search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றம்
    X
    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றம்

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தை திருவிழா கொடியேற்றம்

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5 மணிக்கு விநாயகர், ஸ்ரீ பூதநாதர், சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. காலை 8.40 மணிக்கு மேளதாள, வெடி முழக்கத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, பூதப்பாண்டி தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ராமசந்திரன், ஸ்ரீ காரியம் சேது ராம், பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகராஜன், குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், எம்.ஜி.ஆர். மன்ற தோவாளை ஒன்றிய செயலாளர், கே.சி.யு.மணி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பா. ஜனதா கட்சி நிர்வாகிகள் நாகராஜன், ரெங்கநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா வருகிற 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும், வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

    நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அன்று இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி காலை 9 மணிக்கு ஆறாட்டு விழா, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
    Next Story
    ×