search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்பகாலத்தில் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?
    X
    கர்ப்பகாலத்தில் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?

    கர்ப்பகாலத்தில் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?

    கர்ப்பிணி பெண்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் பாக்டீரியாக்களால் தொந்தரவு நேரும்.
    கர்ப்பிணி பெண்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் பாக்டீரியாக்களால் தொந்தரவு நேரும். அவை உணவு மூலம் பரவும் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். ஆதலால் சாப்பிடும் உணவு விஷயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பழங்கள் சாப்பிடுவதில் கட்டுப்பாட்டை பின்பற்றுவது அவசியமானது.

    கர்ப்பகாலத்தில் திராட்சைப்பழம் சாப்பிடலாமா? என்பதில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. சில மருத்துவ வல்லுனர்கள் திராட்சையை தவிர்க்குமாறு பரிந்துரைக்கிறார்கள். திராட்சை செடிகளில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை அதற்கு காரணமாக கூறுகிறார்கள். மேலும் திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் எனும் ரசாயனம் அதிக அளவு இருக்கிறது. இந்த ரசாயனம் நச்சுத்தன்மை கொண்டது. அது தாய்க்கும், சேய்க்கும் தொந்தரவு உண்டாக்கும். திராட்சையில் வைட்டமின் ஏ, சி போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. என்றாலும் கர்ப்பகாலத்தில் திராட்சை பழம் சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

    கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் நல்லதல்ல. அதில் ப்ரோமைலின் நிறைந்துள்ளது. இது கர்ப்பப்பை வாய் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கக்கூடியது. கர்ப்பம் தரித்ததும் முதல் மூன்று மாதங்களில் அன்னாசி பழத்தை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. அன்னாச்சி பழ சாறு பருகினால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும் என்றாலும் கர்ப்பகாலத்தில் தவிர்ப்பதே நல்லது.

    கர்ப்பகாலத்தில் பப்பாளி பழத்தையும் தவிர்க்கும் நடைமுறை இருக்கிறது. அதுவும் சரியானதுதான். பப்பாளி சாப்பிடுவது கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பது ஓரளவு உண்மையானதுதான். பப்பாளி காய் மற்றும் பாதி பழுத்திருக்கும் பழத்தில் லேடெக்ஸில் நிறைந்திருக்கும். அது கருப்பை சுருக்கங்களை தூண்டும். அதனால் பப்பாளியை தவிர்ப்பது நல்லது.

    இருப்பினும், பழுத்த பப்பாளி பழத்தை பிரசவ காலத்திற்கு பிறகு சாப்பிடலாம். பழுத்த பப்பாளி பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்கும். தேன் மற்றும் பால் கலந்த பப்பாளி தாய்மார்களுக்கு ஒரு சிறந்த டானிக் ஆகும். குறிப்பாக பாலூட்டும் சமயத்தில் உட்கொள்ளலாம். ஏனெனில் பழுத்த பப்பாளி பழங்களில் மிகக்குறைந்த அளவு பப்பேன் உள்ளது. மேலும் ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள் உள்பட பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது.

    அதேவேளையில் கர்ப்ப காலத்தில் பழங்கள் உணவில் முக்கிய இடம் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பிடித்தமான பழங்களை பட்டியலிட்டு சாப்பிடுவது அவசியம். அவை வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் ஆரோக்கியமானதுதானா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    Next Story
    ×