என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    தற்போது டெபிட் கார்டு, கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டெபிட் கார்டுக்கும், கிரடிட் கார்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்
    இந்தியாவில் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு இவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜன்தன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு டெபிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கணக்குகள் தொடங்கிய அனைவருக்கும் டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஎம்ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    டெபிட் கார்டுக்கும், கிரடிட் கார்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்:

    வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு ஒன்றை துவங்கும் போது, இக்கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு டெபிட் கார்டை வங்கி அவருக்கு அளிக்கும். இந்த டெபிட் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் கணக்கில் இருக்கும் நிலுவை பணத்தை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே கணக்கில், பணம் இல்லையென்றால் டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியாது. இதில் பண பரிமாற்றத்திற்கு வட்டி விகிதங்கள் முற்றிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. டெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரடிட் கார்டு பயன்பாடு என்பது முற்றிலும் மாறுபட்டது. கிரடிட் கார்டு பெற்றுள்ளவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.

    உதாரணமாக வங்கி கணக்கில் ஒருவருக்கு உச்சவரம்பு ரூ.1 லட்சம் என்றால் அந்த தொகை வரை பணம் எதுவும் செலுத்தாமலேயே பணத்தை எடுக்க முடியும். எனினும் இத்தொகைக்கான குறிப்பிட்ட வட்டி தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டி கட்டவில்லை எனில் அபராத தொகை செலுத்த நேரிடும்.

    எனவே பணம் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் கிடைக்கும் வருமானம் வட்டி கட்டவே போய்விடும். இயன்றவரை டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்த முயலுங்கள். அவசரமான சூழ்நிலையில் மட்டும் கிரடிட் கார்டை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகும். மேலும் கிரடிட் கார்டில் செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் செலுத்தி விட வேண்டும். அவ்வாறு செய்தால் வட்டி தொகையை சேமிக்கலாம்.
    பெண்கள் பிரா வாங்கும்போது எதில் தவறு செய்கிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?, எப்படி வாங்க வேண்டும் என்பதை வழிகாட்டுகிறது இந்தக் கட்டுரை.
    தவறான பிரா வாங்கினால் ஏற்படும் பாதிப்புகள் :

    பெண்கள் எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் சிக்கனமாக இருக்கலாம்.

    ஆனால் உள்ளாடை வாங்கும்போது மட்டும் சிக்கனம் பார்க்காமல் பிராண்டாகவும், தரமானதாகவும் வாங்க வேண்டும்.

    அதேபோல் தவறான அளவில் வாங்கினாலும் அது அசௌகரியத்தை உண்டாக்கும்.

    அதேசமயம் அதன் ஷேப்பையும் மாற்றும். எதிரே பார்க்கும்போது தோற்றம் நன்றாக இருக்காது.

    அதேபோல் தவறான பிரா அளவு தோள்பட்டை வலி, முதுகு வலிக்கு காரணமாக அமையும். இறுக்கமான எலாஸ்டிக் பிரா அணிந்தாலும் மார்பகங்களுக்குக் கீழ் கருப்பாக மாறும்.

    எப்படி பிரா வாங்க வேண்டும்..?

    மார்பக அளவை தெரிந்துகொள்ள இஞ்ச் டேப் பயன்படுத்தி சுற்றளவை எடுக்க வேண்டும். அதற்கு மார்பகங்களுக்குக் கீழ் இஞ்ச் டேப்பை வைத்து அளவு எடுக்க வேண்டும்.

    இது 32,34, 36 என அதன் அளவு இரட்டை படை எண்களில் இருக்கும்.

    அப்படி வரும் எண்ணுடன் ஐந்தை கூட்டிக்கொள்ள வேண்டும். ( உதாரணத்திற்கு 38 + 5 = 43 )

    ஒருவேளை அளவு ஒற்றைப் படை எண்ணில் வந்தால் அதன் அடுத்த இரட்டை படை எண்ணை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    உதாரணத்திற்கு நீங்கள் ஐந்துடன் கூட்டிய எண் 43 என வந்தால் அதன் அடுத்த எண்ணான 44 அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தற்போது இதுதான் பிராவின் சுற்றளவு.

    அடுத்ததாக கப் சைஸ் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது மார்பகங்களின் அளவு.

    இந்த கப் சைஸ் என்பது எண்ணிக்கையில் அல்லாமல் எழுத்தாக A,B,C,D என வரும்.

    இதற்கு இஞ்ச் டேப்பை மார்பகங்களின் மேல் வைத்து அளவு எடுக்க வேண்டும்.

    அந்த அளவு 40 என வந்தால் அதை மார்பக சுற்றளவுடன் கழிக்க வேண்டும்.

    உதாரணத்திற்கு கப் அளவு 40 – சுற்றளவு 44 கழித்தால் 4 வரும். இந்த நான்கு என்பது Dயைக் குறிக்கும். எனவே கப் அளவு D கப்.

    தற்போது பிரா வாங்கும்போது சுற்றளவு மற்றும் கப் சைஸ் இரண்டையும் சேர்த்து கேட்க வேண்டும். அதாவது பிரா சைஸ் 44 கப் சைஸ் D என கேட்டு வாங்க வேண்டும்.

    இப்படி உங்களின் மார்பக சுற்றளவு, மார்பக அளவு எவ்வளவு வருகிறது என இஞ்ச் டேப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள்.

    ஒருவேளை இஞ்ச் டேப் இல்லை என்றாலும் பிரா விற்கும் கடைகளில் இஞ்ச் டேப் வைத்திருப்பார்கள். உதவிக்குக் கேட்டால் கொடுப்பார்கள்.

    அல்லது அருகில் உள்ள டெய்லர் கடையில் சென்றும் உங்கள் அளவை தெரிந்துகொண்டு, நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
    சரியான புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும்போதுதான் ரத்தம் புத்துணர்வு பெற்று தேகமெங்கும் அழகு படர அனுமதிக்கும். எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொண்டால், இளமையை பாதுகாக்கலாம்.
    இளமையை அப்படியே தக்க வைக்க மிக சிறந்த வழிகளில் ஒன்றுதான் ஆயில் மசாஜ்கள். இப்போது ஆயில் மசாஜ் என்றால் கேரளா செல்ல வேண்டாம். அதற்கென கேரளாவே தமிழகம் வந்திருக்கிறது. அதாவது பல கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் தமிழகம் எங்கும் கிளை பரப்பி உள்ளன. அதுமட்டும் இல்லாமல் ஸ்பா சிகிச்சையிலும் எண்ணெய் மசாஜ்கள் தரப்படுகின்றன. நிறைய அழகு நிலையங்கள் தற்போது இந்த ஆயில் மசாஜ்களில் ஈடுபட்டுள்ளன.

    தரமான மற்றும் சரியான மசாஜ் மையத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் ஆரோக்யம் மற்றும் அழகு பாதுகாக்கப்படும். சரியான புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும்போதுதான் ரத்தம் புத்துணர்வு பெற்று தேகமெங்கும் அழகு படர அனுமதிக்கும்.

    திருமணம் வரை அழகை பரமரிக்கும் பெண்களால், அதன் பிறகு குழந்தை, குடும்பம் என இவற்றில் கவனம் செல்ல, சரும பாதுகாப்பு என்பது இல்லாமல் போய் விடுகிறது. சருமம் கடினமாக மாறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், இது முதுமையின் அடையாளம்.
    இதற்கு, முக்கிய காரணம் உண்ணும் உணவு முறைகள் தான். இப்படி வாழ்க்கை ஒருபுறம் போக, மனதில் இளமையை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொண்டால், இளமையை பாதுகாக்கலாம். என்னென்ன எண்ணெய்களால் மசாஜ் செய்யலாம்?

    திராட்சை எண்ணெய்: இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது. ஆகவே, சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். அது மட்டுமல்லாமல், திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால், சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால், நாளடைவில் மறைந்து விடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள், இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி, இளமை நிலைக்கும்.

    அவகோடா எண்ணெய்: நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம், உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பதுதான். ஆனால் இந்த அவகோடா எண்ணெயில் இருக்கும், ஒமேகா 3 பேட்டி ஆசிட் அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து, தளர்ச்சியை குறைத்து விடும். ஆகவே இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைந்து முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும், அவற்றை விரைவில் போக்கி விடும்.

    நல்லெண்ணெய்: மசாஜ்க்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ், பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால், எந்த ஒரு பிரச்னையும் வராது. இந்த எண்ணெய், சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும்.

    ஆலிவ் எண்ணெய்: எண்ணெய் வகைகளில் மிகச்சிறந்த எண்ணெய், ஆலிவ் எண்ணெய். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஓமேகா பேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக, இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, எண்ணெயை எக்காரணம் கொண்டும் சூடேற்றக்கூடாது. அவ்வாறு சூடேற்றினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். ஆயில் மஜாஜ் செய்து, உங்கள் இளமையை தக்க வைத்துக்கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. முதுமைக்கு குட்பை சொல்ல, ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்.
    நண்பர்கள் தான் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. சில சமயம் எதிரிகளும் நல்லது செய்வார்கள்.
    நண்பர்கள் தான் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. சில சமயம் எதிரிகளும் நல்லது செய்வார்கள். நாம் தான் அவர்கள் மேல் உள்ள ஆத்திரத்தில் அவர்களுடைய வார்த்தைகளை மதிக்க மறுக்கிறோம். நம்மைவிட நமக்கு வேண்டாதவர்களுக்குத்தான் நம்மை பற்றி நிறைய தெரியும். வேண்டியவர்கள் நம்முடைய நட்பை அனுசரித்துப் போக நினைத்து பல நேரங்களில் பேசாமல் இருந்து விடுவார்கள். நல்ல நண்பர்களுக்கு நம்மை மகிழ்விக்க மட்டுமே தெரியும். உண்மையை சொன்னால் நாம் வருத்தப்படுவோமோ என்று நினைத்து, அதை சொல்லாமலே விட்டுவிடுவார்கள்.

    எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேட்பவர், தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள் இல்லை என்றால், அவரால் நல்ல தலைவராக ஜொலிக்க முடியாது. விமர்சனம் என்பது எப்போதும், எல்லோருக்கும் தேவை. அதற்கு செவி சாய்க்கும் மனப்பக்குவம் இருந்தால் பல இன்னல்களிலிருந்து தப்பிக்கலாம். நட்பைப் பற்றியே எப்போதும் உயர்வாக பேசிக் கொண்டிருக்கும் நமக்கு, எதிரிகளைப் பற்றியும் பேசியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

    கபீர்தாஸ் என்ற ஞானி ‘நண்பர்களைவிட எனக்கு அதிகம் நன்மை செய்பவர்கள் என் எதிரிகள்தான். என் எதிரிகள் தான் எப்போதும் என் தவறுகளை சுட்டிக் காட்டுகிறார்கள். அவர்களால்தான் என்னை நான் திருத்திக் கொள்ள முடிகிறது’ என்றார். இது நிதர்சனமான உண்மை.

    விளையாட்டில்கூட எதிர் அணி இருந்தால்தான் நம்மை நாம் பலப்படுத்திக் கொண்டு நம் திறமைகளை வெளிக் கொண்டுவர முடியும்.

    நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ளவும், செழுமை படுத்திக் கொள்ளவும் எதிரிகள் தேவை. எதிரிகள் இல்லாத வாழ்க்கை உற்சாகமாக இருக்காது. நம்மைவிட நம் எதிரி புத்திசாலியாக இருக்கலாம். அதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உண்மையான விமர்சனங்களை எதிரிகளால் மட்டுமே தரமுடியும். எதிரிகளை வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லையானாலும் அவர்களுடைய கருத்துக்களை அங்கீகரிக்க வேண்டும். அதை அலசி ஆராய தவறக்கூடாது.

    உங்கள் குறைகளை நேருக்கு நேர் உங்கள் நண்பர்களால் சொல்ல முடியாது. எதிரிகளால் இது முடியும். புகழுரைகள் நம் மனதை மகிழ்விக்கும். விமர்சனங்கள் நம் மனதை செம்மைப்படுத்தும்.
    குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட அடம் பிடிக்கும். அவர்களுக்கு இவ்வாறு காய்கறிகள் சேர்த்து தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    வரகரிசி, இட்லி அரிசி - தலா அரை கிலோ
    உளுந்து - 100 கிராம்
    வெந்தயம் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    காய்கறி மசாலா செய்யத் தேவையானவை

    துருவிய கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், டர்னிப் - தலா 2 டேபிள் ஸ்பூன்
    துருவிய உருளைக் கிழங்கு - 1 டேபிள் ஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    வரகரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை மூன்று மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் மையாக அரைத்துக்கொள்ளுங்கள். போதுமான உப்பைச் சேர்த்து மாவை நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவைப் புளிக்கவையுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். 

    அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், டர்னிப், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். 

    கூடவே மஞ்சள் தூள், போதுமான உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். 

    வதக்கிய பொருட்களைப் புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள். 

    தோசைக் கல்லைச் சூடாக்கி தயாராக வைத்துள்ள மாவை ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள். 

    தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீண்டகால வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மூளை இன்றியமையாதது. மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
    கற்றல், உழைப்பு முதல் ஆளுமை வளர்ச்சி வரை வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் மூளை முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்டகால வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மூளை இன்றியமையாதது. மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    * மூளையின் செயல்பாட்டை சிறப்பாக்குவதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள், குறிப்பாக ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பை குறைவாக சேர்த்துக்கொள்வதும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவை மூளையில் கொழுப்பு படிவதை தடுக்க உதவும். கொழுப்பு உணவுகளுக்கு பதிலாக வைட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அவை முதுமையை தள்ளிப்போடும் தன்மை கொண்டது.

    * போதை மருந்துகளின் பயன்பாடு மூளைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதனை அறவே தவிர்க்க வேண்டும். போதை பழக்கத்தில் இருந்து மீள முடியாதவர்கள் மருத்துவ நிபுணர்களின் உதவியை நாட வேண்டும்.

    *ஆல்கஹால் மூளைக்கு நச்சுத்தன்மை விளைவிக்கக்கூடியது. அதை அதிகமாக உட்கொள்வது மூளை செல்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

    * தினமும் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது மூளையின் ரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். அவற்றின் சிறந்த செயல்பாட்டிற்கு வழிவகை செய்யும். முதுமையை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

    * நினைவாற்றல் இழப்புக்கு மன அழுத்தம் முக்கிய காரணங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது. மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    * குழந்தை பிறந்த முதல் ஐந்தாண்டுகளில் மூளையின் வளர்ச்சி துரிதமாக நடைபெறும். அந்த ஆண்டுகளில் பெற்றோர்கள் குழந்தையை அறிவார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது முக்கியம். இது நீண்ட கால வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும்.

    * ஒரே நேரத்தில் பல பணிகளில் ஈடுபடுவது கவனக்குறைவு மற்றும் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் அதனை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க அனைத்து அம்சங்களிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது முக்கியமானது.
    இப்போது வளரும் பிள்ளைகள் குறிப்பாக 6 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே நிவாரணம் பெற்றுவிடமுடியும்.
    இப்போது வளரும் பிள்ளைகள் குறிப்பாக 6 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே நிவாரணம் பெற்றுவிடமுடியும். அப்படி எந்த பொருள்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

    வறட்டு இருமல் எதனால் உண்டாகிறது என்பதை முதலில் அறிந்துகொள்வோம். சிலருக்கு சளி இருக்கும் போதும் வறட்டு இருமல் உண்டாகும். ஃப்ளூ வைரஸாக இருந்தாலும் வறட்டு இருமல் வரக்கூடும். பிள்ளைகளுக்கு வாசனை அலர்ஜி பிரச்சனை, புகை போன்றவையும் காரணமாக இருக்கலாம். வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு வறட்டு இருமலை எப்படி போக்குவது என்பதை தெரிந்துகொள்வோம்.

    ​குழந்தைகளுக்கு ஆவி பிடிக்க வைக்க முடியாது. ஆனால் வளரும் பிள்ளைகள் ஓரளவு சூட்டை தாங்ககூடியவர்கள். எனினும் பெரியவர்களை போன்று பிடிக்க வேண்டியதில்லை. வெந்நீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் கல் உப்பு அதோடு சிறிதளவு யூகலிப்டஸ் தைலம் அல்லது இலைகளை சேர்த்து வாய்குறுகிய பாத்திரத்தில் வைத்து அறையின் நடுவில் வைக்க வேண்டும். பிறகு பாத்திரம் அருகில் ஒரு அடி அல்லது இரண்டு அடி தள்ளி பிள்ளையை அமர்த்திகொள்ளுங்கள். அறையில் ஃபேன் போட வேண்டாம்.

    வெளிக்காற்று வருமளவு ஜன்னலையும் திறந்துவைக்காமல் மூடி வையுங்கள். இவை பிள்ளைகளின் சுவாசக்குழாய் வரை சென்று அடைப்பை நீக்கும். மூச்சு சீராக இருக்கும். வறட்டு இருமல் குறையதொடங்கும். தினமும் ஒருமுறை என ஐந்துநாட்கள் இப்படி செய்தால் போதும். ஒருவயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் முதல் இதை செய்யலாம். ஆனால் கவனமாக குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும்.

    ​மசாலா உணவுகளில் பயன்படுத்தும் பட்டை உண்மையில் அருமருந்து தரக்கூடியது என்று சொல்லலாம். வாசனைக்காக மட்டும் இதை உணவுகளில் சேர்ப்பதில்லை. பட்டை நுரையீரலில் இருக்கும் சளியை அகற்ற உதவுகிறது. நுரையீரலில் அடைப்பு இருப்பவர்கள் பட்டையை மற்ற வைத்திய பொருள்களுடன் பயன்படுத்தினால் வறட்டு இருமல் காணாமல் போகும். சளி, இருமலுக்கு நல்ல மருந்து பட்டை என்று சொல்லலாம். ஒருவயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தேன் கலந்துகொடுக்கலாம். அரை டீஸ்பூன் பட்டைதூளை அரைடீஸ்பூன் அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை கொடுத்துவந்தால் இருமல் சரியாகும்.

    ​மஞ்சள் என்பது கிருமி நாசினி. ஆண்டி பாக்டீரியல் பண்புகளை கொண்டிருப்பதால் இவை எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். சாதாரணமாகவே வாரம் ஒருமுறையாவது மஞ்சளை பாலில் கலந்து கொடூத்தாலே வளரும் பிள்ளைகளுக்கு எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்கும். வறட்டு இருமல் காலங்களில் மஞ்சள் இருமலை போக்கும்.

    பிள்ளைகள் தூங்கும் போது இளஞ்சூடான பாலில் மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகையும், மிளகுத்தூள் சிட்டிகையும் கலந்து அந்த சூட்டிலேயே பிள்ளைகளை குடிக்க வையுங்கள். தொடர்ந்து ஒருவாரம் வரை கொடுத்தாலே போதுமானது. நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.

    வறட்டு இருமலுக்கு இளஞ்சூடான வெந்நீரை காட்டிலும் சீரகம் வைத்த நீரை கொடுக்க வேண்டும். 2 லிட்டர் தண்ணீருக்கு ஒரு டீஸ்பூன் அளவு சீரகம் சேர்க்கவேண்டும். சீரகத்தை வெறும் வாணலியில் இலேசாக வறுத்து கொதிக்க வைத்த வெந்நீரில் கொட்டி ஆறவிடவும். பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் சரியாகும் வரை சீரக தண்ணீரை மட்டுமே கொடுக்க வேண்டும். நீரை மேலாக வடிகட்டியும் கொடுக்கலாம்.

    பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் ஏற்பட்ட காலங்களில் இரவு தவிர்த்து மற்ற நேரங்களில் சத்துகஞ்சி, சத்து பானம், பால், டீ, காஃபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக காய்கறிகள் வேக வைத்து மிளகுத்தூள், புதினா, கொத்துமல்லி சேர்த்து இளஞ்சூட்டில் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். தினமும் ஒரு கப் அளவு கொடுக்க வேண்டும். அசைவம் பழகிய பிள்ளைகளுக்கு சிக்கன், மட்டன் சூப் கொடுக்கலாம். சூப் கொடுக்கும் போது ஒரு பூண்டு தட்டி போடுவதை மறக்க வேண்டாம்.

    மேற்கண்ட குறிப்புகள் எல்லாமே ஓரு வயது முதல் 6 வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஏற்ற சிறந்த வைத்தியம். அதோடு இவை எல்லாமே பக்க விளைவுகள் இல்லாத வைத்தியமும் கூட என்பதும் கவனிக்க வேண்டியதே. வறட்டு இருமல் ஆரம்ப நிலையே சரி செய்ய கூடியதே. ஆனால் பிள்ளைகள் மூச்சு விடுதலில் சிரமத்துக்கு உள்ளாகவில்லை என்றால் கண்டிப்பாக இந்த வைத்தியம் உதவும். வறட்டு இருமலோடு மூச்சுத்திணறலையும் பிள்ளைகள் கொண்டிருந்தால் மருத்துவரையும் அணுகுவது நல்லது.
    தினமும் கூந்தலுக்கு இதை செய்து வந்தால் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க உதவும்.
    கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமானது. அதுதான் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க உதவும். நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். உச்சந்தலையிலும் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். ஏனெனில் உச்சந்தலையில் எண்ணெய் தடவினால்தான் முடிக்கு ஊட்டம் கிடைக்கும். கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி கூந்தலில் தடவுவது நல்லது. குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் தடவுவதற்கு நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால் கூந்தலில் அழுக்கு படிந்திருந்தால் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்பு, சிகைக்காய் போன்றவற்றை கொண்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தியபிறகு எண்ணெய் தேய்ப்பதுதான் முடியின் வளர்ச்சிக்கு நல்லது. உள்ளங்கையில் எண்ணெய்யை ஊற்றி உச்சந்தலையில் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முடியின் வேர்ப்பகுதிகளில் லேசாக எண்ணெய் தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தலைமுடியில் நீண்ட நேரம் எண்ணெய் இருந்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறானது. தலைமுடியில் அதிக நேரமோ, அதிக அளவிலோ எண்ணெய் இருக்கக் கூடாது. குளிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்துவிட்டு பிறகு குளிக்கலாம். தலைமுடியில் எண்ணெய் தேய்த்த பிறகு கூந்தல் சார்ந்த மற்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தலைமுடிக்கு குறைவான அளவிலேயே எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தடவும்போதெல்லாம் மென்மையாக மசாஜ் செய்துவிடுவதும் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும். தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்துக்கொள்வதற்கு வீட்டு உபயோக பொருட்களை கொண்டு கிரீம் கலந்த ‘ஹேர் மாஸ்க்’ தயார் செய்வது நல்லது. கறிவேப்பிலை, வேப்ப இலை, வெந்தயம், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம். குளித்ததும் தலைமுடியை உலர்த்துவதற்கு மென்மையான காட்டன் டவல்களை பயன்படுத்த வேண்டும். கனமான, அடர்த்தியான டவல்களை பயன்படுத்தக்கூடாது. அதுபோல் ஈரமான தலையில் சீப்பு கொண்டு சீவக்கூடாது. அது முடி உடைந்துபோவதற்கு வழிவகுத்துவிடும். இளம் வயதிலேயே ரசாயனம் கலந்த ‘ஹேர் டை’களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அது தலைமுடியை விரைவில் சேதப்படுத்திவிடும். தேங்காய் எண்ணெய்யை நிறைய பேர் கூந்தலுக்கு மட்டும்தான் உபயோகிப்பார்கள். அதனை சருமத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் அழகும் ஜொலிக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முடிகள், திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று பிரகாசிக்கும். குழந்தைகளை குளிப்பாட்டியதும் தலைக்கு மட்டுமின்றி கழுத்து, முதுகு பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தடவி வருவது நல்லது. ஒவ்வாமை பிரச்சினை காரணமாக சிலரது சருமம் பாதிப்புக்குள்ளாகும். தேங்காய் எண்ணெய் அதற்கு நிவாரணம் தரும். அதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும அழகை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. தேங்காய் எண்ணெய் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் கிருமிகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். வியர்வை, நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர்ச்சத்தை மீட்டெடுத்து சருமத்திற்கு நலம் சேர்க்கும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் முகம் கழுவுவதற்கு பதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம். முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சிடும்.
    கர்ப்பிணி பெண்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் பாக்டீரியாக்களால் தொந்தரவு நேரும்.
    கர்ப்பிணி பெண்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் பாக்டீரியாக்களால் தொந்தரவு நேரும். அவை உணவு மூலம் பரவும் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். ஆதலால் சாப்பிடும் உணவு விஷயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பழங்கள் சாப்பிடுவதில் கட்டுப்பாட்டை பின்பற்றுவது அவசியமானது.

    கர்ப்பகாலத்தில் திராட்சைப்பழம் சாப்பிடலாமா? என்பதில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. சில மருத்துவ வல்லுனர்கள் திராட்சையை தவிர்க்குமாறு பரிந்துரைக்கிறார்கள். திராட்சை செடிகளில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை அதற்கு காரணமாக கூறுகிறார்கள். மேலும் திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் எனும் ரசாயனம் அதிக அளவு இருக்கிறது. இந்த ரசாயனம் நச்சுத்தன்மை கொண்டது. அது தாய்க்கும், சேய்க்கும் தொந்தரவு உண்டாக்கும். திராட்சையில் வைட்டமின் ஏ, சி போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. என்றாலும் கர்ப்பகாலத்தில் திராட்சை பழம் சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

    கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் நல்லதல்ல. அதில் ப்ரோமைலின் நிறைந்துள்ளது. இது கர்ப்பப்பை வாய் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கக்கூடியது. கர்ப்பம் தரித்ததும் முதல் மூன்று மாதங்களில் அன்னாசி பழத்தை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. அன்னாச்சி பழ சாறு பருகினால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும் என்றாலும் கர்ப்பகாலத்தில் தவிர்ப்பதே நல்லது.

    கர்ப்பகாலத்தில் பப்பாளி பழத்தையும் தவிர்க்கும் நடைமுறை இருக்கிறது. அதுவும் சரியானதுதான். பப்பாளி சாப்பிடுவது கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பது ஓரளவு உண்மையானதுதான். பப்பாளி காய் மற்றும் பாதி பழுத்திருக்கும் பழத்தில் லேடெக்ஸில் நிறைந்திருக்கும். அது கருப்பை சுருக்கங்களை தூண்டும். அதனால் பப்பாளியை தவிர்ப்பது நல்லது.

    இருப்பினும், பழுத்த பப்பாளி பழத்தை பிரசவ காலத்திற்கு பிறகு சாப்பிடலாம். பழுத்த பப்பாளி பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்கும். தேன் மற்றும் பால் கலந்த பப்பாளி தாய்மார்களுக்கு ஒரு சிறந்த டானிக் ஆகும். குறிப்பாக பாலூட்டும் சமயத்தில் உட்கொள்ளலாம். ஏனெனில் பழுத்த பப்பாளி பழங்களில் மிகக்குறைந்த அளவு பப்பேன் உள்ளது. மேலும் ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள் உள்பட பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது.

    அதேவேளையில் கர்ப்ப காலத்தில் பழங்கள் உணவில் முக்கிய இடம் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பிடித்தமான பழங்களை பட்டியலிட்டு சாப்பிடுவது அவசியம். அவை வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் ஆரோக்கியமானதுதானா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    காலையில் எழுந்ததும் தவிர்க்கக்கூடிய சில பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. அவற்றை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நலம் சேர்ப்பதோடு அன்றைய தினத்தில் தேவையற்ற அசவுகரியங்களை தவிர்க்கவும் வழிவகை செய்யும்.
    இரவில் நன்றாக தூங்கி காலையில் எழுந்ததும் தவிர்க்கக்கூடிய சில பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. அவற்றை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நலம் சேர்ப்பதோடு அன்றைய தினத்தில் தேவையற்ற அசவுகரியங்களை தவிர்க்கவும் வழிவகை செய்யும். அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    1. காலையில் எழுந்ததும் சோம்பலை போக்குவதற்கு நிறைய பேர் கைகளை மேலே தூக்கி உடலையும், கைகளையும் வளைப்பார்கள். அப்படி நீட்டி முறிப்பது தவறில்லை. அதே வேளையில் வலது பக்கமாக உடலை சாய்த்து நீட்டி முறிப்பது நல்லது. அது தசைகளை வளைந்து கொடுக்க செய்து உடலை இலகுவாக்க உதவும்.

    2. காலையில் எழுந்த உடனேயே உடற்பயிற்சி செய்வது நல்ல பழக்கம் அல்ல. இரவு முழுவதும் உடல் ஓய்வெடுத்திருப்பதால் வெறும் வயிற்றில் உடற்பயிற்சியை தொடங்கக்கூடாது. திரவ உணவுகளையோ அல்லது நீரோ பருகிவிட்டு உடற் பயிற்சி செய்வது நல்லது.

    3. காலை வேளையில் உடற்பயிற்சியை அறவே தவிர்ப்பது நல்ல பழக்கம் அல்ல. தூக்கமின்மை, மனச்சோர்வு, பதற்றம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு காலை வேளை உடற்பயிற்சி பலன் கொடுக்கும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சோர்வை போக்கி உடல் ஆற்றலை அதிகப்படுத்தவும் உதவும். நாள்பட்ட சோர்வுடன் இருப்பவர்கள் காலை வேளையில் தவறாமல் உடற்பயிற்சி செய்துவருவது நல்லது.

    4. சூரிய வெளிச்சம் நன்றாக பிரகாசிக்க தொடங்கிய பிறகும் தூங்கிக்கொண்டிருப்பது தவறான பழக்கம். காலையில் எழுந்ததும் கண்கள் கூசாத அளவில் சூரிய கதிர்களை பார்ப்பது நாள் முழுவதும் மனநிலையையும், உடல் ஆற்றல் மட்டத்தையும் அதிகரிக்க உதவும். மழைக்காலங் களில் சூரிய கதிர்களை பார்க்க முடியாத பட்சத்தில் விளக்கு வெளிச்சத்தை சில விநாடிகள் பார்க்கலாம்.

    5. நிறைய பேர் அலாரம் வைத்து எழும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். காலையில் அலாரம் அடித்தவுடன் எழுந்தால் பரவாயில்லை. அதனை அணைத்துவிட்டு கொஞ்ச நேரம் தூங்குவதற்கு முயற்சிப்பார்கள். அப்படி தூங்க முயற்சிப்பது பகல் நேர தூக்கத்திற்கும், உடல் செயல்திறனை குறைப்பதற்கும் வழிவகுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    6. காலையில் எழுந்ததும் காபி பருகும் வழக்கத்தை நிறைய பேர் பின்பற்றுகிறார்கள். மன அழுத்தத்தை உருவாக்கும் கார்டிசோல் ஹார்மோன் காலை வேளையில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காபி பருகியதும் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உணரலாம். என்றாலும் கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகும்போது மன அழுத்தத்தில் தள்ளிவிடும். இரவில் அதன் தாக்கம் அதிகம் வெளிப்படும். படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தண்ணீர் பருகுவது ஆரோக்கியமானது. ஏனெனில் இரவு முழுவதும் உடலில் தேங்கி இருந்த நச்சுகளை வெளியேற்றவும், கல்லீரலை தூய்மையாக்கவும் தண்ணீர் பருகுவது நல்லது.

    7. காலை உணவை தவிர்ப்பதும் நல்லதல்ல. இரவு முழுவதும் ஓய்வெடுக்கும் உடலுக்கு காலையில் தேவையான ஆற்றலை வழங்கும் சக்தி உணவுக்குத்தான் இருக்கிறது. காலை உணவை தவிர்ப்பது உடல்நலம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு வித்திடும்.
    நாட்டு சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று நாட்டு சோளம் சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    நாட்டு சோளம் - 1 கப்
    உளுத்தம்பருப்பு  - கால் கப்
    துவரம் பருப்பு - ½ கப்
    கடலைப்பருப்பு - ½  கப்
    காய்ந்த மிளகாய் - 10
    சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சி - 1 துண்டு
    பெருங்காயம் - 1 டீஸ்பூன் 
    மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன் 
    கறிவேப்பிலை -சிறிதளவு
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்    
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோளம், உளுத்தம்பருப்பு சேர்த்துக்  கழுவி, களைந்து நான்கு மணி நேரம் தன்ணீரில் ஊற வைக்கவும். 

    அதே போல், மற்ற பருப்புகளையும் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். 

    பிறகு சோளம், உளுந்தை காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 

    ஊற வைத்த பருப்புகளை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 

    இரண்டு மாவுக்கலவையையும் ஒன்றாகச் சேர்த்து, மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, கெட்டியான இட்லி மாவுப் பதத்திற்கு கலக்கவும்.

    அடுப்பில் தோசை தவாவை காய வைத்து, அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, இரு புறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். 

    சத்தான சோள அடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அடிக்கடி தாவுவதை நிறுத்திக் கொள்வது அதிக சம்பளம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான சில ஆலோசனைகளை பார்க்கலாம்.
    வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான சில ஆலோசனைகள் வருமாறு:-

    சில சமயம் கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை எனில், நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டு தைரியமாக வெளியே வந்து விடலாம். இதுவும் ஒருவகையான உத்தியே. இதில் வெற்றியும் தோல்வியும் சரிவிகிதத்தில் இருக்கும். இச்சமயத்தில் நீங்கள் ஏற்கனவே வேலையில் இருப்பவர் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் வேலையில் இல்லாமல் இதுபோன்ற ‘ரிஸ்க்’களை எடுக்கக் கூடாது. வேலை இல்லையெனில் இரு தரப்பினரும் இறங்கி வந்து ஒரு குறிப்பிட்ட சம்பளத்திற்கு ஒத்துக் கொள்வது நல்லது.

    சம்பளம் பேசி முடிவான பிறகு ‘ஆபர் லெட்டர்’ எனப்படும் கடிதத்தை அளிப்பார்கள். இது நிச்சயதார்த்தம் போன்றது. வேலையில் சேருவது கல்யாணம் போன்றது. வேலை, சம்பளம் போன்ற விஷயங்களுக்கு, சரி சொல்வதற்கு முன்பு யோசிக்கலாம். ஆனால் சரி சொன்ன பிறகு யோசிக்கக் கூடாது. சிலர் ‘ஆபர் லெட்டர்’ வாங்கியதற்கும், வேலையில் சேருவதுக்குமான இடைப்பட்ட நாட்களில் மனம்மாறி வேலையில் சேரமாட்டார்கள். இது, அவரது பெயருக்கு களங்கத்தை உண்டாக்கி விடும்.

    ஆட்களை தேர்வு செய்வதற்கு விளம்பரம், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என பல படிநிலைகளைத் தாண்டி உங்களை தேர்வு செய்திருப்பார்கள். இதற்கென பணமும், காலமும் செலவாகி இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர், கடைசி நேரத்தில் வரமுடியாது என்று கூறிவிட்டால் பணமும் காலமும் விரயம் ஆகிவிடும். எனவே அவர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் முடிவை முதலிலேயே சொல்லி விடவேண்டும்.

    அனைத்து நிறுவனங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது. தொழில்நுட்ப நிறுவனங்களில் வருடத்திற்கு 15 சதவீத பணியாளர்கள் வேலையை விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் திறமையான நபர்களை விட ஓரளவுக்கு வேலை தெரிந்த நபர்களையே அவர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள். எனவே குறைந்தது ஒரு வருடமாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் எவ்வளவு திறமையானவர் என்றாலும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து கொள்ள தயங்குகின்றன. எனவே அடிக்கடி தாவுவதை நிறுத்திக் கொள்வது அதிக சம்பளம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
    ×