என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    இன்று ஆணுக்கு நிகரான ஊராட்சி மன்ற தலைவர் முதல் ஜனாதிபதி வரை பதவிக்கு பெண்கள் வந்து விட்டார்கள். ஆட்டோ டிரைவர் முதல் விமான பைலட் வரையில் பெண்கள் முன்னேறி விட்டார்கள்.
    “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் கனியன் பூங்குன்றனார். இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கூறிய காலம் மாறி பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் என்ற காலம் இப்போது வந்து விட்டது. 

    இன்று ஆணுக்கு நிகரான ஊராட்சி மன்ற தலைவர் முதல் ஜனாதிபதி வரை பதவிக்கு பெண்கள் வந்து விட்டார்கள். போலீஸ்துறையில் காவலர் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி வரையில் பெண்கள் பணியாற்றி வெற்றி நடை போடுவதையும் நம்மால் காணமுடிகிறது. சாதாரண உதவியாளர் முதல் கலெக்டர் வரை மங்கையர்கள் பணியாற்றுகிறார்கள். சாதாரண நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பதவி வகிக்கிறார்கள். இது பெருமைக்குரியது அல்லவா. ஆட்டோ டிரைவர் முதல் விமான பைலட் வரையில் பெண்கள் முன்னேறி விட்டார்கள். 

    இது பாராட்டுக்குரியது அல்லவா? விஞ்ஞான ஆய்வாளர் முதல் விண்வெளி பயணம் செய்யும் வெற்றி வீராங்கனையாக திகழ்கிறாள் பெண். கல்வியை எடுத்துக்கொண்டால் எந்த தேர்வானாலும் பெண்களே அதிக வெற்றி பெறுகிறார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. கொரோனா எனும் கொடிய வைரசை எதிர்த்து போராடுவதிலும், மருத்துவர்களாகவும், செவிலியர்களாகவும் ஆற்றும் பணி மகத்தானது. 

    அது மட்டுமல்ல இவைகளோடு சேர்த்து தங்கள் குடும்ப நிர்வாகத்தையும் திறம்பட செய்து கொண்டு இருக்கிறார்கள். தன் கணவருக்கு நல்ல ஆலோசகராக, குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்கள். பெண்கள் பொறுமையால் சிறந்து விளங்கியதால் தான் தாய் நாடு, தாய் மொழி என்று அழைக்கின்றோம். பெண்களிடம் பொறுப்புணர்வு, கடமை, பொறுமை, திறமை, துணிவு, பணிவு அனைத்தும் அமைந்திருப்பதால் தான் எதையும் தாங்கும் இதயம் அவர்களிடம் இருக்கிறது. பெண்களின் சிறப்பை கவிமணி கூறும்போது, மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்கிறார்.

    தங்களது உழைப்பாலும், விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் பல்வேறு இன்னல்களை வென்று இன்று பல துறைகளில் சிறந்து விளங்கி நாடும், வீடும் உயர, மேன்மையுற தங்களை அர்ப்பணித்து வாழும் பெண்களை நாளெல்லாம் போற்றுவோம்.

    புனிதா, இளங்கலை தமிழ் 3-ம் ஆண்டு,சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி, பூவந்தி, மதுரை.
    பெண்களில் சிலர், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள் தாம்பத்திய உறவில் அதிக ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
    வாழ்க்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளால், பெரும்பாலான இளம்தம்பதிகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மனஅழுத்தம் அவர்களது அன்றாட செயல்பாடுகளை பாதிப்பதோடு, தாம்பத்ய வாழ்க்கையிலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்களுக்குள் மகிழ்ச்சியற்ற நிலை நிலவுவதோடு, தாய்மையடைவதும் தள்ளிப்போகிறது. இந்தியா முழுவதும் குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் தம்பதியரில் 30 சதவீதத்தினர் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

    தங்களுக்கு குழந்தை இல்லையே என்று மனங்கலங்குவது, மன அழுத்தத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. சிகிச்சைக்கு பின்பும் தாய்மையடையாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி, கூடுதல் மனக்குழப்பத்தை தருகிறது. மருத்துவரின் அறிவுரைபடி, குறிப்பிட்ட நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் உருவாகுவது- தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை உட்கொள்வது- அவ்வப்போது பரிசோதனைகளுக்கு உள்ளாகுவது போன்றவைகளும் தம்பதிகளுக்கு மனஅழுத்தத்தை தருகிறது. சிகிச்சைக்காக பெருமளவு பணமும் செலவாகிறது.

    தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளும்போது பெண்கள் பதற்றமாக இருந்தால், கருக்குழாயில் உள்ள தசைகள் இறுக்கமாகி விடும். இது, கரு தரிப்பதில் பிரச்சினையை ஏற்படுத்தும். கரு முட்டை வளர்ச்சி குறித்த பரிசோதனை, கரு முட்டை வெளியேறுவதற்கு போடப்படும் ஊசி போன்றவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் தம்பதிகள் மன அழுத்தம் இல்லாமல் இயல்பாக உறவை மேற்கொள்வது தாய்மைக்கு மிக அவசியம்.

    பெண்களில் சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள் தாம்பத்ய உறவில் அதிக ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இதில் இருக்கும் விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சி என்பது மனித உடலுக்கு கட்டாயம் தேவைதான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான். கடுமையான உடற்பயிற்சி என்பது ஆணுக்கு ஆண் மைத் தன்மையையும், பெண்ணுக்கு பெண்மைத் தன்மையையும் குறைக்கவே செய்யும். மணிக்கணக்காக உடற்பயிற்சி செய்யும் ஆண்களிடம் இருக்கும் பாலுணர்வு வேட்கை பற்றி அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் ‘மெடிசின் அன்ட் சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் அன்ட் எக்ஸசைஸ்’ துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள். அதில் கடுமையான உடற்பயிற்சி, பாலுணர்வு வேட் கையை குறைப்பதாக கண்டறிந்து அறிவித்திருக்கிறார்கள். கடுமையான உடற்பயிற்சி அவர்கள் வாழ்க்கையில் மிகுந்த களைப்பை ஏற்படுத்துகிறது. அந்த களைப்பு பாலுணர்வை தூண்டக்கூடிய ஹார்மோனின் அளவைக் குறைத்துவிடுகிறது என்கிறார்கள்.
    ‘பிரேக் அப்’- ஆண் பெண் உறவுகளில் சந்திக்க கூடாதது. நீங்கள் காரணமில்லாத நிலையில் ஒரு உறவு பிரேக் ஆகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வர 5 ஐடியாக்களை பார்க்கலாம்.
    ‘பிரேக் அப்’- ஆண் பெண் உறவுகளில் சந்திக்க கூடாதது. அதிலிருந்து தப்பிக்க பொறுமை, புரிதல், உங்கள் நிலையை பரிவுடன் துணைக்கு புரிய வைத்தல் என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து ஒரு பிரிவு நடைபெறும்போது ‘நாம் காரணம் இல்லை’ என்கிற மனநிலையோடு வெளியேறுபவர்கள்தான் அதிக மன உளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாகிறார்கள். நீங்கள் காரணமில்லாத நிலையில் ஒரு உறவு பிரேக் ஆகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வர 5 ஐடியாக்களை பார்க்கலாம்.

    பயணம்

    பயணத்தை போல உங்கள் மனக்காயத்தினை ஆற்றும் மருந்து வேறொன்றுமில்லை. உடனடியாக உங்கள் வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பயணத்தை தொடங்கலாம், ஆனால் தனியாக. தொலை தூரத்தில் இருக்கும் நண்பரை தேடியோ அல்லது உங்களுக்கு பிடித்தமான, போகவேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்த இடத்திற்கோ பயணம் செய்யலாம்.

    வேலை

    பயணம் முடிந்து வந்தபின் உங்கள் மனதுக்கு மிகவும் பிடித்த வேலை அல்லது உங்களுக்கு சவால் விடுக்கும் வேலைகளில் ஈடுபடலாம். முழுக்க முழுக்க உங்கள் கவனம் தேவைப்படும் வேலையாக அது இருந்தால் இன்னும் நல்லது. இது போன்று பிரேக் அப்களில் இருந்து வெளியே வர பிடித்தமான வேலையை தேர்வு செய்து அதில் ஈடுபட்டவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாறியுள்ளார்கள்.

    உடற்பயிற்சி

    உடற்பயிற்சி என்றால் சாதாரணமான பயிற்சிகள் இல்லை. கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. ஓட்டம் என்றால் வழக்கமாக நீங்கள் ஓடுவதை விட இரண்டுமடங்கு அதிகம் ஓடுவது. ஜிம் போகும் பழக்கம் இருந்தால் பயிற்சியின் நேரத்தை கூட்டுவது என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘நீச்சல்’ நிச்சயமாக பிரேக்-அப் மீட்கும் மாமருந்து என்றே சொல்லலாம். வேலை முடித்த பிறகு செய்யும் உடற்பயிற்சிகள் உங்களுக்கும் மனதுக்கும் அதிக பலனை அளிக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    பேச்சு

    இதில் இரண்டு வித நன்மைகள் இருக்கிறது. பிரேக் அப் சூழல் ஏன் ஏற்பட்டது என உங்களின் மனதுக்கு நெருக்கமான நண்பருடன் பேசலாம். வழக்கமாய் அதிகம் பேசாத நபராக நீங்கள் இருக்கும் போது இந்த பேச்சு தெரபி மிகப்பெரிய பயன் கொடுக்கும். உங்கள் தரப்பு நியாயத்தை, உங்களின் மனக்காயத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்வதில்தான் மனதை வெல்லும் வழி இருக்கிறது. அதிகம் பேசும் நபராக இருந்தால் இதற்கு எதிர்பதமாக உங்கள் பேச்சுக்களை மிகவும் சுருக்கிக்கொள்ளுங்கள். ஆம்! அப்போதுதான் உங்கள் மனதுடன் நீங்கள் பேசிக்கொள்வீர்கள். இந்த இரு வேறு குணங்கள் கொண்டவர்கள் எதிர்பதமான ஒன்றை கடைப்பிடிக்கும் போது பெரிய மாற்றத்தை உணரலாம்.

    நம்புங்கள்

    வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை மட்டுமல்ல, அன்பின் மீதான நம்பிக்கையையும் எந்த சூழலிலும் கைவிட்டு விடாதீர்கள். ஒரு வலி மிகுந்த பிரிவிலிருந்து நீங்கள் வெளியே வந்திருப்பது தோற்றுப்போய் அல்ல, இன்னும் இன்னும் உங்களை நேசிக்கும் மனிதரை சந்திக்கத்தான் என நம்புங்கள். காரணம் ‘அன்பு’ என்பதை எந்த சூழலிலும் நீங்கள் தவிர்க்கவே முடியாது.
    காய்ச்சல்களின் அறிகுறி ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். வைரஸ்நோய் பாதிப்புகளுக்கு நோயின் அறிகுறிக்கு தகுந்த மாதிரிதான் சிகிச்சை தரப்படுவதால் காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம் என்று, காரணம் தெரியாத காய்ச்சலுக்கான விளக்கத்தை மருத்துவத்துறை சொல்கிறது.
    காய்ச்சல்களின் அறிகுறி ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. மலேரியா, டைபாய்டு, காசநோய், நுரையீரல் சளி, சிறுநீரில் கிருமி, புண் அல்லது சீழ் வைத்தல் போன்றவை காய்ச்சலுக்கு அதிக காரணமாகும். வைரஸ் நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், பறவை மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்றவையும் அதிகமாக காணப்படுகின்றன.

    காசநோய் நமது உடலில் எந்தப் பாகத்தை அல்லது மண்டலத்தை வேண்டுமானாலும் தாக்கலாம். அதனால், நீண்ட நாட்கள் காய்ச்சல் இருந்தால் அது காசநோயாக இருக்கலாம். அதற்கான சோதனைகளை செய்துகொள்வது நல்லது. வெளியில் தெரியாமல் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய், காசநோய் ஆகியவை நீண்டநாள் காய்ச்சலுக்கு முக்கியக் காரணங்கள். இதய வால்வுகளில் பாதிப்பு வந்தாலும் அதனால் காய்ச்சல் வரும்.

    ஒருவரின் உடலில் உள்ள வெப்பம் 38.3 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல், 3 வாரங்களை கடந்தும் தொடர்ந்து காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தால், 3 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து, எல்லா சோதனைகள் முடித்தும் காய்ச்சலுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதை ‘காரணம் தெரியா காய்ச்சல்‘ என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.

    மக்களில் பலரும் காய்ச்சலை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். சில சமயங்களில் அது மிகவும் சிக்கலானதும், பல நாட்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் எல்லா சோதனைகள் செய்தும் எளிதில் குணமாகாமல் மருத்துவர்களை திணறடிக்கும் காய்ச்சல்களும் உண்டு. பொதுவாக அனைவரும் காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில கடினமான வியாதிகள் உடலுக்குள் இருந்தால் காய்ச்சல் எளிதில் குணமாகாது.

    பல நாட்கள் கடந்தபின்பே மருத்துவர்களை சென்று பார்க்கிறார்கள். அப்போது மருத்துவர்கள் எந்த பரிசோதனை செய்தாலும் சாதகமான முடிவுகள் கிடைப்பதில்லை. சரியான சிகிச்சை கொடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. வைரஸ்நோய் பாதிப்புகளுக்கு நோயின் அறிகுறிக்கு தகுந்த மாதிரிதான் சிகிச்சை தரப்படுவதால் காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம் என்று, காரணம் தெரியாத காய்ச்சலுக்கான விளக்கத்தை மருத்துவத்துறை சொல்கிறது.
    கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப் செய்து கொடுக்கலாம். இன்று மல்டி கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 4 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய சிறுகீரை - 4 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - 4 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை - சிறிதளவு
    சோள மாவு - 2 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
    வெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ளவும்.

    முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

    கீரை நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவை ஊற்றி கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

    சத்தான மல்டி கீரை சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    பத்து வயதுகளிலே சிறுமிகள் பூப்படையும் காலகட்டம் உருவாகியிருக்கிறது. அந்த வயதிலே அவர்களுக்கு வயதுக்கு வருவதை பற்றி எப்படி சொல்லிக்கொடுப்பது, எதை சொல்லிக்கொடுப்பது என்ற கேள்விகள் பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுகிறது.
    பத்து வயதுகளிலே சிறுமிகள் பூப்படையும் காலகட்டம் உருவாகியிருக்கிறது. அந்த வயதிலே அவர்களுக்கு வயதுக்கு வருவதை பற்றி எப்படி சொல்லிக்கொடுப்பது, எதை சொல்லிக்கொடுப்பது என்ற கேள்விகள் பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுகிறது. ‘செகண்டரி செக்சுவல் சிம்டம்ஸ்’ எனப்படும் மார்பக வளர்ச்சி, உறுப்பு பகுதியில் ரோமவளர்ச்சி போன்றவை சிறுமிகளுக்கு ஏற்படும் காலத்தில் அவர்களுக்கு பூப்படைதல் பற்றி சொல்லிக்கொடுக்க தொடங்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    இந்த உடலியல் மாற்றங்கள் பொதுவாக சிறுமிகளுக்கு 8 முதல் 9 வயதில் ஏற்படும். சிறுமிகள் பெண்ணாகும் இயற்கையான உடல் வளர்ச்சி மாற்றம்தான் பூப்படைதல் என்பதையும், அதை மனப்பூர்வமாக வரவேற்க தயாராக இருக்கவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறி, சிறுமிகளுக்கு தன்னம்பிக்கையூட்டவேண்டும். பூப்படையும்போது ரத்தம் போன்ற திரவம் வெளியேறும், அது இயற்கையானது என்றும் கூறவேண்டும்.

    பின்பு மகளை, தாய் தன் அருகில் இருத்தி உடற்கூறு விஞ்ஞானம் பற்றி எடுத்துரைப்பது அவசியம். அதாவது ‘இன்னும் கொஞ்சகாலத்தில் நீ என்னைப் போன்று பெரிய பெண்ணாக வளரத் தொடங்கிவிடுவாய். குறிப்பிட்ட இடங்களில் ரோமம் வளரும். மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும். பூப்படையும்போது சிறிதளவு ரத்தம் வெளியேறும்’ என்பதை எல்லாம் நிதானமாக எடுத்துரைக்க வேண்டும். இவைகளை சொல்லிக்கொடுக்க நிறைய படங்களும், வீடியோக்களும் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. மகளை அருகில் உட்காரவைத்து அதனைக் காட்டி விளக்குவது நல்லது. அப்போது ‘குட் டச்’ எனப்படும் நல்ல தொடுதல், ‘பேடு டச்’ எனப்படும் தவிர்க்கப்படவேண்டிய தொடுதல் பற்றியும் கூறிவிடலாம். உடையால் மூடப்பட்டிருக்கும் உடல் உறுப்பு பகுதிகளை மற்றவர்கள் தொடுவது மோசமான தொடுதல் என்றும், அதற்கு ஒருபோதும் யாருக்கும் வாய்ப்பு கொடுத்துவிடக்கூடாது என்றும் கூறவேண்டும். இதன் மூலம் சிறுமிகள் பாலியல் வன்முறையில் சிக்காமல் பாதுகாக்கலாம்.

    சில சிறுமிகள் தாய்மார்கள் இது பற்றி சொல்லிக்கொடுக்கும் முன்பே, பூப்படைதல் தொடர்பான விஷயங்களை கேட்கத் தொடங்குவார்கள். அப்போது ஒரு சில தாய்மார்கள் ‘இப்போது இதெல்லாம் கேட்கக்கூடிய விஷயமா?’ என்று நறுக்கென்று கடிந்துகொள்வார்கள். அப்படி கடிந்துகொள்ளக்கூடாது. அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, வயதுக்கு வருதல் பற்றிய அனைத்து தகவல்களையும் உடலியல் விஞ்ஞானபூர்வமாக விளக்கிச்சொல்ல முன்வரவேண்டும். அப்படி தாய்மார்கள் விளக்கிச்சொல்லாவிட்டால் அந்த சிறுமிகள், தவறானவர்களிடம் கேட்டு, தவறான தகவல்களை பெற்று குழம்பிப்போவார்கள்.

    உடலியல் பற்றி சிறுமிகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் விடைசொல்ல முடியாத நிலை சில தாய்மார்களுக்கு ஏற்படலாம். அப்போது அவர்கள், தங்களுக்கு தெரியாததை ‘தெரியாது’ என்று ஒத்துக்கொள்ளவேண்டும். பின்பு அதற்கான விடையை தங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து, மகளுக்கு விளக்கவேண்டும். இது தொடர்பான இயல்பான உரையாடல் தாய்- மகளுக்கு இடையே ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்குள் தோழமை உணர்வு தோன்றிவிடும்.

    மகள்கள் எழுப்பும் சில கேள்விகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். அப்போது கோபம் கொள்ளாமல், ‘உன் வயதில் நானும் இப்படிப்பட்ட கேள்விகளைதான் கேட்டேன். அதற்கு காரணம் நமது உடலை பற்றி நாம் அறியாமல் இருந்ததுதான். இப் போது நான் அம்மாவாகிவிட்டதால் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன’ என்று கூறி, சிறுபிள்ளைத்தனமான அந்த கேள்விகளையும் எதிர்கொண்டு விளக்கம் அளிக்கவேண்டும்.

    இப்போது பெரும்பாலான சிறுமிகள் அதிக உடல்வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். தங்களுக்கு ஜீன்ஸ் அணிவது சவுகரியமாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் பூப்படையும் காலகட்டத்தில் சிறுமிகள் ஜீன்ஸ் அணிவதை தவிர்க்கவேண்டும் என்ற கருத்து நிலவிக்கொண்டிருக்கிறது. அப்படி தவிர்க்கவேண்டியதில்லை. பூப்படையும் காலகட்டத்திற்கும்- ஜீன்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் இறுக்கமான உடைகளை பெண்கள் தவிர்க்கலாம்.
    முகத்தில் அதிகமான பருக்கள், சுருக்கம், கருமை வருவதால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அதிக கவனம் செலுத்த வேண்டும். முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
    சூரியகதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நம் தோலிலுள்ள மெலனின் நிறமி சுரப்பிகளை அதிகமாக சுரபிப்பதால் தோலின் நிறம் மாறுபடுகிறது.
    உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் தோலிலுள்ள வியர்வைகோள துளைகள் விரிவடைந்து இருப்பதால் பருக்கள், கட்டிகள், கிருமி தொற்றுகள் உண்டாகின்றது. இதனால் சரும நோய்களின் தாக்கம் அதிகரிக்கிறது. குறிப்பாக தேமல், படை, கரப்பான், சொரியாசிஸ், உடலில் நிறம் மாறுபாடுகள் உண்டாகின்றன. எனவே நாம் சருமங்களையும் மற்றும் முகங்களையும் பராமரித்து கொள்வது அவசியம்.

    முகப்பராமரிப்பு

    ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்‘ என்ற பழமொழிக்கேற்ப ஒவ்வொருவருடைய முகம் தான் உலகத்தின் முக்கியமான அடையாளம். அதனால் முகத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முகங்களில் அதிகமான பருக்கள், வியர்க்குரு வருவதால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தினமும் தூய்மையான குளிர்ந்த நீரினால் 3-4 முறை கழுவ வேண்டும்.

    சருமபராமரிப்பு

    முகபராமரிப்பும், சரும பராமரிப்பும் மிக முக்கியம். ஏனெனில் தோலின் இயற்கைநிலை வேறுபடுவதால் தோலில் அரிப்பு, படை, தேமல் உண்டாகிறது. தினமும் தூய்மையான குளிர்ந்த நீரினால் காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். இப்போது மக்கள் வாசனையுள்ள சவுக்கார கட்டிகளை உபயோகின்றார்கள். அவைகளில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் மேனி கெட்டுவிடுகிறது. உப்புச்சத்து அதிகம் உள்ள நீரில் குளிப்பதால் எண்ணெய் சிக்கு நீங்காது. இவைகளை எல்லாம் தவிர்க்க சிறந்த வழி பண்டைய காலங்களில் பாரம்பரியமாக உபயோகித்து வந்த குளியல் பொடிகளை உபயோகிப்பது நன்று.
    நம் பதினெட்டு சித்தர்கள் கூறியுள்ள குளியல் பொடி ‘நலுங்குமா’ உபயோகிப்பதனால் சருமபிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

    நலுங்குமா என்றால் என்ன?

    பாசிபயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சுவேர், கிச்சலிக்கிழங்கு. இவைகளை சரிபங்கு அரைத்து பொடியாக வைத்துக்கொண்டு தினமும் தேய்த்து குளிக்க உபயோகிக்கலாம். இதனால் வியர்க்குரு, நமைச்சல், படை, கரப்பான், சொரியாசிஸ் போன்ற சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.
    வீட்டில் செய்யக்கூடிய எளிய முறைகள்

    முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்:-

    ஓட்ஸ் 2 ஸ்பூன் எடுத்து இரவு குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனை எடுத்து அரைத்து தயிரில் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து சுத்தமான நீரினால் கழுவிக் கொள்ளவும்.

    உருளைகிழங்கு 1 எடுத்து வேகவைத்து தோல் நீக்கி விட்டு அரைத்து பாதம் எண்ணெய் (அ) பாலுடன் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும். இது முகத்திற்கு பொலிவு உண்டாக்கும்.

    தேவையான அளவு புதினாவை எடுத்து அரைத்துக் கொண்டு அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வரவேண்டும். இதனால் முகத்திற்கு அழகு உண்டாவதுடன் கிருமி தொற்றுகளை தவிர்க்கலாம்.

    ஆரஞ்சு தோலை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு இதில் 2 ஸ்பூன் பொடியுடன் 1 கப் தயிர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவிவர முகம் பளபளப்பாக மிகவும் பொலிவுடன் இருக்கும்.

    10 பாதாம் பருப்பை எடுத்து இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை தோல் நீக்கி பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும்.
    வாழைப்பழம் 1 எடுத்து 1 கப் தயிரில் கலந்து அரைத்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உண்டாகும் பருக்கள் மற்றும் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.

    தேனுடன் சமபங்கு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவ 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள முகத்தில் உள்ள தேவையற்ற செல்கள் நீங்கிவிடும்.

    வெள்ளரிபிஞ்சை அரைத்து முகத்தில் பூசி பின்பு 20 நிமிடம் கழித்து கழுவி கொள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி தோல் மென்மையாகும்.

    கடலைமாவு 2 ஸ்பூனுடன் பால் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்த பசையுடன் முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளவும்.

    மஞ்சள்தூள், கோதுமை மாவு மற்றும் நல்லெண் ணெயுடன் ஒன்று சேர்த்து உடலில் தேவையற்ற இடங்களில் முடிவளரும் இடத்தில் தடவ தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.

    ஆரஞ்சு பழச்சாறு உடலில் தடவிவர தோல் அழகாகவும், மென்மையாகவும் மாறும்.

    தக்காளியை நன்றாக அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொண்டு வந்தால் முகம் பளபளப்புடன் பொலிவுடன் இருக்கும்.
    ஒரு நாளின் மொத்த உடலியக்கத்தைக் கட்டுப்படுத்துவது உடல் கெடிகாரத்தின் வேலை. சூரிய ஒளியின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு சுரக்கும் மெலடோனின் ஹார்மோன், பகலுக்கும் இரவுக்கும் நம்மை தயார்படுத்துகிறது.
    பகலில் விழித்திருக்கும் உயிரினங்கள் பகலாடிகள், இரவில் விழித்திருக்கும் உயிரினங்கள் இரவாடிகள். பகலில் விழித்துச் செயல்படும் வகையிலும், இரவில் ஓய்வுக்கு ஏற்ற வகையிலும் பகலாடி உயிரினத்தின் உடல் அமைந்திருக்கும். நாமும் பகலாடிகள்தான். ஒரு நாளின் மொத்த உடலியக்கத்தைக் கட்டுப்படுத்துவது உடல் கெடிகாரத்தின் வேலை. சூரிய ஒளியின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு சுரக்கும் மெலடோனின் ஹார்மோன், பகலுக்கும் இரவுக்கும் நம்மை தயார்படுத்துகிறது.

    மெலடோனின், பீனியல் எனும் சுரப்பியால் சுரக்கப்படுகிறது. இதுவே ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் உடலை தயார்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தையும், இதய துடிப்பையும் மிதமாக குறைக்கிறது. சூரியஒளி இருந்தால், மெலடோனின் சுரப்பு தடுக்கப்பட்டு, உடல் விழிப்பு நிலையில் இருக்கிறது. சில நேரம் தூக்கமின்மை, வேறு நேர மண்டலங்களுக்குப் பயணிப்பதால் உடலுக்கு ஏற்படும் ‘ஜெட்லாக்‘ எனப்படும் உடல் கெடிகாரக் கோளாறு ஆகியவற்றை சரிசெய்ய மெலடோனினை பயன்படுத்துகிறார்கள். அதே நேரம் நீல நிற ஒளியால் மெலடோனின் சுரப்பு தடுக்கப்படுகிறது.

    பகல் நேரத்து சூரிய வெளிச்சம் போக, இரவு நேரத்தில் நாம் பயன்படுத்தும் விளக்குகள் அனைத்தும் மஞ்சள் ஒளியையே வெளியிட்டுவந்தன. மின்விளக்குகள் வந்த பிறகும்கூட, மஞ்சள் ஒளியை உமிழும் குண்டு பல்புகள்தான் பயன்பாட்டில் அதிகம் இருந்தன. அதன் பின்னர் வந்த குழல் விளக்குகள் வெண்ணிற ஒளியைத் தந்தாலும், நீல ஒளியையும் வெளியிட்டதால் மெலடோனின் சுரப்பு குறையாமல் இருந்து வந்தது.

    கடந்த 10 ஆண்டுகளாக அதிகம் புழக்கத்தில் உள்ள எல்.இ.டி., அதிக நீல ஒளியை வெளியிடுகின்றன. இந்த விளக்குகளை வீட்டில் பயன்படுத்தும்போது மெலடோனின் சுரப்பில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டாலும், கணினித்திரை, கைபேசி திரையில் இருக்கும் ஒளி உமிழிகள் நீல நிற ஒளி பாதிப்பை ஏற்படுத்தும். மெலடோனின் இயல்பாகச் சுரந்து, ஒழுங்காக உறக்கம் வரவேண்டும் என்றால் உறங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் நீல ஒளியை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    அதேநேரம் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கைபேசி, மடிக்கணினி அனைத்திலும் நீல ஒளியை குறைக்கிற அமைப்புகள் வந்துவிட்டன. ‘நைட் மோட்‘ என்று அழைக்கப்படும் அவற்றைப் பயன்படுத்தும்போது, திரை மெல்லியச் சிவப்பு ஒளியுடன் தோன்றும். அதனால் நீல ஒளி தவிர்க்கப்பட்டு இயல்பான மெலடோனின் சுரப்புக்கு உடல் தயாராகும். கணினி, கைபேசிகளில் அந்த அமைப்பு இல்லையென்றால், அவற்றுக்கான இலவச செயலிகள் இணையத்தில் உண்டு. அவற்றைத் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். தூக்கம் முக்கியம் அல்லவா?
    நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
    நாற்பது வயது கொண்ட ஆரோக்கியமான பெண்கள்கூட இப்போது கையில் ஒரு கட்டு பரிசோதனை குறிப்புகளுடன் டாக்டர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அது பற்றி கூகுளில் சர்ச் செய்தபோது அது இன்னென்ன நோய் என்று தெரியவந்ததாகவும் கூறி, டாக்டர்களிடம் பயத்துடன் ஆலோசனை கேட்கிறார்கள். அது மட்டுமின்றி அவர்களே பரிசோதனை கூடங்களுக்கு சென்று சுயமாக தேவையற்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு ‘வேறு நோய்கள் இருந்தால் அவர்களை கொரோனா எளிதாக தொற்றிக்கொள்ளும்’ என்ற பயம்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. இந்த மாதிரியான பயம் இப்போது பலரையும் சூழ்ந்திருக்கிறது. அந்த பயமே அவர்களுக்கு நோயாக மாறுகிறது.

    மார்பகத்தில் எந்த கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க்கான கட்டியாகத்தான் இருக்கும் என்ற பயம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. இளம்பெண்களுக்கும் இந்த கவலை அதிகம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு ‘பைப்ரோ அடினோமா’ என்ற கட்டிகளே இருக்கின்றன. அவை, மார்பகத்தில் அங்கும் இங்குமாக அசையும் மிருதுவான வலியற்ற கட்டிகள். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. வலியோடு உள்ள கட்டிகள் பைப்ரோ சிஸ்டிக் டிசீஸ் எனப்படும். சிறுவயதிலே பூப்படைந்த பெண்களுக்கும், குறிப்பிட்ட வயதை கடந்த பின்பும் தாய்மையடையாத பெண்களுக்குமே இந்த பாதிப்பு தோன்றும்.

    கவனிக்க வேண்டியவை : அங்கும் இங்குமாக அசையாத கடுமையான கட்டிகள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவதோடு அக்குளிலும், கழுத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் தென்படுதல். மார்பக காம்புகள் உள்அமுங்குதல். அவைகளில் இருந்து ரத்தம் கலந்த திரவம் வெளிப்படுதல் போன்றவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை.

    சுவாசத் தடை ஏற்பட்டாலே அது ஆஸ்துமா தான் என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. ஆனால் இதயத்தையும், சுவாச கட்டமைப்புகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் மூலம் சுவாசத்தடை ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அனீமியா, சுவாச தடைக்கு முக்கிய காரணமாகும். ரத்தத்தை ‘பம்பிங்’ செய்யும் ஆற்றல் இதயத்திற்கு குறையும்போது ஏற்படும் இதய செயலிழப்பை தொடர்ந்தும் சுவாசத்தடை உருவாகும். அப்போது நடக்கும்போதும், மாடிப்படிகளில் ஏறும்போதும் சுவாசத் தடையோடு உடல் நடுக்கமும் ஏற்படலாம். ஆஸ்துமா மூலமான சுவாசத் தடை ஏற்பட்டால் விடாத இருமலும், இழுப்பும் தோன்றும்.

    கவனிக்க வேண்டியவை : சுவாசத் தடையோடு நெஞ்சுவலி, மூச்சிறைப்பு இருந்தால் கவனியுங்கள். கை, கால்கள் வீங்கி காணப்படுதல், வெளியேறும் சிறுநீரின் அளவு குறைதல், துப்பும்போது ரத்தம் வெளியேறுதல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறியாக இருக்கலாம்.

    தலைசுற்றினால் அதை ஆபத்தின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. தலைசுற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதே நேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் அதனை எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு தலையை திடீரென்று திருப்பும்போது தலைசுற்றும்.

    கவனிக்க வேண்டியவை : தலைசுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் பேசும்போது நாக்கு உளறுதல், ஒவ்வொரு பொருளும் இரண்டாக காட்சியளித்தல், நடக்கும்போது பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுதல் போன்றவை பக்கவாதம் தோன்றுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தலைசுற்றலோடு தலைவலியும் இருந்தால் அது ஒற்றைத்தலைவலி பாதிப்பாக இருக்கலாம்.

    பல்வேறு வகையான நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல. அப்படி ஒருவேளை ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருந்தாலும் அதற்கான சரியான சிகிச்சையை பெறுவதற்கு விழிப்புணர்வுதான் தேவை. அதனால் இல்லாத நோய்களை நினைத்து பெண்கள் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. பயம், இல்லாத நோய்களையும் இருப்பதாக நம்பவைத்து தேவையில்லாத மனஉளைச்சலையும், கவலையையும் எற்படுத்திவிடும்.

    அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. அதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ஈ.சி.ஜி. எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. நெஞ்சுக்கூட்டில் நீர்கோர்த்திருத்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் நெஞ்சுவலி ஏற்படுவதுண்டு. சுவாசப் பகுதிகளில் ஏற்படும் நெருக்கடிகளும் நெஞ்சுப் பகுதியில் அவஸ்தைகளை ஏற்படுத்துவதுண்டு.

    கவனிக்க வேண்டியவை : நெஞ்சின் நடுப்பகுதியில் பாரம் ஏற்றியதுபோலவோ, நெஞ்சுப் பகுதி உடைவதுபோலவோ கடுமையான வலி ஏற்படுதல். வேலை செய்யும்போது வலி தோன்றுதல், ஓய்வெடுக்கும்போது வலி அகலுதல். வலியோடு நெஞ்சுப் பகுதியில் துடிப்பு ஏற்படுதல், சுவாச தடை உருவாகுதல், அதிகமாக வியர்த்தல். நெஞ்சுவலியோடு இடது கைகளுக்கோ, இரு கைகளுக்குமோ, கழுத்துக்கோ வலி பரவுதல் போன்றவை கவனிக்கத்தகுந்தவை.
    பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.
    ‘பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். நெற்றிக்கு பொட்டு, கண்களுக்கு மை, உதடுகளுக்கு லிப்ஸ்டிக்.. போன்று முகத்தில் ஒவ்வொரு உறுப்பையும் அழகு செய்யும் பெண்கள் அந்த வரிசையில் மூக்குக்கு மூக்குத்தி சூடிக்கொள்கிறார்கள்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரம்பரிய திருமண ஆபரணங்களில் குறிப்பிடத்தக்கதாக மூக்குத்தி இருக்கிறது. மூக்குத்தியின் வரலாறு மிகவும் பழமையானது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களிலும் மூக்குத்திக்கு சிறப்பிடம் தரப்பட்டிருக்கிறது. இடது பக்கம் மூக்கு குத்தினால் அந்த பெண்களுக்கு மாதவிலக்கு கால வலியும், பிரசவ வலியும் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பெற்றோர், தாய்மாமன், கணவர் ஆகியோரிடமிருந்து மட்டுமே பெண்கள் மூக்குத்தி வாங்க வேண்டும் என்ற நிபந்தனை முன்காலத்தில் இருந்தது. வேறுயாரிடமாவது இருந்து மூக்குத்தியை பெற்றால் அது குற்றமாகவும் கருதப்பட்டது.

    மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அனுபவம் வாய்ந்தவர்களிடமே மூக்கு குத்தவேண்டும். நாடி நரம்புகள் பாதிக்காத அளவுக்கு குத்துவது அவசியம். டாக்டர்களும் மூக்கு குத்திவிடுவதுண்டு. பியூட்டி பார்லர்களில் சென்று ‘ஷூட்’ செய்யும் பெண்கள், முதலிலே அவர்களுக்கு அதில் இருக்கும் அனுபவத்தைபற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.

    தங்கத்திலான மூக்குத்தியே சிறந்தது. வேறு உலோகங்களில் செய்யப்பட்ட மூக்குத்திகள் பெரும்பாலானவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மூக்குத்தி அணிந்ததும் அந்த பகுதியில் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

    மூக்கு குத்தியதும் பெரும்பாலானவர்கள் அவ்வப்போது அந்த பகுதியை தொட்டுப்பார்ப்பார்கள். தொடுவது தவறு. தொட்டால் அந்த காயம் ஆற தாமதமாகும். காயம் முழுவதும் ஆறுவதற்கு முன்பு மூக்குத்தியை கழற்றக்கூடாது. கழற்றினால் அந்த துவாரம் விரைந்து மூடிவிடும்.

    மூக்குத்தி அணிபவர்கள் குளித்துவிட்டு தலை துவட்டும்போதும், கூந்தலை சீவும்போதும் கவனம் கொள்ளவேண்டும். துணியோ, முடியோ மூக்குத்தியில் சிக்கிக்கொள்ளும். அது வலி நிறைந்த அவஸ்தையாகிவிடும். மூக்குத்தி அணிந்த காயம் ஆறும்வரை மல்லாந்து படுத்து தூங்கவேண்டும். இல்லாவிட்டால் தலையணை விரிப்பு போன்றவைகளில் மூக்குத்தி பட்டு வலிதோன்றும்.

    மூக்குத்தி பற்றி நினைக்கும்போது பிரபல பின்னணி பாடகி உஷா உதூப் நினைவுக்கு வருவார். அவர் மேடை நிகழ்ச்சிகளில் பாடும்போது பெரிய மூக்குத்தி அணிந்திருப்பார். “நான் மூக்குத்தி அணிந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. என் மகள் அஞ்சலி வயிற்றில் இருக்கும்போது நானே ஆசைப்பட்டு குத்திக்கொண்டேன். எனது குடும்பத்தில் நான் மட்டும் மூக்கு குத்தியிருக்கிறேன். தமிழ்நாட்டில் பிரபலமான 8 கற்களை கொண்ட முக்கோண வடிவிலான ‘போஸரி’ மூக்குத்தியும் வைர மூக்குத்தியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்கிறார்.
    கொரோனா பிரச்சினை காரணமாக பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பதால் பலர் நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துகின்றனர்.
    கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பணியாற்றி வருகின்றனர். ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பதால் பலர் நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துகின்றனர்.

    இதன்காரணமாக கடந்த 8 மாதங்களில் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரி காது, மூக்கு, தொண்டை சிறப்பு டாக்டர் ஸ்ரீனிவாஸ் சவான் கூறியதாவது:-

    அதிக சத்தத்துடன் நீண்ட நேரம் ‘இயர்போன்‘ பயன்படுத்துவதால் காதுகளில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. தினந்தோறும் காதுகளில் பிரச்சினையுடன் 5 முதல் 10 பேர் வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் 8 மணி நேரங்களுக்கு மேல் ‘இயர்போன்’ அணிந்தபடி பணியாற்றுபவர்கள் ஆவர். அதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவது காதுகளுக்கு அதிகஅழுத்தத்தை கொடுக்கிறது.

    சுத்தம் இல்லாத இயர்போட்ஸ், இயர்-பிளக்ஸ்களை பயன்படுத்தும் போது அது காதில் நோய் தொற்றை ஏற்படுத்தும். மேலும் அதிக சத்தம் வைத்து நீண்ட நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவது கேட்கும் திறனை குறைக்கும். இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு நிரந்தர பாதிப்புகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடுக்க என்ன செய்யலாம்?

    மேலும் காதுகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நிபுணர்கள் கூறியதாவது:-

    தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தாமல் இடைவெளிவிட்டு ‘இயர்போன்‘களை பயன்படுத்த வேண்டும். கணினி மற்றும் மடிக்கணினிகளில் உள்ள ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம். பள்ளி மாணவர்கள் 60 டெசிபல் சத்தத்துக்கு மேல் ‘இயர்போன்‘ பயன்படுத்தினால் அது அவர்களின் காதுகளை நேரடியாக பாதிக்கிறது. இதேபோல் சுத்தம் இல்லாத இடங்களில் இயர்போன் உள்ளிட்ட சாதனங்களை வைக்க கூடாது. இயர்போன்களுக்கு பதிலாக ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ருசியான தோசை வகைகளை காய்கறிகளை கொண்டே தயார் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் வெண்டைக்காய் தோசை தயாரிப்பது பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்
    காய்ந்த மிளகாய் - 3
    பெ.வெங்காயம் - 1
    கேரட் - 1
    வெண்டைக்காய் - 100 கிராம்
    கடுகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு தழை

    செய்முறை:

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெண்டைக்காய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.

    ஓரளவு அரைபட்டதும் வெண்டைக்காயை சேர்த்து நைசாக அரைத்து புளிக்க வைக்கவும்.

    மாவு புளித்ததும் கடுகு சீரகத்தை தாளித்து அதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும்.

    அது சூடானதும் மாவை ஊற்றவும். அதனுடன் வெங்காயம், கேரட், கொத்தமல்லி தழையை தூவி தோசைகளாக சுட்டெடுக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×