search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கிழக்கு, வடக்கு வாசல்கள் திறப்பு

    ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்களை திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெள்ளை கோபுரம் கிழக்கு வாசல் மற்றும் தாயார் சன்னதி வடக்கு வாசல் ஆகியவை திறக்கப்பட்டன.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கொரோனா தொற்றுஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. மேலும் பக்தர்கள் இல்லாமல் பூஜைகளும் விழாக்களும் நடத்தப்பட்டன.

    பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் அரசு வழிகாட்டுதலின் படி கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பக்தர்கள் கோவிலின் பிரதான நுழைவாயிலான தெற்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவ நாட்களில் மட்டும் பக்தர்கள் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்று கிழக்கு வாசல் வழியாக வெளியே வர அனுமதிக்கப்பட்டனர்.

    திருவிழா முடிந்தவுடன் கிழக்கு வாசல் மூடப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தைத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உள்வீதிகளில் உலா வருவார். எனவே கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்களை திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை வெள்ளை கோபுரம் கிழக்கு வாசல் மற்றும் தாயார் சன்னதி வடக்கு வாசல் ஆகியவை திறக்கப்பட்டன. இந்த வாசல்கள் வழியாக பக்தர்கள் எப்போதும் போல் சென்று வரலாம் என கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.
    Next Story
    ×