search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எதிரிகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்
    X
    எதிரிகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

    எதிரிகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

    நண்பர்கள் தான் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. சில சமயம் எதிரிகளும் நல்லது செய்வார்கள்.
    நண்பர்கள் தான் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. சில சமயம் எதிரிகளும் நல்லது செய்வார்கள். நாம் தான் அவர்கள் மேல் உள்ள ஆத்திரத்தில் அவர்களுடைய வார்த்தைகளை மதிக்க மறுக்கிறோம். நம்மைவிட நமக்கு வேண்டாதவர்களுக்குத்தான் நம்மை பற்றி நிறைய தெரியும். வேண்டியவர்கள் நம்முடைய நட்பை அனுசரித்துப் போக நினைத்து பல நேரங்களில் பேசாமல் இருந்து விடுவார்கள். நல்ல நண்பர்களுக்கு நம்மை மகிழ்விக்க மட்டுமே தெரியும். உண்மையை சொன்னால் நாம் வருத்தப்படுவோமோ என்று நினைத்து, அதை சொல்லாமலே விட்டுவிடுவார்கள்.

    எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேட்பவர், தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள் இல்லை என்றால், அவரால் நல்ல தலைவராக ஜொலிக்க முடியாது. விமர்சனம் என்பது எப்போதும், எல்லோருக்கும் தேவை. அதற்கு செவி சாய்க்கும் மனப்பக்குவம் இருந்தால் பல இன்னல்களிலிருந்து தப்பிக்கலாம். நட்பைப் பற்றியே எப்போதும் உயர்வாக பேசிக் கொண்டிருக்கும் நமக்கு, எதிரிகளைப் பற்றியும் பேசியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

    கபீர்தாஸ் என்ற ஞானி ‘நண்பர்களைவிட எனக்கு அதிகம் நன்மை செய்பவர்கள் என் எதிரிகள்தான். என் எதிரிகள் தான் எப்போதும் என் தவறுகளை சுட்டிக் காட்டுகிறார்கள். அவர்களால்தான் என்னை நான் திருத்திக் கொள்ள முடிகிறது’ என்றார். இது நிதர்சனமான உண்மை.

    விளையாட்டில்கூட எதிர் அணி இருந்தால்தான் நம்மை நாம் பலப்படுத்திக் கொண்டு நம் திறமைகளை வெளிக் கொண்டுவர முடியும்.

    நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ளவும், செழுமை படுத்திக் கொள்ளவும் எதிரிகள் தேவை. எதிரிகள் இல்லாத வாழ்க்கை உற்சாகமாக இருக்காது. நம்மைவிட நம் எதிரி புத்திசாலியாக இருக்கலாம். அதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உண்மையான விமர்சனங்களை எதிரிகளால் மட்டுமே தரமுடியும். எதிரிகளை வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லையானாலும் அவர்களுடைய கருத்துக்களை அங்கீகரிக்க வேண்டும். அதை அலசி ஆராய தவறக்கூடாது.

    உங்கள் குறைகளை நேருக்கு நேர் உங்கள் நண்பர்களால் சொல்ல முடியாது. எதிரிகளால் இது முடியும். புகழுரைகள் நம் மனதை மகிழ்விக்கும். விமர்சனங்கள் நம் மனதை செம்மைப்படுத்தும்.
    Next Story
    ×