என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் தை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நேற்று காலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம் நடந்தது. இதில் தந்திரி நீலகண்டன் நாராயணன் பட்டத்ரி பங்கேற்று கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயசந்திரன், ஸ்ரீகாரியம் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாலையில் திருவிளக்கு ஏற்றுதல், ஆன்மிக சொற்பொழிவு, சிறப்பு பரத நாட்டியம் ஆகியவை நடந்தன. இரவில் புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளினார்.
விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், மாலை 5.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 6.35 மணிக்கு கதாகாலசேபம், இரவு 7 மணிக்கு மண்டகப்படி, 8.15 மணிக்கு சொல்லரங்கம் ஆகியவை நடக்கின்றன. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொம்மண்டை அம்மன் சாமி எழுந்தருளல், 6.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 8.05 மணிக்கு கானோல்ஸவம், 8.30 மணிக்கு சிங்க வாகனத்தில் சாமி எழுந்தருளல் போன்றவை நடைபெறும். 23-ந் தேதி இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 24-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆதிசேஷ வாகனத்திலும், 25-ந் தேதி இரவு 9 மணிக்கு யானை வாகனத்திலும், 26-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு பல்லக்கிலும், இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்திலும் சாமி எழுந்தருளல் நடக்கிறது. 27-ந் தேதி இரவு 8.10 மணிக்கு நகைச்சுவை இசைப்பட்டிமன்றம், இரவு 9.30 மணிக்கு அன்ன வாகனத்தில் சாமி எழுந்தருளல் ஆகியவை நடக்கின்றன.
9-ம் திருவிழாவான 28-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் நடைபெறும். பின்னர் இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 29-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இன்னிசை சொல்லரங்கம், இரவு 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு பூஜையும், மாலையில் மண்டகப்படி மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

இயேசுவின் இந்தக் கடும் விமர்சனத்தை பொறுக்கமுடியாமல் பரிசேயர்களும் நியாயப்பிரமாண போதகர்களும் எருசலேம் நகரத்துக்குத் திரும்பிச் சென்றனர்.
யூதேயாவில் நற்செய்தி ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஓர் ஓய்வுநாளில் இயேசு தன்னுடைய சீடர்களோடு வயல் வழியாக நடந்துபோனார். அப்போது, அவருடைய சீடர்களுக்குப் பசியெடுத்தது. அதனால் வயல்களில் முற்றிய கதிர்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தனர்.
அவர்கள் மீது குற்றம் காண, இயேசுவையும் சீடர்களையும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த பரிசேயர்கள் அதைப் பார்த்தனர். பதற்றம் அடைந்தவர்களைப்போல் இயேசுவின் அருகில் வந்து குரலை உயர்த்தி, “ஓய்வுநாளில் செய்யக்கூடாத காரியத்தை உமது சீடர்கள் செய்கிறார்களே!?, நீர் கண்டிக்க மாட்டீரா?” என்று அவரிடம் கேட்டார்கள்.
அதற்கு இயேசு, “முன்னோராகிய தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் பசியெடுத்தபோது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசிக்கவில்லையா? அவர் கடவுளுடைய வீட்டுக்குள் போய், குருமார்களைத் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளை தன் ஆட்களோடு சேர்ந்து சாப்பிட்டாரே. அதுமட்டுமல்ல, ஆலயத்தில் இருக்கிற குருமார்கள் ஓய்வு நாட்களில் வேலை செய்தாலும் குற்றமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைப் பற்றித் திருச்சட்டத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிட மேலானவர் இங்கே இருக்கிறார். ‘விலங்குகளின் ரத்த பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகிறேன்’ என்று பரலோகத் தந்தையாகிய அவர் கூறியிருப்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், குற்றமற்றவர்களை இப்படி கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால், மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கு எஜமானாக இருக்கிறார்” என்று கூறினார்.
இதைக் கேட்டு எதுவும் பேசமுடியாதவர்களாக பரிசேயர்கள் குமைந்தபடி அங்கிருந்து அகன்று, அவரையும் அவரது சீடர்களையும் கண்காணித்தபடி இருந்தனர்.
பின்பு, இயேசு அங்கிருந்து புறப்பட்டு ஜெபக்கூடம் ஒன்றுக்குச் சென்றார். அங்கே சூம்பிய கையுடைய ஒருவன் இருந்தான். அவன் குணம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தவிப்புடன் இயேசுவை நெருங்கினான்.
அவனது தவிப்பை இயேசு உணர்ந்தார். அப்போது மக்கள் கூட்டத்துடன் கலந்திருந்த பரிசேயர்களில் சிலர், இயேசுவின் மேல் குற்றம் சுமத்த இது நல்ல சந்தர்ப்பம் என்ற எண்ணத்தோடு, “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா?” என்று அவர் குணமாக்கும் முன்பே கேட்டார்கள்.
அதற்கு அவர், “உங்களில் யாருக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டால், அதை வெளியே தூக்கிவிடாமல் இருப்பீர்களா? அப்படியானால், ஆட்டைவிட மனிதன் எவ்வளவு மதிப்புள்ளவன். அதனால், ஓய்வுநாளில் நல்ல காரியத்தைச் செய்வது சரிதான்” என்று சொன்னார்.
பின்பு, சூம்பிய கையுடையவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்றார். அவன் நீட்டியவுடன், அந்தக் கை குணமாகி, அவனுடைய இன்னொரு கையைப் போல் ஆனது. பரிசேயர்கள் இந்த அற்புதத்தைக் கண்டு மனம் புழுங்கி வெளியேறினார்கள்.
இனியும் இவரை விட்டு வைக்கக்கூடாது என்று இயேசுவை கொலை செய்ய சதித்திட்டம் போட்டார்கள். இதைத் தெரிந்துகொண்டு அந்த இடத்தைவிட்டு இயேசு தன் சீடர்களுடன் கிளம்பிப் போனார். நோய்வாய்ப்பட்டிருந்த நிறைய பேர் அவர் பின்னால் போனார்கள். அவர்கள் எல்லோரையும் இயேசு குணமாக்கினார்.
இன்னொருமுறை பரிசேயர்கள் சிலரும் நியாயப் பிரமாணப் போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்திருந்த அவர்கள், இயேசுவிடம், “நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீடர்கள் ஏன் பின்பற்றுவதில்லை; உணவு உண்பதற்கு முன் உமது சீடர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.
இயேசு அவர்களிடம் “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படி எதிர்பார்க்கும் நீங்கள், ஏன் தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். உங்களைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
‘இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை. அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!’.

பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் :
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா, நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இதுகுறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-
பழனிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர பழனி நகர் முழுவதும் 30 கண்காணிப்பு கோபுரங்கள், 30 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்படுகிறது.
மேலும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் தெரிந்த போலீசார் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மலைக்கோவில், பாதவிநாயகர் கோவில், அடிவாரம் போலீஸ் நிலையம், பஸ்நிலையங்கள், இடும்பன்குளம், சண்முகாநதி ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிறப்பு மையங்களில் இருப்பார்கள்.
இதேபோல் பக்தர்களின் வசதிக்காக பஸ்நிலையம், தற்காலிக பஸ்நிலையம், ரெயில் நிலையம், இடும்பன்குளம், சண்முகாநதி, மலைக்கோவிலுக்கு செல்லும் இடங்களில் வழிகாட்டி பதாகைகள் வைக்கப்படுகிறது. பாதயாத்திரை வழித்தடங்களில் 40 மோட்டார் வாகனங்கள், 11 ஜீப்புகளில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து செல்கின்றனர்.
பாதயாத்திரை பக்தர்களின் நலன் கருதி 26-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி, தாளையம் வழியாகவும், பொள்ளாச்சி வழியாக வரும் கனரக வாகனங்கள் தாளையம், தொப்பம்பட்டி, கள்ளிமந்தையம் வழியாகவும் திருப்பி விடப்படும்.
பக்தர்கள் நெரிசலின்றி மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தேவர் சிலை, திருஆவினன்குடி, சன்னதிரோடு, பாதவிநாயகர் கோவில், குடமுழுக்குமண்டபம் வழியாக யானைப்பாதையில் செல்ல வேண்டும். பின்னர் தரிசனம் செய்தவர்கள் படிப்பாதை, பாதவிநாயகர் கோவில், கவுரிகிருஷ்ணா சந்திப்பு, அய்யம்புள்ளி சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும். இதற்காக அவை ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.மேலும் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்வதற்கு குடமுழுக்கு மண்டபம், கிரிவீதி, சன்னதி சாலை மற்றும் யானைப்பாதையில் 11 இடங்களில் பக்தர்களை நிறுத்தி குழுவாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸ் சிறப்பு கட்டுப்பாட்டு அறை, பழனியாண்டவர் கலைக்கல்லூரிக்கு மாற்றப்படுகிறது. பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு புதுதாராபுரம் சாலை, இடும்பன்குளம் ஆகிய பகுதிகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் புனிதநீராடும் இடும்பன்குளம், சண்முகாநதியில் ரப்பர் படகுடன் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அவர்களை மீட்டு, சிகிச்சைக்கு அழைத்து செல்ல தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தைப்பூச திருவிழா பாதுகாப்புக்கு தென்மாவட்டங்களை சேர்ந்த 1,700 சட்டம்-ஒழுங்கு போலீசார், 300 பெண் போலீசார், 300 போக்குவரத்து போலீசார், 600 ஆயுதப்படை போலீசார், 17 குற்றத்தடுப்பு போலீஸ் படையினர், வெடிகுண்டுகளை கண்டறியும் 20 குழுவினர், 30 வீடியோகிராபர்கள், 11 சிறப்பு போலீஸ் படையினர் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நம் ஜாதக கிரக அமைப்பு, திசை புத்தி பொறுத்து ஜோதிட பலன் கணிக்கப்பட்டுச் சொல்லப்படுகிறது.
ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நம் ஜாதக கிரக அமைப்பு, திசை புத்தி பொறுத்து ஜோதிட பலன் கணிக்கப்பட்டுச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் தங்கள் ஜென்ம ஜாதகத்தைப் பொறுத்து திசை புத்தி கால அளவு இருக்கும்.
ராகு பகவானுக்குரிய விரத முறை:
அப்படி ஒருவருக்கு ராகு திசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ராகு போகக் காரர். இவர் ஒருவருக்கு அனைத்தின் மீதான ஆசை வைக்க தூண்டுவார். பிரமாண்டத்தை ஏற்படுத்துவார். அவரால் ஏற்படக்கூடிய சிக்கல்களிலிருந்து மீள்வதற்காக இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதிகாலையில் எழுந்து நீராடி காளி கோயிலுக்கு சென்று அங்கு வேப்ப எண்ணெய் விளக்கு ஏற்றவும். காளி அம்மனுக்கு மந்தார மலரால் அர்ச்சனையும். உளுந்தினால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பலகாரம் நிவேதனமாக்க வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும். மேலும் கோமேதக கல்லை நாம் ஆபரணமாக அணிந்து கொள்வதோடு, நவகிரக சன்னிதியில் ராகு முன் நின்று நாம் அவருக்குரிய ராகு காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கேது பகவானுக்குரிய விரத முறை:
ஒருவரின் ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களுக்கோ அல்லது கேது நீச்சத்தில் இருந்தாலோ அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். செவ்வாய் கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி கணபதியை வணங்கவும். விநாயகர் கோயிலுக்குச் சென்று செவ்வரலி மாலை சுவாமிக்கு சூடி, கொள்ளில் செய்யப்பட்ட கொழுக்கட்டை, மோதகத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்கவும்.
கேது திசை நடக்கும் காலத்தில் வைடூரிய கல் கொண்ட ஆபரணத்தை அணிந்து வரவும். நவகிரக சன்னிதியில், கேது பகவானுக்கு அருகில் நின்று அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வரவும்.இந்த விரதம் செய்வதால் தன, தானியம், பசுக்காள் என அனைத்து செளபாக்கிய ஏற்படும்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு ராஜமேளம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பஜனை, 9 மணிக்கு 1008 சங்காபிஷேகம் ஆகியவை நடந்தது.
மதியம் 12.30 மணிக்கு உச்சபூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு அத்தாழபூஜை போன்றவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி :
சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவது நடைமுறையில் உள்ளது.
வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை)மாலை 3 மணி அளவில் கொள்ளிடம் வட திருக்காவிரியில் சமயபுரம் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மறுநாள் (29-ந்தேதி) காலை 5.30 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்களை திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெள்ளை கோபுரம் கிழக்கு வாசல் மற்றும் தாயார் சன்னதி வடக்கு வாசல் ஆகியவை திறக்கப்பட்டன.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கொரோனா தொற்றுஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. மேலும் பக்தர்கள் இல்லாமல் பூஜைகளும் விழாக்களும் நடத்தப்பட்டன.
பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அரசு வழிகாட்டுதலின் படி கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பக்தர்கள் கோவிலின் பிரதான நுழைவாயிலான தெற்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவ நாட்களில் மட்டும் பக்தர்கள் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்று கிழக்கு வாசல் வழியாக வெளியே வர அனுமதிக்கப்பட்டனர்.
திருவிழா முடிந்தவுடன் கிழக்கு வாசல் மூடப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தைத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உள்வீதிகளில் உலா வருவார். எனவே கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்களை திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை வெள்ளை கோபுரம் கிழக்கு வாசல் மற்றும் தாயார் சன்னதி வடக்கு வாசல் ஆகியவை திறக்கப்பட்டன. இந்த வாசல்கள் வழியாக பக்தர்கள் எப்போதும் போல் சென்று வரலாம் என கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசன்குடி சிவன் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தலச்சிறப்பு : அரசன்குடி சிவன் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. திருச்சியின் மற்றுமொரு சிறப்பு கல்லணை. நதியின் குறுக்கே கட்டப்பட்ட, உலகில் முதலாவது அணையே இந்த திருச்சியில் உள்ள கல்லணை தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்) என்ற மன்னரே, அந்தக் காலத்திலேயே அதிசயிக்கத்தக்க தொழில் நுட்பங்களுடன், இன்றும் அசையாத உறுதி கொண்ட இந்த கல்லணையைக் கட்டினார்.
காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகால் பெருவளத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவிதமான ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
கல்லணையின் அடிப்படைக் கட்டுமானம் அப்படியே இன்னும் நிலைத்திருக்கிறது. புதிப்பிப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவ்வப்போது நடைபெறுகிறது. காலத்தால் அழியாத உறுதிமிக்க கல்லணையின் கட்டுமான தொழில்நுட்பம், தண்ணீர் மற்றும் மணல் குறித்த அறிவியல் அறிவு, தமிழர் தம் திறனுக்கு வியப்பூட்டும் ஒரு அதிசய சான்றாகும்.
தல வரலாறு : கரிகாலன் கல்லணை கட்டிக்கொண்டு இருக்கும் பொது அணை சரியாக நிற்காமல் உடைந்து விழுந்து கொண்டே இருந்தது அப்போது மன்னன் இருந்த ஊர் தான் அரசன்குடி. அரசன் இவ்வூரில் தங்கியிருந்த போது சிவன் அரசன் கனவில் வந்து தனக்கு இவ்வூரில் கோவில் எழுப்பி வழிபாடு செய்துவிட்டு கல்லணை கட்ட தொடருமாறு கூறினார். சிவன் சொன்னபடி அரசனும் இவூரில் ஒரு திருத்தலம் எழுப்பி சிவனை வழிபட்டு கல்லணை கட்டும் பணியை முடித்தார். அரசன்குடியில் இருந்து சிவனை வழிபட்டு கல்லணை கட்டும் பணியை பார்த்துக் கொண்டதால் இவ்வூர் அரசன்குடி என பெயர் பெற்றது. இத்திருக்கோயில் அரசன்குடி சிவன் கோவில் என்று அழைக்கப்பட்டது. இக்கோவிலில் மன்னன் சிவனை வழிபடுவது போன்ற சிற்பங்களும் உள்ளது.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.
கோவில் முகவரி :
அரசன்குடி சிவன் கோவில்,
அரசன்குடி,
கல்லணை அருகில்,
திருச்சி மாவட்டம்.

ஈரோடு கொங்கலம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி காலை 8.30 மணிக்கு நடக்கிறது.
ஈரோடு கொங்கலம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை கோவில் பூசாரிகள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதையடுத்து மூலவர் எதிரில் உள்ள கோவில் கொடிமரத்தில் கோவில் பூசாரிகள் திருவிழா கொடியேற்றினர்.
அதைத்தொடர்ந்து மாலையில் அம்மன் உள் பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 26-ந்தேதி பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். பின்னர் பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி காலை 8.30 மணிக்கு நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகரவிளக்கு சீசன் நிறைவை தொடர்ந்து சபரிமலை கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டது. மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் மீண்டும் திறக்கப்படுகிறது.
சபரிமலை :
மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது.
டிசம்பர் 26-ந் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 30-ந்தேதி திறக்கப்பட்டு, 31-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன.
சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை 14-ந் தேதி அன்று நடந்தது. ஐயப்ப சாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. அந்த சமயத்தில் ஐதீக முறைப்படி பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் சுவாமி காட்சி அளித்தார்.
கொரோனா காரணமாக 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே மகர விளக்கின் போது சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அன்று இரவு 9 மணிக்கு பிரசித்தி பெற்ற குருதி சமர்ப்பன சடங்கு சன்னிதானத்தில் நடந்தது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை 6.20 மணிக்கு பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகள் பிரதீப் குமார் வர்மா, சுரேஷ் வர்மா ஆகியோர் ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது. பின்னர், 18-ம் படி வழியாக இறங்கி வந்த ராஜகுடும்ப பிரதிநிதிகளிடம் கோவில் சாவி ஒப்படைக்கப்பட்டது.
பிறகு பாரம்பரிய முறைப்படி, கோவில் சாவி மேல்சாந்தி ஜெயராஜ் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கொண்டு வரப்பட்ட திருவாபரணங்கள் சன்னிதானத்தில் இருந்து பந்தளம் அரண்மனைக்கு மீண்டும் எடுத்து செல்லப்பட்டதை தொடர்ந்து நடப்பு ஆண்டின் மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவடைந்தது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் 17-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சொந்த வீடு கட்ட அல்லது வாங்கும் பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் பாட வேண்டிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகத்தை இங்கு பார்ப்போம்.
நம்மில் பலரின் கனவாக இருக்கக் கூடியது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் தான். அதற்காக பல கஷடமான வேலையைப் பார்த்து, செலவைக் கட்டுப்படுத்தி பணத்தை சேர்த்து மனை வாங்கி வீடு கட்ட முயற்சி செய்வர். ஆனால் சில காரணங்களுக்காக அந்த பாக்கியம் ஏற்படாமலே தள்ளிப்போகும். அப்படி சொந்த வீடு கட்ட அல்லது வாங்கும் பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் பாட வேண்டிய அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகத்தை இங்கு பார்ப்போம். இந்த பதிகத்தை தினமும் பாடி வர நமக்கான சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு அமையும்.
திருப்புகழ் பதிகம்
அண்டர்பதி குடியேற (சிறுவை-சிறுவாபுரி)
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாரு சங்கரனும் மகிழ்வுற
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேறும்
மஞ்சனமும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்ப முற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா!
அறிவாள! உயர்தோளா !

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தொடங்கிய இத்திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டம் உவரியில் கடலோரத்தில் சுயம்புலிங்கசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இது சுயம்பு வாக உருவாகிய அற்புதமான ஆலயம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குவது வழக்கம்.
இந்த திருவிழாவில் நெல்லை மட்டுமல்லாமல் குமரி உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு தைப்பூச விழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கப்பட வேண்டும். இந்நிலையில் கொடியேற்றத்திற்கான பணிகள் குறித்து அறிவதற்காக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கோவிலுக்கு வந்தார். அப்போது அங்கு விழா நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதுகுறித்து அற நிலையத்துறை இணை கமிஷனரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் கோவில் திருவிழாவை இன்று கொடியேற்றத்துடன் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்து விட்டு சென்று விட்டார்.
இதையடுத்து அங்கு வந்த விஸ்வஹிந்து பரிஷத் மாநிலத்தலைவர் பெரி குலைக்காதர் தலைமையில் ஊர் மக்கள் கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இன்று காலைக்குள் திருவிழாவை நடத்த கொடியேற்றவில்லை என்றால் பொன் ராதா கிருஷ்ணன் தலைமையில் உண்ணா விரதம் இருக்க போவதாகவும் அறிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து இன்று காலை 6.30 மணிக்கு உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.
திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் தேரோட்டத்தை கண்டிப்பாக நடத்த வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். அதற்கு தேரை சீரமைக்க வேண்டி உள்ளதால் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என அறநிலையத்துறை இணை கமிஷனர் பரஞ்ஜோதி தெரிவித்தார்.