search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோலைமலை முருகன் கோவில்"

    • தினமும் லட்சார்ச்சனையும், சகல பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
    • 2-ந் தேதி வைகாசி விசாகம் திருவிழா நிறைவு பெறுகிறது.

    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவானது நேற்று அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தொடங்கியது. இதில் மூலவர் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் சுவாமிக்கும் காப்பு கட்டி பூஜைகள் தொடங்கியது.

    இதை தொடர்ந்து காலையிலும், மாலையிலும் பூஜைகள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க சண்முகர்சுவாமிக்கும், வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு மகா அபிஷேகம், லட்சார்ச்சனைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து இந்த திருவிழாவில் தினமும் லட்சார்ச்சனையும், மாலையில் சகல பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வைகாசிவிசாகம் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும்.

    இந்த திருவிழா தொடங்கியதையொட்டி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, சென்னை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர். இந்த திருவிழாவின் போது நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடி வந்து அங்குள்ள ராக்காயி அம்மனையும் தரிசனம் செய்தனர்.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
    • விசேஷ பூஜைகள் மஹா தீபாராதனைகள் நடந்தது.

    முருகப் பெருமானின் ஆறாவதுபடை சோலைமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்ற அழகர் மலையில் அமைய பெற்றுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் சிறப்புடைய ஒன்றாகும். இந்த விழாவானது கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக மூலவர் சன்னதியில் வித்தக விநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் வேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகள் மஹா தீபாராதனைகள் நடந்தது. அன்று பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து தினமும் அன்னம் காமதேனு, ஆட்டு கிடாய், பூச்சப்பரம், யானை, பல்லாக்கு, குதிரை ஆகிய வாகனங்களிலும், தங்க தேரோட்டமும், வெள்ளி மயில் வாகன புறப்பாடும் நடந்தது.

    நேற்று முக்கிய நிகழ்வாக தைப்பூச விழா நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்களின், வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மேளதாளம் முழங்க தீவட்டி, வர்ணக்குடை பரிவாரங்களுடன் கோவில் உள் பிரகாரத்தில் புறப்பாடு நடந்தது.

    பின்னர் அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் சுவாமிக்கு பால் பழம், பன்னீர், உள்பட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும். கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 3-ந்தேதி தங்க தேரோட்டம் நடக்கிறது.
    • 4-ந்தேதி தைப்பூச விழா நடைபெறும்.

    முருகப் பெருமானின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவில் அழகர்மலை உச்சியில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக பூ மாலைகளால் தங்க கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    சேவல், மயில், வேல் பொறிக்கப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் வெளிபிரகாரத்தில் சுவாமி புறப்பாடாகி சென்று சஷ்டி மண்டபத்திற்கு போய் இருப்பிடம் சேர்ந்தது. முன்னதாக மூலவர் சன்னதியில் வித்தக விநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் வேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் சென்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மூலவர் சன்னதி கல் மண்டபம் முழுவதும் வண்ண மாலைகளால் தோரணமாக கட்டப்பட்டிருந்தது. மாலையில் பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது.

    விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் காலையிலிருந்து மாலை வரை நடைபெறும். இதில் மாலையில் அன்னவாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். நாளை(சனிக்கிழமை)மாலையில் காமதேனு வாகனத்திலும், 29-ந் தேதி ஆட்டுகிடாய் வாகனத்திலும், 30-ந் தேதி பூச்சப்பரத்திலும், 31-ந் தேதி யானை வாகனத்திலும், பிப்ரவரி 1-ந் தேதி மாலையில் பல்லாக்கு புறப்பாடு, 2-ந் தேதி குதிரை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க தேரோட்டமும் 4-ந் தேதி தைப்பூச விழா நடைபெறும். இதில் தீர்த்தவாரி உள்பட பல நிகழ்வுகள் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • 3 அடி அகலத்தில் 6¼ அடி உயரத்தில் இரு பக்க புதிய வெள்ளி கதவுகள் அமைக்கப்பட்டது.
    • 250 கிலோ வெள்ளியால் ரூ.2 கோடி மதிப்பில் வெள்ளி கதவுகளில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில் அழகர் மலையில் இயற்கை எழிலுடன் அமைய பெற்றுள்ளது. இக்கோவிலில் கடந்த 11-ந் தேதி மூலவர் சன்னதிகளுக்கு வெள்ளி கதவுகள் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து முடிந்தது. மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், சன்னதிகளில் கதவுகளுக்கு வெள்ளி தகடுகள், ஆகமப்படி வரிசையாக பதிக்கப்பட்டது.

    இதில் 3 அடி அகலத்தில் 6¼ அடி உயரத்தில் இரு பக்க புதிய வெள்ளி கதவுகள் அமைக்கப்பட்டது. மேலும் ஆறு படைவீடுகளில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளிய திருக்கோலம் காரைக்குடி சிற்பிகளால் நுணுக்கமாக 250 கிலோ வெள்ளியால் ரூ.2 கோடி மதிப்பில் வெள்ளி கதவுகளில் வடிவமைக்கப்பட்டிருந்தது. வித்தக விநாயகர் சன்னதிகள் கதவுகளும் அதே மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.

    இதற்கான வெள்ளி கதவுகள் அணிவிக்கும் விழா நேற்று காலையில் மூலவர் சன்னதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்திற்கு அருகில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோ, கஜ, அஸ்வா பூஜைகள் நடந்தது. பின்னர் பரிபூர்ண கும்பங்களை சிவாச்சாரியார்கள், கல்யாணசுந்தரவல்லி யானை முன்செல்ல, மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் பிரகாரம் சுற்றி வந்து மூலவர் சன்னதிக்கு வந்்தனர். அங்கு புதிய வெள்ளி கதவுகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிறகு புதிய வெள்ளி கதவுகள் திறக்கப்பட்டு, மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

    அப்போது பக்தர்கள், மற்றும் காரைக்குடி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த திருமுருகன் திருப்புகழ் பாராயண குழுவினர்கள், மகளிர் குழுவினர் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக வெள்ளி கதவுகள் இணைக்கும் விழாவில், ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம், அறநிலைய துறை இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் ராமசாமி, நகைசரிபார்க்கும் அலுவலர் சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, முருக பக்த சபை குழு தலைவர் சுப்பையா செட்டியார், கண்காணிப்பாளர் பிரதீபா, உள்துறை அலுவலர்கள், தேவராஜ், பாண்டியன், ராஜா, மற்றும் உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×