என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான சாட் செய்து கொடுக்க விரும்பினால் வெள்ளரிக்காய் சாட் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 1
கெட்டி தயிர் - அரை கப்
சாட் மசாலா - ஒன்றரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
ஓமப்பொடி (அ) மிக்ஸர் - அலங்கரிக்க
புதினா இலைகள் - 1 கைப்பிடி

செய்முறை :
வெள்ளரிக்காயை தோல் நீக்கி வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிடவும். இரண்டு மணிநேரத்தில் தயிரில் உள்ள நீர் வடிந்து கெட்டியாகிவிடும்.
வடிகட்டிய கெட்டி தயிரில் உப்பு, சாட் மசாலா, சீரகத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
வெள்ளரித் துண்டின் மேல் ஒரு டீஸ்பூன் தயிர் கலவையைத் தடவி, அதன் மேல் துருவிய கேரட் மற்றும் ஓமப்பொடியைத் தூவ வேண்டும்.
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 1
கெட்டி தயிர் - அரை கப்
சாட் மசாலா - ஒன்றரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
ஓமப்பொடி (அ) மிக்ஸர் - அலங்கரிக்க
புதினா இலைகள் - 1 கைப்பிடி
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :
வெள்ளரிக்காயை தோல் நீக்கி வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிடவும். இரண்டு மணிநேரத்தில் தயிரில் உள்ள நீர் வடிந்து கெட்டியாகிவிடும்.
வடிகட்டிய கெட்டி தயிரில் உப்பு, சாட் மசாலா, சீரகத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
வெள்ளரித் துண்டின் மேல் ஒரு டீஸ்பூன் தயிர் கலவையைத் தடவி, அதன் மேல் துருவிய கேரட் மற்றும் ஓமப்பொடியைத் தூவ வேண்டும்.
அதன்மேல் புதினா இலையை வைத்துப் பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். இப்போது அத்தகைய வேப்பிலை எப்படியெல்லாம் அழகுப் பொருளாகப் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.
வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். அதிலும் இந்த வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது அத்தகைய வேப்பிலை எப்படியெல்லாம் அழகுப் பொருளாகப் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.
* வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

* வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.
* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
* வேப்பிலையில் வலியைப் போக்கும், காய்ச்சலைக் சரிசெய்யும், காயங்களை குணப்படுத்தும் பொருள் உள்ளது. எனவே இதனை காயங்கள், காது வலி, தலை வலி போன்றவற்றிற்கு பயன்படுத்தினால், குணமாகிவிடும்.
* வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

* ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

* வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.
* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
* வேப்பிலையில் வலியைப் போக்கும், காய்ச்சலைக் சரிசெய்யும், காயங்களை குணப்படுத்தும் பொருள் உள்ளது. எனவே இதனை காயங்கள், காது வலி, தலை வலி போன்றவற்றிற்கு பயன்படுத்தினால், குணமாகிவிடும்.
* வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.
பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.
செய்முறை :
நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.
பலன்கள் :
நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவை நிறைந்திருக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.

* வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு ரத்தத்தில் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும். நோய் பாதிப்பின்போதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ராக்கோலி, கீரை, தக்காளி போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. அத்தகைய உணவுகளை முறையாக சாப்பிட்டு வருவதன் மூலம் ஆரோக்கிய வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.
* வைட்டமின் பி6, பி 12 ஆகியவைகளும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை. வைட்டமின் பி 12 மாமிச உணவு வகைகளில் அதிகமாக இருக்கும். அசைவ பிரியர்கள் முட்டை, இறைச்சி, மீன் வகைகளை ருசிக்கலாம். பால் மற்றும் பால் பொருட்களிலும் பி 12 சத்து இருக்கிறது. அவை நோய் தடுப்பு ஊக்க மருந்தாக செயல்படும். தானிய வகைகள், பச்சைக்காய்கறிகளில் பி 6 சத்து உள்ளது.
* வைட்டமின் ஈ, நோய் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவும். பல்வேறு வகை பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்த்து போராடி வலிமையான நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்கத்திற்கும் உதவுகிறது. பாதாம், வேர்க்கடலை, சோயா எண்ணெய், கோதுமை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றிலும் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது.
* ஆப்பிள் வினிகரையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக பராமரிக்க உதவும்.
* உடலில் இருந்து நச்சுத்தன்மையை அகற்றுவதற்கு சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வருவது அவசியமானது. அதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
* பூண்டுவை சமையலில் சேர்த்து வருவதும் நோய் தொற்றை எதிர்த்து போராட உதவும். இஞ்சியையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* 6 முதல் 8 மணி நேரம் தூங்கும் வழக்கத்தை முறையாக கடைப்பிடித்து வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

பன்னீரில் புலாவ், கிரேவி, பிரியாணி, பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/4 - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1

செய்முறை :
பன்னீரை துருவிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து குலையும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் கடைசியாக துருவிய பன்னீர் சேர்த்து கிளறவும்.
இப்போது பன்னீர் பூரணம் தயார்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் வேக விடவும்.
தோசை வெந்த பிறகு பன்னீர் பூரணத்தை தோசைக்கு நடுவில் வைத்து இரண்டாக மடக்கி எடுத்து பரிமாறவும்.

சுவையான பன்னீர் தோசை தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழை இலை குளியல் தற்போது மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இனிமேல் வாழை இலைக் குளியலின் மருத்துவத்தையும், மகத்துவத்தையும் பார்ப்போம்
இன்றைய சூழ்நிலையில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் நாகரிகம் என்ற பேரில் இயற்கைக்கு மாறாக ஒருபுறம் பல்வேறு செயல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இருந்தாலும் மறுபுறம் இயற்கை சார்ந்த விவசாயம், பாரம்பரிய உணவு முறைகள், பாரம்பரிய வைத்திய முறைகள் என நமது முன்னோர்கள் சொல்லி தந்த பல்வேறு பழக்க, வழக்கங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஒன்றுதான் வாழை இலை குளியல். அது என்ன வாழை குளியல் என்கிறீர்களா? நமது சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த இந்த வாழை இலை குளியல் தற்போது மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
வாழை மரம், மக்களை வாழ வைக்கும் மரம் என்று கூறுவது உண்டு. வாழை மரத்தில் உள்ள அத்தனை பொருட்களுமே மனிதர்களுக்கு மிகுந்த பயன் அளித்து வருகிறது.
வாழை கிழங்கு செயலிழந்த சிறுநீரகத்தை செயல்பட வைக்கும். சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு, நீர்குத்தல், விட்டு விட்டு வரும் சிறுநீர், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் தாரையில் ஏற்படும் சதை அடைப்பு, சிறுநீரக பிரச்சினைகளால் ஏற்படும் இரண்டு கால் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
வாழை தண்டு, வாழைப்பூவில் செய்யப்படும் பல்வேறு பாரம்பரிய உணவுகள் நம்மோடு இணைந்து வருகிறது. வாழை இலையில் சாப்பிடுவது என்பது ஒரு தனி சுவையாக இருக்கும். வாழை இலையில் தொடர்ந்து உணவு சாப்பிடுவர்களுக்கு முகம் பிரகாசமாக இருக்கும் என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் வாழை சருகுகள், வாழை இலை நார் ஆகியவை பூ கட்ட உதவுகிறது.

இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் இந்த வாழை இலைக் குளியலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். உடல் முழுவதும் நீளமான 2 வாழை இலைகளை கீழே நீளவாக்கில் போட்டு அதன்மேலே வாழை இலை குளியல் செய்ய உள்ள நபரை படுக்க வைக்க வேண்டும். பின்னர் அவர் உடல் மேல் மேலும் மூன்று நீளமான வாழை இலைகளை வைத்து உடல் முழுவதும் மூன்று முதல் நான்கு இடங்களில் இறுக்கம் இல்லாமல் கட்டிவிட வேண்டும். மூக்கு மற்றும் கண் பகுதியில் சிறிது துவாரம் விட வேண்டும். இதுபோல உள்ள நிலையில் இளம் வெயில் நேரத்தில் 45 நிமிடம் இருக்க வேண்டும்.
அவ்வப்போது வாழை இலை குளியலில் ஈடுபட்டவரிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக அவிழ்த்துவிட வேண்டும். தொந்தரவு இல்லை என்றால் குறித்த நேரம் வரை வைத்திருக்கலாம். சரியாக வைத்து அவிழ்த்து பார்க்கும்போது உடலில் இருக்கும் கெட்ட நீர்களை அதிக அளவில் வெளியேற்றிவிடும். இதுபோல தொடர்ந்து செய்யும்போது உடலில் உள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த வாழை இலை குளியலை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யலாம். மேலும் இந்த வாழை இலை குளியலோடு புற்றுமண் குளியல், மூலிகை தைல குளியல், மூலிகை வெந்நீர் குளியல், மூலிகை பற்று போன்ற பலவகையான சிகிச்சையை சேர்த்தும் செய்யலாம்.
வாழை இலை குளியலின் மூலம் மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி, தலைவலி, ஒருபக்க தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் பிரச்சினை, முதுகுவலி, தொடைவலி, தோல் வியாதி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரைவியாதி, பாத எரிச்சல், தூக்கமின்மை உடலில் ஏற்படும் கெட்ட வாடை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், நோய்களை விரட்டி அடிக்கலாம்.
மேலும், காளஞ்சகபடை(அவசியம் தொடர்ந்து போட வேண்டும்), முழங்காலுக்கு கீழே ஏற்படும் கால் நரம்புவலி, உடல் சோர்வு, சிறுநீரக செயலிழப்பு, சுவாச மண்டலம் நன்கு செயல்பட்டு மூச்சு நன்கு இழுத்துவிட உதவுவது போன்ற நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் வாழை இழை குளியல் அமைகிறது.
உடலுக்கு புத்துணர்ச்சியையும், புதுப்பொலிவையும் தரும். உடலில் உள்ளுறுப்புகளுக்கும், வெளிஉறுப்புகளுக்கும் மகத்துவம் தரும் ஒரு இயற்கை மருத்துவம் இது ஆகும்.
வாழை இலை குளியல் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை:- வாழை இலை குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். எளிய உணவுகள் சாப்பிட்டிருக்கலாம். எளிமையான கதர் துணி அணிந்திருந்தால் நல்லது. நெற்றி பகுதியில் கைக்குட்டை அளவு ஈரத்துணியை கட்டியிருக்க வேண்டும். தேவையான அளவிற்கு தண்ணீர் குடித்து இருக்க வேண்டும். அவரின் உறவினர்கள் ஒருவர் உடன் இருப்பது நல்லது. வாழை இலை குளியல் முடிந்து இலைகளை அவிழ்த்த பிறகு அந்த இலைகளை கால்நடைகள் சாப்பிடாத வகையில் ஒதுக்குபுறமாக போட்டுவிட வேண்டும். உடலில் உப்புநீர் மேலே படிந்திருக்கும் சூழல் இருப்பதால் சற்று நேரம் கழித்து ஒரு சிறு குளியலை போட்டுக் கொள்ளலாம். என்ன வாழை இலை குளியலுக்கு நீங்க ரெடியாகிட்டீங்களா?.
தி.தட்சிணாமூர்த்தி, மூலிகை உடலியக்க மருத்துவர், தஞ்சை

சரி...இனிமேல் வாழை இலைக் குளியலின் மருத்துவத்தையும், மகத்துவத்தையும் பார்ப்போம்.

ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.
பருவ வயதுப் பெண்கள் `பாய்பிரண்ட்’ உடன் சுற்றித் திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகாரமாக அனேக பெண்கள் நினைக்கிறார்கள். பாய் பிரண்ட் இல்லையென்று வருத்தப்படும் பெண்களும் உண்டு.
பாய்பிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினைப்பும் பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோருக்குள் எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
`ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது` என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது. பள்ளி - கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள்.
வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும்.
அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

சப்பாத்தி, நாண், தோசை, சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காளான் கிரேவி. இன்று இந்த காளான் கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
அரைப்பதற்கு...
வெங்காயம் - 1
தக்காளி - 2
பட்டை - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:
காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் காளானை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான காளான் கிரேவி ரெடி!!!
காளான் - 200 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
அரைப்பதற்கு...
வெங்காயம் - 1
தக்காளி - 2
பட்டை - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 சிட்டிகை

செய்முறை:
காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் காளானை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான காளான் கிரேவி ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். குழந்தையின் நகத்தை வெட்டும் போது கவனிக்க வேண்டியவை.
குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் பராமரிப்பிலும் தாய்மார்கள் மென்மையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். அந்த விஷயங்களில் உங்களுக்கு உதவும் எளிய டிப்ஸ் இதோ…
* குழந்தைகள் விளையாடும் வேளைகளில் அதிகமாக நகங்களை பயன்படுத்துவதால் அதில் ஏராளமாக அழுக்கு படியும். இதனால் நோய் தொற்ற வாய்ப்பு உண்டு. எனவே அதிகமாக வளரும் நகங்களை அவ்வப்போது வெட்டிவிடுவது சிறந்தது.
* குழந்தைகளின் நகங்களை வெட்ட சரியான நேரம் அவர்கள் தூங்கும் வேளைதான். இல்லாவிட்டால் அவர்கள் வளைந்து, நெளிந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். பிறகு அழுகையையும் நிறுத்த முடியாது.
* குளிப்பாட்டியவுடன் குழந்தைகளின் நகம் மேலும் மென்மையாக மாறிவிடும் என்பதால் அப்போதும் நகங்களை நறுக்கலாம்.

* குழந்தைகளின் கால் நகங்கள், கை நகங்களைவிட மெதுவாகத்தான் வளரும். அதுவும் மிருதுவாகத்தான் இருக்கும். கால்நகங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்பதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டிய அவசியமில்லை. நன்றாக வளர்ந்தபிறகு கத்தரிக்கலாம்.
* நகங்களை வெட்டுவதற்கு குழந்தைகளுக்கான `நெயில்கட்டர்’ கருவியை பயன்படுத்தலாம். கத்தரிக்கோல் கொண்டு வெட்டுவது, சாணைக்கல்லில் நகங்களை உரசுவது போன்றவை கூடாது.
* காதுகளை சுத்தம் செய்ய சுத்தமான துணியை லேசாக தண்ணீரில் நனைத்து காதை துடைத்தால் போதும். காதுக்குள் குடைந்து எடுக்க வேண்டாம்.
* காதுகளில் மயிர்க்கால்கள் வளர்வதை உணர்ந்தால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்க வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.
* காதுக்குள் சொட்டு மருந்துகள் எதையும் டாக்டர்களின் ஆலோசனையின்றி விடவேண்டாம்.
* கண்களை சுத்தபடுத்தும்போது சுத்தமான துணியை வெதுவெதுபான நீரில் முக்கி பிழிந்துவிட்டு கண்ணின் சுற்றுபுறத்தை துடைத்தால் போதும். சோப்பு கொண்டு கண்களை கழுவக்கூடாது.

* குழந்தைகளுக்கு வேகமாக நகம் வளர்ந்து விடும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. மெதுவாகவே வளரும். 2 வாரங்களுக்கு ஒரு முறை நகங்களை வெட்டிவிடலாம்.

* குழந்தைகளின் கால் நகங்கள், கை நகங்களைவிட மெதுவாகத்தான் வளரும். அதுவும் மிருதுவாகத்தான் இருக்கும். கால்நகங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்பதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டிய அவசியமில்லை. நன்றாக வளர்ந்தபிறகு கத்தரிக்கலாம்.
* நகங்களை வெட்டுவதற்கு குழந்தைகளுக்கான `நெயில்கட்டர்’ கருவியை பயன்படுத்தலாம். கத்தரிக்கோல் கொண்டு வெட்டுவது, சாணைக்கல்லில் நகங்களை உரசுவது போன்றவை கூடாது.
* காதுகளை சுத்தம் செய்ய சுத்தமான துணியை லேசாக தண்ணீரில் நனைத்து காதை துடைத்தால் போதும். காதுக்குள் குடைந்து எடுக்க வேண்டாம்.
* காதுகளில் மயிர்க்கால்கள் வளர்வதை உணர்ந்தால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்க வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.
* காதுக்குள் சொட்டு மருந்துகள் எதையும் டாக்டர்களின் ஆலோசனையின்றி விடவேண்டாம்.
* கண்களை சுத்தபடுத்தும்போது சுத்தமான துணியை வெதுவெதுபான நீரில் முக்கி பிழிந்துவிட்டு கண்ணின் சுற்றுபுறத்தை துடைத்தால் போதும். சோப்பு கொண்டு கண்களை கழுவக்கூடாது.
இன்றைய இளம் பெண்களின் அழகைக் கெடுக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது முகப்பரு. முகப்பரு வந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
பரு முகத்தில் வருவதால், பருவக்கான கிரீமோ, பேக்கோ போட்டால் பரு போய்விடும் என்று பல பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தலையில் பொடுகுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு முகத்தில் பரு வருகிறது. ஸ்கால்பில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு இறங்கி வருவதால் அவை படும் இடங்களில் எல்லாம் பரு வருகின்றது. அதனால் பலருக்கு நெற்றியிலும் கன்னங்களிலும் பரு வருகிறது. எண்ணெய்ப் பசை சருமத்தால்: எண்ணெய்ப் பசை அதிகமுள்ள சருமம் என்றாலும், அதாவது நம் சருமத்தின் செபேஸியஸ் எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகம் இருந்தாலும் பரு வரலாம்.
பரு வந்தால் என்ன செய்வது?
* பொடுகுப் பிரச்னையால் பரு வந்திருக்கிறதா என்று பார்த்து முதலில் தலையில் பொடுகை சரிப்படுத்திக் கொண்டால்தான் முகத்தின் பருக்கள் குறையும்!
* பொடுகு இருப்பதாகத் தெரிந்தால் தலை வைத்துப் படுக்கும் தலையணை மூலம் கூட பரு வரலாம். அல்லது வீட்டில் மற்றவருக்கும் வரலாம். எனவே படுக்கும்போது தலையணை மேல் ஒரு டவல் போட்டு தினம் அதை எடுத்து வாஷ் பண்ணி விட்டாலே பருவை வரவிடாமல் தடுக்கலாம்.
* பரு இருந்தால் முகத்துக்கு சோப் போடக்கூடாது. சோப்பில் உள்ள கொழுப்பு மறுபடி சருமத் துளைகளை அடைத்துக் கொண்டு விடும். பரு சீக்கிரம் போகாது…
இதற்கென்றே சில ஃபேஸ் வாஷ் கிடைக்கிறது. அக்னே ஃபேஸ்வாஷ் என்று கேட்டு வாங்கி, சோப்புக்கு பதில் முகத்துக்குப் போடலாம். இந்த ஃபேஸ் வாஷில் ஆன்டி பாக்டீரியல் விஷயங்கள் உள்ளதால் பருவால் ஏற்படும் இன்ஃபெக்ஷன் குறையும்!
பரு வந்தால் கவனிக்க வேண்டியது என்ன?
முகத்தில் பரு வருபவர்கள் அனைவருக்குமே அவை கருப்புத் தழும்பாக மாறிவிடுவதில்லை. பருவின் மேல் கை வைத்து அந்தப் பருவின் உள்ளிருக்கும் சீழை எடுக்கிறேன் என்று கிள்ளி கிள்ளி எடுத்தாலோ, அல்லது ஃபேஸ் பேக் போட்டு அழுத்தமாக தேய்த்தாலோதான் அந்த இடம் பாதிக்கப்பட்டு பரு, தழும்பாக மாறி மாதக் கணக்கில் நிறம் மாறாமல் அப்படியே நின்று விடுகிறது. முகத்தில் கை வைக்காமல் பருவுக்கான ட்ரீட்மெண்டை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால், பருக்கள் போய்விடும்… தழும்புகளும் வராது.

அஜீரண கோளாறு உள்ளவர்கள் சீரகத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று ஜீரண சக்தியை தூண்டும் ஜீரா சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 2
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 1
ப்ரிஞ்சி இலை - 1
இலவங்கப்பட்டை - 1
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெயை ஊற்றி, கிராம்பு, அன்னாசிப்பூ, இலவங்கப்பட்டை, ப்ரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் சீரகத்தை போட்டு வதக்கவும்.
சீரகம் வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதில் கழுவி வைத்துள்ள அரிசி, கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.
பின் அதில் 2 கப் தண்ணீர் விட்டு, உப்பை சேர்த்து, மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது சுவையான ஜீரா சாதம் ரெடி!!!

இதனை பன்னீர், காளான் கிரேவியுடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும்.
நம் உடலில் பல பகுதிகளுக்கு பிசுபிசுப்புத்தன்மை தேவைப்படுகிறது. பெண்களின் பிறப்பு உறுப்பு எப்போதும் ஈரப்பசை மற்றும் வழவழப்புடன் இருக்க வேண்டும். அதற்காக இந்த பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் சுரக்கிறது. இது, பிறப்பு உறுப்பின் தசைப் பகுதி மற்றும் கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரக்கிறது. இதன் சுரப்பு அதிகமாகி விடும்போது அதை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.
சினைப்பையில் இருந்து சினை முட்டை வெளியாகி, கருப்பைக்கு வரும் காலத்திலும், மாத விலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும், பின்பும், கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்திய உறவின் போது, பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.
அறிகுறிகள்…
நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது முதல் அறிகுறி. பிறப்புறுப்பில் அரிப்பும், உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கு இருந்தால் அது உடனடியாக கவனிக்கத் தகுந்த அறிகுறியாகும்.
அதிகரிக்க காரணங்கள்…

கிருமித் தொற்றால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், சுரப்பு மஞ்சள், இளம் பச்சை நிறத்திலோ காணப்படும். அரிப்பு தோன்றும். சிறுநீர் கழிக்கையில் எரிச்சலும், கடுப்பும் தோன்றும். தாம்பத்திய தொடர்பின் போது எரிச்சல், வலி ஏற்படும். மாத விலக்கின்போது கிருமிகள் அதிகம் பெருகுவதால், யோனிக் குழாயில் நுரைத்த வெண் திரவம் தெரியும். அந்த குழாய் சிவந்து, கருப்பையின் வாய்ப் பகுதியில் செம்புள்ளிகளும் காணப்படும். வெள்ளைப்படுதலை ஏற்படுத்தும் கிருமிகள் பெண்ணிடம் இருந்து ஆணுக்கும் வரும். கருத்தடை மருந்துகள், நுண்ணுயிர் கொல்லி மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவைகளை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் வெள்ளைப்படுதல் அதிகமாகும்.
கண்களுக்கு தெரியாத நுண் கிருமிகள் கருப்பையில் தொற்றிக் கொண்டாலும் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும். அதனால், பெண்கள் உடலையும், உள்ளாடையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர் கழித்த ஒவ்வொரு முறையும் தண்ணீரால் கழுவுவது அவசியம். நுண்கிருமிகளின் வகை மற்றும் தாக்குதலின் தன்மையை பொறுத்து, வெள்ளைப்படுதலின் அளவு அதிகரிக்கும். பால்வினை நோய்களாலும் இந்த பாதிப்பு ஏற்படும்.
கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அரிப்பு தோன்றாது. ஆனால், அடிக்கடி அடிவயிறு வலிக்கும். கருப்பை புற்றுநோயால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், அது இளஞ்சிவப்பாக இருக்கும். உள்ளாடையில் திட்டாக கறைபோல் படியும். சில வேளைகளில் உள்ளாடை முழுதும் நனைந்து விடும். அப்போது நாற்றமும் அதிகமாக இருக்கும். ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் அதிக வெள்ளைபடுதல் ஏற்படுவதுண்டு. கருத்தடைக்கு பயன்படுத்தும் சாதனங்கள், அப்பகுதியில் பயன்படுத்தும் களிம்பு போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளைப்படுவதும் உண்டு. அத்தகைய பொருட்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டாலே வெள்ளைப்படுதல் சரியாகி விடும்.
சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால், தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன.

யோனிக் குழாயில் கிருமித் தொற்றே இதற்கு முக்கிய காரணம். ஆண் உறுப்பின் நுனித் தோல், சிறுநீர்துளை, ஆண்மை சுரப்பி ஆகிய இடங்களில், ‘டிரைக் கோமோனஸ் வெஜைனாலிஸ்’ என்ற கிருமிகள் காணப்படுகின்றன. இது ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தொற்றுகிறது. கிருமிகள் உள்ள ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், குளியல் அறை போன்றவைகளை பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களுக்கும், சிறுமிகளுக்கும்கூட வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.