என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கூந்தல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது. இன்று ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம்.
    தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை. உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா - இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

    * ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

    * ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.



    * சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும். அவர்கள் ஒரு வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

    * தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை. இதற்கு உலர்ந்த ஆரஞ்சு தோல் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

    * ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.
    கர்ப்ப காலத்தில் முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியை நாடலாம்.
    கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப் பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
    நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.

    இந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல், மனம் இரண்டையும் வலிமையாக்கி, பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதற்குத் தாய்தான் சிறந்தவள் என்பதை நம் முன்னோர் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

    கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.

    * கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.



    * போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.

    * புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.

    * உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

    * கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.

    * வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    * எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம்     இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

    * பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.

    * சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

    நாட்டுச்சோளத்தில் புரதம், இரும்பு, கால்சியம், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நாட்டுச்சோளத்தில் குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நாட்டுச்சோளம் - 1 கப்
    இட்லி அரிசி - கால் கப்
    உளுந்து - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    ப.மிளகாய் - 3

    தாளிக்க

    கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லி அரிசி, சோளம், உளுந்து மூன்றையும் இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு உப்பு, நீர் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து மூன்று மணிநேரம் புளிக்க விடவும்.

    வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சிறிதளவு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வதக்கியவற்றையும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மாவில் கொட்டி நன்கு கலக்கி குழிப்பணியார சட்டியில் ஊற்றி சுட்டெடுக்கவும்.

    சுவையான நாட்டுச்சோள குழிப்பணியாரம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூரிய பேதா பிராணாயாமம் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். இன்று பிராணாயாமத்தை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: ‘சூர்ய’ என்றால் சூரியன் என்றும் பேதா என்றால் அடைப்புகளை நீக்கி உள்ளே போ என்றும் பொருள்படுகிறது. இப்பயிற்சி பிங்களா நாடி சூரிய நாடியில் உள்ள அடைப்பை நீக்கி, அந்நாடியில் பிராண சஞ்சாரத்தை மிகைப்படுத்துவதால் இப்பெயரில் அமைந்துள்ளது.

    செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும், உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும்.

    வலது கையை மடக்கி, விரல்களால் நாசாக்ர முத்திரை செய்யவும். இடது நாசியை ஆள்காட்டி சிறுவிரல்களால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சுக் காற்றை முழுவதுமாக வெளியே விடவும். வலது நாசியின் வழியாக மூச்சுக்காற்றை முடிந்த அளவு உள்ளுக்கு இழுக்கவும். இடது நாசி அடைத்தபடியே இருக்கட்டும்.

    வலது நாசியையும் கட்டை விரலால் அடைக்கவும். இப்போது இரண்டு நாசியும் மூடியபடி இருக்கட்டும். ஓரிரு வினாடிகள் அப்படியே இருக்கவும். வலது நாசியை அடைத்து வைத்திருந்த கட்டை விரலை எடுத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 5 முதல் 10 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்த பயிற்சியில் சுற்றுகளை அதிகரித்துக் கொண்டு போய் 15 முதல் 30 சுற்று வரை செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: சுவாச இயக்கத்தின் மீதும் மணிப்பூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு: இப்பயிற்சியில் வலது நாசியின் வழியாக மட்டும் மூச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்து வெளியே விட வேண்டும். இப்பயிற்சியின் துவக்கத்திலிருந்து முடியும் வரை இடது நாசி, ஆள்காட்டி, சிறுவிரல்களால் மூடியபடியே இருக்கட்டும்.

    தடைகுறிப்பு:
    இருதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், காக்கா வலிப்பு, மனபடபடப்பு மற்றும் அமில பித்தம் போன்ற பித்த சம்பந்தமான கோளாறுகள் உள்ளவர்கள் செய்யக்கூடாது.

    பயன்கள்: உடலில் பிராண சக்தி மிகும், வெப்பம் அதிகரிக்கும் எல்லாவிதமான வாத நோய்களுக்கும் நன்மை அளிக்கிறது. ஜலதோசம் போன்ற கப சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். வயிறு, குடலிலுள்ள கிருமிகள் அழியும். இருமல், சீதளத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    சிம்பதடிக் நரம்பு மண்டலத்தை பிங்களா நாடி தூண்டி செயல்படுத்துவதால் இப்பயிற்சியினால் ரத்த ஓட்டம் விரைவடைந்து, சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்படையச் செய்கிறது. மனதை விழிப்புடன் இருக்கச் செய்கிறது. குறைந்த ரத்த அழுத்த நோயாளிகளுக்கு பயனுள்ளது. உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

    குறிப்பு: சூரிய பேதா பிராணாயாமத்திற்குப் பிறகு சுவாசனத்தில் 8 நிமிடம் ஓய்வு பெறவும். 
    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும்.
    வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்; விழுப்புண் பெறாமல் போர்க்களத்தில் வெற்றிகாண முடியுமா? வாழ்க்கை என்பது காட்டாறு; எதிர் நீச்சல் போடாமல் காட்டாற்றில் நீந்தி எதிர்க்கரை சேர முடியுமா? விழியில் நீரோட்டமும், வழியில் போராட்டமும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பயணம்.

    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும். மனஉறுதி படைத்தவர் எதிர்ப்பு, ஏளனம், இடையூறுகளை எதிர்த்து முன்னேறிச் செல்கின்றனர்.

    குப்பைக்கழிவுகளை உரமாக்கிக் கொண்டு பூக்கவில்லையா குண்டுமல்லிகள்? காய்க்கவில்லையா கொய்யாக்கனிகள்? வரும் சோதனைகளை உரமாக்கிக்கொண்டு வாழ்கிறவன் வாசலில்தான் தினம் மாலைகள் அவன் கழுத்துக்காக காத்துக்கிடக்கின்றன.

    மன உறுதியை நாள்தோறும் இதயத்தில் விதைத்து வந்தவர்கள், மகத்தான சாதனைகளையே மகசூல் செய்திருக்கிறார்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் என்று எக்காளமிட்டவர்கள் ஆங்கிலேயர்கள். மகாத்மா காந்தியின் மனஉறுதிக்கு முன்னால் அவர்களின் எதேச்சதிகாரம் என்ன ஆனது? இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டு வந்த வழியே திரும்பி ஓடவேண்டியதாயிற்று.



    எதிரியின் கூடாரத்திற்கு உளவறிய சென்றான் நெப்போலியன். பகைவரின் படைகள் அவனை கண்டுபிடித்துவிட வேகமாக குதிரையைச் செலுத்தினான். தப்பிப்பதற்குள் மூன்று திசைகளிலிருந்தும் எதிரியின் படைகள் நெருங்கி வந்தன. நான்காவது திசையை நோக்கினாலோ, ஆழமான பெரும் பள்ளத்தாக்கு. குதிரையால் முழுப்பள்ளத்தையும் தாண்ட முடியாது என்பது நெப்போலியனுக்கே தெரியும்.

    இருந்தும் மனதில் உறுதி இருந்ததால் குதிரையைச் செலுத்தினான் அவன். குதிரை பள்ளத்தாக்கின் முக்கால் பகுதியை தாண்ட அது தவறி விழுவதற்கு முன்பே அக்குதிரை மீது நின்றபடி தாவி எதிர்ப்புற மலைச்சரிவில் குதித்து தப்பித்தான் அம்மாவீரன். எதிரிகளே வியக்கும் வண்ணம் இப்பேற்பட்ட மன உறுதி இருந்ததால்தான், ‘முடியாது என்ற சொல் முட்டாள்களின் அகராதியில்தான்’ என்று சொல்ல முடிந்தது நெப்போலியனால்.

    ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் மத்தாப்புக்களால் பிரகாசமாய் ஒளிர்ந்துவிட முடியாது. எனவே எந்த செயலானாலும் சரி, மன உறுதியுடன் அதில் முனைப்புடன் செயல்படுவோம். வெற்றிக்கனி நம் கைகளில் விழும். தோல்விகள் நம் கால்களில் விழும்.

    எழுத்தாளர் எல்.பிரைட்
    stoke எனப்படும் பக்கவாத பாதிப்பு மிக அதிக தொந்தரவினை பாதிப்போருக்கு ஏற்படுத்தி விடுகின்றது. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றால் காப்பாற்ற முடியும்.
    stoke எனப்படும் பக்கவாத பாதிப்பு மிக அதிக தொந்தரவினை பாதிப்போருக்கு ஏற்படுத்தி விடுகின்றது. சிலருக்கு நிரந்தர இயலாமையைக் கூட கொடுத்து விடுகிறது. இதன் அறிகுறிகள் சிலவற்றினை அறிந்து கொண்டால் உடனயாக அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை மூலம் ஒருவர் தன்னையும்,
    உடனிருப்போரையும் காக்க முடியும்.

    ஸ்ட்ரோன் என்பது மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்படும்போது மூளை செல்களுக்கு ஆக்ஸிஷன் குறைபாடு ஏற்படும். இதனால் அந்த செல்கள் உயிரிழக்கும். இதன் காரணமாக ஒருவருக்கு ஞாபகமின்மை மற்றும் கை, கால் அசைவுகளில் பிரச்சினை ஏற்படும்.

    இந்த பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்களை அறியுங்கள்.

    * மது
    * இருதய நோய்கள்
    * தொடர்ந்து கொழுப்பு அதிகம் இருப்பது
    * சர்க்கரை நோய்
    * பரம்பரை
    * உயர் ரத்த அழுத்தம்
    *  நீண்ட காலமாக தானே சிலர் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வது
    * அதிக உடல் எடை
    * சரியான உணவின்மை
    * உடல் பயிற்சி
    * உழைப்பின்மை
    * புகை பிடித்தல்
    * மனஉளைச்சல்
    * வயது கூடுதல் ஆகியவை ஆகும்.

    பக்கவாதம் காட்டும் அறிகுறிகள்

    * முகத்தில் ஒரு பக்க வலி
    * மங்கிய பார்வை
    * மூச்சு விடுவதில் சிரமம்
    * விழுங்குவதில் சிரமம்
    * நடுக்கம்
    * நடப்பதில் சிரமம்
    * முகம் கோணுதல்
    * தலைவலி
    * குழப்பம்
    * கடுமையான தலைச்சுற்றல்
    * பேசுவதில் சிரமம்
    * காரணமில்லாமல் அதிக சோர்வு

    மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். நன்கு காப்பாற்ற முடியும்.
    சப்பாத்தி, நாண், பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பன்னீர் பொடிமாஸ். இன்று இந்த பொடிமாஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - 3
    பூண்டு - 2 பல்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை

    பன்னீரை உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

    பூண்டை நசுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும்.

    பிறகு, அதில் உதிர்த்து வைத்துள்ள பன்னீர், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான பன்னீர் பொடிமாஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது.
    உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது; கடுக்கிறது.

    அதிகமாக வியர்த்தால் உடலில் சீக்கிரம் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். நம் உடலில் போதுமான அளவு திரவம் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர்காய்ச்சல் வரும்.

    சிறார்கள், அலுவலகம் செல்பவர்கள், வெளியிடங்களில் வேலை பார்ப்பவர்கள், நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டால், உடனடியாகச் சிறுநீர் கழித்துவிட வேண்டும்.

    நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

    சிறுநீரகத்தில் தொடங்கிச் சிறுநீர்ப் புறவழிவரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.

    கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும், வயிற்றில் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில நேரம் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப் பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறு கிற புறவழித் துவாரம்வரை பரவும்.
    ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
    ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே துவங்க வேண்டும். சட்ட வழிமுறைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

    வழக்கறிஞர்கள் மூலம் சரியான உதவி இருந்தால் தத்து எடுப்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். தத்து எடுப்பது தொடர்பான பேச்சை முன்கூட்டியே துவக்கி தேவையான சான்றிதழ்களை எடுத்து வைக்கவும். சிந்தனையை செயலில் காட்டுவது நல்லது. தத்து எடுப்பதில் உதவும் வழக்கறிஞர்கள் அல்லது என்.ஜி.ஒ அமைப்புடன் பேசவும். உங்களை நன்றாக பரிந்துரைக்க கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது.

    தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்:

    * அடையாள அட்டை
    * இருப்பிட சான்றிதழ்
    * திருமண சான்றிதழ்

    * தத்து எடுக்கும் குழந்தையை வளர்க்க முடியாத அளவுக்கு, தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் குணமாக்க முடியாத அல்லது தொற்றக்கூடிய நோயால் பாதிக்கப்படவில்லை அல்லது உடல் நல அல்லது மனநில குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை எனும் சான்றிதழை பதிவு பெற்ற மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும்.

    * குடும்ப புகைப்படம். தத்து எடுக்கும் குடும்பத்தின் சமீபத்திய புகைப்படம். ( மூன்று போஸ்ட்கார்டு சைஸ்).

    * சுய தொழில் செய்யும் தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் மற்றும் ஓய்வு பெறும் ஆண்டையும் குறிக்க வேண்டும்.



    * தத்து எடுக்கும் பெற்றோரால் இரண்டு பரிந்துரை கடிதங்கள் அளிக்கப்பட வேண்டும். பரிந்துரை செய்பவர்கள் தத்து எடுக்கும் குடும்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க கூடாது.

    * தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள், ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை, கடன் விவரங்கள் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.

    * இதற்கு முன்னர் தத்து எடுத்துக்கொண்டிருந்தால் அதற்கான ஆணையை அளிக்க வேண்டும்.

    * தத்து எடுக்கும் பெற்றோர்களுக்கு ஏற்கனவே 7 வயதுக்கு மேற்பட்ட சொந்த குழந்தை(கள்) அல்லது தத்து - குழந்தைகள் இருந்தால் அவர்களது எழுத்துப்பூர்வமான சம்மதம் தேவை.

    * தனியாக உள்ள தத்து எடுக்கும் பெற்றோர், நெருங்கிய உறவினரிடம் இருந்து, ஏதாவது எதிர்பாராத சூழலில் அவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் எனும் உறுதிமொழி தேவை.

    * விவாகரத்து பெற்றவர் எனில், விவாகரத்து அல்லது சட்டப்பூர்வமான பிரிவு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். 
    உப்பு உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த உப்பு உருண்டையில் காய்கறிகள் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்,
    கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப்,
    வெங்காயம் - 1,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    காய்ந்த மிளகாய் - 3,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்சை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

    இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான சத்தான வெஜிடபிள் உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கால்களில் உள்ள கருமையைப் போக்கி, கால்களை அழகாக காட்ட வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம். பெடிக்யூரை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கால்களில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்.

    * முதலில் கால்விரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.

    * பின்பு ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலந்து, பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு கால்களைத் தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்கவும்.

    * அடுத்து அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை பாதியாக நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, எலுமிச்சைத் தோலை நீரிலேயே போட்டு, கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்டும்.



    * ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி பொடி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

    * இறுதியில் கெட்டியான ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

    இந்த முறையில் மாதம் இருமுறை பெடிக்யூர் செய்து வந்தால் கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்க உங்கள் பாதம் அழகாக காட்சியளிக்கும்.
    தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம். எந்த வயதில் இருந்து தியானம் செய்ய ஆரம்பிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம். பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி மிக முக்கியமானது. தியானத்தைத் துவங்கும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சின் வழியாகவே நம் உயிருக்குத் தேவையான ஆக்சிஜனை உடல் எடுத்துக்கொள்கிறது. தேவையற்ற கார்பன் டை ஆக்சைடை  சுவாசத்தின் வழியாக வெளியே அனுப்பி வைக்கிறது.

    ஆழமான மூச்சுப்பயிற்சியின் வழியாக உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கிரியேட்டிவாக சிந்திக்கும். தியானத்தை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், உடல், மன நோய்களில் இருந்து நம்மை முழுமையாகத் தற்காத்துக் கொள்ளலாம்.

    எந்த வயதினரும் தியானம் செய்யலாம். இதற்கு வயது பாகுபாடெல்லாம் இல்லை. அவரவர் வயதுக்கு ஏற்ப புரிந்துகொள்ளும் திறனின் அடிப்படையில் தியான முறைகள் இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு குழந்தை சரியாகப் பேசத் தொடங்கும் காலத்தில் இருந்தே  தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஐந்து வயதில் இருந்து குழந்தைகள் மனதை உற்று நோக்கவும் கட்டுப்படுத்தவும் பழகிக்கொண்டால் அவர்கள் வளர் இளம் பருவத்தை எட்டும்போது பெரிய அளவில் மனக்குழப்பங்களுக்கு ஆளாக மாட்டார்கள். திருமணம், வேலை என்று வரும்போது தனக்கானதைத் தேர்வு செய்வதும் திறனை மேம்படுத்திக் கொள்வதும் எளிதாகும். 
    ×