என் மலர்
ஆரோக்கியம்
புழக்கம் இல்லாத வீட்டிற்குள் சிலந்தி வலை பின்னிவிடுவது போன்று, புத்துணர்ச்சி இல்லாத மனதுக்குள்ளும் சிலந்தி வலைபோன்ற பயனற்ற சிந்தனைகள் உருவாகிவிடும்.
புழக்கம் இல்லாத வீட்டிற்குள் சிலந்தி வலை பின்னிவிடுவது போன்று, புத்துணர்ச்சி இல்லாத மனதுக்குள்ளும் சிலந்தி வலைபோன்ற பயனற்ற சிந்தனைகள் உருவாகிவிடும். அதனால் முடிந்த அளவு எப்போதும் மனதை புத்துணர்ச்சியாகவே வைத்துக்கொள்ளுங்கள்.
தினமும் படுக்கையில் இருந்து எழுந்ததும் மனது அலைபாயும். ஆயிரம் எண்ணங்கள் ஓடோடி வரும். தறிகெட்டு ஓடும் அந்த சிந்தனைகளை காலையிலே தடுத்து நிறுத்தி, ‘எல்லாம் இன்று நல்லபடியாக நடக்கும்’ என்ற நம்பிக்கையை மனதுக்கு கொடுங்கள். ‘பிரச்சினைகள் ஏதாவது வந்தாலும் சமாளிப்பேன்’ என்ற தைரியத்தையும் மனதில் பெருக்குங்கள்.
உங்கள் மனதில் ஏற்படும் இறுக்கத்தை போக்கி மனதை இயல்புக்கு கொண்டுவர ‘ப்ராகிரசிவ்மஸில் ரிலாக்ஷேசன்’ டெக்னிக் உதவும். இதை வீட்டில் மட்டுமல்ல, அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதும் செய்யலாம்.
செருப்பை காலில் இருந்து கழற்றிவிடுங்கள். தேவைப்பட்டால் பெல்ட்டையும் விடுவித்து, சட்டையை தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் வலது கால் பாதத்தில் கவனத்தை செலுத்துங்கள். பின்பு காலை நீட்டி வைத்து, முடிந்த அளவு கால் விரல்களை உள்நோக்கி மடக்குங்கள். அப்போது அந்த காலின் தசைகள் நெகிழ்வதை உங்களால் உணர முடியும். பத்து எண்ணும் வரை விரல்களை அப்படியே வைத்திருங்கள். பின்பு அதுபோல் இடது காலில் செய்யுங்கள். வயிறு, கழுத்து, தோள், முகம் போன்றவற்றுக்கும் இந்த ‘டெக்னிக்’கை பயன்படுத்தலாம். இது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும்.
தினமும் சிறிதுநேரம் தியானப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். முதுகை நிமிர்த்தி சவுகரியமான நிலையில் உட்காருங்கள். ஒரு கையை வயிற்றிலும், இன்னொரு கையை நெஞ்சின் மேல்பகுதியிலும் வைத்துக்கொண்டு காற்றை உள்ளே மூக்குவழியாக இழுத்து, வாய் வழியாக வெளியே விடுங்கள். வாய் வழியாக வெளியேற்றும்போது உங்கள் கை வயிற்றுப்பகுதியில் தாழ்ந்து செல்லவேண்டும். காற்றை உள்ளே இழுத்து, வெளியே விடும்போது உங்கள் முழு கவனமும் உடலுக்குள் சுவாசப்பகுதிக்குள் ஒருநிலைப்படுத்தப்பட வேண்டும்.
இப்படி செய்தால் உடலின் ஐம்புலன்களும் சுறுசுறுப்படைந்து உடலிலும், மனதிலும் உற்சாகம் பொங்கும்.

பல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளை பொறுத்தவரை மிட்டாய்கள், சாக்லேட், குக்கீஸ்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவது பல் நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
குழந்தைகளை தாக்கும் பல் நோய்களுக்கான அறிகுறிகள் பற்றியும், அவற்றில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறை குறித்தும் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்பட உணவு பழக்கம் மட்டுமே காரணம் அல்ல. பல்வலி, பல்லின் நிறத்தில் மாற்றம், ஏதாவது சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது வலி ஏற்படுவது, துர்நாற்றம், எதை சாப்பிட்டாலும் கசப்பாக இருப்பது, எதிர்பாராதவிதமாக எடை இழப்பு போன்றவை பற்களில் நோய்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் பல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.
குழந்தைகள் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் சாப்பிட்டு முடிக்க மாட்டார்கள். இனிப்பு பலகாரங்களைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதனை குறைத்து ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையும் பின்பற்றச் செய்ய வேண்டும். தினமும் இருமுறை பல்துலக்குவதற்கும் பழக்கப்படுத்த வேண்டும். இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவுதான் சாப்பிட வேண்டும் என்று வரையறுத்து அதன்படி செயல்பட வைக்க வேண்டும். காலை, மதியம், இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வைத்துவிட வேண்டும். பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் பற்களின் ஆரோக்கியத்தை காக்கலாம்.

அழகாக தோன்ற விரும்பும் பெண்களும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.
பெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக இருப்பது, சுத்தம். அதிலும் குறிப்பிடத்தக்கதாக இருப்பது அந்தரங்க சுத்தம். அதனால் அழகாக தோன்ற விரும்பும் பெண்களும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.
அந்தரங்க சுத்தம் பற்றி குறிப்பிடும்போது பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. வெள்ளைப்படுதல் என்பது இயற்கையானது. ஆரோக்கியமான கருப்பை யும், சினைப்பையும், இனப்பெருக்கத்திறனும் கொண்ட எல்லா பெண்களுக்குமே இயற்கை யாகவே உறுப்பு பகுதியில் வெள்ளைப்படுதல் தோன்றும். அதுபோல் பெண்களின் இனப் பெருக்க உறுப்புகளில் நோய் எதிர்ப்புத்திறனை தருவதற்காக இயற்கை அணுக்களும் காணப்படும். வெள்ளைப்படுதலை தவறாக புரிந்துகொண்டு தேவையற்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டுவிட்டால், அந்த நல்ல அணுக்கள் அழிந்துவிடும். அப்போது அந்த திரவம் நிறமாற்றத்துடன் வெளிப்பட்டு வாடையும் வீசும். அதுதான் நோய் பாதிப்பின் அறிகுறியாகும்.
பாதிப்பு எதுவும் இல்லாத இயற்கையான திரவம் நிறமற்றதாக இருக்கும். முகர்ந்து பார்த்தால் அதில் இருந்து வாடை எதுவும் வீசாது. இந்த இயற்கையான வெள்ளைப் படுதல் ஏற்படும்போது சுத்தமான நீரால் கழுவினாலே போதுமானது. உறுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கி சுத்தப்படுத்துவதும் அந்தரங்க சுத்தத்திற்கு அவசியம். கணவரோடு தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளும் பெண்கள் பாலியல் உறவுக்கு முன்பும், பின்பும் தண்ணீர் பயன்படுத்தி கழுவவேண்டும். கணவன், மனைவி இருவருமே இதை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும். அந்தரங்க சுத்தம் இல்லாத தம்பதிகளுக்கு தாம்பத்ய ஆர்வம் குறைந்துபோகும். அதனால் அவர்கள் தாய்மையடைவதும் தள்ளிப்போகும்.
அந்தரங்க சுத்தத்திற்கு உள்ளாடை பராமரிப்பும் இன்றியமையாதது. செயற்கை நூற்களால் உருவான உள்ளாடைகள் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதல்ல. கோடைகாலத்தில் தொடை இடுக்குப்பகுதிகளில் அதிகமாக வியர்க்கும். அந்த வியர்வை தேங்காத அளவுக்கு உறிஞ்சி எடுக்கும் உள்ளாடைகளையே அணிய வேண்டும். அதனை துவைத்து சூரிய ஒளிபடும் இடத்தில்தான் உலரவைக்க வேண்டும்.

துணியால் தயார் செய்யப்பட்ட முகக்கவசங்கள், பிளாஸ்டிக் முகக்கவசங்கள் இவற்றில் எதனை அணிவது பாதுகாப்பானது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அனைத்து நாட்டு அரசுகளும் அறிவுறுத்தி இருக்கின்றன. நிறைய பேர் தாங்களாகவே முகக்கவசங்களை தயார் செய்து அணிந்து கொள்கிறார்கள். கடைகளில் விற்கப்படும் முகக்கவசங்களையும் பயன்படுத்துகிறார்கள். அந்த முகக்கவசங்கள் மருத்துவ அம்சங்களை கொண்டதாகவும் இருக்கின்றன.
துணியால் தயார் செய்யப்பட்ட முகக்கவசங்கள், பிளாஸ்டிக் முகக்கவசங்கள் இவற்றில் எதனை அணிவது பாதுகாப்பானது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் முகக்கவசம் வைரஸ் தொடர்பை 96 சதவீதம் தடுக்கும் தன்மை கொண்டது. இதை கிருமிநாசினி அல்லது சோப்பு தண்ணீர் கொண்டு எளிதாக சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.
இதுகுறித்து டாக்டர் அமேஷ் அடல்ஜா கூறுகையில், “ஒரு நபர் துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றால் அவர் தொற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகலாம். ஆனால் முகம் முழுவதையும் மறைக்கும் பிளாஸ்டிக் சீல்டு கொண்ட முகக்கவசங்கள், நோயாளிகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் மருத்துவ நிபுணர்களுக்குத்தான் பயனுள்ளதாக இருக்கும்.
அவர்களின் பாதுகாப்புக்கு கேடயமாகவும், மற்றவர்களின் சுவாசத்தில் இருந்து வெளிப்படும் துகள்களை தடுக்கும் வகையிலும் அவை செயல்படும். இருமல், தும்மல் பாதிப்பு கொண்ட நோயாளிகளிடம் இருந்து பாதுகாக்கும். முகக்கவசங்கள் அணியும் விஷயத்தில் நிறைய பேர் பல்வேறு வழிமுறைகளை சிந்திக்க முயற்சிக்கிறார்கள். உடலை முழுவதும் மூடும் கவசங்கள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அதேநேரத்தில் இந்த இரண்டு முகக்கவசங்களும் காற்றை வடிகட்டுவதில்லை.
தொற்று கொண்ட காற்று துளிகளை உடலுக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றன. எனவே ஏதாவதொரு முகக்கவசம் அணிந்தாக வேண்டும். எனினும் துணி முகக்கவசங்களை விட பிளாஸ்டிக் முகக்கவசங்கள் காற்றில் கலந்திருக்கும் நீர்த்துளிகளை திறம்பட தடுத்துநிறுத்திவிடும். பிளாஸ்டிக் முகக்கவசங்களை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் கிருமி நாசினியை கொண்டு உடனடியாக சுத்தப்படுத்திவிட முடியும். அதே வேளையில் துணி முக்கவசங்களை துவைத்துவிட்டு உலர வைப்பதற்கு நீண்ட நேரமாகும். என்றாலும் பொதுமக்களுக்கு அதுவே போதுமானது. மருத்துவ ரீதியான பயன்பாட்டுக்கு பிளாஸ்டிக் முகக்கவசங்களை உபயோகிக்கலாம்” என்கிறார்.

உலகம் முழுக்க பெண்கள் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே கார் ஓட்டும் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படவும் செய்கிறார்கள்.
பெண்கள் தங்கள் சக்திக்கு மீறிய சில செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆண்கள் துணை இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்றும் சில ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பெண்கள் கார் ஓட்டுவதைகூட வினோதமாக பார்ப்பார்கள். கார் ஓட்டிச்செல்லும் பெண்கள் சிக்னலில் நின்றால் அவர்களை பார்த்து கிண்டலடிப்பது, அவர்களை தன் பக்கம் திசை திருப்பும் விதமாக தேவையின்றி ‘ஹார்ன்’ ஓசையை எழுப்புவது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவார்கள்.
இன்னொரு வகை ஆத்திரக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள், ‘இவங்களெல்லாம் கார் ஓட்ட வந்திட்டாங்க! நாடு உருப்பட்ட மாதிரிதான்’ என்று வயிற்றெரிச்சலை வெளிப்படுத்துவார்கள். அதை கேட்டு பெண்கள் ஆத்திரப்படக்கூடாது. சிரித்துக்கொண்டே கவனமாக கடந்துபோய்விடவேண்டும் அவ்வளவுதான். ஏன்என்றால் இப்படி பேசும் ஆண்கள் பெரும் பாலும் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெண்களால் இயக்கிச்செல்லப்படும் கார்களை ‘ஓவர் டேக்’ செய்வது, சிக்னலே போடாமல் வண்டியைத் திருப்புவது, திடீரென்று அதிர்ச்சியான சத்தத்தை எழுப்பி அவர்களை பயமுறுத்துவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுகிறார்கள். அவை அனைத்தும் சட்டவிரோதமானவை. இது பெண்களை தடுமாறச் செய்து அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
கார் ஓட்டும்போது மெல்லிய இசையைக் கேட்பது நல்லதுதான். அது கார் ஓட்டுவதை சுகமான அனுபவமாக்கும். ஆனால் அளவுக்கதிகமான சத்தத்தில் இசையை ஒலிக்கவைத்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வது போக்குவரத்தை பாதிக்கச் செய்யும் செயல்.
உலகம் முழுக்க பெண்கள் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே கார் ஓட்டும் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படவும் செய்கிறார்கள். உலகம் முழுக்க இது பற்றிய புகார்கள் இருப்பதால், சர்வதேச அளவில் இது தொடர்பான ஆய்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
ஜேக் பரூத் என்பவர் வாகனத்துறை சார்ந்த பத்திரிகையாளர். அமெரிக்காவை சேர்ந்த இவர் வாகன ஆராய்ச்சியாளராகவும் செயல்படுபவர். ஜேக் பரூத், ‘கார் ஓட்டும் பெண்களுக்கு, ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற கோணத்தில் ஆய்வு செய்து, தான் திரட்டிய தகவல்களை அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்பினார்.
ஜேக் பரூத் நடுத்தர வயது ஆண். இவர் கள ஆய்வுக்காக தன்னை பெண்போன்று மாற்றிக்கொண்டார். பெண்ணாக தோன்றினால்தான் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை உணரமுடியும் என்று அவர் கருதினார். மீசையை மழித்தார். கூந்தல் அலங்காரம் செய்துகொண் டார். பின்னால் இருந்தோ, ஓரத்தில் இருந்தோ பார்த்தால் பெண் போலவே காணப்பட்டார்.
பெண் தோற்றத்திலேயே காரை ஓட்டிக்கொண்டு சாலைகளில் வலம் வந்தார். அப்போது அவரை பெண்ணாக நினைத்துக்கொண்டு பல ஆண்கள் சேட்டை செய்திருக்கிறார்கள். இறுதியில் அவர் ஆண் என்பது தெரிந்ததும் அதிர்ந்து போய் நழுவிச்சென்றிருக்கிறார்கள்.
பெண் தோற்றத்தில் இருந்ததால் ஜேக்கிற்கு கசப்பான அனுபவங்கள் நிறைய கிடைத்திருக்கின்றன. பலர் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் ஓவர்டேக் செய்திருக்கிறார்கள். மோதுவதுபோல் காரை அருகில் ஓட்டிச்சென்று பயப்படவைத்திருக்கிறார்கள். தகாதவார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். அவரை வெறுப்பேற்றும் விதமாக சாலை விதிகளை மீறி நடந்துகொண்டிருக்கிறார்கள்.
அப்படி நடந்துகொண்ட பலரது கார் எண்களை சேகரித்து ஆதாரத்தோடு காவல் துறையில் புகார் செய்தார், ஜேக். விசாரிக்கப்பட்டு அவர்களுக்கெல்லாம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
தன்னுடைய நீண்ட கூந்தலை பறக்கவிட்டபடி நியூயார்க் நகரில் கார் ஓட்டிய அவரை பலரும் பெண் என்று நினைத்து வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்டது சுவாரசியமான சம்பவம். காரை பார்க்கிங் செய்ய உதவி செய்வதும், கார் கதவை திறந்து விடுவதும், சிக்னலில் கமெண்ட் அடிப்பதுமாக இருந்த ஆண்கள் அவர் ஆண் என்று தெரிந்ததும் அசடு வழிந்திருக்கிறார்கள். அது ஜேக்கிற்கு வேடிக்கையான அனுபவமாக இருந்திருக்கிறது. இதை எல்லாம் ருசிகரமாக விவரிக்கும் ஜேக் முத்தாய்ப்பாக சொல்லும் விஷயம் பெண்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ‘உண்மையை சொன் னால், ஆண்களைவிட பெண்களே சிறப்பாக கார் ஓட்டுகிறார்கள். அந்த பொறாமையால்தான் ஆண்கள், கார் ஓட்டும் பெண்களை கேலிசெய்கிறார்கள். அதனால் ஆண்களின் எதிர்ப்பை ஓரங்கட்டிவிட்டு பெண்கள் வழக்கம் போல் கவனமாக கார் ஓட்டிச்செல்லவேண்டியதுதான்’ என்கிறார், அவர். பெண்கள் பெருமைப்படக்கூடிய விஷயம்தான்!

சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த எலுமிச்சை இஞ்சி ரசம். இந்த ரசம் உடல் வலியை போக்கும். மேலும் சளி, தொண்டை வலியை குணமாக்கும்.
தேவையான பொருட்கள்
பிஞ்சு இஞ்சி - 25 கிராம்
பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 டம்ளர்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எலுமிச்சைச் சாறு - அரைப் பழச் சாறு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
பொடித்த மிளகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
தக்காளி - 1
செய்முறை
தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு நெய் விட்டுச் சூடானதும் அதில் கடுகு, சீரகம், பொடித்த மிளகு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.
பிறகு தக்காளி, இஞ்சித் துருவல், உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டி பருப்புத் தண்ணீரைச் சேருங்கள்.
நுரைகட்டி வரும்போது கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து இறக்குங்கள். கொதிக்கவிடக் கூடாது.

சத்தான எலுமிச்சை இஞ்சி ரசம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
அம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறைந்திருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.
குழந்தைகள் தாயின் அருகாமையை எப்போதும் விரும்புகின்றன. தாய் தன் அருகில் இருந்தால் அவை நம்பிக்கையும், உற்சாகமும் கொள்கின்றன. தாய் தங்கள் அருகில் இல்லாவிட்டால் பயந்து அழத்தொடங்கிவிடுகின்றன. தாயின் அருகாமையை குழந்தைகள் வாசனையாலும், தொடுதலாலும் உணர்கின்றன.
எல்லா குழந்தைகளும், எப்போதும் அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்னஅசைவில் இருந்து கூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.
பாதுகாப்பு உணர்வோடு அம்மாவுடனே குழந்தைகள் தூங்க விரும்பும். அதே குழந்தைகள் பத்து வயதைக் கடக்கும்போது பிரச்சினைகள் உருவாகிறது. 15 வயதுக்கு மேலும் அப்படி அம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறைந்திருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.
அதே நேரத்தில் சிறுகுழந்தைகளை பெற்றோர் தங்கள் இரு வருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர் களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா-பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரப் பெண்களின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம் மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்...இதோ வரேண்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ‘குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் ஏற்பட்டுவிடும்.
குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடு கிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.
அதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.
இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.
நான்கு- ஐந்து வயது பருவத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். அந்தக் குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’ கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.
ஏழெட்டு வயதில் குழந்தைகள் சிறுவர்- சிறுமியர் என்ற பருவத்தை அடைகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனி யறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.

நெல்லிக்காய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்து, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டும். இப்போது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
நெல்லிக்காய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்து, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டும். அதற்கு நெல்லிக்காயைக் கொண்டு ஒருசில ஹேர் பேக்குகளைப் போட வேண்டும். சரி, இப்போது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சாறு எடுத்து, அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 1 முறை முடிக்கு ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
நெல்லிக்காயை துண்டுகளாக்கி, அதனை சூரிய வெளிச்சத்தில் உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து வாரம் ஒரு முறை ஹேர் பேக் போட்டால், முடி நன்கு வளரும்.
நெல்லிக்காயை சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலர வைத்து, பின் 1/2 கப் தேங்காய் எண்ணெயில் போட்டு, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்து குறைவான தீயில், எண்ணெய் ப்ரௌன் நிறத்தில் மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பின் அதனை குளிர வைத்து, காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றினால், நெல்லிக்காய் எண்ணெய் ரெடி!!!
வாரம் ஒருமுறை நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். அதிலும் இதனை இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் அலச வேண்டும்.
தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்க நினைப்போர் இந்த ஹேர்பேக்கினை நிச்சயம் ட்ரை செய்யவும்.
தேவையானவை:
நெல்லிக்காய்– 3
வெந்தயம்- 1 ஸ்பூன்
தயிர்- கால் கல்
செய்முறை:
நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து இதனை வெயிலில் போட்டு நன்கு காயவைக்கவும். மேலும் வெந்தயத்தினை தயிரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

‘தம்பதிகள் இருவரில் யாருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகம்?’- என்ற ருசிகரமான ஆராய்ச்சி உலகளாவ நடந்துகொண்டிருக்கிறது. திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
‘தம்பதிகள் இருவரில் யாருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகம்?’- என்ற ருசிகரமான ஆராய்ச்சி உலகளாவ நடந்துகொண்டிருக்கிறது. ஆய்வு முடிவுகளை பாலியல் நிபுணர்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.
அதில் அதிரடி திருப்பமாக வெளிவந்திருக்கும் தகவல் என்னவென்றால், 35 வயதுப் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரித்திருக்கிறதாம். அதே வயதுடைய ஆண்களில் 55 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.
35 வயது பெண்மணி ஒருவரிடம் இந்த ஆய்வு பற்றி ஆய்வுக்குழு கருத்துக்கேட்டபோது “நான் தாம்பத்திய தொடர்பை அதிகம் விரும்புபவள்தான். ஆனால் அலுப்புதரும் அலுவலக வேலையால் தினமும் சோர்ந்து போகிறேன். மாதம் நான்கு முறைதான் கணவருடன் உறவு வைத்துக்கொள்ள முடிகிறது. கணவரும் என்னைப் போலவே நீண்ட நேரம் பணி செய்கிறார். அதனால் 40 வயதுக்குப் பிறகு அவருக்கு ஆர்வம் குறையத் தொடங்கியிருக்கிறது. அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் எங்கள் தாம்பத்திய வாழ்க்கையை முழுங்கி வருகிறது” என்கிறார்.
கருத்துக்கணிப்பில் இடம்பெற்ற 30 வயது இளம் பெண் ஒருவரின் கருத்து மிகவும் கவனிக்கத் தகுந்ததாக இருக்கிறது. “நாங்கள் இருவரும் கடைசியாக எப்போது உறவு வைத்துக்கொண்டோம் என்பதே நினைவில் இல்லை. அந்த அளவிற்கு நாங்கள் உறவு கொண்டு பல மாதங்கள் ஆகிவிட்டன” என்று வேதனையோடு கூறியிருக்கிறார்.
இந்த வேதனைக்கு காரணம், இளம் ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசைதான். 25-30 வயது என்பது, வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருக்கிறது. எனவே பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியினர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள். ஒரு குழந்தை போதுமென்றும், தாம்பத்திய உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்தக் கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல் ஆர்வம் குறைந்து விடுகிறது.
இப்படி எல்லாம் இருந்தாலும் 35 வயதை நெருங்கும்போது பெண்கள் அதிக தாம்பத்திய ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். இருந்தாலும்கூட அப்போது அவர்களின் குழந்தைகளும் வளரிளம் பருவத்தை அடைகிறார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள் என்றும் சர்வே சொல்கிறது.
இந்தக் கருத்தை 40 வயது குடும்பத்தலைவி ஒருவர் ஒத்துக்கொள்கிறார். “நான் 25-வது வயதிலேயே 2 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அப்போதிருந்தே வேலைக்கும்-குழந்தைகளுக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த அலைச்சல் குறைந்திருப்பதால் என் தாம்பத்திய ஆசைகள் திரும்புவதாக உணர்கிறேன். ஆனால் என் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை” என்று கூறியிருக்கிறார்.
திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
30 வயதுகளில் பெண்களுக்கு தாம்பத்திய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். அவர்கள் மனஅமைதி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தால், இந்த வயதில் தாம்பத்திய ஆசை உச்சத்துக்குச் செல்லும். குழந்தைகள் இருந்தால் அவர்களை கவனிப்பது, பராமரிப்பது, குடும்ப நிர்வாகம் போன்ற அனுதின பிரச்சினைகள், அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை குறைக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
40 வயதுகளில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் பாலியல் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது.
ஐம்பது வயதுகளில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் பாலியல் ஆர்வத்தை குறைக்கிறது இந்தப் பருவம்.
இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்திய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தம்பதிகளிடம் இணக்கமும், மகிழ்ச்சியும் உருவாக தாம்பத்தியம் தேவைப்படுகிறது. தாம்பத்திய திருப்திக்கு மனைவி மட்டும் உடல் நலத்தை கவனித்தால் போதாது. கணவரும் உடல் மீது அக்கறை கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் இருவரும் இணக்கமாக இருந்தால்தான் திருப்தியான பாலுறவை மேற்கொண்டு மகிழ்ச்சியாக வாழமுடியும்.

கடுமையான காய்ச்சலை குணப்படுத்த உதவும் பப்பாளி கசாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப்பழம் சாப்பிடலாம் இரவில் பப்பாளிப்பழம் சாப்பிடக்கூடாது.
கடுமையான காய்ச்சலை குணப்படுத்த உதவும் பப்பாளி கசாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. முக்கியமாக அடிக்கடி இதயதுடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கசாயம் சிறந்த பயன் அளிக்கும்.
பப்பாளி இலை கசாயம், நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பை குறைத்து நிவாரணம் அளிக்கிறது . இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளி மிகச்சிறந்த உணவாகும். பப்பாளிபழம் ரத்தத்தில் கொலாஸ்டிராலின் அளவை குறைத்து ரத்தக் குழாய்களை நெகிழக்கூடியவையாக ஆக்குவதால் இதய நோயாளிகள் பப்பாளி பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப்பழம் சாப்பிடலாம் இரவில் பப்பாளிப்பழம் சாப்பிடக்கூடாது.
நிழலில்உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதலில் 10 கிராம் வரை எடுத்துக்கொள்ளவும். இதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊறவிடவும். பின்னர் வடிகட்டி அந்த கசாயத்தை நோயாளிகளுக்கு குடிக்க கொடுக்கவும். இந்த சிகிச்சையினால் நோயாளிகள் உடல் வெப்ப நிலை தணியும். நாடித்துடிப்பின் வேகமும் குறையும்.

சுய தொழில் தொடங்கி தனித்தன்மையுடன், தனி அந்தஸ்துடன் பெரிய ஆளாக வளர வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
சுய தொழில் தொடங்கி தனித்தன்மையுடன், தனி அந்தஸ்துடன் பெரிய ஆளாக வளர வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உண்டு.
தொழில் தொடங்குவதற்காக வங்கி மேலாளரை அணுகி நாம் செய்ய போகும் தொழிலை எடுத்து கூறி கடன் கேட்கிறோம். கடன் கொடுக்கும் வங்கி மேலாளர், முதலில் நம்மை சோதிப்பது நம்பிக்கை தான். தொழிலில் வெற்றி கிடைக்காவிட்டால் கடனை எப்படி கட்டுவீர்கள் என்று. ஆனால் நம் நிச்சயம் இந்த தொழிலில் சாதித்து காட்டுவேன் என்று உறுதி கூற வேண்டும். தாங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழிலின் செயல்பாடுகளை விளக்கி கூறுங்கள்.
அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் கடன் தொகையை மாதந்தோறும் தவணை மாறாமல் கட்டி விடுவேன் என்று உறுதி கூறுங்கள். உங்கள் உறுதி தான் கடன் தரும் வங்கி மேலாளருக்கு அசாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர் சொல்கிறபடி நான் மேற்கொள்ளும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் வேறு தொழில் செய்து கடன் தொகையை அடைத்து விடுவேன் என்று கூறுவது நம் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும். எனவே நீங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழில் மீது அசாத்தியமான நம்பிக்கையை முதலில் வையுங்கள். அது வங்கி மேலாளரை ஈர்த்து விடும்.
நீங்கள் செய்யப் போகிற தொழிலில் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான திட்டத்தை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.
இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூ. 10 ஆயிரம் போக, குறைந்தது ரூ.5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து தொழில் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5-க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் உற்சாகத்துடன் பேசலாம்.
அதாவது ரூ.10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, ரூ.10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி திட்டத்தில் கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.
தொழில் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்த தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் நம்மிடம் சொந்த பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் ரூ.4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் தொழில் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கி அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். எனவே உங்கள் தொழிலில் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.
ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூ.25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள்.ரூ. 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை (எஸ்.எம்.இ. கிளை) வைத்திருக்கிறார்கள்.
அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள். அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், தொழில் நடைபெறும் இடத்துக்கான முகவரிச்சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), தொழில் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் அல்லது வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் வாங்கி நீங்கள் கேட்கும் கடனை தந்து உங்கள் பொன்னான வாழ்வுக்கு உதவிக்கரமாக விளங்குவார்கள்.

இந்த ‘வெந்தயக் கீரை சூப்’ (மேத்தி கீரை) சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல… கண்கண்ட மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் ‘வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.
தேவையான பொருட்கள்
வெந்தயக் கீரை - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சோள மாவு - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
வெண்ணெய் - சிறிதளவு
காய்ச்சிய பால் - அரை டம்ளர்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கவும்.
பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.
காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

இப்போது மேத்தி கீரை சூப் ரெடி.