என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்தமாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அப்போது 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதி உலா வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ரதசப்தமி விழாவின்போது உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மாடவீதிகளில் வீதி உலாவருவது வழக்கம். இந்த நிலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி ரதசப்தமி விழா நடக்கிறது.
அப்போது காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபை வாகனத்திலும், 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் நண்பகல் 12 மணிவரை கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா நடக்கிறது.
பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரைவு தரிசன மற்றும் சர்வ தரிசன டோக்கன்களை பெற்றுள்ள பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். ரதசப்தமி உற்சவத்தை காண விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் பிப்ரவரி மாத விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ரதசப்தமி நாளில் நடக்கும் தீர்த்தவாரி, சக்கரத்தாழ்வாருக்கு தனிமையில் நடத்தப்படும். அப்போது குளத்தில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதியில்லை.
இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் 27-ந் தேதி காலை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து நேற்று காலை 4.30 மணிக்கு கொடியேற்ற மண்டபத்துக்கு நம்பெருமாள் வந்தடைந்தார். பின்னர் காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் தனுர்லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் அங்கிருந்து கண்ணாடி அறையை சென்றடைந்தார். நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு உள் திருவீதிகளான 4 உத்திரை வீதிகளிலும் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.
அங்கிருந்து இரவு 8.45-க்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் இன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார். இரண்டாம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.
திருவிழாவின் 3-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 22-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 23-ந் தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 24-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 25-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல் அளவை கண்டருளிகிறார். 26-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் 27-ந் தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வருகிறார். காலை 4.45 மணிமுதல் காலை 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர்லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின், காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.
28-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார் (கூடுதல்பொறுப்பு) , உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

வீட்டிலும், தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை உயர சிவபெருமான எப்படி வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
நாம் அனைவரும் நம்முடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதேனும் ஒரு உத்தியோகம் அல்லது தொழில் செய்து வருகிறோம். அடிப்படைத் தேவை பூர்த்தியானதும், நம்முடைய சேமிப்பு. வியாபாரம் என்றாலே அதில் லாபமும், நஷ்டமும் ஏற்படுவது சகஜம் தான். என்றாலும் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கோ தான் முதலீடு செய்த தொகையை கூட திரும்ப பெறமுடியாத அளவிற்கு நஷ்டமும், லாபம் குறைவும் ஏற்படுவதுண்டு.
இப்படிப்பட்ட நஷ்டத்தால் மன வருத்தம் உண்டாவதோடு, வேறுவழியின்றி கடன் தொல்லைக்குள் சிக்குகின்றனர். இதிலிருந்து மீண்டு வர எளிய பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வர படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும்.
செல்வங்களின் அதிபதியாக விளங்கும் லட்சுமி தேவி, குபேரருக்கு நவநிதிகளை வழங்கியவர் சிவபெருமான். வீட்டில் பணம் நிலைக்கவில்லையா?இந்த எளிய ஜோதிட வழிகாட்டுதல் உங்களை செல்வந்தர் ஆக்கும்!
சிவனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை. அதனால் திங்களன்று அல்லது பிரதோஷ தினம் விசேஷமான கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த தினங்களில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். தொழிலில் லாபம் உண்டாகும்.
இந்த விரதம் ஈசனுக்கு உரிய கார்த்திகை திங்கட்கிழமைகளில் செய்வதும். அன்றைய தினம் மகாலட்சுமி அம்சமான பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபடுவதன் மூல சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, அம்மன் படம் வரையப்பட்ட கொடி, கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் உற்சவ அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மரகேடயத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இதேபோல் தினமும் காலையில் பல்லக்கில் அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து இரண்டாம் நாள் முதல் ஆறாம் நாள் வரை முறையே சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷப வாகனம், யானைவாகனம், வெள்ளிசேஷ வாகனம், வெள்ளிகுதிரை வாகனம் ஆகியவற்றில் இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
திருவிழாவின் ஒன்பதாம் நாளான 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். பின்னர் இரவு 11 மணிக்கு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.
திருவிழாவின் 10-ம் நாளான 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் தைப்பூசத்திற்கு காவிரியில் இருந்து கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளுகிறார். பின்னர் நொச்சியம் வழியாக வடதிருகாவிரிக்கு சென்றடைகிறார். அங்கு மாலையில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் சீர்பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வட திரு காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம் மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 11 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று கொடிமரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடி படம் இறக்கப்படுகிறது. இரவு 12 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சென்றடைகிறார். அதைத்தொடர்ந்து நடை சாத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 7 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ‘‘நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி’’ நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.
28-ந் தேதி தைப்பூசம் தினத்தன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. மேலும் புகழ் பெற்ற கைலாசபுரத்தில் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலியநாயனார், சண்டிகேசுவரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுடன் பகல் 12.30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு தைப்பூச மண்டபத்தில் இறங்குகின்றனர். அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னர் மாலையில் சுவாமி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைகின்றனர்.
29-ந் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்சியருளும், சவுந்திர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடக்கிறது. 30-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணி என்ற வெளித்தெப்பகுளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

அழகர்கோவில் மலை உச்சியில் முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அழகர்கோவில் மலை உச்சியில் முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா நேற்று காலையில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் மயில் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க 9 கலச புனித தீர்த்தம் கொண்டு கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சர விளக்கு தீபங்கள் கொண்ட பூஜைகள் நடந்தன. உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சுவாமி புறப்பாடும் நடந்தது. மூலவர் சுவாமி, வித்தக விநாயகர், வேல் சன்னதியிலும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி கலந்துகொண்டு நெய் விளக்குகள் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
இன்று காலையில் உற்சவர் சுவாமிக்கு மகா அபிஷேகங்களும், சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், மாலையில் யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அன்னம் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து நாளை மாலையில் காமதேனு வாகனத்திலும், 22-ந்தேதி மாலையில் ஆட்டு கிடாய் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
23-ந்தேதி மாலையில் பூச்சப்பர விழாவும், 24-ந் தேதி மாலையில் யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 25-ந்தேதி மாலையில் பல்லக்கு வாகனத்திலும், 26-ந்தேதி மாலையில் குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
27-ந்தேதி காலை 10 மணிக்கு தங்க தேரோட்ட விழா நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். 28-ந்தேதி காலையில் முக்கிய நிகழ்வான தைப்பூச திருவிழா நடக்கிறது. அன்று யாக சாலை பூஜைகள், தீர்த்தவாரி சிறப்பு அபிஷேகம், 10.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.
11 மணிக்கு கொடி இறக்கம், தீபாராதனைகள் நடைபெறும். பின்னர் மாலையில் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும், இருப்பிடம் சேருவதும் நடைபெறும். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா, மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ஒருவரின் ஜாதக அமைப்பில் அவருக்கு அமைந்துள்ள ராசியைப் பொறுத்து கீழே குறிப்பிட்டுள்ள மந்திரங்களை தினமும் ஜெபித்து வந்தால் அவருக்கு செல்வநிலை உயருவதோடு, அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.
ஒவ்வொரு ராசிக்குரிய மந்திரத்தை ஜெபித்து வந்தால் செல்வங்களும், ஆரோக்கியமும் உயரும்.
மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர்
”ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்”
என்ற ஸ்லோகத்தை தினமும் 27 முறை கூறி வழிபடுவதோடு, முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் மேஷ ராசிக்கான துன்பங்கள் விலகி செல்வமும், சிறப்பும் பெறலாம். குறிப்பாக செவ்வாய் கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்வது விசேஷமானது.
ரிஷபம்
சுக்கிர பகவானை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் வணங்க வேண்டிய தெய்வம் மகா லட்சுமி. இவர்கள் லட்சுமி கடாட்சம் பெற வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து,
”ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ”
என்ற ஸ்லோகத்தை தினமும் 11முறை கூறி வழிபட்டு வந்தால், செல்வம் நிலை உயரும்.
மிதுனம்
புதன் பகவானை அதிபதியாக கொண்டவர்கள் மீதுன ராசியினர். இவர்கள் மகா விஷ்ணுவை வழிபட்டு வருவது ஏற்றம் தரக்கூடியது.
விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடுவதுடன்,
“ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம”
என்ற ஸ்லோகத்தை 54 முறை தினமும் கூறி வருவதால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
கடகம்
சந்திரனின் அருளைப் பெற்றவர்கள் கடக ராசியினர். அதன் காரணமாக ஒவ்வொரு பெளர்ணமி அன்று விரதமிருந்து அம்பாளுக்கு உரிய சகஸ்ரநாம அர்ச்சனையை செய்து வழிபடுவதோடு
”ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம”
என்ற ஸ்லோகத்தை 21முறை கூற வழிபடவும்.
சிம்மம்
நவகிரகங்களின் தலைவனும், ஆளக்கூடியவருமான சூரியனின் அருளைப் பெற்றவர்கள் சிம்ம ராசியினர். இவர்கள் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சூரியனுக்கு உரிய சகஸ்ரநாம அர்ச்சனையை செய்து வழிபடுவதோடு,
“ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம” என்ற மந்திரத்தை கூறி வந்தால் வாழ்வில் அனைத்து செல்வமும், வெற்றியும் வந்து சேரும்.
கன்னி
புதன் பகவானின் அருளாசி பெற்றவர்கள் கன்னி ராசியினர். இவர்கள் புதன் கிழமை தோறும் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதும், ”ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம”
என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடையும்.
துலாம்
சுகத்தை அருளக்கூடிய சுக்கிர பகவானை அதிபதியாக கொண்டவர்கள் துலாம் ராசியின், வாழ்வில் செல்வமும், நல்லருளும் பெற பெளர்ணமி தோறும் சத்ய நராயணனை நினைத்து பூஜைகள் செய்து
“ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம” என்ற மந்திரத்தை சொல்லி வழிபட்டு வருவதால் நன்மைகள் பல ஏற்படும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானின் அருளாசையைப் பெற்றவர்கள் விருச்சிக ராசியினர். இவர்கள் செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்கு பூஜை செய்து வணங்கி
”தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்”
என்ற மந்திரத்தை கூறி வழிபட வேண்டும்.
தனுசு
குரு பகவானை அதிபதியாக கொண்டவர்கள் தனுசு ராசியினர். இவர்கள் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுதல் வேண்டும்.
”ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம”
என்ற ஸ்லோகத்தை சொல்லி வழிபட்டு வருவதால் செவமும், நல்ல பலன்களும் கிடைக்கும்.
மகரம்
சனி பகவானின் அருளாசையும், அதிபதியாகவும் கொண்டவர்கள் மகர ராசியினர். இவர்கள் சனிக்கிழமை விரதமிருந்து சனி பகவானை வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். அதோடு சனீஸ்வர சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடுவதுடன்
“ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம”
என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதால் சகல காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியினர் சனி பகவானை அதிபதியாக கொண்டவர்கள். இவர்கள் செல்வமும் நல்லருளும் பெற சனிக்கிழமை தோறும் அனுமனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
அதோடு “ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம”
என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால், நல்ல பலன்கள் உண்டாகும்.
மீனம்
குருவின் அருளைப் பெற்றவர்கள் மீன ராசியினர். இவர்கள் வியாழன் தோறும் சிவ பெருமானுக்கு உரிய சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
“ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம” எனும் மந்திரத்தை கூறி வந்தால், துன்பங்கள் விலகி செல்வங்கள் பெருகும்.

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5 மணிக்கு விநாயகர், ஸ்ரீ பூதநாதர், சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. காலை 8.40 மணிக்கு மேளதாள, வெடி முழக்கத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, பூதப்பாண்டி தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ராமசந்திரன், ஸ்ரீ காரியம் சேது ராம், பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகராஜன், குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், எம்.ஜி.ஆர். மன்ற தோவாளை ஒன்றிய செயலாளர், கே.சி.யு.மணி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பா. ஜனதா கட்சி நிர்வாகிகள் நாகராஜன், ரெங்கநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா வருகிற 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும், வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அன்று இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி காலை 9 மணிக்கு ஆறாட்டு விழா, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை தரிசித்து வரலாம்.
‘நவக்கிரகங்களில் சுப கிரகம்’ என்று அழைக்கப்படுபவர், குரு பகவான். அவர் ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கப்படி 15-11-2020 நடந்தது. குருவை நாம் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டே இருந்தால், அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார்.
குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை தரிசித்து வரலாம். வியாழக்கிழமையில் விரதம் இருந்து நீராடி, மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும்.
குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர்களும் கொண்டு அர்ச்சனை, அலங்காரம் செய்ய வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பின்னர் அந்த நைவேத்தியப் பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நைவேத்தியம் செய்து, அவற்றை சிறுவர்- சிறுமியர்களுக்கு தானம் செய்வது சிறப்பான பலனைத் தரும்.
சப்த குரு தரிசனம்
குருவைப் பற்றிய ‘ஸ்ரீகாண்டேயா’ என்ற சுலோகம், 7 வகையான குரு இருப்பதாக சொல்கிறது. அதாவது தேவகுரு - பிரகஸ்பதி, அசுரகுரு - சுக்ராச்சாரியார், ஞானகுரு - சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு - பிரம்மா, விஷ்ணு குரு - வரதராஜர், சக்தி குரு - சவுந்தர்யநாயகி, சிவகுரு - தட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளனர். இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் தரிசிக்கலாம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களில் ஒன்றான இந்தக் கோவிலில், பிரம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது. நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
* திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலம் மிகச் சிறப்பான ஒன்றாகும்.

திருச்சி உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது.
திருச்சி உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி மதியம் 12 மணிக்கு வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
மாலை 6.30 மணிக்குமேல் அம்மன் கேடயத்தில் வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தேங்காய், பழம் சாற்றி வழிபாடு செய்தனர். தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தினமும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். வருகிற 27-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
அன்று காலை 10 மணிக்கு அம்மன் ரதத்தில் வீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

குளச்சல் நெசவாளர் வீதியில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பங்கு குடும்ப திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.
குளச்சல் நெசவாளர் வீதியில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பங்கு குடும்ப திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். முதல் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு மெழுகுவர்த்தி பவனி, செபமாலை நடக்கிறது. இதனைதொடர்ந்து குளச்சல் பங்குப்பணியாளர் செல்வன் தலைமையில் கொடியேற்றம் நடைபெறும். அருட்பணியாளர் எடிசன் மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து வரும் விழா நாட்களில் மாலை செபமாலை, திருப்பலி, திருவிருந்து, சிறப்பு ஆராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 24-ந் தேதியன்று மாலை 5.45 மணிக்கு நாஞ்சில் பால்பண்ணை இயக்குனரும், அருட்பணியாளருமான ஜெரால்டு ஜஸ்டின் தலைமையில் செபமாலை, நிறைவு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு உறவு விருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 26-ந் தேதி நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பங்குத்தந்தைகள் வினோத் பால்ராஜ், லியோ ஜெரால்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) குடும்ப ஒன்றிணைப்பு விழா, 24-ந் தேதி புதுநன்மை, திருமுழுக்கு விழா நடக்கிறது. 25-ந் தேதி மதியம் 12 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 5.45 மணிக்கு புனித அந்தோணியார் தேர் பவனி நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிழா திருப்பலி, மாலை 6 மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் விவிலிய போட்டி, விளையாட்டு போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றது.