search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சித்த மருத்துவ சிகிச்சை
    X
    சித்த மருத்துவ சிகிச்சை

    கொரானாவிற்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவ சிகிச்சை

    பல பன்னாட்டு நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ பேரறிஞர்களும் செய்வதறியாதிருந்த நேரத்தில், டெங்கு, swine-flu (பன்றி காய்ச்சல்), கொரோனா போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை காத்து நின்றது - “சித்த மருத்துவமே”
    உலகையே உலுக்கி கொண்டிருக்கும் சொல் கொரோனா. அணு ஆயுதம் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்கும் பல வல்லரசு நாடுகளும் கலங்கி நிற்கிறது. அறிவியலில் பல நூற்றாண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருந்தாலும் ஒரு தொற்று கிறுமியிடம் தோற்று கொண்டிருக்கிறோம்.

    பாரம்பரிய வாழ்வியலை நோக்கி திரும்பியது நம் வாழ்வு முறை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பணத்தை தேடி ஓடிய காலம்போய் பெற்றவர்தம் குழந்தைகளுடன் நேரத்தை கழிக்க செய்துள்ளது.

    கசப்பான மருந்துகளே மிகுந்த நன்மைகள் தரும் என்ற போதிலும் சித்த மருந்துகளை எடுக்க மருத்துவர்கள் இன்று தினமும் கஷாயங்களை தேடி அருந்தும் நிலை. ஆம்! தமிழர் மட்டுமல்லாமல் உலகமே தமிழ் மருத்துவம் நோக்கி திரும்பியுள்ளது.

    பல பன்னாட்டு நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ பேரறிஞர்களும் செய்வதறியாதிருந்த நேரத்தில், டெங்கு, swine-flu (பன்றி காய்ச்சல்), கொரோனா போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை காத்து நின்றது - “சித்த மருத்துவமே”

    கொரோனா செய்த மிகப்பெரிய நன்மை, இன்று அனைத்து தரப்பு மக்களினாலும் முனு முனுக்கப்படும் “Integrated Treatment (ஒருங்கிணைந்த ஆங்கில மற்றும் சித்த மருத்துவ முறை).

    இது சரியா? தவறா? சரி என்றால் கொரோனாவிற்கு முன் இதை நாம் ஏன் செய்யவில்லை. தவறு என்றால் இப்போது ஏன் கடைபிடிக்கிறோம் என்ற குழப்பமும், அச்சமும் பாமரர் முதல் படித்தவர் வரை அனைவர் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது.

    Dengue, swine-flu, கொரோனா போன்ற பேரி டர்களிலிருந்து மக்களை முடிந்தவரை பாதுகாத்தது அலோபதி மற்றும் சித்த மருத்துவர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையே. அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுகள்! ஆனால் இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை முறை பிற உயிர்க்கொல்லி மற்றும் நாட்பட்ட நோய் நிலைகளில் ஏன் இல்லை? என்பதே என் போன்றவரின் வேதனை.

    நம் வாழ்வில் அன்றாடம் கடந்து வரும் நீரிழிவு, சிறுநீரக பாதிப்புகள், Liver Cirrhosis, Caricea, Thyroid, உடல் பருமன், குழந்தையின்மை போன்ற அனைத்து நோய் நிலைகளிலும் ஆங்கில மருத்துவத்தின் நவீன அறிவியலும் சித்த மருத்துவத்தின் தனி மனித நுண்அறிவியலும் இணைக்கப்பட்டு அதற்கான மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து வழங்கும்போது நோயாளிகளுக்கு ஏற்படும் மிக சிறந்த நிவாரணமும் நன்மைகளும் மறைக்கப்படும் உண்மையாகவே உள்ளது.

    இதற்கு காரணம் Multi -national Pharma கம்பெனிகள், வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் என்று பிறர் மீது குறை கூறுவது தவறு. நமக்கு ஏற்படும் இன்னல்களுக்கு காரணம் நமது அறியாமை, அலட்சியம் மற்றும் அவசரமே.

    ஆயுட்காலம் முழுவதும் Sugar, BP, இதய நோய், Thyroid என மருந்து பெட்டியை தூக்கி சுமக்கும் மக்களுக்கு 6 மாதம், 1 வருடம் என மூலிகை மருந்துகள் உட்கொண்டு நோயின் மூலகாரணிகளைப் போக்கி நோயை கட்டுக்குள் கொண்டு வர பொறுமை இல்லை. நோயின் வேரை பிடுங்காமல் கிளைகளை வெட்டினாலும் அது வேறு கிளைகளாகவே வளரும். அதுவோ நோயின் இரண்டாம் மூன்றாம் கட்ட நிலைகள். இதை மக்களும் புரிந்து கொள்வதில்லை. முறையாக அறிவுறுத்த மருத்துவர்களும் தயாராக இல்லை.

    சித்த மருத்துவர்கள் ஆங்கில மருத்துவ முறைகளை ஏற்று கொள்ள வேண்டும். ஆங்கில மருத்துவர்கள் சித்த மருந்துகளையும் வாழ்வியல் முறைகளையும் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். உயிருக்கு போராடும் நிலையிலும், அவசர அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையிலும் ஆங்கில மருத்துவமே சிறந்தது. அதேபோல் நாட்பட்ட ஆஸ்துமா, மஞ்சட்காமாலை, சிறுநீரக பாதிப்பு, பக்கவாதம் போன்றவற்றிற்கு சித்த மருத்துவமே சிறந்தது.

    Hernia-விற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. மருந்து போதும் என்று கூறுவதும் தவறு. அதேபோல் creatinine அளவை குறைக்க பிற மருத்துவம் முயற்சித்தால் மீண்டும் என்னிடம் Dialysis-க்கு வரக்கூடாது என்று கூறுவதும் தவறு.

    மருத்துவர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை முறைகளை அறிந்து மக்களுக்கு தெளிவான ஆலோசனைகளை வழங்கினால் மட்டுமே நமது மருத்துவ சேவை நிறைவடையும். எந்த மருத்துவ முறையானாலும் மக்களின் நோய்களையும், வேதனையயும் தீர்ப்பதே மருத்துவர்களின் கடமை.

    ஆங்கில மருத்துவம் போலவே சித்த மருத்து வத்திலும் Siddha orthopedics, Siddha Gynecology, Siddha Pediatrics, Siddha Ophthalmology, Siddha oncology, Siddha Dermatology என அனைத்து துறைகளிலும் வல்லுனர்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களும் ஆங்கில மருத்துவர்களும் இணைந்து மக்களுக்கு சிறந்த முழுமையான நீண்ட வாழ்நாள் அளிக்கும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பதே என் போன்ற எண்ணற்றவர்களின் கனவு.

    கனவு மெய்ப்பட வேண்டும்!! நம்பிக்கையுடன் எங்கள் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையை தொடங்கியுள்ளோம்.

    ருத்ரா பாலி கிளினிக், ஒருங்கிணைந்த ஆங்கில மற்றும் இந்திய முறை மருத்துவம், வடக்கு அரியநாயகிபுரம், ruthrapolyclinic@gmail.com, Cel: 759866 5383.
    Next Story
    ×