
மாலை 6.30 மணிக்குமேல் அம்மன் கேடயத்தில் வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தேங்காய், பழம் சாற்றி வழிபாடு செய்தனர். தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தினமும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். வருகிற 27-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
அன்று காலை 10 மணிக்கு அம்மன் ரதத்தில் வீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.