என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஊதுபத்தி ஏற்றும் வழிபாட்டு முறையில் ஒரு தத்துவம் ஒளிந்திருப்பதாக சொல்கிறார்கள். அதை பற்றி விரிவாக அறிந்துகொள்வோம்.
    நம்மில் பலரும் இல்லத்து பூஜை அறையில், தெய்வ வழிபாடுகளைச் செய்யும் போது, தீப, தூபம் காட்டுவதும், ஊதுபத்தியை ஏற்றிவைப்பதும் வழக்கம். கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுபவர்களும் கூட, அர்ச்சனைப் பொருட்களோடு ஊதுபத்தியையும் சேர்த்தே வாங்கிச் சென்று இறைவனுக்கு சமர்ப்பிப்பார்கள். ஆலயங்களிலும், இல்லத்தின் பூஜை அறையிலும் ஊதுபத்தி ஏற்றி வைப்பது என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

    இந்த ஊதுபத்தி ஏற்றும் வழிபாட்டு முறையில் ஒரு தத்துவம் ஒளிந்திருப்பதாக சொல்கிறார்கள். அதை அறிந்துகொள்வோம். அதாவது, ஊதுபத்தியை ஏற்றி வைத்தவுடன், அதில் இருந்து நறுமணம் வெளிப்பட்டு, அறை முழுவதும் பரவுவதை உணரலாம். அது தெய்வீக சக்தியை இல்லத்திற்குள் பரவச் செய்வதாகும். ஏற்றி வைத்த ஊதுபத்தியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, இறுதியில் சாம்பல்தான் மிஞ்சும். தன்னையே சாம்பலாக்கிக் கொண்டு, தன்னை சுற்றியிருப்பவர்களை தன்னுடைய மணத்தால் மகிழ்விக்கும் சக்தி கொண்டது, ஊதுபத்தி. இது ஒரு தியாகத்தின் வெளிப்பாடு ஆகும்.

    இறைவனை உண்மையாக நேசிக்கும் பக்தர்கள், தன்னுடைய சுயநலத்தை விட்டொழிக்க வேண்டும். அவர்கள் சிந்தனை பொதுநலம் கொண்டதாக, பிரதிபலன் எதிர்பாராததாக இருக்க வேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையை மணம் வீசச் செய்வதே தெய்வீகச் செயலாகும். ஊதுபத்தி சாம்பலானாலும், அதன் மணம், காற்றில் கலந்திருக்கும். அதனை முகர்ந்தவர்களின், நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும். அதுபோலத்தான் வாழும்போது மற்றவர்களுக்காக நன்மை செய்து மறைந்தவர்களின் பேரும் புகழும் எப்போதும் மக்களிடையே நிலைத்திருக்கும்.

    இதுபோன்ற குணத்தைத் தான் ஊதுபத்தி குறிக்கிறது. இதுபோன்ற குணத்தை உடையவர்கள்தான் இறைவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள்.
    தெரியாத குலதெய்வத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.
    குலதெய்வ வழிபாடு தான் நம்முடைய குலத்தை காக்கும். குலதெய்வம் நம் வீட்டில் இல்லை என்றால் நம் குடும்பத்தில் சந்தோஷம் நிச்சயமாக இருக்காது. குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யவில்லை, குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வது இல்லை, குறிப்பாக குலதெய்வத்தை மனதில் கூட நினைப்பதில்லை என்றால், கஷ்ட நேரத்தில் மற்ற தெய்வங்களும் நமக்கு நிச்சயமாக துணையாக நிற்காது. குலதெய்வம் தெரிந்தவர்கள் குலதெய்வத்தை தினமும் மனதார நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை தரும்.

    தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும். ஒரு சிறிய டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துளசி இலையை போட்டு கொள்ளுங்கள். இந்த டம்ளர் தண்ணீருக்கு முன்பு நீங்கள் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை உச்சரிக்கவும். கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.

    ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே
    இஷ்ட தர்ஷய நமஹா

    தெரியாத குலதெய்வத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து முடித்த பின்பு, டம்ளரில் இருக்கும் தண்ணீரை குடித்து விட வேண்டும். இதேபோல தொடர்ந்து 48 நாட்கள் இரவு நேரத்தில், மேல் சொன்னபடி இந்த வழிபாட்டு முறையை செய்ய வேண்டும். கட்டாயமாக மந்திரத்தை நம்பிக்கையோடு உச்சரிக்க வேண்டும். இப்படி செய்தால் தெரியாத உங்கள் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்கு தெரியவரும் என்பது ஒரு நம்பிக்கை.

    நாற்பத்தி எட்டு நாட்களில் குலதெய்வம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றாலும் பரிகாரத்தை விட்டுவிட வேண்டாம். 90 நாட்கள் தொடர்ந்து இப்படி வழிபாட்டை மேற்கொள்ள நிச்சயமாக உங்களுடைய குல தெய்வத்தைப் பற்றிய ஏதாவது ஒரு தகவல், குல தெய்வத்தைப் பற்றிய விபரத்தை யார் மூலமாகவாவது நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான பெருவிழா நடைபெற்றது. சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு கண்கவர் வாணவேடிக்கை நடைபெற்றது.

    மயிலாடுதுறையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில், திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழா போன்று ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டிற்கான சப்தஸ்தான பெருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7 ஊர் சாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளும் சப்தஸ்தான விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.

    இதனையொட்டி ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர் பஞ்சமூர்த்திகளுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர், சோழன்பேட்டை அழகியநாதர், கூறைநாடு புனுகீஸ்வரர், சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர், திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர், மயிலாடுதுறை மாயூரநாதர் ஆகிய கோவில்களின் உற்சவ மூர்த்திகளுடன் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஒரே இடத்தில் எழுந்தருளினர்.

    பின்னர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் காட்சி கொடுக்கும் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து அங்கு அனைத்து சாமிகளுக்கும் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் பட்டு அணிவித்து வழிபாடு செய்தார். பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு கண்கவர் வாணவேடிக்கை நடைபெற்றது.
    கடலூர் கரையேறவிட்டகுப்பத்தில் கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், சமண சமயவாதிகளின் தூண்டுதலால் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி கடலில் வீசி எறிந்தார். அப்போது அப்பர் ‘சொற்றுணை வேதியன் சோதிவானவன்’ என தொடங்கும் நமச்சிவாய பதிகம் பாடினார். இதன் மூலம், அந்த கல் தெப்பமாக மாறியதை அடுத்து அப்பர் கரை சேர்ந்தார்.

    இதன் பின்னர் அவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளை வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. அப்பர் கரையேறிய இடம் தான், தற்போது கரையேறவிட்டகுப்பம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இது கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வண்டிப்பாளையம் அருகில் உள்ளது.

    அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு அப்பர் கரையேறும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிகழ்ச்சி நடைபெறவில்லை.

    இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சியை நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணியளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகி உடன் பாடலீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு, தேரடி தெரு, வண்டிப்பாளையம் மெயின்ரோடு வழியாக கரையேறவிட்டகுப்பத்தில் வந்தடைந்தார்.

    தொடர்ந்து காலை 8 மணியளவில் பாடலீஸ்வரருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அங்குள்ள குளத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெப்பத்தில் அப்பர் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறி அங்குள்ள மண்டபத்தில் தீபாராதனை நடந்தது. இதையடுத்து புதுவண்டிப்பாளையம் வீதி, அப்பர் சாலை, பழைய வண்டிப்பாளையம் கற்பக விநாயகர் கோவில் வீதி வழியாக சென்று மாலை 6 மணியளவில் வாகீசர் மண்டகப்படியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அதன் பிறகு இரவு 9 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை நடந்ததும், தேவார திருமுறை இன்னிசை பாராயணத்துடன் அப்பா் பெருமான், விநாயகா், பாடலீஸ்வரர், புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமியுடன் திருப்பாதிரிப்புலியூர் கோவிலை சென்றடைந்தனர். விழாவில் கடலூர் வண்டிப்பாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதத்தை நேற்று இரவு நிறைவு செய்தார்.
    சமயபுரம் மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமல் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைப்பார் என்பது ஐதீகம்.

    இந்நாட்களில் அம்மனுக்கு அபிஷேகங்கள், நைவேத்தியங்கள் செய்யமாட்டார்கள். அம்மனுக்கு தூள்மாவு, இளநீர், பானகம் ஆகியவை மட்டுமே படைக்கப்படும். சித்திரைத்தேர்த்திருவிழாவையெட்டி அம்மன் தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தன்று இரவு அம்மன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை நிறைவு செய்வார்.

    இதற்காக மாரியம்மனின் சகோதரியாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து ஏராளமான அபிஷேக திரவியங்கள், பட்டுவஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர்சாதம், காய்கறிக்கூட்டு ஆகியவை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு படைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு சமயபுரம் கோவில் தேரோட்டம் நேற்று காலை தொடங்கி மாலை வரை நடந்தது. இரவு 8 மணியளவில் திருவானைக்காவல் கோவிலில் இருந்து அபிஷேக திரவியங்கள், பட்டுவஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர்சாதம், காய்கறிக்கூட்டு மற்றும் தோசை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கோவில் பேஸ்கார் ஜெம்பு தலைமையில் அர்ச்சகர்கள். கோவில் ஊழியர்கள் மேளதாளங்கள் முழங்க. இரவு 11 மணியளவில் சமயபுரம் சென்றடைந்தனர். இந்த தளிகை மற்றும் சீர்வரிசை சமயபுரம் வந்தபின் அம்பாள் தேர்த்தட்டிலிருந்து இறங்கி கோவிலுக்குள் சென்று அங்கு அபிஷேக அலங்காரம் கண்டருளினார். பின்னர் தளிகை நிவேதத்துடன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை நிறைவு செய்தார்.
    கோடை காலத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறையையொட்டி திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
    கோடை விடுமுறையையொட்டி திருமலைக்கு வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

    கோடை காலத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறையையொட்டி திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    வைகுண்டம் காத்திருப்பு அறைகள், பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் சென்றவுடன் உடனுக்குடன் சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர், உணவு, பால், சிற்றுண்டி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களின் சேவையில் ஸ்ரீவாரி சேவார்த்திகள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பக்தர்களின் வருகை அதிகம் இருப்பதால் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் வி.ஜ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தலை முடி காணிக்கை செலுத்தும் பகுதியிலும் அதிக அளவில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட நேர இடைவெளியில் கல்யாண கட்டா பகுதியை சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருமலை அன்னதான கூடத்திலும் நள்ளிரவு 12 மணி வரை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகைக்கு தக்கவாறு லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 67,858 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,536 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    கும்பகோணத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஏழூர் பல்லக்கு ஊர்வலம் புறப்பாடு நடப்பது வழக்கம்.
    கும்பகோணத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஏழூர் பல்லக்கு ஊர்வலம் புறப்பாடு நடப்பது வழக்கம். இதில் ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை மற்றும் விநாயகர் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக கும்பகோணத்தை சுற்றி உள்ள திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை), தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று மீண்டும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலை வந்தடைவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி மகாமக குளத்தில் மங்களாம்பிகை- ஆதிகும்பேஸ்வரர் தீர்த்தவாரி நடந்தது.

    இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து, ஏழூர் பல்லக்கு ஊர்வலம் தொடங்கி நேற்று காலை திருக்கலயநல்லூர் எனும் சாக்கோட்டையில் உள்ள அமிர்தவள்ளி சமேத அமிர்தகலசநாதர் கோவிலையும், மதியம் தாராசுரம் காமாட்சி அம்மன் சமேத ஆவுடையநாதர் கோவிலையும் வந்தடைந்தது.

    தொடர்ந்து நேற்று மாலை திருவலஞ்சுழி பிரகன்நாயகி சமேத கபர்தீஸ்வரர் கோவிலை வந்தடைந்த பல்லக்கு ஊர்வலம் இரவு அங்கிருந்து புறப்பட்டு சுவாமிமலை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. நள்ளிரவு, கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசாமி கோவிலுக்கு வந்த பல்லக்கு ஊர்வலம், இன்று (புதன்கிழமை) அதிகாலை மேலக்காவேரி பகுதியில் உள்ள பெரியநாயகி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலுக்கு செல்கிறது.

    அதைத்தொடர்ந்து மீண்டும் ஆதிகும்பேஸ்வரர் சாமி கோவிலுக்கு ஊர்வலம் வருகிறது. இதை முன்னிட்டு இன்று இரவு ஆதிகும்பேஸ்வரர் வடக்கு வீதியில் சாமி மற்றும் அம்பாளுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நிறைவேறும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம்,  யானை, சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று முன்தினம் இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 10.30 மணி அளவில் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகள் ஒலிக்க காலை 11.35 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி, மகா சக்தி என்று பக்தி கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதி வழியாக தேர் வலம் வந்து மாலை 4 மணி அளவில் நிலையை அடைந்தது.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், நேற்று தேரோட்டம் நடைபெற்றதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் இரவே சமயபுரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.

    பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை உடுத்தி, கடும் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து இருந்தனர். கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் புனித நீராடி அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது.

    கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படும் பக்தர்களை மீட்கும் வகையில் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தெப்பகுளம், சமயபுரம் சந்தைபேட்டை ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் செய்து இருந்தது.

    இன்று (புதன்கிழமை) அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். நாளை (வியாழக்கிழமை) அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. 26-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் என்று பலப்பல ஹோமங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பெறலாம்.
    * கணபதி ஹோமம் - தடைகள் நீங்கும்.

    * சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலகும்.

    * சுதர்சன ஹோமம் - ஏவல், பில்லி, சூன்யம் நீங்கும், வெற்றி தரும்.

    * நவக்கிரக ஹோமம் - நவக்கிரக கேடு நீங்கி மகிழ்ச்சி தரும்.

    * ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.

    * மிருத்யுஞ்ச ஹோமம் - பிரேத சாபம் நீங்கும்.

    * புத்திர காமோஷ்டி ஹோமம் - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    * சுயம்வர கலா ஹோமம் - பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

    * கந்தர்வ ராஜம் ஹோமம் - ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

    * குபேர ஹோமம் - செல்வ வளம் தரும்.

    * தில ஹோமம் - இறந்தவர்களின் சாபம் நீங்கும்.

    * பிரத்யங்கரா ஹோமம் - எதிரிகள் தொல்லை நீங்கும்.

    இவைத் தவிர கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் என்று பலப்பல ஹோமங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பெறலாம்.
    சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.
    ஏகவுரி அம்மன் கோவில் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காளி கோவிலாகும். இக்கோவிலானது தஞ்சையிலிருந்து தஞ்சை-திருச்சி சாலையில் 12கிமீ தொலைவில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கிமீ தொலைவில் உள்ளது.

    பெயர்க்காரணம்

    முன்னொரு காலத்தில் தஞ்சாசுரன் என்னும் அசுரன் தஞ்சையில் வாழ்ந்தான். சிறந்த சிவபக்தனான அவன் தனது தவபலத்தால் மனிதர், தேவர், மும்மூர்த்திகள் இவர்களிடமிருந்து உயிர் பிரியாத வரத்தைச் சிவபெருமானிடம் பெற்றான். பல கொடுமைகள் செய்து வந்த அவனைப்பற்றி மக்கள், தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவன் தன் துணைவியான சிவசக்தியை ‘ஏ கௌரி‘, என்றழைத்து, தஞ்சாசுரனை அழிக்க ஆணையிடுகிறார். எருமைக்கிடா உருவம் தாங்கிய அசுரனின் கழுத்தை வெட்டி தலையை ஒரு கையில் ஏந்துகிறாள்.

    உடல் கீழே சாய்ந்ததும் அசுரன் எருமை உருவம் நீங்கி இறந்துவிடுகிறான். போர் புரிந்த இடத்தில் அம்மன் கோபமாக இருந்ததால் அப்பகுதியில் பஞ்சம், வறட்சி ஏற்பட்டது. சிவபெருமான் ஏகவுரி அம்மனிடம் தஞ்சாசுரனை அழித்ததால் கோபமாக உள்ளதைக் கூறி, கோபத்தைத் தணித்துக்கொண்டு அப்பகுதி மக்களுக்குத் தெய்வமாக இருந்து காப்பாற்றும்படி கூறுகிறார். வறட்சி, பஞ்சம் நீங்குகிறது. மக்கள் ஏகவுரி அம்மனை பூசை செய்து வணங்கினர். தஞ்சாசுரனை அழித்த நாளே ஆடி மாதக் கடைசி வெள்ளி அல்லது ஆடிக்கழிவு நாளாகும்.  பராந்தகசோழன் காலத்தில் வல்லத்துப்பட்டாரகி என்றும் இராஜராஜசோழன் காலத்தில் காளாபிடாரி கைத்தலைபூசல் நங்கை என்றும் இந்த அம்மன் அழைக்கப்பட்டுள்ளார்.

    கோவில் அமைப்பு

    தஞ்சைப் பிரகதீசுவரர் கோவில் கட்டுவதற்கு முன்பாகவே கட்டிய கோவிலாக இக்கோவில் இருந்துள்ளது. கோவிலின் நுழைவாயில் முதல் பெரிய சுற்றுப்பாதை ஒரு கோட்டையைப் போல பாதுகாப்பாக உள்ளது. கருவறையில் சுமார் 6 அடி உயரத்தில் சுடருடன் எட்டுத் திருக்கரங்களில் படைக்கலன் ஏந்தி, சுதை வடிவத்தில் ஏகௌரியம்மன் காட்சியளிக்கிறாள்.

    திருவிழா

    ஆடிப்பதினெட்டு அன்று வல்லம் கடைவீதியிலுள்ள மாரியம்மன் கோவில் விழாவோடு ஏகவுரி அம்மன் கோவில் திருவிழா நடத்தப்பெறுகிறது. ஏகவுரி அம்மன், மாரியம்மன், அய்யனார் ஆகிய உற்சவமூர்த்திகளைத் தனித்தனியே அலங்கரித்து வீதி உலா நடத்துகின்றனர். ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை ஆடிக்கழிவு திருவிழா நடைபெறுகிறது. தீமிதி, அம்மனுக்கு பகலில் சைவ பூசை, தொடர்ந்து இரவில் எருமைக்கிடா பூசை போன்றவை நடத்தப்பெறும். கோவில் காவல் தெய்வங்களுக்கு ஆடு,கோழி வெட்டி பூசை செய்கின்றனர். இத்திருவிழாவைக் காண வல்லம் அருகில் வாழும் மக்களும் ஈரோடு, இராமநாதபுரம், கோவை, பெங்களூர் ஊர்களிலிருந்து வரும் மக்களும் கலந்துகொள்கின்றனர்.

    இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவில் தேவிக்கு நடத்தப்படும் சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ரா பௌர்ணமி விழா அடங்கும். சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.
    108 நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் வாத்திய கருவிகளை இசைக்க உற்சவர் பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
    கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகு முத்து அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பின் பகுதியில் அழகர் சித்தர் கிணற்றில் ஜலசமாதி அடைந்துள்ளார்.

    இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை அன்று சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடை பெறுவது வழக்கம்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடை பெறாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று முன்தினம் காலை மலட்டாற்றில் இருந்து கரகங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள மாரியம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் உற்சவம் நடைபெற்றது.

    தொடர்ந்து அழகு முத்து அய்யனார் மற்றும் அழகர் சித்தர் சன்னதியில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    திருக்கல்யாண உற்சவத்தில் 108 நாதஸ்வர இசை க்கலைஞர்கள் வாத்தியங்கள் இசைத்த காட்சி.

    பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை மலட்டாற்றில் இருந்து காவடியும், பொன்னி அம்மன் ஆலயத்தில் இருந்து கரகமும் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்ததும் அழகர் சித்தர் பீடத்தில் விசே‌ஷ பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து மாலையில் தென்னம்பாக்கம் ஆற்றிலிருந்து அழகர் எழுந்தருளினார். பின்னர் வேடசாத்தான் ஆலயத்திலிருந்து கரகம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து 108 நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் வாத்திய கருவிகளை இசைக்க உற்சவர் பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதில் கடலூர் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு சாமி வீதி உலா நடைபெற்றது.
    ராகு-கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள், இந்த மந்திரத்தைத் தினமும் 9 முறை கூறி வந்தால் ராகு-கேதுவால் ஏற்படும் துன்பங்கள் வெகுவாக குறையும்.
    ராகு-கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள், ராகு காலத்தில் துர்க்கை தேவி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தினமும் ராகுவுக்குரிய சுலோகத்தை பாராயணம் செய்து வருவது நன்மையளிக்கும்.

    நாகத் துவாஜாய வித்மஹே

    பத்ம ஹஸ்தாய தீமஹே

    தந்நோ ராகு ப்ரசோதயாத்

    அச்வ த்வஜாய வித்மஹே

    சூல ஹஸ்தாய தீமஹி

    தந்நோ கேது ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தைத் தினமும் 9 முறை கூறி வந்தால் ராகு-கேதுவால் ஏற்படும் துன்பங்கள் வெகுவாக குறையும்.
    ×