என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    மீன் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா?. சூப்பராக இருக்கும். இன்று மீன் முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் முட்டை - 200 கிராம்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கடுகு - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    தேங்காய் துருவல் - 5 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.

    மீன் முட்டை நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும்.

    அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மீன் முட்டை பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.
    பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர். எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர்.

    தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.

    • சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.

    • நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.

    • பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.

    • ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.

    • முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.

    • வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

    • பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம். 
    வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம் ஆகும்.
    சிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் (Fiber) செலினியமும் (Selenium) மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும்; ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் (Rhemetoid Arthritis) குறைக்கும்.

    முழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் நடந்த ஓர் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்து தயாரான எண்ணெயை (Rice Bran Oil) சிலரைப் பயன்படுத்தச் சொல்லி சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இறுதியில் எல்.டி.எல் அளவு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த ரைஸ் பிரான் ஆயில், இதய ஆரோக்கியத்துக்கு செயல்படு உணவாக (Functional Food) இருந்து காக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இதில் இதய ஆரோக்கியத்துக்கு உதவும் வைட்டமின் பி, மக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருப்பதுதான்.

    மாதவிடாய் முடியும் நிலையில் இருக்கும், முடிந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு சில பிரச்சனைகள் தோன்றுவது வழக்கம். அதிகக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் எல்லாம் வரும் வாய்ப்பு உண்டு. வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக, இந்த அபாயங்களை வெகுவாகக் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.

    இதில் இருக்கும் மக்னீசியம், நம் உடலில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட நொதிகளுடன் (Enzymes) செயலாற்றுகிறது. குறிப்பாக, குளூக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பில்! இதன் காரணமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் மக்னீசியம் உதவுகிறது; நோயைத் தடுக்கிறது.

    இன்னும், ஆஸ்துமா தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதில், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில், மாரடைப்பைத் தவிர்ப்பதில், பக்கவாதம் வராமல் தடுப்பதில், பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் காப்பதில்... என இதன் பலன்கள் பட்டியல் வெகு நீளம்.

    வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைக்கொண்டு சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை, கொழுக்கட்டை என எத்தனையோ செய்வதற்கு வழியுண்டு. சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம்.

    பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான்.
    பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான்.

    வறட்சிப் பிரச்சினை உள்ளோர் கிரீம்கள், ஜெல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நிவாரணம் பெற முடியும். அவை கையில் இல்லாவிட்டால் அவசரத்திற்கு பாடி லோஷனைக் கூட பயன்படுத்தலாம்.

    வறட்சிப் பிரச்சினை உள்ளவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறையும்போதுதான் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுகிறது. எனவே நிறைய தண்ணீர் குடியுங்கள். இதனால் நீர்ச்சத்து உடலில் குறையாமல் இருக்கும். மேலும் ஜூஸ் போன்றவற்றையும் அடிக்கடி குடிக்க வேண்டும்.

    உறவின்போது அதிக அளவில் வலி இருந்தால் பிறப்புறுப்பு வறண்டிருக்கலாம். அதுபோன்ற சமயத்தில் உறவை நிறுத்துவதுதான் நல்லது. இல்லாவி்ட்டால் பெரும் வலி ஏற்பட்டு அவஸ்தைப்பட நேரிடும்.

    கிரீம், ஜெல் போட்டும் கூட பிறப்புறுப்பு வறட்சி போகாவிட்டால் டாக்டரைப் பார்ப்பது நல்லது. ஏதாவது தொற்று ஏற்பட்டிருந்தால் கூட பிறப்புறுப்பு வறண்டு போகலாம். சில ஆணுறைகள் கூட பிறப்புறுப்பு வறட்சியை ஏற்படுத்தக் காரணமாக அமைகிறதாம்.

    இப்படிச் சின்னச் சின்னதாக பிறப்புறுப்பு வறட்சியைச் சமாளிக்க நிறைய வழிகள் உண்டு. உரியவற்றை செய்து உல்லாசத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.
    வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.
    குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களையும், லோஷன்களையும், ஷாம்புக்களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டிவரும். இவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது சருமத்தை பராமரிக்கலாம்.

    நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை. இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது. குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காட்சியளிக்கின்றது.

    இதனை போக்குவதற்கு கடைகளில் ஏராளமான மாய்ஸ்சுரைசர்களும், லிப் பாம்களும், லிப் கிரிம்களும் கிடைக்கின்றன. வறண்ட வெடித்த உதடுகளை குணமாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் பல உள்ளன. சிலவகை இயற்கையான மாயிஸ்ச்சரைசர்கள் உங்கள் உதடுகளை மென்மையாக்கி மீண்டும் நீரேற்றல் செய்யும்.

    வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவை இந்த வகையை சார்ந்தவைகளாகும். இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரிசெய்வதற்கு சிறந்ததாகும். இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

    தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர்காற்றில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பொருளாகும். அதனால், எல்லோரும் வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

    தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எப்பொழுதும் உங்கள் கைப்பையில் சிறிய தேங்காய் எண்ணெய் பாட்டில் ஒன்று எடுத்து செல்ல வேண்டும். போதுமான இடைவேளைகளில் எண்ணெயை தடவிக்கொள்ள வேண்டும். உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக்கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக்கொள்ள வேண்டும்.

    குளிர்காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள். தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு தனி மணமும் சுவையும் உள்ளது. இதன் மணம் பிடிக்கவில்லை என்றால் பகல் நேரங்களில் இதனை உபயோகிக்காமல் வேறு வழியில் உபயோகிக்கலாம். இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவிவிடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்துவிடாதீர்கள்.

    தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களின் கலவை உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இந்த கலவையை இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகிக்கலாம். இந்த கலவை உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும்.

    சிறு தானிய வகைகளில் ஒன்றான தினை ருசியுடன் கூடிய அருமருந்தாக செயல்படுகிறது. தினையை பயன்படுத்தி சுவையான ஆப்பம் செய்வது பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை - 2 கப்
    இட்லி அரிசி - கால் கப்
    வெள்ளை உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    தேங்காய்ப் பூ - 1 கப்
    வடித்த சாதம் - ஒரு கைப்பிடி
    உப்பு - தேவைக்கு
    சர்க்கரை - 2 ஸ்பூன்



    செய்முறை :

    முதலில் தினையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைக்கவும்.

    அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும். மறுநாள் மாவு புளித்து நன்கு பொங்கியிருக்கும். மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்கவும்.

    ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான மாவை ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.

    ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.

    சத்தும், சுவையுமிக்க தினை ஆப்பம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நீர்கடுப்பு அடி வயிற்றில் வலி, சிறுநீரில் ரத்தம், கை-கால்களில் வீக்கம், உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.
    உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. உடலின் கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே 12-வது வாரத்தில் சிறுநீர் பிரிய தொடங்கி விடும். குழந்தை பிறந்த பின்பு முதல் 24 மணி நேரத்தில் சிறுநீரகம் பிரிந்து விடும். அதற்கு மேல் பிரியாவிடில், ஒன்று சிறுநீர் உற்பத்தி குறைவு அல்லது பிரிந்த நீர் வெளியேறாமல் ஏதோ தடை என்பதை அறியலாம்.

    செயலிழக்கும் அபாயம்

    ஒருவருக்கு இதயத்தில் நோய் ஏற்பட்டு இதயம் சரிவர இயங்காவிடில் அவருக்கு இதயத்துடன் சேர்ந்து சிறுநீரகங்களும் செயலிழக்கும் அபாயம் உள்ளது. மூளையில் ரத்தக்கசிவோ, தலைக்காயமோ ஏற்படின் சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது.

    சிறுகுழந்தைகளுக்கு சிறுநீர் பிரியும் போது அழுதல் பெரிய குழந்தைகள் எனில் நீர்கடுப்பு அடி வயிற்றில் வலி, பசியின்மை, எடை கூடாமை, அடிக்கடி வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம், கண்ணில் கீழ் இமையிலோ, சுற்றிலோ ஏற்படும் வீக்கம், கை-கால்களில் வீக்கம். உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.

    பிரச்சினை

    பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை சாதாரணமாக சந்திக்கும் பிரச்சினை யூரின் இன்பெக்‌ஷன், சிறுநீர் பிரியும் போது வலி, எடை குறைவு, அடிவயிற்று வலி, அடிக்கடி காய்ச்சல், சிறுநீர் பழுப்பு, சிறுநீரில் ரத்தம் போன்றவை அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு, சவ்வு போன்ற உள் பிரச்சினைகள் இருப்பதால் அடிக்கடி யூரின் இன்பெக்‌ஷன் ஏற்படலாம்.

    குழந்தைகள் படுக்க செல்வதற்கு 2 மணி முதல் 3 மணி நேரத்திற்கு முன் நீராகாரம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காபின் உள்ள பானங்களை தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு முன்கண்டிப்பாக சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். நடு இரவில் குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். பகல் நேரங்களில் சிறுநீரை எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியுமோ அவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க செய்ய வேண்டும். அப்போது மூத்திரைப்பையில் அதிக சிறுநீரை தாங்கும் திறன் அதிகரிக்கும். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகளை பரிசோதனை செய்து, டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் கே.எழிலரசு கூறினார்.
    மருத்துவ பரிசோதனை மூலமாக தொண்டை வலியின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, நவீன மருத்துவ சிகிச்சை மூலமாக தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறலாம்.
    நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, அதிக உமிழ்நீர் வடிதல், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் வருடத்தில் பல தடவை வந்து போகும். பலர் இத்தகைய அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு அவ்வப்போது கிடைக்கின்ற தற்காலிக நிவாரணிகளை உட்கொண்டு வருகின்றனர்.

    இத்தகைய நடவடிக்கையால் இந்த நோயின் அடிப்படை காரணமான பி-ஹுமாலிடிக் ஸ்டெப்டோ காக்கை என்னும் ஒருவித நச்சுக்கிருமி ரத்தத்தில் வீரியமடைந்து, நாளடைவில் அதன் நச்சுத்தன்மை கால் மூட்டுகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் நிரந்தர பாதிப்புக்கு காரணமாகி விடும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம்.

    நோயின் அறிகுறியாக தொண்டையில் வலி இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரும். தொண்டையில் வெளிப்பொருள் அடைத்து கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அடிக்கடி உடல் தளர்ந்து போகும். கை, கால் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும். மேல் சுவாசக்குழாய் தொற்று உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது.

    இதற்கு சிறந்த காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி ஆரம்ப கட்டத்திலேயே தொண்டை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நவீன தொண்டை என்டாஸ்கோப்பி பரிசோதனை மூலம் சிகிச்சை பெற்று குணம் அடையலாம். மூக்கு தண்டு வளைதல் இருந்தால் அதனை என்டாஸ்கோப்பி மூலமாக சரி செய்ய முடியும். சைனஸ் நோய் இருந்தால் அதனை நிரந்தரமாக சரி செய்யலாம். சளி பிடிக்கின்ற உணவு வகைகளை தவிர்த்து முக்கு, தொண்டை, வாய், பற்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்.

    இந்த நோயினை ரத்தபரிசோதனை மூலமாக எளிதில் கண்டறியலாம். குறிப்பாக தொண்டையில் இருந்து சிறிது சளியை எடுத்து அதனை கல்சர் டெஸ்டிங் என்று சொல்லப்படுகிற கிருமி ஆய்வு செய்வதன் மூலமாகவும், ஏ.எஸ்.ஓ. டிட்ரி என்று சொல்லப்படுகிற ரத்த பரிசோதனை மூலமாகவும் தற்போதைய அதிநவீன ஆய்வுக்கூட நோய் எதிர்ப்பு திறன் ஆய்வுகள் மூலமாகவும் எளிதில் கண்டறிய முடியும்.

    மருத்துவ பரிசோதனை மூலமாக தொண்டை வலியின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, நவீன மருத்துவ சிகிச்சை மூலமாகவோ அல்லது தேவைப்பட்டால் சைனஸ் அறுவை சிகிச்சை அல்லது டான்சில் அறுவை சிகிச்சை மூலமாகவோ தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறலாம்.
    தியானம் மனதையும், உடலையும் நலப்படுத்தும் என்பது உண்மை. யோகாவும் ஒருவகையில் உடற்பயிற்சிதான். ஆரோக்கியமாக இருக்கும் உடல், யோகாவால் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.
    நவீன வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி, குடும்ப தேவைகள் நோக்கிய ஓட்டம் காரணமாகப் பலரும் மன அமைதியை இழக்கின்றனர். பொதுவாக எதிலும் பிடிப்பற்று ஒதுங்கிப்போகும் மனிதர்கள் பெருகிவிட்டனர்.

    சோகமான மனநிலை, கவலை, மனஇறுக்கம், மனஅழுத்தம் பலரையும் பாதிக்கிறது. இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தொடங்கும் ஓட்டமும் பதற்றமும் நாள் முழுவதும் முடிவதில்லை. ஏதாவது பொருளை வாங்கு, பயன்படுத்து, ரசனையை மாற்று, தூக்கியெறி, புதிய பொருளை வாங்கு என்ற நுகர்பொருள் பண்பாட்டு தாரக மந்திரம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்திவிட்டது. இந்த சூழலில் பல்வேறு பிரச்சினைகளால் அல்லல்படும் மனிதன், மன உளைச்சலுக்கு ஆளாகிறான். இதனால் உடலிலும் மனதிலும் ஏற்படும் நோய்கள் பெரிதும் மனதையே பாதிக்கின்றன.

    நுரையீரலின் வேலை சுவாசம் போல, மூளையின் வேலை மனம் சார்ந்தது என்பது உளவியலாளர் கருத்து. உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டறியும் மனம், அதற்கு பிரச்சினை என்றால் குழம்பிப் போகிறது. மனதை பற்றிக் காலங்காலமாக தத்துவஞானிகளும் ஆன்மிகவாதிகளும் நிரம்ப சொல்லி உள்ளனர்.

    மனிதன் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யோகா, தியானம் மூலம் தீர்க்க முடியும் என பிரசாரம் செய்யும் வழக்கம் பெருகி வருகிறது. இன்னும் சிலர் உடல் நோய்களைக்கூட யோகா, தியானம் மூலம் குணப்படுத்திவிட முடியும் என்கின்றனர்.

    பொதுவாக விவசாய வேலைகளில் ஈடுபடும் கிராம மக்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை. மருந்து, யோகா, தியானம் மூலம் உடலை வளப்படுத்தலாம் என்று சித்தர்களும் யோகிகளும் கருத்தை முன்வைத்தனர். தியானம் மனதையும், உடலையும் நலப்படுத்தும் என்பது உண்மை. யோகாவும் ஒருவகையில் உடற்பயிற்சிதான். ஆரோக்கியமாக இருக்கும் உடல், யோகாவால் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

    அதே நேரத்தில் நோய்வாய்ப்பட்ட உடலுக்கும், மனதுக்கும் மருத்துவ சிகிச்சை கட்டாயம் தேவை. அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையிலுள்ள நோயாளிகள், நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையையே பெற வேண்டும்.
    சாக்லேட் பேடாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பேடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோயா (khoya) - 1 கப்
    கோக்கோ பவுடர் - 2 மேஜைக்கரண்டி
    சக்கரை - 1/4 கப்
    வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி
    பாதாம் - 20
    வெண்ணெய் - 1 தேக்கரண்டி


     
    செய்முறை :

    10 பாதாமை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    10 பாதாமை துருவிக்கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில், கோயா, சாக்லேட் பவுடர், சக்கரை, வெண்ணெய், பொடியாக வெட்டிய பாதாம், எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடு செய்யவும். தீ மிதமாக இருக்கவேண்டும். நன்கு கலந்து விடவும்.

    எல்லாம் கலந்து நன்கு இளகும். இப்பொழுது, வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். ஓரங்கள் ஒட்டாமல் கெட்டியாகி கரண்டியுடன் சேர்ந்து கலவைச் சுற்றும். அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

    இந்த சாக்லேட் கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், கையில் நெய் தடவிக்கொண்டு, சம அளவு உருண்டைகளாக பிரித்து சிறிய பாதுஷா வடிவில் தட்டலாம். அல்லது ஒரு சிறிய வட்டமான மூடியில் நெய் தடவி,  சீவிய பாதாம் சிறிது தூவி, அதன் மேல் சாக்லேட் கலவையை வைத்து, வட்டமாகத் தட்டவும். பேக்கிங்  ஷீட்டில் வைத்து 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கலாம்.

    சூப்பரான சாக்லேட் பேடா ரெடி.

    குறிப்புகள்

    தீயை எப்பொழுதும் மிதமாக வைக்கவேண்டும். முதலில் பிசுபிசுப்பாக இருப்பது போல இருக்கும். ஆனால் பிறகு, காய்ந்து விடும். ஓரிரு நாட்களில் சாப்பிட்டு விட வேண்டும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    தடாசனம் அடிப்படை ஆரம்ப ஆசனம். நின்று கொண்டு செய்ய வேண்டிய ஆசனம். இந்த ஆசனம் கால் வலி, குதிகால் வலியை போக்குகிறது.
    தடாசனம் அடிப்படை ஆரம்ப ஆசனம். நின்று கொண்டு செய்ய வேண்டிய ஆசனம். “தடா” என்றால் மலை குன்று போல் ஸ்திரமாக நிற்பதை குறிக்கும் ஆசனமிது. நின்ற கொண்டு செய்ய வேண்டிய ஆசனங்களை தொடங்கும் முன்பும், முடித்த பின்பும்  தடாசனம் செய்ய வேண்டும்.
     
    செய்முறை:
     
    விரிப்பில் நேராக நிற்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் அழுத்தமாக  வைக்கவும். முழங்கால்கள் வளையாமல் நேராக நிற்கவும். கைகளை தலைக்கு மேல் தூக்கி, இரண்டு கைகளையும் சேர்த்து வந்தனம் (நமஸ்காரம்) செய்வது போல் வைத்துக்  கொள்ளவும்.

    மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக குதிகால்களை உயர்த்தவும். குதிகால்களை உயர்த்திய நிலையில் சில நொடிகள் நின்று, பிறகு மூச்சை விட்டபடி குதிகால்களை இறக்கி, நார்மல் நிற்கும் நிலைக்கு வரவும். 5 அல்லது 7 முறை திருப்பி செய்யவும். உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் தடாசனத்தை செய்வதை தவிர்க்க வேண்டும்.
     
    பலன்கள் :
     
    1. சரியாக நிற்கும் நிலையை கற்பிக்கிறது.
    2. மனதுக்கு அமைதி தருகிறது.
    3. உடலுறுப்புகளுக்கு ரத்தம் பாய்வது அதிகரிக்கிறது. இதனால் உடல் கழிவுகள் நீங்குகின்றன.
    4. தடாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் செக்ஸ் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெற்று நன்கு செயல்படும். பாலியல் திறன் அதிகரிக்கும்.
    5. கால்கள் வலுப்பெறுகின்றன.
    6. குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி, செக்ஸ் சக்திகளை ஊக்குவிக்கிறது.
    தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தின் பயன்கள், உபயோகிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தின் பயன்கள், உபயோகிக்கும் முறைகள்:

    கருஞ்சீரகம், கரிசலாங்கண்ணி, நெல்லி, வல்லாரை, செம்பருத்தி, ஆவாரம்பூ, வெந்தயம், வலம்புரி, இடம்புரி, தேவதாரு, சந்தனம், வெட்டிவேர், கார்போக அரிசி, ரோஸ் மேரி இலை, போன்ற மூலிகைகளை இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ கண்ணாடி குப்பியில் நிறைத்து நல்ல வெயிலில் வைத்து நிறம் நன்றாக மாறிய பிறகு தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி மிகவும் நேர்த்தியாக வளரவும் உதிராமலும் இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம்.

    இந்த எண்ணெயுடன் திருநீற்று பச்சிலை, தைலமர எண்ணெய், இஞ்சி, பூண்டு எண்ணெய்களை சிறிது கலந்து தேய்த்தால் பேன், பொடுகு, புழுவெட்டு தொல்லைகள் சரியாகிவிடும். இளநரையை தடுக்க இத்துடன் பாதாம், ஆப்ரிகாட், முருங்கை எண்ணெய்களை கலந்து பயன்படுத்தினால் முழுமையான பலன் கிடைக்கும்.


    அக சுரப்பிகளின் குறைகளால் முடியில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய: கருஞ்சீரகம், திரிகடுகம், கரிசலாங்கண்ணி, வல்லாரை, முருங்கை, கருவேப்பிலை, வெந்தயம் இவைகளை கலந்து கசாயம் செய்து அல்லது இத்துடன் தேங்காய், பேரிச்சை, திராட்சை கலந்து சாறு செய்து சாப்பிட்டால் இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து கிடைப்பதுடன், முடி நன்றாகும். மூளை நன்றாக வேளை செய்யும், மனம் அமைதியுறும். செரிமான உறுப்புகள் மிகச்சரியாக இயங்கும்.

    கருஞ்சீரக எண்ணெயுடன் சிவனார் வேம்பு, கிரந்தி நாயகம் சுத்தமான மஞ்சள் கலந்து உடல்முழுவதும் பூசி குளித்தால் தோல் சுத்தமாக மினுமினுப்புடன் தோற்றமளிக்கும். தோல் அரிப்பு, கொப்புளங்கள் முற்றிலும் குணமாகும். கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது பரங்கி விதை எண்ணெய் கலந்து தோல்மீது குறைவாக பூசினால் தோல் வறட்சி சரியாகும்.

    கருஞ்சீரக எண்ணெய் (அ) பொடியில் சுத்தமான மஞ்சள், சந்தனம், கார்போக அரிசி, வெந்தயம், தேன் இவைகளை சேர்த்து சுத்தமான பன்னீரில் கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தி பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள் உங்கள் முகப்பொலிவை பார்த்து. இந்த கலவையுடன் குப்பைமேனி, கோரைக் கிழங்கு பொடிகளை சிறிது சேர்த்து பயன்படுத்தினால் முகத்திலும் மற்ற இடங்களிலும் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும் மீண்டும் வளராமலும் இருக்க பெரிதும் பயன்படுவதை உணரலாம்.
    ×