search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்கூடல் அரியநாயகிபுரம் கைலாசநாதர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    முக்கூடல் அரியநாயகிபுரம் கைலாசநாதர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    நெல்லை, தென்காசி மாவட்ட கோவில்களில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

    நெல்லை, தென்காசி மாவட்ட கோவில்களில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அரியநாயகிபுரத்தில் அமைந்துள்ள அரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு காலை, மாலை மற்றும் இரவில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றது. கொடியேற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமார சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் காலையில் சுவாமி வீதி உலாவும், இரவில் சப்பர உலாவும் நடைபெறும். 5-ம் நாள் சட்டதேர் நிகழ்ச்சியும், 7-ம் நாள் முருகர் - சண்முகர் எதிர்சேவை காட்சியும், 9-ம் நாள் தேரோட்டமும், 10-ம் நாள் தைப்பூச திருவிழாவும் நடைபெறுகிறது.

    11-ம் நாள் சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்பும் வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.
    Next Story
    ×