என் மலர்
ஆரோக்கியம்
குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம்.
குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் விளம்பரங்களைப் பார்த்து கண்ட கிரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது. குறை மாத குழந்தைகளுக்கு உடலின் வளர்ச்சியைவிட சருமத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், எதை தடவினாலும் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறைமாத குழந்தைகளின் உடலினுள் இருக்கும் நீர், நீராவியாக மாறி சருமத்தின் வழியாகத்தான் அதிகமாக வெளியேறும்.
இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை (Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.
அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.
குழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.
30 வயதிற்கு பின்பு முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களும், ஒரு தடவை கூட கர்ப்பமே ஆகாத பெண்களும், 45 வயதைக்கடந்த பெண்களும் இந்த நோய்க்கான எச்சரிக்கை உணர்வினை கடைப்பிடிக்கவேண்டும்.
பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை: மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய். உலக அளவில் கணக்கிட்டால் சுவாசப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பிடித்திருக்கிறது.
மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தன்மை கொண்டது என்று கருதப்படுகிறது. நெருங்கிய உறவினர்களில் யாருக்காவது வந்திருந்தாலும் அதே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். 12- வயதுக்கு முன்பு வயதுக்கு வந்துவிட்டாலும், 55-வயதுக்கு பின்பு மாதவிலக்கு நிலைத்துப்போனாலும் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நிலைத்த பின்பு உடல் எடை அதிகரிக்கும் பெண் களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசங்கள், மது போன்றவைகளை தவிர்ப்பது மார்பகபுற்று நோயை தடுக்கும். கர்ப்பத்தடை மாத்திரைகள், மாதவிலக்கு நாட்களை தள்ளிப்போடுவதற்காக உட்கொள்ளும் மாத்திரைகள், குழந்தையின்மைக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் ஹார்மோன் தன்மைகள் போன்றவை மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
30 வயதிற்கு பின்பு முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களும், ஒரு தடவை கூட கர்ப்பமே ஆகாத பெண்களும், 45 வயதைக்கடந்த பெண்களும் இந்த நோய்க்கான எச்சரிக்கை உணர்வினை கடைப்பிடிக்கவேண்டும்.
மார்பகங்களில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏதாவது தோன்றியிருந்தாலும், அந்த கட்டிகளை ஆபரேஷன் மூலம் நீக்கியிருந்தாலும் கவனமாக இருங்கள். பிற்காலத்தில் ஒருவேளை அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.
கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் பகுதி, பெண்களின் பிறப்பு உறுப்பின் உள்பகுதியில் அமைந்திருக்கிறது. பெண்கள் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கடந்த பின்பு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். 30 வயதைக் கடந்த பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. 65 முதல் 75 வயதுக்கு உள்பட்ட மூதாட்டிகள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியதில்லை.
பரிசோதனையில் பாதிப்பு இருப்ப தாக கண்டறிந்தால், அது முதல் நிலை அல்லது இரண்டாவது நிலையில் இருந்தால் 85 முதல் 95 சதவீத நோயாளிகளை குணப்படுத்தி விடலாம். அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
ஹுயூமன் பாபிலோமா என்ற ஒருவகை கிருமிகள்தான் இந்த நோய்க்கு காரணம். அவை கருப்பைவாய் திசுக்களை கடந்து சென்று, அந்த திசுக்களில் ஆபத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது திடீரென்று ஏற்படும் மாற்றமல்ல. பல வருடங்களாக நடப்பதாகும்.
இளம் பருவத்திலே பாலியல் தொடர்பில் ஈடுபடுகிற பெண்கள், இளம் வயதிலே பிரசவிக்கும் பெண்கள் போன்றவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
நோய் தொற்று காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு இயற்கை மருத்துவம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
நோய் தொற்று காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு இயற்கை மருத்துவம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. மனித இனம் தோன்றியது முதல் தன்னுடைய பிணிகளை போக்க இயற்கை சுழியலுடன் தன் வாழ்க்கையை பிணைத்து கொண்டான். அனைத்து நோய்களுக்கும் இயற்கையில் இருந்து மருந்துகளை கண்டறிந்தான். இயற்கை மருத்துவம் என்பது நமது பாரததேசத்தின் இறையாண்மையுடன் பின்னி பிணைந்தது. ஆதிமனிதன் அனைத்து வகை செடி கொடிகளிலிருந்தும், புல், பூண்டுகளிலிருந்தும், பழங்கள், தானியங்கள் என அனைத்து இயற்கை படைப்புகளிலிருந்தும் மருந்தினை தேடி கண்டுபிடித்தான். ஏன் மண்ணின் மகத்துவத்தை கூட மருந்தாக்கினான். ஒவ்வொரு கால கட்டங்களிலும் பல கொடிய நோய்கள் வரும் போது கூட அதற்கேற்றார் போல் தன் அறிவை பயன்படுத்தி மருந்துகளை இயற்கையிலிருந்து கண்டறிந்தான்.
“நோய்நாடி நோய்முதல் நாடி
அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்“
தெய்வபுலவர்ஐயன் வள்ளுவன், கூற்றுப்படி நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதை தணிக்கும் வழியையும் ஆராய்ந்து உடலுக்கு பொருந்தும் படியாக செய்ய வேண்டும்.
இயற்கை மருத்துவம் ஆக்கப்பூர்வமானது. மனிதனின் உடல் நலம், மனநலம், கட்டுப்பாடு, உணர்வு, ஆன்மிகம் ஆகியவற்றினைப் இயற்கையுடன் ஒன்றிணைந்து நோயை குணமாக்க கூடியதாகும். உடல் நலத்தை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோய் வந்தபின் சரிசெய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெற செய்தல் போன்றவற்றினை இயற்கை மருத்துவம் திறம்பட செய்யும்.
இயற்கைமுறை மருத்துவத்தில் உடலில் நோய் காரணிகள், விஷத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது. இயற்கையே ஒரு மிக சிறந்த மருத்துவர் ஆகும்.
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் மனித குலத்தை படைத்த இறைவன் மனித இனம் பசியாறவும் அவனுடைய பிணிகளை போக்கவும் இயற்கை கொடைகளை அளித்திருக்கிறார். இன்று மனிதனுடைய பேராசையால் நாம் அனைத்து இயற்கை செல்வங்களை இழந்து அழிவின் விளிம்பை நோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கிறோம். விஞ்ஞான வளர்ச்சி என்பது சுய லாபத்திற்கு அல்லாமல் இயற்கையை வளப்படுத்துவதற்கு உபயோகிக்க வேண்டும். இன்றைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இயற்கை சூறையாடப்படுகிறது. நமது முன்னோர்கள் மண்பாண்டங்களில் உணவு சமைத்து இலைகளில் உணவருந்தினர். சூரியகதிர்களின் வலிமையையும், தியானம், யோகா போன்றவற்றால் உடல் மற்றும் மனவளத்தை பெருக்கும் வித்தைகளையும் கற்று வைத்திருந்தனர்.
உலகத்திலேயே நமது பாரத தேசத்தில் தான் எண்ணிலடங்கா மூலிகைச்செடிகள் அமிர்த சஞ்சீவினிகளும் உள்ளன. நமது உணவு பழக்கமே ஒரு மருத்துவம் தான். நாம் அன்றாடம் இயற்கை அருமருந்து உபயோகிக்கிறோம். குறிப்பாக மஞ்சள், சீரகம், வெந்தயம், மல்லி, காயம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை மேன்மைபடுத்தும் பொருட்களையே அறிந்தும் அறியாமலும் உட்கொள்கிறோம். இயற்கை மருத்துவத்தில் உணவுதான் மருந்தாகிறது.
நமது தேசபிதா மகாத்மா காந்தியடிகள் இயற்கை மருத்துவத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். எனவேதான் அவர் 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உருலிகஞ்சன் என்ற இடத்தில் நிசர்கோபச்சர் இயற்கை ஆசிரமத்தை நிறுவினார். இதன் காரணமாக அவருடைய 150வது பிறந்த ஆண்டு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மூலமாக நிசர்கோபச்சார்மாஹோ உற்சவ் கொண்டாடப்பட்டது.
நமது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயற்கை மருத்துவத்துடன் யோகாவும் பயிற்றுவிக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திமக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கிறது. இதன் பலனாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 18ம் தேதி இயற்கை மருத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. இயற்கை மருத்துவத்துடன் யோகா சேர்த்து மானிட வாழ்வியலில் ஒரு மாற்றத்தை மக்கள் கடைப்பிடித்து நோயற்ற, ஒழுக்கமான, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைகளை உருவாக்கப்படும் என நம்பிக்கை கொள்வோம்.
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் உகந்தது வெள்ளரிக்காய் அடை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 1 கப்,
முளை கட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை - தலா 1/2 கப்,
தோல் சீவி பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - 3/4 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
இஞ்சி - சிறு துண்டு,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை
புழுங்கலரிசியை ஊறவைத்து அதில் பாசிப்பயறு, கொண்டைக்கடலை, காய்ந்தமிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
முக்கால் பதம் அரைந்ததும், வெள்ளரிக்காயை மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைத்து நன்கு கலக்கவும்.
பின்னர் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து மாவை அடைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிலிண்டரின் ஆயுள் காலத்தை ஒவ்வொரு குடும்ப பெண்களும் தெரிந்து கொள்வது நல்லது. நாம் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் ஆயுள் காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கிறது.
ஏழை, எளிய நடுத்தர, உயர்தர மக்களாக இருந்தாலும் வீட்டில் அடுப்பெரிக்க கியாஸ் சிலிண்டர்தான் இன்றைய காலகட்டத்தில் உறுதுணையாக உள்ளது. கியாஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று ஆகி விட்டது. அனைவரின் வீடுகளிலும் கியாஸ் அடுப்பு இடம் பிடித்து உள்ளது. ஆகவே உங்க வீட்டுக்கு வரும் கியாஸ் சிலிண்டரின் ஆயுளை அறிவது அவசியம்.
சிலிண்டரின் ஆயுள் காலத்தை ஒவ்வொரு குடும்ப பெண்களும் தெரிந்து கொள்வது நல்லது. நாம் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் ஆயுள் காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கிறது. அது மேலிருக்கும் 3 வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் மூன்று பட்டையான கம்பிகள் இருக்கிறதல்லவா? அதில் உட்பக்கம் பார்த்தால் சிலிண்டரின் ஆயுட்காலம், காலாவதியாகும் தேதி போட்டிருக்கும்.அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு எழுத்தை கொடுத்திருப்பார்கள். அதாவது முதல் காலாண்டிற்கு A எனவும், இரண்டாம் காலாண்டிற்கு B எனவும், மூன்றாம் காலாண்டுக்கு C எனவும்இப்படி மொத்தம் நான்காக A,B,C,D எனப்பிரித்து காலாவதியாகும் ஆண்டையும் குறிப்பிட்டிருப்பார்கள்.
பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். இதை எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம்.
பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். நகைகள் அணிவது, உடல் வெப்பம், ஒவ்வாமை காரணமாக இந்த பிரச்சினை தோன்றும். எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம். உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.
தயிரும் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கக்கூடியது. சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும். இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கருமை நீங்க தொடங்கிவிடும்.
ஆப்பிள் சிடேர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும். பேக்கிங் சோடாவையும் உபயோகிக்கலாம். சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி வரலாம். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
அம்மாவாக அப்பாவாகக் குழந்தைகளுடன் உடன் இருந்து பழகி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லி தப்பித்தவறி நமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களை சிம்பிளாக சொல்லிக்கொடுத்து சுதந்திரமாக வளர்த்தால் போதும்.
குழந்தை வளர்ப்பு என்பது கம்ப சூத்திரம் அல்ல. குழந்தை வளர்ப்புக்கு ஷார்ட் கட் ஏதும் இல்லை. அம்மாவாக அப்பாவாகக் குழந்தைகளுடன் உடன் இருந்து பழகி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லி தப்பித்தவறி நமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களை சிம்பிளாக சொல்லிக்கொடுத்து சுதந்திரமாக வளர்த்தால் போதும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனமான வாழ்க்கையை கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.
குழந்தைகளைத் திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது என்றெல்லாம் நவீன குழந்தை வளர்ப்பு பிதாமகர்கள் அறிவியல்பூர்வமாக அறிவுரை சொல்லி வருகிறார்கள். எல்லாம் நன்றாக இருந்து சொர்க்கபூமியாக இருந்தால் அடிக்காமல், திட்டாமல் இருக்கலாம். அப்படியா இருக்கிறது நிலைமை? நம்மால் ஏற்படும் கெட்ட பழக்கங்கள், சமூகத்தில் பழகுவதால் ஏற்படும் கெட்ட பழக்கங்கள் எல்லாவற்றையும், கொஞ்சி பேசி சரி செய்ய இயலாது. லைட்டாகவேணும் , பயமுறுத்துவதற்காகவேணும் திட்டியோ, அடி பயம் காட்டியேதான் சாரி செய்ய வேண்டியுள்ளது. நம் காலத்து தந்தையைப் போன்று காட்டடியும் அடிக்க வேண்டாம். இந்த காலத்து மாடர்ன் தந்தை போல அடித்தாலும், ‘என்னடா செல்லம்’ என்று செல்லம் கொஞ்சியும் கெடுக்க வேண்டாம். நம் சூழலில், நம் சமுதாயத்தில், நம் குழந்தையை வளர்க்க நமக்கு யார் சொல்லிக் கொடுப்பது? தேவையா?
நம் குழந்தையை வளர்க்க நமக்குத் தெரியாதா? நமக்கு வளர்க்கவே தெரிய வேண்டாம். குழந்தை தானாகவே நன்றாக வளரும். நாம் அதை தொந்தரவு செய்யாமல், தட்டிக்கொடுத்து ஷேப் செய்தால் போதும். நம்முடைய கெட்ட எண்ணங்கள், கெட்ட பழக்கங்கள், சூது வாது, கள்ளம் கபடம் குழந்தைகளை அண்டவிடாமல் பார்த்துக்கொண்டாலே முக்கால்வாசி பிள்ளை வளர்ப்பு முடிந்தது.
நம் சமூகம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லிக்கொடுங்கள். யாரிடமும் வெறுப்பை வளர்க்காதீர்கள். எல்லோருடனும் பழக அனுமதிக்க வேண்டும். சாதி மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் வளர்கிறார்களா என்று உறுதி செய்யுங்கள்.
இயற்கையாகவே நல்ல அறிவோடும், கிரியேட்டிவிட்டியோடும் வளரும் குழந்தையைப் பள்ளிக்கூட கல்வி மழுங்கடித்து மண்டாக்கப் பார்க்கும். அப்போது நாம் கொஞ்சம் தடுத்தாட்கொண்டு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். முற்றிலும் காப்பாற்ற முடியாது. சேதாரத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
சாரு நிவேதிதா ஒருமுறை எழுதி இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. “உன் குழந்தை முதல் மார்க் எடுத்ததற்கு நீ கொண்டாடினால், கம்மி மார்க் எடுத்த குழந்தையை மறைமுகமாகத் தூக்கு மாட்டிக்கொண்டு சாவு என்றுதான் சொல்கிறாய்.”
எல்லோரும், தன் குழந்தை மட்டுமல்லாமல் மற்ற குழந்தைகளையும் நம் குழந்தை என்று நினைக்க ஆரம்பித்து, அந்த மனப்பான்மை வந்தால் போதும். குழந்தை வளர்ப்பு எளிதாகி விடும்.
இந்த காமெடி கூத்துக்கள் தொடர்ந்து செல்லும்பட்சத்தில், விரைவில் யாரேனும் ஒரு ‘சூப்பர் மாம்’ என் குழந்தை ஆர்கானிக் குழந்தை என்று பெருமையாகச் சொல்லக்கூடும்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடலிலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகித்தான் ஆகவேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடலிலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. முன்பு இருந்ததைபோலவே உடல்வாகு பழைய நிலைக்கு உடனே திரும்பி விடும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது. ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு புரோஜெஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களின் அளவுகள் குறைய தொடங்கிவிடும். அதனால் பிரசவத்திற்கு பிறகு மனச்சோர்வு அதிகரிக்கும். அது சில காலம் நீடிக்கும். அன்றாட வாழ்க்கை முறையிலும் அதன் தாக்கம் வெளிப்படும்.
அதுபோல் கவலை, எரிச்சல், மனநிலை மாற்றம், பதற்றம் போன்ற அறிகுறிகள் குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குள் எட்டிப்பார்க்கும். ‘பேபி ப்ளூ’ எனப்படும் இத்தகைய அறிகுறிகள் சில நாட்களிலேயே மறைந்துவிடும். ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகித்தான் ஆகவேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
மார்பகம்: பிரசவத்திற்கு பிறகு குறிப்பிட்டத்தக்க மாற்றங்கள் மார்பகங்களில் ஏற்படுகின்றன. தாய்ப்பால் கொடுப்பதற்கு தயார்படுத்துவதற்காக மார்பகங்கள் முதலில் சற்று பெரிதாகும். அப்போது மார்பகத்தில் இருக்கும் செயலற்ற கொழுப்பு திசுக்கள் செயல்பட தொடங்கும். ஆனால் இந்த மாற்றங்கள் சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும். அதனால் கவலைப்பட தேவையில்லை. மேலும் தாய்ப்பால் சுரப்பு காரணமாக மார்பக அளவு அதிகரிக்கிறது. இனப்பெருக்க செயல்முறை மார்பகங் களில் தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இந்த காலகட்டத்தில் மார்பகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பொருத்தமான பிராக்களையும் அணிய வேண் டும். டாக்டர்களின் ஆலோசனையை பெற்று குறிப்பிட்ட உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள லாம்.
எரிச்சல்: பிரசவத்திற்கு பிறகு சில பெண்கள் எரிச்சல் அடைய தொடங்குவார்கள். சின்ன விஷயத்திற்கெல்லாம் சட்டென்று கோபப்படுவார்கள். பிரசவத்திற்கு பிறகு ஹார்மோன்கள் மாற்றம் அடைவதே அதற்கு காரணம். குழந் தையை பெற்றெடுத்ததும் குறிப்பிட்ட உடல் மாற்றங்களை உணர்வார்கள். அந்த சமயத்தில் மனதுக்கு பிடித்தமானவர்களிடம் இருந்து ஆறுதலையும், அனுசரணையையும் எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காதபட்சத்தில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். பிரசவத்திற்கு பிறகு சருமம், கூந்தல், மார்பகங்கள், உடல் எடை, அடி வயிறு, பிறப்பு உறுப்பு, குடல் போன்றவை மாற்றங்களை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாதது.
கால் அளவு: கர்ப்ப காலத்தில் கால்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படக்கூடும். அமெரிக்க மகப்பேறு மருத்துவர்களின் கருத்துப்படி, கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிக எடை கால்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும். அதனால் கால்களின் அளவில் மாற்றம் ஏற்படும். பிரசவத்திற்கு பிறகு காலணிகளின் அளவை சிலருக்கு மாற்ற வேண்டியிருக்கும்.
வயிற்றுத் தழும்புகள்: கருவில் இருக்கும் குழந்தை வளர ஆரம்பிக்கும்போது வயிற்றின் அளவும் அதிகரிக்கும். வயிற்று தசைகள் விரிவடையும்போது தழும்புகள் ஏற்படும். பிரசவத்திற்கு பிறகும் அந்த தழும்புகள் இருக்கத்தான் செய்யும். சில சமயங்களில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தழும்புகள் மறைவதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
உடல் பருமன்: பிரசவத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடிவிடும். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிப்பதால் பிரசவத்திற்கு பிறகும் அதன் தாக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு கருப்பை சுருங்கி விடும். ஆனால் இடுப்பு, அடிவயிற்றை சுற்றியுள்ள உடல் பகுதி குறையாது. அதன் காரணமாக பிரசவத்திற்கு பிறகு உடல் கொஞ்சம் பெரிதாகத்தான் தோன்றும். உடல் பயிற்சி மூலம் இதை சீராக்கலாம்.
குழந்தைகளின் பெற்றோர் உயர் கல்வி பெற்றவராக இருந்தால், அவர்களது மொழியாற்றல், உரையாடல் திறன் போன்றவை சிறப்பாக இருக்கும். அவைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து, அறிதல் திறனை மேம்படுத்த பயன்படுத்தும்.
அம்மா, அப்பா, தாத்தா, அத்தை போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் முதல் சொற்களாக வெளி வருகின்றன. ஆனால் அந்த பருவத்திலே அதையும் தாண்டி அறிவுத்திறனில் அசத்தும் அபூர்வ நினைவாற்றல்கொண்ட குழந்தைகளும் இருக்கின்றன.
“குழந்தைகளின் அறிதல் திறன் வளர்ச்சியை பொறுத்த வரையில், குழந்தை வளரும் குடும்பச்சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் மனப்பான்மையின் தாக்கமும் குழந்தையிடம் இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலைக்கும், குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும்கூட தொடர்பு இருக்கிறது.
உயர்ந்த பொருளாதார பின்னணியில் இருக்கும் பெற்றோர்கள் சிறு குழந்தைகளுக்கு பல வகையான வண்ணங்கள், வடிவங்கள், செயல்பாடுகள் கொண்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுக்கிறார்கள். அவைகள் எல்லாம் குழந்தைகளுக்கு அறிமுகமாகி, மூளையில் பதிகின்றன. அதனால் குழந்தைகளின் சொல்லாட்சித்திறன் மேம்படுகிறது.
புதிய பொருட்களோடு விளையாடும்போது, குழந்தைகளின் சிந்தனைத்திறனும் வளர்கிறது. அதுவே ஏழைக்குடும்பத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால், அத்தகைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த குழந்தைகளின் அறிதல் திறனும் சராசரியாகவே இருக்கும் நிலை உருவாகும். அதனால் பொருளாதார சூழ்நிலை சரியில்லாத பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளிஇடங்களுக்கு அழைத்துச்சென்று, வித்தியாசமான பொருட்களை காணும் வாய்ப்பினை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
குழந்தைகளின் பெற்றோர் உயர் கல்வி பெற்றவராக இருந்தால், அவர்களது மொழியாற்றல், உரையாடல் திறன் போன்றவை சிறப்பாக இருக்கும். அவைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து, அறிதல் திறனை மேம்படுத்த பயன்படுத்தும்.
எல்லா குழந்தையும் நல்ல குழந்தைதான். பெற்றோரின் வளர்ப்பு முறையில்தான் அதன் அறிதல் திறன் வளரும். சில வீடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளை பூங்காக்கள், விளையாட்டு மைதானம், கடைத்தெரு, திருவிழாக்கள், திருமணங்கள், உறவினர் வீடுகள் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். இவ்வாறு வளரும் குழந்தைகள் பல்வேறுபட்ட காட்சிகளை காணும்போது அவர்களுக்குப் பரந்த அனுபவம் கிடைக்கும். அதனாலும் அவர்களது அறிவுத்திறன் வளரும். குழந்தைப் பருவம் விளையாட்டுத்தனமானது. அதன் இயல்பில் விளையாட அனுமதிக்கவேண்டும். அறிவுத்திறனை வெளிப்படுத்துவதாக கூறி குழந்தைகளை இயல்புக்கு மாறாக வதைக்கும் செயலை பெற்றோர் ஒரு போதும் செய்துவிடக்கூடாது”.
செல்போனில் வாட்ஸ்-அப் போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம் தொடர்ந்து டைப் செய்து சாட்டிங் செய்கிற போது, நமது கையில் உள்ள விரல்களை அதிக அளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறோம்.
காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.
அது தற்சமயம் வாட்ஸ்-அப் பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இது வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்பதால் அதையே பெயரிலும் வைத்துவிட்டார்கள். எனவே இது வாட்ஸ்-அப் பயன்படுத்துகிற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது.
செல்போன் வருவதற்கு முன்பு தட்டச்சு எந்திரத்தில் அதிக நேரம் தட்டச்சு செய்பவர்களுக்கு அனைத்து விரல்களிலும் தேய்மானம் ஏற்பட்டு தசை மற்றும் எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதை ‘ஸ்டெனோகிராபர் தம்ப் டிசார்டர்’ என்று சொல்வது உண்டு. இப்போது செல்போன் மற்றும் கணினியில் அதிக நேரம் டைப் செய்கிற போது, இதே போன்ற தேய்மான பிரச்சினைகளை அதன் தன்மையைப் பொறுத்து, ‘டெக்ஸ்ட் தம்ப்’, ‘வாட்ஸ்-அப் பைட்டிஸ்’, ‘பிளாக்பெரி தம்ப்’, ‘டெக் நெக்’, ‘செல்போன் எல்போ சின்டோராம்’ போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. செல்போனில் வாட்ஸ்-அப் போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம் தொடர்ந்து டைப் செய்து சாட்டிங் செய்கிற போது, நமது கையில் உள்ள விரல்களை அதிக அளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறோம்.
இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும். சிலர் செல்போனில் டைப் செய்வதற்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவது உண்டு. இதனால் ஒரு கையில் மட்டும் அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக இரண்டு கைகளாலும் டைப் செய்கிற போது கைகளில் ஏற்படுகிற பாதிப்புகள் சற்று குறைய வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனின் அளவு பெரிதாக பெரிதாக டைப் செய்கிற பகுதி பெரிதாவதால் சற்று சுலபமாக டைப் செய்யலாம். டேப்லெட், லேப்டாப் போன்ற சற்று பெரிய திரையை உடைய கருவிகளை கீழே வைத்து பயன்படுத்தும் போது அதிக அளவு தலையை குனிந்து இருப்பதால் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் அதிக வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தசைகள், எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி திரைகளை பார்த்து கொண்டிருப்பதால் கண்கள் உலர்ந்து விடுகின்றன. இதுபோன்ற டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களால் தற்காலிக கண்பார்வை குறைபாடு ஏற்படுவதோடு கண் விழித்திரை குறைபாடும் உண்டாகிறது. இரவு நேரங்களில் தூக்கத்தை தவிர்த்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால் தூக்கக் குறைபாடுகள் மற்றும் நினைவுத்திறன் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன. மேலும் இதனால் அதிக கோபமும், அதிக மன அழுத்தமும் உண்டாகிறது.
குழந்தை பருவத்தில் இதுபோன்ற டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கவனக்குறைவு, மொழியை கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்சினை ஏற்படுவதோடு கண்ணில் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்சினை ஏற்படவும் காரணமாகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து வருவதோடு, அவர்களை அமைதிப்படுத்துவதற்காக செல்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதால், நாளடைவில் அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் நிலை உண்டாகிறது.
குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
தேவையானவை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோ
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மிளகு தூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும்.
நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கலந்து வைத்துள்ள மிளகு தூள், சீரகத்தூள், உப்பு கலவையை சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் மீது தூவி நன்றாக கலக்கவும்.
கடைசியாக அதன் மீது சாட் மசாலா தூள் தூவி பரிமாறலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
மாசு மட்டுமின்றி உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. காபியை அதிகமாக பருகினால் கூட முகப்பரு பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாத சருமத்தைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முகப்பருமுதல் எதிரியாக அமைந்து விடுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் அழுக்கு முகத்தில் படர்வது முகப்பருக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன. மாசு மட்டுமின்றி உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் தோன்றுவதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. பால் பொருட்கள், பிரெட்டுகள், காரமான மற்றும் எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவுகள் உள்பட பலதரப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் முகப்பருக்கள் தோன்றும். காபியை அதிகமாக பருகினால் கூட முகப்பரு பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா கூறுகையில், “ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருக்கள் தோன்றுவதற்கு அடிப்படை காரணியாக அமைந்திருக்கின்றன. காபியை அதிகமாக பருகும் பழக்கம் கொண் டவர்களுக்கு முகப்பரு வருவதற்கு வாய்ப்புள்ளது. காபியில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது. அவை தேவையற்ற கலோரிகளை உடலில் சேர்வதற்கு வழிவகுப்பதோடு முகப்பருகள் தோன்றுவதற்கும் காரணமாகிவிடுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு அதிகம் கொண்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. காய்கறிகள், பழங்களை உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு உதவும்” என்கிறார்.
“அதிகமான அளவு காபி பருகுவதும், போதுமான அளவு உணவு உட்கொள்ளாததும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அப்போது உடலில் உள்ள அமிலத்தின் அளவு அதிகமாகிவிடும். அதாவது உடலில் அமிலத்தின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறதோ அதற்கேற்ப நீரிழப்பு ஏற்படும். காபியை அதிகமாக உட்கொள்ளும்போது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் நீரில் கரையக்கூடிய தாதுக்கள் உடலில் இருந்து வெளியேறும். இதன் விளைவாகத்தான் நீரிழப்பு ஏற்படுகிறது. அத்துடன் அதிக காபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும். அப்போது இயல்பாகவே உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்” என்கிறார் மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா.
முகப்பரு பாதிப்புக்கு தொடர்ந்து ஆளாகுபவர்கள் காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.






