search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pedicure"

    • 'பெடிக்யூர்' செய்வதற்கு பியூட்டி பார்லர் தான் செல்ல வேண்டும் என்பதில்லை.
    • பெடிக்யூர் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

    கால் விரல் நகங்களை அழகாக பராமரிக்கும் 'பெடிக்யூர்' செய்வதற்கு அழகு நிலையம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்த படியேகூட அதை மேற்கொள்ளலாம். அது எவ்வாறு என்று பார்ப்போம்...

     முதலில் பாதங்களைச் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பாதியளவு ஊற்றினாலே போதுமானது. அந்த நீரில் சிறிதளவு உப்பு, பாதி எலுமிச்சை சேர்த்துக் கலந்து, அதில் பாதங்களை 20நிமிடம் வைக்க வேண்டும்.

    நீரில் உள்ள உப்பு, கால்களில் உள்ள அழுக்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றை நீக்குகிறது. சருமத்தை மென்மையாக்குகிறது. பின்னர் பிரஷ் வைத்து பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

    20 நிமிடங்கள் கழித்து, பாதங்களில் ஈரம் இல்லாமல் துடைத்துவிட வேண்டும். கால் விரல் நகங்களில் நெயில் பாலீஷ் போட்டிருந்தால், நெயில் பாலீஷ் ரிமூவர் மூலம், பழைய நெயில் பாலீஷை அகற்ற வேண்டும். நகங்கள் சற்று நீளமாகவோ அல்லது சீரற்ற முறையில் இருந்தாலோ, நெயில் கட்டர் மூலம் வெட்டிவிடலாம்.

    அடுத்து பியூமிஸ் ஸ்டோனை வைத்து, குதிகால் உள்ளிட்டவற்றை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். அழுக்குகள் நீங்கும்வரை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பாதங்களை கழுவிக்கொள்ள வேண்டும்.

    அடுத்ததாக, 'ஸ்கிரப்பிங்' செய்ய வேண்டும். அதற்கு, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த திரவத்தை கால் விரல்கள் மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்து, 5 நிமிடத்துக்குப் பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.

     கடைசியாக, உங்களுக்கு விருப்பமான மாய்சரைசரை கால்களில் தடவி, உலரவிடவேண்டும். இப்போது உங்களுக்குப் பிடித்த நெயில் பாலீஷை நகங்களில் போட்டுக்கொள்ளலாம். இப்போது உங்கள் கால் பாதங்களைப் பாருங்கள். உங்களுக்கே ரசிக்கத் தோன்றும்.

    இதுபோல பெடிக்யூர் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படாது. பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாது. இறந்த செல்கள் அகற்றப்படும். பாதங்கள் சுத்தமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.

    • வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான்.
    • பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை.

    வெடிப்புகள் இல்லாத வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான். ஆனால், பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை. கேசம், சருமத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதத்துக்குக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. இப்படி கவனிக்கப்படாமல் விடுவதாலேயே பாத வெடிப்பு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும்.

    பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மிக முக்கியக் காரணம், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக, உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பை வீட்டிலேயே எளிய முறையில் சரிசெய்வதற்கான மூன்று விதமான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...

     செய்முறை-1

    தேவையான பொருள்கள்

    வெள்ளை வினிகர்

    கருங்கல் அல்லது கடைகளில் விற்கப்படும் பியுமிஸ் கல் (pumice stone)

    ஆலிவ் ஆயில்

    வெந்நீர்

    செயல்முறை

    முதலில், பாதங்களை வைக்கக்கூடிய அளவுக்கு ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, சிறிதளவு வெள்ளை வினிகர் ஊற்றி, அதில் பாதங்களை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

    கருங்கல் அல்லது பியுமிஸ் ஸ்டோன் கொண்டு வெடிப்பு இருக்கும் பகுதிகளில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இதன் மூலம் பாதத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.

    அதன்பின் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்து, கழுவிய பின், நன்றாகத் துடைத்துவிட்டு ஆலிவ் ஆயில் அப்ளை செய்து, நடக்காமல் ஓய்வெடுக்க வேண்டும். இதுபோல அடிக்கடி செய்துவர பாத வெடிப்பு குறையும்.

     செய்முறை-2

    தேவையான பொருள்கள்

    அவகடோ - ஒன்று

    வாழைப்பழம் - இரண்டு

    செயல்முறை

    அவகெடோ, வாழைப்பழம் இரண்டிலும் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதற்கான சத்துகள் நிறைந்துள்ளன. மேலும், வெளிப்பூச்சில் அவை சருமத்தின் ஈரப்பதத்தை மீட்கும். இவை இரண்டையும் தோல்களை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை பாதம் முழுவதும் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவ வேண்டும்.

    இதேபோன்று வாரத்திற்கு ஒருமுறை செய்துவந்தால் மெல்ல மெல்ல பாத வெடிப்பு குறைந்து, முழுமையாக குணமடைந்துவிடும்.

     செய்முறை 3

    தேவையான பொருள்கள்:

    பூசணிக்காய்

    காபி தூள்

    நாட்டுச்சக்கரை

    பாதாம் எண்ணைய்

    எலுமிச்சை சாறு

    செய்முறை:

    பூசணிக்காயை சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து எடுத்த பூசணிக்காயை மிக்சியில் அரைத்து, அந்த பேஸ்ட்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடைகளில் இது pumpkin pure என்ற பெயரில் ரெடிமேடாகவும் கிடைக்கும்.

    பூசணி பேஸ்ட்டுடன், பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை 2 டீஸ்பூன், காபி தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலக்கி ஸ்கிரப் மாதிரி தயாரித்துக்கொண்டு, அதனை பாதம் முழுவதும் அப்ளை செய்த பின்னர், 15 நிமிடங்கள் வைத்திருந்து கால்களை கழுவிக்கொள்ளலாம். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வர பாதவெடிப்பு நிச்சயம் குறைந்துவிடும்.

    • குறைந்தபட்சம் 15-30 நிமிடங்கள் வரை இந்த பெடிக்யூர் முறையை மேற்கொள்ளலாம்.
    • உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடவும் தூண்டும்.

    முக அழகுக்கு முக்கியத்துவம் தருவது போலவே பாதங்களின் பராமரிப்பும் முக்கியமானது. பாதங்களை அழகுபடுத்திக்கொள்ளவும், பராமரிக்கவும், பெண்களின் முதல் சாய்ஸ் எப்போதுமே பெடிக்யூர் தான். பார்லர்களில் உபகரணங்களை பயன்படுத்தி செய்வது போலவே தற்போது, இந்த முறையை கொண்டும் செய்கின்றனர். அது தான் மீன் ஸ்பா!

    பெரிய மால்கள், பார்லர்கள் என ஆண்-பெண் வேறுபாடு இயலாமல் இந்த மீன் ஸ்பா பிரபலமாகி வருகிறது. அது குறித்த சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

    மீன் ஸ்பா என்றால் என்ன? மீன் ஸ்பா என்பதை மீன் பெடிக்யூர் என்றும் சொல்லலாம். ஒருவர் தனது கால்களை மீன்கள் நிரப்பப்பட்ட தண்ணீர் தொட்டியில் வைக்கும் போது கால்களை, மீன்கள் சுத்தம் செய்யத் தொடங்கும். இதற்கு, காரா ரூபா என்ற மீன்களைப் பயன்படுத்துகின்றனர். இவை கால்களை சுத்தப்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.

    குறைந்தபட்சம் 15-30 நிமிடங்கள் வரை இந்த பெடிக்யூர் முறையை மேற்கொள்ளலாம், இதற்கு ரூ.500 முதல் ரூ.800 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதன்முதலில், துருக்கியில் தான் இந்த மீன் ஸ்பா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிரியா, ஜோர்டன், இஸ்ரேல், ஈராக் உள்பட பல்வேறு நாடுகளில் பிரபலமானது. இது தற்போது, இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. மீன்களை தவிர இதில் வேறு எந்த உபகரணங்களோ, கிரீம் போன்றவையோ பயன்படுத்தப்படுவதில்லை.

    மீன் ஸ்பாவின் நன்மைகள்:

    முறையாக சுத்தம் செய்யப்படாத பாதத்தில் பாத வெடிப்பு, அலர்ஜி உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதில் பல இறந்த செல்கள் தேங்கும். நம் கால்களில் உள்ள இறந்த செல்கள் நாள் மீன்களின் பிரதான உணவு என்பதால் அவற்றை முழுமையாக நீக்க மீன் ஸ்பா சிறந்தது.

    காரா ரூபா மீனுக்கு, 'டாக்டர் பிஷ்' என்ற பெயரும் உண்டு, ஏனெனில், இது நம் காலில் உள்ள வறண்ட சருமத்தை சரி செய்து, புத்துயிர் அளிக்கிறது. எக்சிமா, சொரியாசிஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. மீன்கள் நம் கால்களில் சிறந்த அழுத்தத்தை கொடுத்து, நுணுக்கமாக மசாஜ் செய்கிறது.

    இதனால் நம் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, காலின் வறண்ட பகுதி மேம்படுகிறது. தண்ணீர் தொட்டியில் கால்களை வைக்கும்போது பல மீன்கள் நம் கால்களை கடிக்கும். இது நமக்கு வலிக்காமல் கிளர்ச்சியூட்டும் விதமாக இருக்கும். உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடவும் தூண்டும். இதன்மூலம் மன அழுத்தம் குறைந்து, மன ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு பல்வேறு காரணங்களால் கால் கரடுமுரடாக இருக்கும். அவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்ளும்போது காலில் உள்ள இறந்த செல்கள் மட்டுமின்றி. சரும வறட்சியும் நீங்கும்.

    இதனால், கால்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு கடுமையான தோல் மென்மையாக மாறும். பாத எரிச்சலும் நீங்கும். நன்மைகள் பல இருந்தாலும் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இதில் உண்டு. கடுமையான தோல் நோய்த் தொற்று உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்வதைத் தவிப்பது சிறந்தது.

    அதேபோல், மீன் ஸ்பாவுக்குப் பயன்படுத்தப்படும் நீர். அடிக்கடி மாற்றப்படுகிறதா என்பதையும், தண்ணீர் தொட்டிகளின் சுத்தத்தையும் உறுதி செய்ய வேண்டும். நீரில் உள்ள அழுக்குகள், சுகாதாரமற்ற பொருட்கள் நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூரை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம்.
    நமது மொத்த உடலையும் தாங்கும் பாதங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாதங்களை நன்றாக அழுத்தி சுத்தம் செய்துவிட்டு படுக்கச் செல்வது எப்போதும் நல்லது.

    காலுக்கு செய்யப்படும் பெடிக்கியூர் எனப்படும் காஸ்மெட்டிக் டிரீட்மென்டை அழகு நிலையங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் பார்லரில் செய்யப்படும் பெடிக்கியூர் அதெற்கென பிரத்யேகமாகப் பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணர்களைக் கொண்டு செய்யப்படுவதால் இருபது நாளைக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதுமானது. வீட்டில் நாமாகவே செய்வதாக இருந்தால் வாரம் ஒரு முறை பாதங்களின் பாதுகாப்பில் கவனம் வைத்தல் வேண்டும்.

    வீட்டில் பெடிக்கியூர் செய்யும் முறை...

    குறிப்பு: பெடிக்கியூர் கிட் கடைகளில் கிடைக்கும். நாமே முயன்று நீண்ட நேரம் குனிந்து பெடிக்கியூர் செய்வதைவிட வேறு ஒருவர் செய்வதே எப்போதும் நல்லது.

    * பாதம் நனையும் அளவுக்கு ஒரு வட்ட வடிவ பவுலை எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர், வீட்டில் இருக்கும் கல் உப்பு, லெமன், ரோஸ் ஆயில் சிறிது, ரோஸ் பெடல்ஸ் இணைத்து  பத்து நிமிடங்கள் பாதங்களை ஊற வைத்தல் வேண்டும்.

    * சிலவகை நெயில் கட்டரில் கூடுதல் இணைப்பாக கியூட்டிக்கல் புஷ்ஷர் மற்றும் நெயில் கிளீனர் இணைக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு நகங்களின் ஓரங்களை சுத்தம் செய்யலாம்.



    * முதல் நாள் ப்ரீஸ் செய்த தேங்காய் எண்ணெயை கிட்டிக்கல் கிரீமாக நகங்களில் தடவி புஷ்ஷர் கொண்டு தேவையற்ற தோல்களை நீக்கவும்.

    * உடலைத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தப்படும் பீர்க்கங்காய் நாரில் ஷாம்புவை சேர்த்து, கால்களில் அழுத்தி தேய்க்கும்போது அழுக்கு முழுவதும் நீங்கும். பீர்க்கங்காய் நார் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    * பியூமிக் ஸ்டோன் கொண்டு காலை நன்றாக தேய்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் முட்டி முதல் பாதம் வரை நன்றாக மசாஜ் செய்து விடவும்.

    பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

    * காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்கும்.

    * இறந்த செல்கள் நீங்கும். தடிமனான ஸ்கின்கள் மென்மை அடையும்.

    * கால்கள் பளிச்சென எடுப்பாக மென்மையாகத் தெரியும்.

    * பாய்ண்ட் பார்த்து ப்ரஷ்ஷர் தருவதால் முழு உடலும் புத்துணர்ச்சி பெறும்.

    * கால் வலி, உடல் வலி நீங்கும்.

    கால்களில் உள்ள கருமையைப் போக்கி, கால்களை அழகாக காட்ட வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம். பெடிக்யூரை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கால்களில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்.

    * முதலில் கால்விரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.

    * பின்பு ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலந்து, பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு கால்களைத் தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்கவும்.

    * அடுத்து அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை பாதியாக நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, எலுமிச்சைத் தோலை நீரிலேயே போட்டு, கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்டும்.



    * ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி பொடி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

    * இறுதியில் கெட்டியான ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

    இந்த முறையில் மாதம் இருமுறை பெடிக்யூர் செய்து வந்தால் கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்க உங்கள் பாதம் அழகாக காட்சியளிக்கும்.
    ×