என் மலர்
ஆரோக்கியம்
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மார்பகங்களை நீக்கம் செய்த பின்பு அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் சொல்ல முடியாததாக இருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களின் கவலையையும்,கண்ணீரையும் அருகில் இருந்து பார்த்த ஜெயஸ்ரீ ரத்தன் அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் புன்னகையை உருவாக்கச் செய்யும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மார்பகங்களை இழந்த பெண்களின் வாழ்க்கையில் இதன் மூலம் புது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். அதற்காக சாய்ஷா என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.
“புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகங்களை இழந்த பெண்களை இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திக்கும் சூழ்நிலை உருவானது. அவர்களது மனக்கஷ்டங்களை கேட்டபோது பிராக்களின் உள்ளேவைக்க கூடிய பொருளை தயார் செய்யலாமா என்று யோசித்தேன். கம்பளி நூலால் மார்பக வடிவம்கொண்ட நாக்கர்ஸ் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருக்கும் ‘நிட்டட் நாக்கர்ஸ்’ அமைப் பிடம் தொடர்புகொண்டு பேசினேன். அவர்கள் இங்கே அதனை தயார் செய்துகொள்ளும் உரிமையை வழங்கினார்கள். நாங்கள் இங்கே தயார்செய்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் கண்ணீர் கலந்த நன்றியை தெரிவிக்கிறார்கள்” என்கிறார், ஜெயஸ்ரீ. இவர் சென்னை குட்ஷெப்பர்டு கான்வென்டில் படித்தவர்.
இவர் குரோஷா மற்றும் நிட்டிங் தெரிந்த தனது தோழிகளுடன் சேர்ந்து அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சாய்ஷா அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்த அமைப்புக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 170 சமூக சேவகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு வருடங்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ‘நாக்கர்ஸ்’ வழங்கியிருக்கிறார்கள். தேவைப்படு பவர்களுக்கு வழங்குவதாகவும் சொல்கிறார்கள்.
“மார்பகம் நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் நாக்கர்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அதன் செலவு மிக அதிகமாக இருக்கும். அதற்கு செலவு செய்ய முடியாதவர்களுக்கு இதனை இலவசமாக வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்கிறார், வல்ச மேரி மேத்யூ. திருவனந்தபுரத்தை சேர்ந்த இவரும் சாய்ஷா அமைப்பின் சேவகராக பணியாற்றுகிறார்.
“நானும், ஜெயஸ்ரீயும் சென்னையில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தோம். பள்ளிப் படிப்பை முடித்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்பு கடந்த ஆண்டு முன்னாள் மாணவிகளான நாங்கள் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடினோம். அப்போதுதான் ஜெயஸ்ரீ, சாய்ஷா அமைப்பின் செயல்பாடுகள் பற்றி என்னிடம் சொன்னார். அப்போது நான் வங்கி மேனேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தேன்.
அக்ரிலிக் நூல் மூலம் வழக்கமாக குரோஷா தயார் செய்வார்கள். ஆனால் நமது நாட்டு சீதோஷ்ணநிலைக்கு காட்டன் நூலால்தான் நாக்கர்ஸ் தயார்செய்யவேண்டும். கோவா, வதோரா போன்ற பகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் காட்டன் நூல் வினியோகிக்கிறார்கள். அதற்கான செலவுகளை வாலண்டியர்களான நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். குரோஷா, நிட்டிங் தெரிந்த எல்லோருமே ‘பேட்டர்ன்’ தெரிந்தால் நாக்கர்ஸ் வடிவமைக்கலாம். ஏ, பி, சி, டி போன்ற கப் சைஸ்களில் எவ்வாறு நாக்கர்ஸ் தயார் செய்வது என்ற விவரம் பேட்டனில் தரப்பட்டிருக்கிறது.
நாக்கர்ஸின் உள்ளே ரெக்ரான் பைபரை வைக்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு எதிரானதல்ல. மட்டுமின்றி கழுவியும் பயன்படுத்தலாம். எடை மிக குறைந்தது என்பதால் உபயோகிக்கவும் சிரமம் ஏற்படாது. உலகின் பல பகுதிகளில் இருந்து தயார் செய்து அனுப்பப்படும் நாக்கர்ஸில் கப் சைஸ் அளவுக்கு ஏற்றபடி ரெக்ரான் பைபரை நிரப்பி, லேபிள் செய்யும் பணி மும்பையில் நடக்கிறது.
ஒரு மார்பகம் மட்டும் நீக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நாக்கர்ஸ் வழங்குகிறோம். கழுவி, காயவைத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப கூடுதலாக ஒன்று வழங்குகிறோம். ஒருமுறை பெறுபவற்றை இரண்டு வருடங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு எங்கள் அமைப்பை தொடர்புகொண்டு புதியவற்றை வாங்கிக்கொள்ளலாம். இந்த சேவையில் மனநிறைவு கிடைக்கிறது. முதலில் எங்களிடம் இருந்து நாக்கர்ஸ் பெற்றவர்கள், பின்பு எங்களோடு சேர்ந்து வாலண்டியராக சேவை செய்ய முன்வருகிறார்கள். அதனால் எங்கள் சேவை விரிவடைந்துகொண்டிருக்கிறது” என்கிறார், ஜெயஸ்ரீ ரத்தன்.
தூக்கமின்மை பலருக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு தூக்கம் வராமல் போனால், உடல் ஆரோக்கியம் கெடும்.
உடலை ஓய்வெடுக்க செய்யும் இயற்கையின் ஒரு வழிதான் தூக்கம். 24 மணி நேரத்தில், 8 முதல் 10 மணி நேரம் தூக்கமும், பிறகு விழிப்பும் ஏற்படுத்துவது நரம்புகளின் முக்கிய பணியாகும். தூக்கத்தின் நேரம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஒரு சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால் 4 முதல் 5 மணி நேரம் தூங்கி எழுவார்கள். இது, 8 மணி நேரம் தூங்கியதற்கு சமம். தூக்கம் மன அழுத்தத்தை குறைக்கும். மூளைக்கு ஓய்வைத் தரும். உடலும், மனமும் புத்துணர்வு பெறும். ஒரு சிலர் தலையணையில் தலையை வைத்தவுடன் தூக்கம் சுண்டி இழுக்கும். சிலருக்கு புத்துணர்வு ஏற்படாது. களைப்பு தொடரும்.
தூக்கமின்மை பலருக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு தூக்கம் வராமல் போனால், உடல் ஆரோக்கியம் கெடும். மூளைக்கு அதிக வேலை தரும் பலரையும் தூக்கமின்மை நோய் தாக்குகிறது. இதேபோல் கடின உடல் உழைப்பாளிகளுக்கும் தூக்கமின்மை ஏற்படலாம். சுற்றுப்புறச்சூழல் எரிச்சலூட்டுவது, அதிக குளிர், அதிக வெப்பம், ஈரப்பதம், கொசுக்கடி அல்லது காதுக்கு அருகே கொசு சத்தமிட்டு பறப்பது ஆகியவை தூக்கத்தை கெடுக்கும்.
இதுபோன்ற வெளிப்புற விஷயங்களால், தூக்கம் தடைபடுவதை சரி செய்து தூங்க முற்படலாம். ஆனால் தூக்கமின்மை ஒரு நோயாக வெளிப்பட்டால் அதை வேறு வழியில் தான் சரி செய்ய முடியும். கவலை, அதிகளவு புகை பிடிப்பது, மதுபானம் குடிப்பது, வெகு நேரம் கழித்து இரவில் சாப்பிடுவது, தூங்காமல் வேலை செய்வது, காற்றோட்டம் இல்லாத அறையில் தூங்க முற்படுவது, தூங்குவதற்கு முன்பு சதுரங்கம், கேரம், சீட்டு விளையாடுவது ஆகியவை தூக்கமின்மை நோயை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலில் அதிகளவு சத்தம் இருந்தால் தூக்கம் ஏற்படாது. எனவே அயர்ந்து தூக்கங்கூடிய சூழலை ஏற்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பெண்களின் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி நிரந்தர தீர்வு காண முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
* எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.
* எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
* ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக எடுத்து, அதில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பிரகாசமாக இருக்கும்.
குழந்தைகளின் உடல் நலத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பீட்ரூட் மசாலா.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - கால் கிலோ
சிறிய வெங்காயம் - 10
பூண்டு (நசுக்கியது) - 3 பல்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோலுரித்து, நன்கு கழுவி, சதுர துண்டுகளாக நறுக்கவும்.
தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பின் காயைச் சேர்த்து நன்றாக வதக்கி, கால் கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, மூடி போட்டு வேக விடவும். இடையிடையே கிளறி விட்டு, காய் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சத்தான பீட்ரூட் மசாலா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொரோனா ஊரடங்கு மக்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் மாற்றியது. இந்த சூழ்நிலையில் தான் பெண்கள் கைத்தொழிலில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் பலரது பொருளாதாரம் கேள்விக்குறியானது. கொரோனா ஊரடங்கு மக்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் மாற்றியது. இந்த சூழ்நிலையில் தான் கைத்தொழிலில் ஈடுபடுவதும் அதிகரித்தது. அதாவது முககவசம், கிருமி நாசினி தயாரித்தலில் ஈடுபட தொடங்கினர்.
நமது கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் இதன் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு தற்போதும் அதன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். முக கவசம் தயாரிக்க தேவையான துணிகளை பெற்று அதனை வடிவமைத்து பெண்கள் ஒன்று சேர்ந்து அதனை தயாரித்தனர். இதேபோல கிருமி நாசினி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்று, அதனை எவ்வாறு தயாரிப்பது என பயிற்சி பெற்று மொத்தமாக தயாரிக்க தொடங்கினர்.
பொதுவாக அலங்கார பொருட்கள், உணவு வகைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களுக்கு முககவசம், கிருமி நாசினி தயாரித்தலும் ஒரு கைத்தொழிலாக அமைந்தது. இதன் மூலம் கொரோனா ஊரடங்கில் அவர்களுக்கு ஓரளவு வாழ்வாதாரத்திற்கான வருமானம் கிடைத்தது.
தற்போதும் அவர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த முககவசங்கள், கிருமிநாசினி விற்பனை அமைந்துள்ளது. இதேபோல தையற் தொழிலாளிகளும் முககவசம் தயாரித்து விற்பனையில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இன்றும் சாலையோரங்களில் முக கவசங்களை பலரும் விற்பனை செய்து வருவதை காணமுடிகிறது.
பொதுவாக முக கவசங்கள் மருத்துவமனை வட்டாரத்தில் மட்டும் அணிவது வழக்கம். அதேபோல நோயாளிகள் தொற்று ஏற்படாமல் இருக்க அணிவது உண்டு. ஆனால் இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முககவசம் அணிவது கட்டாயம் என்ற சூழலால் சாலையோரங்களில் முக கவசங்கள் விற்பனையும் ஒரு தொழிலாக உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்!
குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்து விடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன?
அவற்றை எந்தெந்தக் கால கட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும்? நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு ஆலோசனை தேவை.
தடுப்பூசி
நோய்த் தடுப்பு என்பது, தினசரி நம்முடைய உடலில் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. நோய்க் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும் போது அதை அழிக்கிற வேலையைப் பார்ப்பவை இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் தான். சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக் கொண்டு, மீண்டும் அது போன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலில் இருந்து என்று விழிப்புடன் நம்மைப் பாதுகாக்கிறது.
சில நோய்த் தாக்குதலைச் சமாளிக்க செயற்கையான நோய்த் தடுப்பு மருந்துகளும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அவைதான் தடுப்பூசிகள்! இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் நோய்த் தடுப்பானது நோய்க் கிருமி தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.
முதன் முதலில் பெரியம்மைக்குத் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் வந்து கொண்டே இருக்கின்றன.
தடுப்பூசிகள் போடுவதற்கான காரணங்கள்
தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது! தவிர, நோய்த் தொற்றுக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் கால தலை முறையைப் பாதுகாக்கிறது. நம் குடும்பத்தின் நேரம், பணத்தை மிச்சப்படுத்துகிறது.
ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த போலியோ, அம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் பெருமளவு ஒழிக்கப்பட்டன!
குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள் தான் தற்காக்கின்றன.
என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்? பிறந்தவுடன்…
குழந்தைப் பிறந்ததும் காசநோய்க்கு பி.சி.ஜி., போலியோவுக்கு ஓ.பி.வி., ஹெபடைடிஸ் பி வைரஸுக்கு எச்.பி.வி. அளிக்கப்படுகின்றன.
குழந்தை பிறந்ததும் மருத்துவமனைகளே குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்துகளை அளித்துவிடுவதால் கவலையில்லை.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக இந்த பொருளை பயன்படுத்தலாம்.
இந்தியாவில் விளைகிற பழவகைகளில் சப்போட்டாவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் உலக சந்தையில் இந்த சப்போட்டாவுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வளைகுடா நாடுகளிலும், இங்கிலாந்து, கனடா, போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலும் இந்தியாவின் சப்போட்டா பழத்துக்கு கடும் வரவேற்பு. பெட்டி, பெட்டியாக டன், டன்னாக வாங்குகிறார்கள்.
திடீரென்று நம்ம சப்போட்டாவுக்கு அப்படி ஏன் வரவேற்பு என்றும் நினைக்க தோன்றும். காரணம் வேறொன்றும் இல்லை. அதில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அபூர்வ மருத்துவ சக்தி இருப்பது தான். ஆம்! சப்போட்டா பழத்தில் இருந்து ‘சர்க்கரைட்ஸ்’ என்ற பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக இந்த பொருளை பயன்படுத்தலாம். மேலைநாடுகளில் சப்போட்டாவில் இருந்து சுவையான ஆடைக்கட்டி தயாரிக்கப்படுகிறது. மேலும் பசை தயாரிக்க பயன்படுகிறது.
சப்போட்டாவை எந்த தட்ப வெப்ப நிலைப்பிரதேசத்திலும் பயிரிடலாம். அதிக மழைப்பிரதேசத்திலும் இது நன்றாக வளரும். வறண்ட பகுதியிலும் இது வளரக்கூடியது. ஆயிரம் மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில் கூட இது வளரக்கூடியது. பூச்சிகளோ, நோய்களோ, மற்ற பழங்களை போல் இதை அதிகமாக தாக்குவதில்லை. உழவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை நல்ல விளைச்சலையும் விலையையும் பெற்று தருகிறது சப்போட்டா பழங்கள்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்பு சப்போட்டா பழங்களை குளிர்ந்த நீரில் குளுமைப்படுத்தப்பட வேண்டும். அறுவடை செய்தவுடனே இவற்றை செய்வது மிகவும் நல்லது. இதனால் பழங்கள் கெட்டு போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். பைபர் பெட்டிகளில் அடைக்கும் பழங்களை 6 டிகிரி சென்டிகிரேடு உள்ள குளிர் அறைகளில் வைத்திருக்க வேண்டும். சப்போட்டா பழங்கள் சுமார் 25 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை.
இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் கூந்தலுக்கு அக்கறை செலுத்த யாருக்கு நேரம் இருக்கிறது. அதுவும், பெரும்பாலானவர்களுக்கு தலையை சீவுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. தலைக்கு குளித்தோமா, ஹேர் ட்ரையர் யூஸ் பண்ணி முடியை காய வைத்தோமா அத்தோடு நமது வேலை முடிந்தது என்று பலர் இருக்கின்றனர்.
முந்தைய காலத்தை காட்டிலும் இன்றைய காலக்கட்டத்தில் நீளமான கூந்தல் உள்ள பெண்களை காண்பதே அரிதாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் சீரற்ற பராமரிப்பு முறை.
தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. வழிய வழிய எண்ணெய் தேய்த்து, சீவி கொண்டால் முடியே கொட்டாது என்று எண்ணுவது முட்டாள்தனம் என்றே கூற வேண்டும்.
கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தால், எனக்கு முடி கொட்டுகிறது என்று பலர் புலம்புவதுண்டு. அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு. இதை முழுவதுமாக படித்தால் நீங்கள் இனி முடி உதிர்வு பற்றி கவலை கொள்ளவே தேவையில்லை.
அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பது தெரியுமா உங்களுக்கு? கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது மிகவும் நல்லது. அதுவே, அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் அதுவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேவைக்கு அதிகமான எண்ணெயை தலையில் தடவும் போது, ஸ்கால்ப்பில் உள்ள சரும துளைகள் மூடிக்கொள்ளும்.
அதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.
கூந்தலை வலுவாக்குவதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியம். அதுவே, நீண்ட நாட்களுக்கு தலையில் எண்ணெயை அப்படியே விட்டு விட்டால் அது கூந்தலை பாதிக்கக்கூடும். தலையின் சருமமானது இயற்கையாகவே, தலையில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக ஒருவித எண்ணெய் பசையை உற்பத்தி செய்யக்கூடியது.
ஆனால், நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயை அப்படியே விடுவதால் தலையில் அதிகப் படியான எண்ணெய் பசை சேரக்கூடும். அதனால், முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்படக்கூடும்.தலைக்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எண்ணெய் தேய்க்கவும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு காலை எழுந்தவுடன் குளித்து விடவும்.
இதற்கு மேல் எண்ணெய் பசை தலையில் இருக்குமேயானால், அவை கூந்தலுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தக் கூடும். இது போன்ற அதிகப் படியான எண்ணெய் பசை தலையில் சேருவதால் தான் முகத்தில் பரு போன்ற பிரச்சனை உருவாகிறது. எண்ணெய் தேய்ப்பதற்கான நேரத்தை நிர்ணயித்து கொண்டால், தேய்க்கும் அளவையும் நிர்ணயிப்பது தான் சிறந்தது.
போதுமான அளவு எண்ணெய் தேய்த்தால் மட்டுமே கூந்தல் ஈரப்பதத்தை ஈர்த்துக் கொள்ளும். ஒருவேளை எண்ணெய் அதிகமாகி விட்டால் உடனே துடைத்து விடுங்கள். பெரும்பாலான பெண்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்த உடனேயே மசாஜ் செய்ய ஆரம்பித்து விடுவர். அப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும்.
முதலில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு கூந்தலை சிக்கலின்றி சீவிக் கொள்ளவும். பின்னர், எண்ணெய் தொட்டு மெதுவாக கைகளால் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் முடி கொட்டுவது குறையும் அல்லது முடி கொட்டாது. தலையை சீவி பிறகு எண்ணெய் தேய்ப்பதால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகி, வேர்கள் வலுபெற்று, கூந்தலையும் ஆரோக்கியமாக வளரச் செய்யும்.
பெரும்பாலானோர், எண்ணெயை கையில் ஊற்றி உள்ளங்கைகளில் தேய்த்து அப்படியே தலையில் தேய்ப்பதை வழங்கமாக கொண்டிருப்பர். இப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். எப்போதும், எண்ணெயை ஒரு பவுளில் ஊற்றி அதை விரல்களால் தொட்டு, மெதுவாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முடி கொட்டாமல் இருப்பதோடு, அனைத்து ஊட்டச் சத்துக்களும், கூந்தலுக்கு முழுவதுமாக கிடைக்கப்பெறும்.
மேலும். எண்ணெயால் கிடைக்கக்கூடிய ஈரப்பதமும் முழுமையாக கிடைத்திடும். அது மட்டுமல்லாது, இப்படி எண்ணெய் தேய்த்தால் பொடுகு தொல்லை எனும் பேச்சுக்கே இடமிருக்காது. இந்த பழக்கம் அனைத்து பெண்களுக்கு இருக்கும். எண்ணெய் தேய்த்து கூந்தலுக்கு மசாஜ் செய்தவுடன் முடியை தூக்கி கட்டிக் கொண்டு பிற வேலைகளை பார்க்க சென்று விடுவர்.
இது மிகவும் தவறான செயல். எண்ணெய் தேய்த்தவுடன் ஸ்கால்ப்பானது மிகவும் மிருதுவாக இருக்கும். அதுபோன்ற சமயத்தில் கூந்தலை இறுக்கமாக தூக்கி கட்டும் போது, கூந்தல் அதிகமாக உதிர தான் செய்யும். தேய்க்கும் எண்ணெய்வேர்களால் உறிஞ்சப்பட்டு, கூந்தலை மிருதுவாக்க வேண்டுமென்றால், எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டாமல் ஃப்ரீயாக விட்டு விடுங்கள்.
குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) இருக்கிறது. இது குழந்தையை பல விதங்களில் பாதுகாக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது.
இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) உள்ளது. இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.
அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
இதன் அறிகுறிகள் திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம் (நீர் வெளியேறுதல் -Water outflow) இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
மருத்துவ முறை 34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்
ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கொடி கீழிறங்குவது (The umbilical cord is lowered) உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும்.
இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப் பட முடியாது. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி? என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கி விடும். மாத்திரை, சிரப், கேப்ஸ்யூல், டானிக் என்று வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு சுவைகளில் மருந்துகள் வருகின்றன.
பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக அழுது, ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளைப் பார்க்கப் பாவமாக இருக்கும்
அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி?
1. முதலில் கொடுக்க வேண்டிய மாத்திரையை நன்கு பொடித்துக் கொள்ளுங்கள்.
2. குடிநீரை நன்றாகக் கொதிக்க விட்டு, பின்னர் அதை நன்றாக ஆற விடுங்கள்.
3. அதில் மிகச் சிறிதளவு தேனைக் கலக்குங்கள்.
4. பின்னர், குடிநீரும் தேனும் கலந்த கலவையில் பொடித்து வைத்த மாத்திரைத் தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி குழந்தைக் குக் கொடுக் கலாம்.
குறிப்பு :
டெட்ரா சைக்கிளின் போன்ற மிகவும் கசப்பு நிறைந்த மருந்துகளுக்கு, தேன் சிறிது அதிகம் சேர்த்துத் தரலாம்.
இது போன்று, மாத்திரையைப் பொடியாக்கி, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, மருந்தின் அளவு அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் (Care should be taken not to overdose.).
மருந்து கொடுக்கும் முறை:
1. குழந்தைகளின் தலையைத் தாழ்த்தி (Lowering the children's heads), நேராகப் படுக்க வைத்த நிலையில் மருந்துகளைக் கொடுக்கக் கூடாது (Do not give medications while lying upright.).
2. முதலில் குழந்தையை அமர வைத்து, குழந்தையின் தலைக்கடியில் நம் கையை வைத்துத் தூக்கி, மருந்தைக் கவனமாகக் கொடுக்க வேண்டும்.
3. மயங்கிய நிலையில் இருக்கும் குழந்தைக்கோ, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கோ மருந்து கொடுக்கக் கூடாது.
4. வலிப்பு (Fits) உள்ள குழந்தைக்கு (For a child with epilepsy,), வலிப்பு ஏற்படும் சமயங்களில் அதற்குண்டான மருந்தைக் கொடுக்கக் கூடாது (Do not give the drug in case of seizures.).
5. காசநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு, மருந்து கொடுக்கும் போது, தேன் கலந்து தரக் கூடாது. காசநோய் மருந்துகளில் உள்ள உட்பொருளான ஐசோனியா சிட்டின் வீரியத்தை, தேன் குறைத்து விடும்.
பெரியவர்களுக்கான அளவு மட்டுமே குறிப்பிட்டு உள்ள மருந்தை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.
மருந்து, மாத்திரைகளை நீங்களாகச் சென்று கடையில் வாங்கித் தராதீர்கள். உரிய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, அதன் படி சாப்பிடுவது மிகவும் நல்லது (It is best to consult a doctor and eat accordingly.).
வெள்ளரிக்காய், மோர் உடலின் சூட்டைக் குறைக்கும். இன்று இவை இரண்டையும் சேர்த்து சூப்பரான மோர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்ணெய் நீக்கிய தயிர் - 100 மில்லி
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வெள்ளரிக்காய் - அரை
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 200 மில்லி
செய்முறை:
கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
வெண்ணெய் நீக்கிய தயிரில் தண்னீர் விட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
இதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, துருவிய வெள்ளரி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
சுவையான வெள்ளரி மோர் ரெடி. புளிக்கும் முன்பே சுவைக்கவும்.
குறிப்பு:
தண்ணீர் சேர்த்த தயிரை மிக்ஸியில் (அ) பிளன்டரில் நன்றாக அடித்துக் கொள்ளவும். மோர் உடலின் சூட்டைக் குறைக்கும். மோர் தயாரிக்கும் போது தயிர் ஆடையை அகற்றி விடவும். தயிர் ஆடையிலிருந்து வெண்ணெய் எடுக்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பல பன்னாட்டு நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ பேரறிஞர்களும் செய்வதறியாதிருந்த நேரத்தில், டெங்கு, swine-flu (பன்றி காய்ச்சல்), கொரோனா போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை காத்து நின்றது - “சித்த மருத்துவமே”
உலகையே உலுக்கி கொண்டிருக்கும் சொல் கொரோனா. அணு ஆயுதம் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்கும் பல வல்லரசு நாடுகளும் கலங்கி நிற்கிறது. அறிவியலில் பல நூற்றாண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருந்தாலும் ஒரு தொற்று கிறுமியிடம் தோற்று கொண்டிருக்கிறோம்.
பாரம்பரிய வாழ்வியலை நோக்கி திரும்பியது நம் வாழ்வு முறை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பணத்தை தேடி ஓடிய காலம்போய் பெற்றவர்தம் குழந்தைகளுடன் நேரத்தை கழிக்க செய்துள்ளது.
கசப்பான மருந்துகளே மிகுந்த நன்மைகள் தரும் என்ற போதிலும் சித்த மருந்துகளை எடுக்க மருத்துவர்கள் இன்று தினமும் கஷாயங்களை தேடி அருந்தும் நிலை. ஆம்! தமிழர் மட்டுமல்லாமல் உலகமே தமிழ் மருத்துவம் நோக்கி திரும்பியுள்ளது.
பல பன்னாட்டு நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ பேரறிஞர்களும் செய்வதறியாதிருந்த நேரத்தில், டெங்கு, swine-flu (பன்றி காய்ச்சல்), கொரோனா போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை காத்து நின்றது - “சித்த மருத்துவமே”
கொரோனா செய்த மிகப்பெரிய நன்மை, இன்று அனைத்து தரப்பு மக்களினாலும் முனு முனுக்கப்படும் “Integrated Treatment (ஒருங்கிணைந்த ஆங்கில மற்றும் சித்த மருத்துவ முறை).
இது சரியா? தவறா? சரி என்றால் கொரோனாவிற்கு முன் இதை நாம் ஏன் செய்யவில்லை. தவறு என்றால் இப்போது ஏன் கடைபிடிக்கிறோம் என்ற குழப்பமும், அச்சமும் பாமரர் முதல் படித்தவர் வரை அனைவர் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது.
Dengue, swine-flu, கொரோனா போன்ற பேரி டர்களிலிருந்து மக்களை முடிந்தவரை பாதுகாத்தது அலோபதி மற்றும் சித்த மருத்துவர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையே. அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுகள்! ஆனால் இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை முறை பிற உயிர்க்கொல்லி மற்றும் நாட்பட்ட நோய் நிலைகளில் ஏன் இல்லை? என்பதே என் போன்றவரின் வேதனை.
நம் வாழ்வில் அன்றாடம் கடந்து வரும் நீரிழிவு, சிறுநீரக பாதிப்புகள், Liver Cirrhosis, Caricea, Thyroid, உடல் பருமன், குழந்தையின்மை போன்ற அனைத்து நோய் நிலைகளிலும் ஆங்கில மருத்துவத்தின் நவீன அறிவியலும் சித்த மருத்துவத்தின் தனி மனித நுண்அறிவியலும் இணைக்கப்பட்டு அதற்கான மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து வழங்கும்போது நோயாளிகளுக்கு ஏற்படும் மிக சிறந்த நிவாரணமும் நன்மைகளும் மறைக்கப்படும் உண்மையாகவே உள்ளது.
இதற்கு காரணம் Multi -national Pharma கம்பெனிகள், வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் என்று பிறர் மீது குறை கூறுவது தவறு. நமக்கு ஏற்படும் இன்னல்களுக்கு காரணம் நமது அறியாமை, அலட்சியம் மற்றும் அவசரமே.
ஆயுட்காலம் முழுவதும் Sugar, BP, இதய நோய், Thyroid என மருந்து பெட்டியை தூக்கி சுமக்கும் மக்களுக்கு 6 மாதம், 1 வருடம் என மூலிகை மருந்துகள் உட்கொண்டு நோயின் மூலகாரணிகளைப் போக்கி நோயை கட்டுக்குள் கொண்டு வர பொறுமை இல்லை. நோயின் வேரை பிடுங்காமல் கிளைகளை வெட்டினாலும் அது வேறு கிளைகளாகவே வளரும். அதுவோ நோயின் இரண்டாம் மூன்றாம் கட்ட நிலைகள். இதை மக்களும் புரிந்து கொள்வதில்லை. முறையாக அறிவுறுத்த மருத்துவர்களும் தயாராக இல்லை.
சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவ முறைகளை ஏற்று கொள்ள வேண்டும். ஆங்கில மருத்துவர்கள் சித்த மருந்துகளையும் வாழ்வியல் முறைகளையும் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். உயிருக்கு போராடும் நிலையிலும், அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையிலும் ஆங்கில மருத்துவமே சிறந்தது. அதேபோல் நாட்பட்ட ஆஸ்துமா, மஞ்சட்காமாலை, சிறுநீரக பாதிப்பு, பக்கவாதம் போன்றவற்றிற்கு சித்த மருத்துவமே சிறந்தது.
Hernia-விற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. மருந்து போதும் என்று கூறுவதும் தவறு. அதேபோல் creatinine அளவை குறைக்க பிற மருத்துவம் முயற்சித்தால் மீண்டும் என்னிடம் Dialysis-க்கு வரக்கூடாது என்று கூறுவதும் தவறு.
மருத்துவர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை முறைகளை அறிந்து மக்களுக்கு தெளிவான ஆலோசனைகளை வழங்கினால் மட்டுமே நமது மருத்துவ சேவை நிறைவடையும். எந்த மருத்துவ முறையானாலும் மக்களின் நோய்களையும், வேதனையயும் தீர்ப்பதே மருத்துவர்களின் கடமை.
ஆங்கில மருத்துவம் போலவே சித்த மருத்து வத்திலும் Siddha orthopedics, Siddha Gynecology, Siddha Pediatrics, Siddha Ophthalmology, Siddha oncology, Siddha Dermatology என அனைத்து துறைகளிலும் வல்லுனர்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களும் ஆங்கில மருத்துவர்களும் இணைந்து மக்களுக்கு சிறந்த முழுமையான நீண்ட வாழ்நாள் அளிக்கும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பதே என் போன்ற எண்ணற்றவர்களின் கனவு.
கனவு மெய்ப்பட வேண்டும்!! நம்பிக்கையுடன் எங்கள் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையை தொடங்கியுள்ளோம்.
ருத்ரா பாலி கிளினிக், ஒருங்கிணைந்த ஆங்கில மற்றும் இந்திய முறை மருத்துவம், வடக்கு அரியநாயகிபுரம், ruthrapolyclinic@gmail.com, Cel: 759866 5383.






