என் மலர்

  லைஃப்ஸ்டைல்

  உடலில் உள்ள கொழுப்பு கரைக்கும் சூரிய பேதா பிராணாயாமம்
  X

  உடலில் உள்ள கொழுப்பு கரைக்கும் சூரிய பேதா பிராணாயாமம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூரிய பேதா பிராணாயாமம் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். இன்று பிராணாயாமத்தை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
  பெயர் விளக்கம்: ‘சூர்ய’ என்றால் சூரியன் என்றும் பேதா என்றால் அடைப்புகளை நீக்கி உள்ளே போ என்றும் பொருள்படுகிறது. இப்பயிற்சி பிங்களா நாடி சூரிய நாடியில் உள்ள அடைப்பை நீக்கி, அந்நாடியில் பிராண சஞ்சாரத்தை மிகைப்படுத்துவதால் இப்பெயரில் அமைந்துள்ளது.

  செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும், உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும்.

  வலது கையை மடக்கி, விரல்களால் நாசாக்ர முத்திரை செய்யவும். இடது நாசியை ஆள்காட்டி சிறுவிரல்களால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சுக் காற்றை முழுவதுமாக வெளியே விடவும். வலது நாசியின் வழியாக மூச்சுக்காற்றை முடிந்த அளவு உள்ளுக்கு இழுக்கவும். இடது நாசி அடைத்தபடியே இருக்கட்டும்.

  வலது நாசியையும் கட்டை விரலால் அடைக்கவும். இப்போது இரண்டு நாசியும் மூடியபடி இருக்கட்டும். ஓரிரு வினாடிகள் அப்படியே இருக்கவும். வலது நாசியை அடைத்து வைத்திருந்த கட்டை விரலை எடுத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 5 முதல் 10 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்த பயிற்சியில் சுற்றுகளை அதிகரித்துக் கொண்டு போய் 15 முதல் 30 சுற்று வரை செய்யலாம்.

  கவனம் செலுத்த வேண்டிய இடம்: சுவாச இயக்கத்தின் மீதும் மணிப்பூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

  பயிற்சிக்குறிப்பு:
  இப்பயிற்சியில் வலது நாசியின் வழியாக மட்டும் மூச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்து வெளியே விட வேண்டும். இப்பயிற்சியின் துவக்கத்திலிருந்து முடியும் வரை இடது நாசி, ஆள்காட்டி, சிறுவிரல்களால் மூடியபடியே இருக்கட்டும்.

  தடைகுறிப்பு:
  இருதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், காக்கா வலிப்பு, மனபடபடப்பு மற்றும் அமில பித்தம் போன்ற பித்த சம்பந்தமான கோளாறுகள் உள்ளவர்கள் செய்யக்கூடாது.

  பயன்கள்: உடலில் பிராண சக்தி மிகும், வெப்பம் அதிகரிக்கும் எல்லாவிதமான வாத நோய்களுக்கும் நன்மை அளிக்கிறது. ஜலதோசம் போன்ற கப சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். வயிறு, குடலிலுள்ள கிருமிகள் அழியும். இருமல், சீதளத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.

  சிம்பதடிக் நரம்பு மண்டலத்தை பிங்களா நாடி தூண்டி செயல்படுத்துவதால் இப்பயிற்சியினால் ரத்த ஓட்டம் விரைவடைந்து, சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்படையச் செய்கிறது. மனதை விழிப்புடன் இருக்கச் செய்கிறது. குறைந்த ரத்த அழுத்த நோயாளிகளுக்கு பயனுள்ளது. உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

  குறிப்பு: சூரிய பேதா பிராணாயாமத்திற்குப் பிறகு சுவாசனத்தில் 8 நிமிடம் ஓய்வு பெறவும். 
  Next Story
  ×