என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நெல்லை, தென்காசி மாவட்ட கோவில்களில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அரியநாயகிபுரத்தில் அமைந்துள்ள அரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு காலை, மாலை மற்றும் இரவில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றது. கொடியேற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமார சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் காலையில் சுவாமி வீதி உலாவும், இரவில் சப்பர உலாவும் நடைபெறும். 5-ம் நாள் சட்டதேர் நிகழ்ச்சியும், 7-ம் நாள் முருகர் - சண்முகர் எதிர்சேவை காட்சியும், 9-ம் நாள் தேரோட்டமும், 10-ம் நாள் தைப்பூச திருவிழாவும் நடைபெறுகிறது.

    11-ம் நாள் சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்பும் வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.
    உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்
    உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து மாலை ஆராதனையை நடத்தி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்

    திருவிழா தொடர்ந்து வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை திருப்பலியும், மாலை மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 30-ந் தேதி திருவிழா மாலை ஆராதனையையும், மறுநாள் காலை திருவிழா கூட்டு திருப்பலியையும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை டொமினிக் அருள்வளன், நிதி குழு, மற்றும் சபையினர் செய்துள்ளனர்.
    பூதப்பாண்டி அருகே சாட்டுப்புதூர் சந்தனமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
    பூதப்பாண்டி அருகே சாட்டுப்புதூர் சந்தனமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    நாளை காலை 6 மணிக்கு மங்கள இசை, 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள், 108 சங்கு பூஜை, காலை 10 மணிக்கு தீபாராதனை, 10.30 மணிக்கு மகா அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம், வருஷாபிஷேகம், மகா கும்ப அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு சிறுவர்களின் கலை நிகழ்ச்சி, அன்னதானம், இரவு 7.30 மணிக்கு பக்தி மெல்லிசை போன்றவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை தர்ம கர்த்தா இசக்கியாபிள்ளை என்கிற காளி தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர்.
    வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளித்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர் :

    கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கானது பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் உள்ளரங்கங்களில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 100 சதுர மீட்டருக்கு 20 நபர்கள் என்ற விகிதத்தில் அதிகபட்சம் 200 நபர்களும், திறந்த வெளிப்பகுதிகளில் இடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப அதிகபட்சம் 50 சதவிகிதம் வரையிலான நபர்களும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு அந்தந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று பங்கேற்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கடலூர் மாவட்டம் வடலூர் சத்தியஞானசபையில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 150-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால் விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல்வெப்ப பரிசோதனை மற்றும் நோய் அறிகுறி குறித்து ஆய்வு மேற்கொண்டு, நோய் அறிகுறியற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நோய் அறிகுறி மற்றும் உடல் வெப்பம் அதிகமாக இருப்பின், மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்து, நெகட்டிவ் என சான்று பெற்ற பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    65 வயதுக்கு கூடுதலான மூத்த குடிமக்கள், சுவாச நோய், இருதய நோய், சர்க்கரை நோய், உயர் மற்றும் குறை ரத்த அழுத்தக் குறைபாடு உடையவர்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஆகியோர் விழாவில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
    ஜோதி தரிசன நிகழ்ச்சியை டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருத்தரங்குகள், நாடகங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.

    சத்தியஞானசபை பெருவெளி மற்றும் ஜோதி தரிசனம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் அனைத்து வகை கடைகளுக்கும், ராட்டினம் முதலான பொழுதுபோக்கு செயற்பாட்டிற்கும் அனுமதி கிடையாது. மேலும் ஜோதி தரிசன நாளன்று மது மற்றும் இறைச்சி கடைகளை திறக்கக்கூடாது. இதுதவிர பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவை, பொட்டலங்களாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிரசாத பார்சல்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரி கூறினார்.
    சபரிமலை :

    திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அதிகாரி ராஜேந்திர பிரசாத் சபரிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் கொரோனா பரவாமல் தடுக்க சாமியை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அரவணை உள்பட பிரசாதங்களை தபால் மூலமாக நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களுக்கு அனுப்ப திருவிதாங்கூர் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டது.

    அதை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும், அதற்கான முன்பதிவுக்கான வசதிகள் செய்யப்பட்டது. ஒரு பிரசாத பார்சலின் விலை ரூ.450 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி தபால் மூலமாக 43 ஆயிரத்து 902 பிரசாத பார்சல்கள் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடியே 97 லட்சத்து 55 ஆயிரத்து 900 கிடைத்து உள்ளது. அதே போல் தபால் துறைக்கு 87 லட்சத்து 80 ஆயிரத்து 400 வருமானம் கிடைத்தது.

    தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படாத காரணத்தால்.இனி வரும் மாத பூஜை நாட்களிலும் தபால் மூலம் முன்பதிவு அடிப்படையில் பிரசாதங்கள் பக்தர் களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நடப்பு சீசனில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 175 டின் அரவணை விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    இதன் மூலம், திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ரூ.5 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 170 வருமானமாக கிடைத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களுள் ஒன்றான இது, நிலத்தைக் குறிப்பதாகும். இந்தக் கோவிலின் மூலவராக சிவபெருமான் லிங்க உருவில் வீற்றிருக்கிறார்.
    காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களுள் ஒன்றான இது, நிலத்தைக் குறிப்பதாகும். இந்தக் கோவிலின் மூலவராக சிவபெருமான் லிங்க உருவில் வீற்றிருக்கிறார். ‘ஏகாம்பரநாதர்’ என்பது இவரது பெயர். அம்பாளின் திருநாமம், ‘காமாட்சி அம்மன்’ என்பதாகும். கருவறையில் உள்ள மூலவர் லிங்கத்தை ‘பிருத்வி லிங்கம்’ என்று அழைப்பார்கள். இந்த லிங்கம், மண்ணால் ஆனது. சுயம்பு லிங்கம். எனவே இந்த லிங்கத்திற்கு அபிஷேகங்கள் கிடையாது. மாறாக, லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்குத்தான் அபிஷேகங்கள் அனைத்தும் செய்யப்படுகின்றன.

    மற்ற சிவாலயங்களைப் போல, இங்கு அம்மனுக்கு என்று தனியாக சன்னிதி கிடையாது. காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை காஞ்சி காமாட்சியே, அனைத்து சிவாலயங்களுக்குமான தேவி என்பதால், அங்குள்ள சிவாலயங்கள் எதிலுமே அம்பாளுக்கு என்று தனியாக சன்னிதி அமைக்கப்படுவதில்லை. தவிர விநாயகர், முருகன், போன்ற தெய்வங்களுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. 

    முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சன்னிதி உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் தல விருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஆகும். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

    தலவரலாறு

    ஒரு முறை கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். ஈசனுக்கு ஒரு நொடிதான் என்றாலும் அது மனிதர்களுக்கு பல நூற்றாண்டு காலம் என்பதால், அதுவரை உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன. இதைக்கண்டு பார்வதிதேவி வருத்தம் அடைந்தார். அவர் தன்னுடைய இந்த பாவத்தைப் போக்க, தவம் மேற்கொள்ள எண்ணினார். அதன்படி காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் அமைத்து பூஜித்தார்.

    பார்வதியின் தவத்தை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவபெருமான், கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள்புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் ‘பிருத்வி லிங்கம்.’

    அதாவது தற்போதைய மூலவர். அம்மன் அருளும் காமகோட்டமே, காமாட்சி அம்மன் கோவிலாகத் திகழ்கிறது. பார்வதி கட்டித் தழுவியதால் ஏகாம்பரநாதர் கோவிலின் மூலவர் லிங்கம் ‘தழுவக் குழைந்தார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது ‘உன்னைப் பிரியேன்’ என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர், இந்தத் தலத்தில் பதிகம்பாடியதன் மூலமாக திரும்பப் பெற்றார்.

    ஆலய அமைப்பு

    சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயம், கி.பி. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோவிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் ‘திருக்கச்சிஏகம்பம்’ என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.

    இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான ராஜகோபுரம், 58.5 மீட்டர் உயரமும், ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவ ராயர் (கி.பி 1509) காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    காஞ்சிபுரம் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் உள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில். இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மக்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

    ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். அந்த நாட்களில் ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வார்கள்.

    இந்த கோவிலில் தைத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு வருகிற 20-ந்தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    அதன்படி 20-ந்தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. முன்னதாக தந்திரி பூஜையை நீலகண்டன் நாராயணன் பட்டத்ரி நடத்துகிறார். அதைத்தொடர்ந்து கொடியேற்றப்படுகிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி, 6.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், 8.30 மணிக்கு சாமி பு‌‌ஷ்பக விமானத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    21-ந்தேதி காலை 7 மணிக்கு சாமி புஷ்பக விமானத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், மாலை 5.30 மணிக்கு சமய சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து வரும் விழா நாட்களில் சாமி வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, அபிஷேகம், இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, பஜனை, பட்டிமன்றம் மற்றும் பரதநாட்டியம் போன்றவை நடைபெறும்.

    28-ந் தேதியன்று காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நடைபெறுகிறது.

    29-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆறாட்டு, இன்னிசை கச்சேரி, இரவு 8.15 மணிக்கு பக்தி மெல்லிசை, 9.30 மணிக்கு சாமி கோவிலில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
    கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

    "ஓம் கால தண்டாய வித்மஹே
    வஜ்ர வீராய தீமஹி
    தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்."

    "ஒம் கஜத்வஜாய வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாய தீமஹி
    தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்."
    திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள், இத்தல இறைவனான அகஸ்தீஸ்வரருக்கும் சனீஸ்வரனுக்கும் அந்த பரிகாரங்களைச் செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.
    சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ளது பொழிச்சலூர் திருத்தலம். இங்கு பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனி பகவானும் ஒரு வரப்பிரசாதியாக இருந்து அருள்பாலிக்கிறார். 

    சனீஸ்வர பகவான் நேரடியாக இத்தல இறைவனை பூஜித்ததாகவும், இங்குள்ள நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி தன்னுடைய தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் தல வரலாறு சொல்கிறது. எனவே இத்தலம் வடதிருநள்ளாறு என அழைக்கப்படுகிறது. 

    திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள், இத்தல இறைவனான அகஸ்தீஸ்வரருக்கும் சனீஸ்வரனுக்கும் அந்த பரிகாரங்களைச் செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.
    சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரை அருகே அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த விழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.40 மணிக்கு தங்க கொடி மரத்தில் மேள தாளம் முழங்க கொடி ஏற்றப்படும். பின்னர் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சரவிளக்கு தீபாராதனைகள் நடைபெறும். தொடர்ந்து மூலவர் சன்னதியில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    அன்று மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 20-ந்தேதி காலை யாக சாலை பூஜைகள் நடைபெறும். பின்னர் உற்சவருக்கு மகா அபிஷேகமும், யாக சாலை பூஜைகளும், மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 21-ந் தேதி காலை வழக்கம் போல் பூஜைகளும், மாலை 6 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

    22-ந் தேதி காலையில் வழக்கம் போல் பூஜைகளும், மாலையில் ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 23-ந்தேதி மாலையில் பூச்சப்பர விழா, 24-ந் தேதி மாலையில் யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    25-ந் தேதி மாலையில் பல்லக்கு வாகனத்தில் சாமி புறப்பாடும், 26-ந் தேதி மாலையில் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு, 27-ந்தேதி மாலை வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    28-ந்தேதி காலையில் யாகசாலை பூஜைகள், தீர்த்தவாரியும், உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகமும், பூஜைகளும் கொடி இறக்கமும் நடைபெறும்.

    பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை, இருப்பிடம் சேருவதும் நடைபெறும்.

    இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில் இருக்கிறது, திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம். இங்கு திருமுருகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில் இருக்கிறது, திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம். இங்கு திருமுருகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருமுறை பாடல்கள் இடம்பெற்ற இந்தக் கோவில், மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. கோவிலுக்கு வெளிப்புறம் கொங்குநாட்டு தலங்களின் சிறப்புக்கு உரித்தான வகையில், கருங்கல்லால் ஆன தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு மற்ற கோவில் களைப் போல நுழைவு கோபுரம் என்று எதுவும் இல்லை.

    நான்கு புறமும் உயர்ந்த மதில்களை அரணாகக் கொண்டு, சுமார் 1 ஏக்கர் பரப்பரளவில் இந்தக் கோவில் இருக்கிறது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் காணப்படுகின்றன. கோவிலில் மூலவராக வீற்றிருக்கும், திரு முருகநாதர், சிவலிங்க வடிவில் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் வழிபடுவதற்கு முன்பாக, ‘மாதவிநாதர்’ என்று அழைக்கப்பட்ட இத்தல இறைவன், முருகப்பெருமான் பூஜித்து வழிபட்ட பிறகு ‘திருமுருகநாதர்’ என்று பெயர் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. 

    ஆலயத்தின் உள் பிரகாரத்தில் நிருதி விநாயகர், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர் மற்றும் நவக் கிரக சன்னிதிகள் உள்ளன. மூலவர் சன்னிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தருகிறார். இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் ஆவுடைநாயகியின் சன்னிதி அமைந்துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் கேது சன்னிதி இருக்கிறது. கேது கிரகம் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கின்றனர்.

    சேரமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருட்களுடன், சிவ யாத்திரையை மேற்கொண்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அப்போது சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், தன்னுடைய பூதகணங்களை அனுப்பி, சுந்தரரிடம் இருக்கும் பரிசுப் பொருட்களை கொள்ளையடிக்கும்படி கூறினார். சுந்தரர் திருமுருகன்பூண்டி அருகே வந்தபோது பூதகணங்கள், திருடர்கள் வேடத்தில் வந்து அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களை பறித்துச் சென்றனர். இதனால் கவலை அடைந்த சுந்தரர், திருமுருகன்பூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார்.

    இறைவன் நேரில் தோன்றி கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் சுந்தரரிடம் ஒப்படைத்தார். இதனை விளக்கும் வகையில் இக்கோவில் மண்டபத்தில் வில் ஏந்திய வேடுவன் கோலத்தில் சிவபெருமான் சிற்பமும், பரிசுப் பொருட்களை பறிகொடுத்த சுந்தரர் கவலையுடன் இருப்பது போன்றும், பின்னர் ஈசனால் பரிசுப்பொருட்களை திரும்ப பெற்று மகிழ்வாக இருப்பது போன்றும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இழந்த பொருளை மீண்டும் பெற்றிட பரிகாரத் தலமாக திருமுருகன் பூண்டி தலம் விளங்குகிறது.

    கோவிலின் உள்ளே சண்முக தீர்த்தமும், ஞான தீர்த்தமும் காணப்படுகின்றன. சித்த பிரமை பிடித்தவர்கள் இங்கு தங்கி நீராடி சுவாமியை வழிபட்டால் அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு மாசி மாதம் பெருந்திருவிழா நடக்கிறது. கார்த்திகை, சஷ்டி, விசாகம், பிரதோஷம், ஆடி அமாவாசை மற்றும் தமிழ் மாதம் முதல் திங்கள் அன்று ருத்ராபிஷேகம், சூரசம் ஹாரம், பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    திருப்பூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் திருமுருகன்பூண்டி திருக்கோவில் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல திருப்பூரில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இருக்கின்றன.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழாவையொட்டி தைத்தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா வருகிற 29-ந்தேதி வரை 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முகூர்த்தக்காலை இணை ஆணையர் அசோக்குமார் (கூடுதல் பொறுப்பு) , உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர்.

    தைத்தேர் திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரைவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் இரண்டாம் நாளான நாளை(புதன்கிழமை) காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் வீதியுலா வருகிறார்.

    நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 22-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும்,23-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 24-ந்தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார்.

    வருகிற 25-ந்தேதி நெல் அளவை கண்டருளிகிறார். 26-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந்தேதி காலை நடைபெறுகிறது.

    அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். 4.45 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.

    28-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    ×