த வயதில் இருந்து கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.
    உங்கள் வீட்டில் உங்கள் குழந்தையோ அல்லது அண்ணன், அக்கா ஆகியோருடைய குழந்தையோ நிச்சயம் இருக்கும். அப்படி இந்த குழந்தைகள் கைக்குழந்தையாக இருக்கும் பட்சத்தில் பால் மட்டும் தான் உணவாக வழங்கப்படும்.

    ஆனால் ஆறு மாதக் குழந்தைக்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழக்குவோம். அதிலும் அசைவ உணவுகள் குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும். எப்படி படிப்படியாக அதைத் தொடங்க வேண்டுமென சில வழிமுறைகள் உண்டு. அதைப் பினபற்றினாலே போதும். அசைவம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் உண்டாகாது.

    அசைவ உணவுகளில் முதன்மையான ஊட்டச்சத்தாக ஏராளமான புரதம் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

    அசைவத்தில் முதலில் குழந்தைககு முட்டையிலிருந்து ஆரம்பியுங்கள்.



    குழந்தைக்கு ஒரு வயது ஆனபின்பே நான்வெஜ் உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

    முட்டை கொடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    அடுத்ததாக சிக்கன் உணவுகளைக் கொடுக்கலாம். அதிலும் சூப் வகைகளைக் கொடுப்பது நல்லது. சில சமயம் திடீரென குழந்தைகள் நான் - வெஜ் சாப்பிடும் போது வயிற்றுப் பொருமல், வலி உண்டாகும்.

    சில குழந்தைகள் புதிய வித்தியாசமான சுவையாக இருப்பதால் சாப்பிட மறுக்கும். அதனால் சூப் வகைகள் கொடுத்துப் பழகிய பின், சிக்கன் போன்ற திட உணவுகளைக் கொடுக்கப் பழகலாம்.

    ஆட்டிறைச்சி இரண்டு வயது ஆன பிறகு கொடுப்பது நல்லது. ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும்.
    உப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள். கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.
    பெயர் விளக்கம்: உப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள்.

    செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும். அடுத்து கால்கள் இரண்டையும் முடிந்த அளவு நன்றாக அகற்றி வைக்கவும். தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி மூச்சை உள்ளே இழுத்து உடனே வெளியே விட்டபடி முழங்கால் களின் கீழ்பகுதியை கை விரல்களால் பிடிக்கவும்.

    இந்த ஆசன நிலையில் இருப்பதற்கு சில கர்ப்பிணி களுக்கு சிரமமாக இருக்கலாம். அத்தகையவர்கள் தனக்கு முன்னால் ஒரு முக்காலியை வைத்து அதன்மேல் உள்ளங்கைகளை வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் முதுகு சற்று சாய்ந்த நிலையில் நேராக இருக்கட்டும். இது உபவின்ட கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் 5 முதல் 1-0 நிமிடம் நிலைத்திருக்க வேண்டும்.

    5 நிமிடம் கூட நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு இருக்கலாம். காலை, மதியம், மாலை வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த பயிற்சியை செய்யலாம்.

    பயிற்சி குறிப்பு: ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகபிரசவம் மிகவும் அனுகூலமாகும்.

    தடைக்குறிப்பு: இந்த ஆசன நிலையில் இருந்து முன்னால் குனியக் கூடாது.

    பயன்கள்: கூபக எலும்பு நன்கு விரிவடையும், இடுப்பு எலும்பு மற்றும் கால் நரம்புகள் வலுவடையும். சுகப்பிரசவம் ஏற்படும். 
    காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை செய்யலாம். இதை செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 200 கிராம்,
    துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி - ஒரு கப்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    புதினா - கால் கட்டு,
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு - சிறிதளவு.



    செய்முறை :  

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, நறுக்கிய காய்கறிகள், புதினா, நெய், ப.மிளகாய், உப்பு சேர்த்து கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் இந்த கொழுக்கட்டைகளை வேத்து நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

    கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆண்கள் விரும்பி அணிகின்ற ஆடை வகைகளில் ஒன்று டெனிம் ஆடைகள். டெனிம் ஆடைகள் ஆண்களின் அலங்கார அணிவகுப்பு மற்றும் கச்சிதமான, கவுரவமான ஆடைகளாக திகழ்கின்றன.
    ஆண்கள் விரும்பி அணிகின்ற ஆடை வகைகளில் ஒன்று டெனிம் ஆடைகள். டெனிம் ஆடைகள் ஆண்களின் அலங்கார அணிவகுப்பு மற்றும் கச்சிதமான, கவுரவமான ஆடைகளாக திகழ்கின்றன. அதிக பயன்பாட்டிற்கு ஏற்ற டெனிம் துணிரகங்கள் என்பது இன்டிகோ நீலம் மற்றும் பிரிண்ட் கொண்டவைகளாக உள்ளன. இதனை அணிவதே ஆண்களுக்கு அலாதி பிரியம்.

    இந்த டெனிம் துணியில் தற்போது விதவிதமான சட்டைகள் அனைத்து விழாக்கள் மற்றும் சாதாரணமாக அணிய ஏற்ற வகையில் வருகின்றன. நீலம் மற்றும் கருப்பு பிரதான நிறங்களாக கொண்டு அதில் சில மாறுபட்ட வடிவமைப்பு, உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு ஆடவர் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வண்ணம் டெனிம் சட்டைகள் கிடைக்கின்றன.

    அனைத்து பருவ காலங்களிலும் அணிய ஏற்ற சட்டையாக திகழும் டெனிம் சட்டைகள் கண்கவர் பல விதமான டிசைன்களில் கிடைக்கின்றன. ஒரிஜினல் டெனிம் சட்டைகள் சிலாசர் புராசால் உடன் கூடிய ரோப் டையிங் முறையில் வடிவமைப்பு செய்யப்படுகின்றன. கடினமான டெனிம் துணி சட்டைகள் பார்க்க பளபளப்புடன் திகழாது என்ற போதும் அணியும் ஆடவர்களுக்கு கம்பீர தோற்றத்தை தருகின்றது. டெனிம் சட்டைகள் சாதாரணமான நீலநிறத்தை தவிர்த்து விதவிதமான வண்ண சாயம் கொண்டவாறு கிடைக்கின்றன.

    டீசல் வாஷ் டெனிம் சட்டைகள்

    கருநீல டெனிம் சட்டையில் டீசல் வாஷ் டிசைன் என்பது வெள்ளை கோடுகள் மற்றும் புள்ளிகள் போன்ற சாயலை உருவாக்குவது சாதாரணமான சட்டை வகையில் அணிய ஏற்றவாறு உள்ளது. ‘வி’ டிசைன் கொண்டு திக் பார்டர் கொண்ட ஷோல்டர் பகுதியுடன் இந்த சட்டை தைக்கப்பட்டுள்ளது.

    கோர் கோல் வாஷ் டெனிம் சட்டைகள்

    கருப்பு நிற சட்டையில் சாம்பல், பழுப்பு என்று மாறி மாறி சிதறுவது போன்ற அமைப்பே கோர் கோல் வாஷ் சட்டையாகும். சாம்பல் நிற சாயலுடன் துள்ளலான சட்டையாக திகழும் இதனை கருப்பு மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்களுக்கு அணிய ஏற்றது. கச்சிதமான சட்டை என்பதுடன் அணிந்தவர் ஆறுமையை மேம்படுத்தும் வகையில் உள்ளது.



    பேன்சி டெனிம் சட்டைகள்:-

    டெனிம் சட்டை மற்றும் பிரிண்டட் சட்டை இரண்டும் சேர்த வகையே பேன்சி டெனிம் சட்டைகள். நீல நிற கேஷ்வல் டெனிம் சட்டையில் சாம்பல், நீலம், சிகப்பு நிற பூ வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. டெனிம் சட்டையில் பேன்சி பிரிண்ட்கள் எம்பிராய்டரி மற்றும் வண்ண அச்சுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை விழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு கண்கவர் சட்டையாக அணிந்து கொள்ளாம்.

    பின்னல் டெனிம் சட்டைகள்

    ஒரு வித்தியாசமான சட்டை வகையாக காணும் இந்த டெனிம் சட்டைகள் பாதி பகுதி டெனிம் துணி பிளைனாக இருப்பதுடன் ே-6ால்டர் மற்றும் ஸ்லிவ் பகுதிகள் பின்னபட்ட துணிவகையில் காணப்படுகிறது. டெனிம் துணி வகையில் ஸ்வெட்டர் போன்ற பின்னப்பட்ட பகுதி மேற்புரத்திலம் கீழ்புர சாதாரண சட்டை பகுதியும் கொண்ட பின்னல் டேனிம் சட்டைகள் வருகின்றன.

    காலர் இல்லாத டெனிம் சட்டைகள்


    தற்போதய நவீன நாகரீகமே காலர் இல்லாத சட்டைகள் அணிவதே. அது போல் டெனிம் சட்டைகளும் வருகின்றன. வட்டவடிவமான பட்டை பார்டர் கழுத்தை ஒட்டி பார்க்கும் படி தைக்கப்படும் இச்சட்டைகள் கிடைக்கின்றன. கழுத்து பகுதி பட்டை பார்டர் என்பது சில சமயம் வேறு நிறத்தில் உள்ளவாறு தைத்து வருகின்றன. அணிகின்ற ஆடவருக்கு அழகிய தோற்றத்துடன் கச்சிதமான சட்டையாகவும் காலர் இல்லாத சட்டை திகழ்கிறது.

    சுருக்கம் நிறைந்த டெனிம் சட்டைகள்

    கல்லூரி மாணவர்கள் விரம்பி அணிகின்ற சுருக்கம் கொண்ட டெனிம் சட்டைகள் நீல நிற டெனிம் சட்டையில் அனைத்து பகுதிகளிலும் குறுக்கு நெடுக்குமாக சுருக்கங்கள் வல கொண்டவாறு இந்த சட்டை உருவாக்கப் பட்டுள்ளது. அதி நவீன நாகரீகத்திற்கு ஏற்ற டெனிம் சட்டை ஆடவர் மனங்கவர்ந்த சட்டைகளாக விளங்குகின்றன. 
    பொதுவாக ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அதன் பல வகைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
    பொதுவாக ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அதன் பல வகைகள் பற்றித் தெரியுமா? நாம் நமது தேவைக்கு ஏற்ற தனிநபர் கடனைப் பெற்று பயனடையலாம். அது பற்றி...

    திருவிழாக் கடன்:

    விழாக்கால செலவுகளைச் சமாளிக்கும் வகையில் குறுகியகாலக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. ஆனாலும் பெரும்பாலான திருவிழாக்களுக்கு அதிகபட்சத் தொகை தேவைப்படாது என்பதால் இக்கடன் அளவு, ஒப்பீட்டு அளவில் குறைவாகவே இருக்கும். அதேநேரம் இதற்கான வட்டிவிகிதமும் குறைவுதான்.

    இதற்கான கால அளவு ஓராண்டு ஆகும். வட்டி விகிதம் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும். இக்கடனில் குறைந்தபட்சத் தொகை ரூ. 5 ஆயிரமும், அதிகபட்சத் தொகை ரூ. 50 ஆயிரமும் ஆகும். 2 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமும், 3 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமும் வசூலிக்கப்படும்.

    வீடு புதுப்பிப்பதற்கான கடன்:

    வீட்டைப் புதுப்பிப்பதற்கு ஆகும் செலவைச் சமாளிக்க இக்கடன் வழங்கப்படுகிறது. இதிலுள்ள முக்கியமான அனுகூலம், இக்கடனுக்குச் செலுத்தும் வட்டிக்கு ரூ. 30 ஆயிரம் வரை வரிவிலக்கு வழங்கப்படுவதாகும்.

    வீட்டைப் புதுப்பிக்கப் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 20 முதல் 30 ஆண்டுகள், இதற்கான வட்டி விகிதம் 10 முதல் 12 சதவீதம் வரை. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 80 சதவீதம் வரை கடன் பெறலாம். கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். முன்தவணைக் கட்டணம் கிடையாது.

    நிரந்தர விகிதக் கடன்:

    பெயருக்கு ஏற்ப, இந்த நிரந்தர விகிதக் கடனுக்கு இதன் முழுக் கால அளவுக்கும் ஒரே அளவிலான வட்டிவிகிதம்தான் விதிக்கப்படும். இதில் உள்ள முக்கிய அனுகூலம், கடன் பெறுபவர் தான் எதிர்காலத்தில் எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதை எளிதில் கணிக்கலாம். இவ்வகைக் கடனில் கால அளவு அதிகரிக்கும்போது வட்டிவிகிதமும் அதிகரிக்கும் அபாயம் இல்லை.

    இக்கடனின் கால அளவு 5 முதல் 10 ஆண்டுகள். வட்டி விகிதம் 9.95 சதவீதம் முதல் 11.75 சதவீதம் வரை. கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். மீதமிருக்கும் அசலில் 2 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.



    நுகர்வோர் நீடிப்பு கடன்:

    வீட்டுக்குத் தேவையான நவீன சாதனங்களை வாங்குவதற்கு உதவுவது தான், நுகர்வோர் நீடிப்பு கடன்.

    இதன் கால அளவு 2 ஆண்டுகள். குறைந்தபட்சமாக ரூ. 8 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 5 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாகப் பெறப்படும்.

    திருமணக் கடன்:

    ஒவ்வொருவர் வாழ்விலும் பெரிய செலவுகளில் ஒன்று, திருமணச் செலவு. திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்கு திருமணக் கடன் கைகொடுக்கிறது.

    இக்கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அளவு, ஒன்று முதல் 5 ஆண்டுகள். வட்டிவிகிதம் 10.5 சதவீதம் முதல். குறைந்தபட்சமாக ரூ. 5 லட்சமும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 0.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். கடன் தொகையில் 2 முதல் 5 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாக இருக்கும்.

    விடுமுறை காலக் கடன்:

    விடுமுறை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு நிறையச் செலவாகும். அதற்கு விடுமுறை காலக் கடன் உதவும். இக்கடன் வட்டி விகிதம் அதிகம் என்றபோதும், சம்பள உயர்வு அல்லது போனஸை பயன்படுத்தி கடனை விரைவில் அடைத்துவிடலாம். இக்கடனின் மொத்த தொகை, நீங்கள் பயணம் செல்லவிருக்கும் இடம் மற்றும் உங்கள் கடன் வரலாற்றைப் பொறுத்து மாறுபடும்.

    விடுமுறை காலக் கடனின் கால அளவு 2 முதல் 3 ஆண்டுகள். வட்டி விகிதம் 12.95 முதல் 14.20 சதவீதம் வரை. குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ. 10 ஆயிரமும், அதிகபட்ச தொகையாக ரூ. 10 லட்சமும் பெறலாம். பரிசீலனைக்கட்டணம் கடன் தொகையில் 2 சதவீதமாக இருக்கும்.

    தொழில் கடன்:

    புதிதாக தொழில் தொடங்கவும், தொழிலை விரிவாக்கவும் தொழில் கடன் உதவும். நமது தகுதி மற்றும் கடன் வரலாற்றைப் பொறுத்து தொழில் கடன் நிர்ணயிக்கப்படும். இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 1 முதல் 6 ஆண்டுகள். வட்டி விகிதம் 17 முதல் 22 சதவீதம் வரை. குறைந்தபட்சமாக ரூ. 50 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 75 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும்.

    இக்கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
    ஆயுர்வேதத்தில் பயன்படும் மருந்துகளும் திரிதோஷ அடிப்படையில் அமைந்தவையே. இம்மருந்துகள் நச்சுத்தன்மை இல்லாதவை. டானிக் ஆக செயல்படுபவை.
    நோய் நாடி நோய் முதல் நாடி என்று கூறுகிறது திருக்குறள். நோய் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். நோயிற்கான காரணத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது பொருள். நோய்க்கான காரணத்தை அறிவதே நோயினை குணப்படுத்துவதற்கான முதற்படி.

    ஒவ்வொரு சிகிச்சை முறையும், ஒவ்வொரு தத்துவம் வைத்திருக்கின்றன. நோய்க்கான காரணத்தை அறிய! எடுத்துக்காட்டாக, ஆங்கில மருத்துவம், பேக்டிரியா, பூஞ்சை காளான், வைரஸ் போன்ற கிருமிகளை நோய்க்கு காரணமாக சொல்கிறது. ஆகவே இக்கிருமிகளை அழிப்பதற்கான மருந்துகளை உருவாக்குகின்றனர்.

    முதுகு தண்டின் வடிவமைப்பில் ஏற்படும் மாறுதல்கள் அல்லது முதுகுத்தண்டில் உள்ள எலும்புகளின் தாறுமாறான செயல்பாடுகள், நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதே நோய்க்கு காரணம் என்று கைரோப்ராக்டீஸ் கூறுகிறது. இந்த மாறுதல்களை சரி செய்து, நரம்புகள் சரியாக வேலை செய்ய, வழிகளை ஏற்படுத்துவதே இவர்களது சிகிச்சை.

    நாம் நமது சுற்றுச்சூழலுடன் இயைந்து வாழாமல் இருப்பதே நோயின் தொடக்கம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. நாம் நமது புலன்கள், பொறிகள் மூலம் எடுக்கும் தவறான நுகர்வுகளால் உடல் பலவீனமடைந்து, நோய் வரும் சூழல் உருவாகிறது. இச்சூழலில் கிருமிகள் விரைந்து வளர்கின்றன. நமது உடலின் சக்தி ஓட்டம் தடைப்படுகிறது.

    சூழலுடன் இயைந்து போகாததுதான் நோய் என்றால், சூழலுடன் இயைந்து போக வைப்பது தான் சிகிச்சை முறை. இதுவே ஆயுர்வேதம் சொல்வது. ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை பெறும்போது ஐந்து புலன்களும் சிகிச்சையில் பங்கேற்கின்றன. முறையான உணவு, மூலிகை மருந்து ஆகியவற்றால் சுவையும், இசை மற்றும் சப்தங்களால் சப்தமும், முறையான நிறம் மற்றும் அழகினால் பார்ப்பதும், மூலிகை எண்ணெய் மசாஜ் ஆகியவற்றால் தோல் பங்கேற்பதும் அரோமாதெரபியால் வாசனை நுகர்வதும் நிகழ்கின்றது.இதுதவிர கழிவுகளை முறையாக வெளியேற்றுவதும் முக்கியமாக சொல்லப்படுகிறது. பஞ்சகர்மா போன்ற சிகிச்சை முறைகள் இதற்காக மேற்கொள்ளப்படுகின்றன.

    ஆயுர்வேத முறைப்படி, எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை இருக்காது. ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு மாதிரியான சக்தி இருக்கும். இதனை உடல் இயல்பு என்பர். ஒவ்வொரு தனிமனிதனின் உடல் இயல்பு பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சை முறை தேர்ந்தெடுக்கப்படும். எடுத்துக்காட்டாக அதிக காரமும், மசாலா பொருட்களும் கொண்ட உணவை சிலர் உண்பர். வேறு சிலருக்கு அதே உணவு செரிமான கோளாறையும், வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். இதையெல்லாம் தெரிந்து மருத்துவர் தனிப்பட்ட ஒருவருக்கு ஏற்ற உணவு, மருந்து ஆகியவற்றை பரிந்துரைப்பார்.

    ஆயுர் வேதப்படி, ஆரோக்கிய வாழ்வு முறை என்பது உடலை தாண்டி, ஓய்வு, மன அமைதி ஆகியவற்றையும் முக்கியமாக கொள்ள வேண்டும் என்பதே! இதற்காக தியானம், யோகா ஆகியவற்றை சொல்கிறது. இவை மன அழுத்தம் குறையவும், நோய் எதிர்ப்பு சக்தி சரிவர இயங்கவும் உதவுகின்றன.
    சமநிலையில் இருந்து மாறுபட்ட தோஷங்களை, அதனுடைய தோற்ற இடத்தில் இருந்து அகற்றுவதே ஆயுர்வேத முறையாகும். ஆகவே நோயின் கூறுகளையும், அதன் ஆரம்ப கட்ட இடத்தையும் அறிவது தேவையாகிறது.

    * பெரும்பாலான நோய்கள் ஆமம் எனப்படும் நிலையில் இருந்து தொடங்குகின்றன. சமைக்காத, செரிமானம் ஆகாத பொருட்களால் உண்டாவதே ஆமம் எனப்படும். அவை நச்சுக்களை உடல் முழுதும் பரப்புகின்றன. ரத்தம் மற்றும் உடல் முழுவதும் பயணிக்கிற பிற திரவங்கள் மூலம் பரவுகின்றன.

    * சில நோய்கள், உணவு குழல், மூச்சுக் குழல் வழி பரவுகின்றன.

    * சில நோய்கள் எலும்புகள், மூட்டுக்கள், முக்கிய உறுப்புகள் வழியே பரவுகின்றன.

    * சில நோய்கள் ரத்தக்குழாய்கள், நிணநீர் மண்டலம் வழி பெருகுகின்றன.

    * நேரம் தவறிய, முறையற்ற உணவு முறைகளால் மலச்சிக்கலில் இருந்து புற்றுநோய் வரை நோய்கள் வருகின்றன.

    * வயிறு சரிவர இயங்காத போது செரிமான கோளாறில் தொடங்கி ஆமவாதம், முடக்கு வாதம் வரை வருகின்றன.

    * பெருங்குடல் சரிவர இயங்காதபோது மூலம் பவுத்திரத்தில் ஆரம்பித்து, குடல்வீக்கம், புற்றுநோய் வரை வருகின்றன.

    ஆயுர்வேதத்தில் பயன்படும் மருந்துகளும் திரிதோஷ அடிப்படையில் அமைந்தவையே. இம்மருந்துகள் நச்சுத்தன்மை இல்லாதவை. டானிக் ஆக செயல்படுபவை. நோய் வராமல் தடுக்கும். நோய் வந்துவிட்டால் குணப்படுத்தும். மனமும், உடலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றுடன் ஒன்று சார்ந்தவை. அதை கருத்தில் கொண்டே மருந்து, உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் சொன்னதை இப்போதைய அறிவியலாளர்கள் ஆராய்ந்து, எல்லா நோய்களும் உளவில் சார்புடையவை. அதாவது மனதில் உற்பத்தியாகி, அதன் விளைவுகள் உடலில் தோற்றுவிக்கப்படுகின்றன. ஆகவே மனமும், உடலும் பற்றி ஒருசேர அறிந்தால்தான் நோயின் தன்மையை புரிந்து கொள்ள முடியும் என்று புது புரட்சிகரமான கருத்தை முன்வைத்து மனதை ஆய்வு செய்கின்றனர்.
    பச்சைப்பயறில் சுண்டல், தோசை, பெசரட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பச்சைப்பயறை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - ஒரு கப்,
    பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    மிளகு, சோம்பு - தலா கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :  

    பச்சைப் பயறை 3 மணி நேரம் ஊறவிடவும்.

    பச்சரிசியை தனியே அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பச்சைப் பயறுடன், அரிசியை சேர்த்து அரைக்கவும்.

    கடைசியாக அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, சோம்பு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்த மாவை வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா புரோட்டீன் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    ஆரோக்கியமான இயற்கை உணவுகளே வாழ்நாள் முழுவதும் நமது உடல்நலத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா புரோட்டீன் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட சோயா பீன்ஸ் மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது.

    பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களை கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர வகை உணவாக சோயா மட்டுமே உள்ளது. பால் பானங்கள் தவிர்க்க விரும்புவோருக்கு சிறந்த ஆரோக்கிய மாற்று பானமாக சோயா புரோட்டீன் உள்ளது.

    சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்க முடியும். மேலும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளின் நலனுக்கும் இது உகந்தது.



    உடல் எடையையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களும் சோய்விட்டா-டயாபட்டிக் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் சர்க்கரை, குளுடென் மற்றும் கெசின் இல்லாததால் தொல்லைகளும் இல்லை.

    இரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து சேருவதே இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. சோயா புரோட்டீனில் கொழுப்பு சத்துகள் இல்லாததால் இதயம் சம்பந்தமான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது.

    சோயாவில் உள்ள புரோட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது. சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்த்தல் போன்ற துன்பங்கள் குறையும்.
    ×