என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பசியும், தாகமும் ஒரு நோன்பாளியை படாதபாடு படுத்தும்போதும், தமக்கு எட்டிய தொலைவில் உணவும், பானமும், துணைவியும் இருந்த போதிலும் அவற்றை தொடாமல், அனுபவிக்காமல் விலகிச் செல்வது அவரின் மனஉறுதியை பலப்படுத்துகிறது.
மனிதன் மனோ இச்சைகளுக்கு முன்பு பலவீனம் அடைந்து விடுகின்றான். எனவே, அவற்றை எதிர் கொண்டு, தம்மை பலப்படுத்திக் கொள்ள நான்கு வகையான அம்சங்கள் தேவை . அவை : 1) இறை நம்பிக்கையில் உறுதி, 2) மனவலிமை , 3) உறுதியான எண்ணம், 4) சாந்தம் போன்றவை ஆகும்.
ஒரு நோன்பாளி சூரியன் உதயமானதிலிருந்து அது அஸ்தமனம் ஆகும் வரைக்கும் உண்ணாமலிருப்பது, பருகாமலிருப்பது, மனோ இச்சைகளை கட்டுப்படுத்தி இருப்பது ஆகிய அனைத்தும் நோன்பாளியின் இறை நம்பிக்கையை பலப்படுத்துகிறது.
பசியும், தாகமும் ஒரு நோன்பாளியை படாதபாடு படுத்தும்போதும், தமக்கு எட்டிய தொலைவில் உணவும், பானமும், துணைவியும் இருந்த போதிலும் அவற்றை தொடாமல், அனுபவிக்காமல் விலகிச் செல்வது அவரின் மனஉறுதியை பலப்படுத்துகிறது.
அனைத்தையும் அனுபவிக்க ஏகபோக உரிமை இருந்தும், அவருக்கு அதன் மீது நாட்ட மில்லாமல் இருப்பது அவரின் உறுதியான எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
அவர் அனைத்தையும் தாங்கும்போது எதையும் தாங்கும் இதயமும், பொறுத்துக் கொள்ளும் சாந்தமும் அவருக்கு உண்டாகிவிடுகிறது. இந்த நான்கு வகையான செயல்களால் ஒரு நோன்பாளி பலம் பெற்று தமது நோன்புகளை தொடர முடிகிறது.
‘ஈமான் கொண்டோர்களே ! உங்களுக்கு முன்இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்’. (திருக்குர்ஆன் 2:183)
மேலும், நோன்பு தமது பசியின் கொடுமையை உணர்வதன் மூலம், ஏழைகளின் பசியையும் உணர்த்துகிறது. நமக்கு உணவளித்த இறை வனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்திட வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது.
நோன்பு நான்கு விதமான நோக்கங்களுக்காக நோற்கப்படுகிறது.
1) ஆன்மிக நோன்பு, 2) அரசியல் நோன்பு, 3) ஆரோக்கிய நோன்பு, 4) அழகிய நோன்பு
ஆன்மிக நோன்பு என்பது மதம் சார்ந்த கடமை . அது இறைவனின் ஆணைக்கிணங்க , அவனின் திருப்தியை பெற நோற்கப்படுகிறது. அரசியல் நோன்பு என்பது ஒருவர் தமது உரிமைக்குரலை அரசாங்கத்தின் பக்கம் தெரிவிக்க , அரசின் கவனத்தை பெ ற உண்ணாவிரதம் மேற்கொள்வது.
ஆரோக்கிய நோன்பு என்பது மருத்துவரின் அறிவுரையின்படி ஒரு சில உணவுகளை சில காலங்கள் வரைக்கும் தவிர்த்து கொள்ளும்படி அவரின் கூற்றை ஏற்று உண்ணாமல் இருப்பது, பத்தியம் இருப்பது. அழகிய நோன்பு என்பது உடல் எடை கூடாமல் இருக்க , அழகிய தோற்றம் பெற உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வது.
இந்த நான்கு வகை காரணங்களுக்காக உண்ணாமல், பருகாமல் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆன்மிக நோன்பு நோற்கும் போது, கடமையும் நிறைவேறுகிறது. இறைவனின் திருப்தியும் கிடைத்துவிடுகிறது. இத்துடன் அனைத்துவித உடல்சார்ந்த நலன்களும், உலகம் சார்ந்த பயன்களும் கிடைத்து விடுகிறது.
‘ரமலானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
இறையச்சம், இறையருள், பாவமன்னிப்பு, உடல் ஆரோக்கியம் உள்பட ஏராளமான நற்பாக்கியங்களைத்தரும் ரமலான் நோன்பை இறைவன் வகுத்த வழியில் கடைப்பிடித்து நன்மைகள் பெறுவோம், ஆமீன்.
அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,
திருநெல்வேலி டவுண்.

சென்னைக்கு லட்சக்கணக்கான லட்டுகள் கொண்டு சென்றதாலும், தற்போது அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதாலும் லட்டு பிரசாதம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் ஒரு குடும்பத்திற்கு 2 லட்டுகள் மட்டும் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூடுதலாக எவ்வளவு லட்டுக்கள் கேட்டாலும் வழங்கப்பட்டு வந்தது.
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் தங்கும் விடுதி மற்றும் கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் வழங்கப்பட்டு வந்தது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் திருக்கல்யாணம் நடந்தது.
திருக்கல்யாணத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருப்பதியில் இருந்து கொண்டு சென்ற லட்சக்கணக்கான லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
சென்னைக்கு லட்சக்கணக்கான லட்டுகள் கொண்டு சென்றதாலும், தற்போது அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதாலும் லட்டு பிரசாதம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தரிசனத்திற்கு வரும் ஒரு குடும்பத்திற்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 66,745 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,780 பேர் முடி காணிக்கை செலுத்தினார். ரூ 5.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இதையும் படிக்கலாம்...எந்த திசை பக்கம் தலைவைத்து படுக்கக்கூடாது...

தொன்று தொட்டு நம் மூதாதையர்கள் பல சம்பிரதாயங்களைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவற்றில் ஒன்றுதான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும்.
தொன்று தொட்டு நம் மூதாதையர்கள் பல சம்பிரதாயங்களைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்கள் அவை. அவற்றில் ஒன்றுதான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும்.
பொதுவாக வடக்கிலே தலை வைத்துப் படுத்தால் வம்சம் விருத்தியடையாது என்பார்கள்.
ஆனால் வடக்கிலே வாழை குலை தள்ளினால் வம்ச விருத்தி ஏற்படும். வாரிசு இல்லாத வீட்டில் வாரிசு உருவாக வழிபிறக்கும்.
தெற்கில் தலை வைத்துப் படுப்பதும் அவ்வளவு நல்லதல்ல.
கிழக்கு மேற்கு தான் தலை வைத்துப் படுத்துத் தூங்குவதற்கு ஏற்றதிசையாக ஆன்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்குப் பக்கம் பார்த்து தலைவைத்துத் தூங்குவதே கீர்த்தியைத் தரும். காரணம் ராஜகிரகமான சூரியன் உதிக்கும் திசை அது.

சென்னை நகரைச்சுற்றி ஏராளமான பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி பார்ப்போம்.
சென்னை நகரைச்சுற்றி ஏராளமான பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் உள்ளிட்டவைதான் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
காளிகாம்பாள் கோவில்: சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார். முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.
திருநீா்மலை ரங்கநாதர்: தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருநீர்மலை. பல்லாவரத்தில் இருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால், இந்த ஊரை அடையலாம். திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆலயம், மலைக் குன்றின் மீது அமைந்திருக்கிறது. மலையின் அடிவாரத்திலும் சிறிய கோவில் உள்ளது. இங்கு நீர்வண்ணப்பெருமாள் வீற்றிருக்கிறார். மலையின் மீதுள்ள ஆலயத்தில் ரங்க நாதர் அருளாட்சி செய்கிறார். கோவிலுக்கு எதிரே ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.
மருந்தீஸ்வரர் கோவில்: சென்னை, திருவான்மியூர் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோவில். இங்கு மூலவராக சிவபெருமான் வீற்றிருக்கிறார். நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். அதோடு, அகத்திய முனிவருக்கு, தெய்வீக மருந்து முறைகளை உபதேசம் செய்ததாலும், இவருக்கு இப்பெயர் வந்தது. தேவாரப் பாடல்கள் பெற்ற 274 திருக்கோவில்களில் இந்த ஆலயமும் ஒன்று. இந்தக் கோவில் அமைந்த சாலை, அந்த காலத்தில் சோழ நாட்டை, பல்லவ நாட்டோடும், ஆந்திராவில் ஆட்சி செய்த சில ராஜ்ஜியங்களோடும் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கியதாக சொல்லப்படுகிறது.
ஜெகந்நாதர் கோவில்: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து விலகி, ரெட்டிக்குப்பம் சாலையில் கானாத்தூர் என்ற இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பூரிஜெகந்நாதர் கோவிலை போன்ற வடிவமைப்பிலேயே இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ளதுபோலவே, இங்கும் ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரை தரிசிக்க முடியும். தெய்வங்களின் சிலைகளும், பூரியில் உள்ளது போலவே மரத்தால் செய்யப்பட்டவைதான். இதற்காக வேப்ப மரத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதான தெய்வங்களைத் தவிர யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் வெண் சலவைக் கற்களாலும், கருப்புப் பளிங்கு கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. பளிங்கு கருங்கல் காஞ்சிபுரத்தில் இருந்தும், வெள்ளை சலவைக் கல் ராஜஸ்தானில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.
தேவி கருமாரியம்மன்: சென்னை புறநகர் பகுதியில் மேற்கு பக்கத்தில் உள்ளது திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். புராண காலத்தில் இந்தப் பகுதியில் மருத்துவக் குணம் மிகுந்த மூலிகை வனம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தெய்வீக மூலிகை (வேர்) நிறைந்த வனம் என்பதால், இந்த பகுதி ‘திருவேற்காடு’ என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இந்த ஆலய அம்மன், குறி சொல்லும் பெண் வேடத்தில் சூரிய பகவானை பார்க்க அவரது இருப்பிடம் சென்றாள். ஆனால் அன்னையை அடையாளம் கண்டுகொள்ளாத சூரியபகவான், அவளுக்கு உரிய மரியாதை தராததோடு, அவமரியாதையும் செய்தான். இதையடுத்து சூரியனின் இடத்தில் இருந்து அன்னை புறப்பட்ட மறுநொடி, சூரியன் தன்னுடைய ஒளியை இழந்தான். இதனால் உலக உயிர்களும் துன்பத்தில் துவண்டன. தன் தவறை உணர்ந்த சூரியன், அன்னையிடம் மன்னிப்பு கோரினான் என்று தல வரலாறு சொல்கிறது. இதனால் சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆலயத்தில் அருளும் கருமாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்படு கின்றன.
சுப்பிரமணியர் ஆலயம்: சென்னையை அடுத்துள்ளது, பழமையும் பெருமையும் வாய்ந்த குன்றத்தூர். பல்லாவரத்தில் இருந்து மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்இந்த ஊர் இருக்கிறது. இங்குள்ள முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர், வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரிய புராணம் என்னும் 63 நாயன்மார்களின் வரலாற்றை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலமாக குன்றத்தூர் குறிப்பிடப்படுகிறது.

இந்த ஊர்வலத்திற்கு முன்னால் தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் கையில் கத்திகளுடன் தீசுக்கோ, தீசுக்கோ என்று சத்தமிட்டு ஆடியபடி வந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை 4-15 மணிக்கு நடக்கிறது.
விழாவையொட்டி ஒவ்வொரு சமூகத்தினரும் கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். அதன்படி தேவாங்கர் சமூகம் சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
உடுமலை பூமாலை சந்தில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதில் ஒரு வாழைப்பழத்தில் கத்தி சொருகப்பட்டு அந்த கத்தியில் தீர்த்தக்குடம் நூல்களால் கட்டி தொங்க விடப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இந்த ஊர்வலத்திற்கு முன்னால் தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் கையில் கத்திகளுடன் தீசுக்கோ, தீசுக்கோ என்று சத்தமிட்டு ஆடியபடி வந்தனர். அப்போது அவர்கள் உடலில் கத்தி போட்டு வந்ததில் ரத்தம் சொட்டியது. உடலில் ரத்தம் சொட்ட, சொட்ட பக்தி பரவசத்துடன் கத்தி போட்டுக்கொண்டே ஆடியபடி சென்றனர். இந்த காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த ஊர்வலத்தில் பெண் கள் தீர்த்தக்குடம் எடுத்து சென்றனர்.
இந்த ஊர்வலம் தளி சாலை, சீனிவாசா வீதி, வ.உ.சி.வீதி, பசுபதி வீதி, வடக்கு குட்டைவீதி, பெரிய கடைவீதி வழியாக பொள்ளாச்சி சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று மாலை நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் உடுமலை மாரியம்மன் கோவிலில் திரண்டுள்ளனர்.

கும்பகோணத்தில் ஏழூர் பல்லக்கு விழாவை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழூர் பல்லக்கு விழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை மற்றும் விநாயகர் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று மீண்டும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலை வந்தடையும் ஏழூர் பல்லக்கு ஊர்வலம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து, ஏழூர் பல்லக்கு ஊர்வலம் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி மற்றும் அம்பாளுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நேற்று இரவு ஆதிகும்பேஸ்வரர் கீழ வீதியில் நடந்தது.
அப்போது கயிற்றில் கட்டப்பட்ட பொம்மை மூலம் பல்லக்கில் எழுந்தருளி இருந்த ஆதிகும்பேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை அம்மனுக்கு பூ போடப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமந்திர நூலை இயற்றியவர், திருமூலர். இவர் தன்னுடைய மூவாயிரம் ஆண்டு வாழ்நாளில் 3 ஆயிரம் பாடல்கள் நிரம்பிய இந்த நூலை உருவாக்கினார். இதில் இருந்து 10 பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
சுத்தசிவன் குருவாய் வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவன்என்று அடிபணிவாரே.
விளக்கம்:-
உலகின் எல்லாப் பொருட்களிலும் இயல்பாகக் கலந்து இருக்கும் சிவபெருமான், குருவாக வந்து உயிரைத் தூய்மை செய்து அருள் வழங்குவதை, அறிவற்றவர்கள் எவரும் அறியமாட்டார்கள். அதைவிடுத்து, அந்தக் குருவும் நம்மில் ஒருவர்தான் என்பார்கள். ஆனால் புண்ணியப் பிறவியான நல் உயிர்கள், சிவபெருமானை இனம் கண்டு, ‘நம் தலைவன் இவர்’ என்று பணிந்து வணங்குவர்.
பாடல்:-
இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள
நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின் வையம் வாழுமே.
விளக்கம்:-
ஒரு நாட்டின் இன்பமும், துன்பமும் அந்த நாட்டில் உள்ளவர்கள் செய்யும், நல்ல செயல்களாலும், தீய செயல்களாலும் விளைபவை. அதனால் நாட்டை ஆளும் வேந்தன் நாள்தோறும் ஆராய்ந்து, நல்லவர்களை காத்தும், தீயவர்களுக்கு தண்டனை வழங்கியும் சமுதாயத்தைக் காத்தால், உலகம் நன்கு செழித்து வாழும்.
பாடல்:-
அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன் அருளாமே.
விளக்கம்:-
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ‘அவம்’ என்ற சொல் ‘ஆணை’ என்ற பொருளைத் தருகிறது. அதன்படி ஆணையின் பிறப்பிடமே சிவத்தின் இருப்பிடம் என்பதை அறியாதவர்கள், எதையுமே அறியாதவர்கள்தான்.
மாறாக ஆணையின் பிறப்பிடம் சிவனின் இருப்பிடம் என்பதை அறிந்து உணர்ந்தவர்கள், அனைத்தும் அறிந்தவர்கள் ஆவர். ஆணையும், அதைப்பிறப்பிக்கும் ஈசனும் ஒன்றென உணரும் அருள் அறிவானது, சிவபெருமானின் அருளைப் பெற்றால் மட்டுமே கிடைக்கும்.
அந்த அருளைப் பெற்றவர்கள், ஒவ்வொரு ஆணையையும் சிவமாகவும், அவனின் கட்டளையுமாகவே இருப்பதை உணர்ந்துகொள்வார்கள்.
பாடல்:-
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத்
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றேன் அறைஓர் சிவயோகத்தை
ஏற்றுகின்றேன் எம்பிரான் ஓர் எழுத்தே.
விளக்கம்:-
இறைவன் திருவடியை நான் வழிபடுகின்றேன். அந்தப் பெருமானை புகழ்கின்றேன். அவன் அறிவுறுத்திய ஞானத்தால் தெளிவடைகின்றேன். சிவனின் திருவடியை சேர, அதற்குரிய பட்சாட்சரமான ஐந்தெழுத்து மந்திரத்தை கூறுகின்றேன். சக்கரத்தையும், சிவமந்திரத்தையும் சொல்கின்றேன். அந்த மந்திரத்தின் எழுத்தாகிய சிகரத்தைச் சிந்திக்கின்றேன்.
பாடல்:-
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயிராய் நிற்கும்
ஓசை அதன்மணல் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணர வல்லார்க்கே.
விளக்கம்:-
மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து, சிவபெருமானை உணருங்கள். அப்படி உணர்பவர்களுக்கு, அவர்களுக்குள் இருந்து ஓசை ஒன்று வெளிப்படும். அது பூவில் இருந்து வெளிப்படும் நறுமணம் போலவும், ஈசனின் சொரூபமாகவும், தேவர்கள் முதலிய அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் பாச உணர்வாகவும், அந்த பாசத்தின் கருணையால் உயிருக்குள் உயிராகவும் கலந்து நிற்கும்.
பாடல்:-
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணைஅடிக் கீழே.
பொருள்:-
பல கோடி ஆண்டுகள், தியானத்தின் வழியாக இந்த உடலோடு வாழ்ந்தேன். பகல் எது, இரவு எது என்று அறியாத வகையில் தவயோகத்தில் நான் என்னை மறந்து இருந்தேன். தேவர்கள் அனைவரும் வழிபட்டு பேறுபெறும் திருவடியை நானும் வணங்கி துதித்தபடி இருந்தேன். என் தலைவன் நந்தியம்பெருமான் திருவடியே துணை என்று அதனை இறுகப்பிடித்தபடி, பற்று இன்றி இருந்தேன்.
பாடல்:-
தூய விமானமும் தூலம் அது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகும் நற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே.
விளக்கம்:-
கோவில் கருவறையின் மேல் பருப்பொருளாக விளங்கும் விமானம், சிவவடிவம் ஆகும். சதாசிவ வடிவம் என்பது கருவறையில் சூட்சுமப் பொருளாக இருப்பதாகும். பரந்த பலிபீடம் சிவலிங்கமாம். இப்படி கோவிலின் ஒவ்வொரு பகுதியும் சிவமே ஆகும்.
பாடல்:-
கூடும் உடல் பொருள் ஆவி குறிக் கொண்டு
நாடி அடிவைத்து அருள் ஞான சக்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவனாங் குறிக் கொண்டே.
விளக்கம்:-
உயிர், அதன் நல்வினை மற்றும் தீவினைக்கேற்ப உடலைப் பெறுகின்றது. உடம்பு, அதனால் பெறப்பட்ட பொருள், உடலின் உள்ளே அமைந்த உயிர் ஆகியவற்றை, தன்னுடைய அன்பால் ஈர்த்து, தன்னுடைய திருவடியில் வைத்து அருள் ஞான சக்தியை வழங்குபவர், சிவபெருமான். எனவே நாம் அனைவரும் துன்பத்திற்கு காரணமான பற்றை அறவே நீக்கினால், அதுவரை மறைவாக அருள் செய்த ஈசன், பின் நேரடியாகவே அருள் செய்வார்.
பாடல்:-
மேலும் முகடு இல்லை; கீழும் வடிம்பு இல்லை;
காலும் இரண்டு; முகட்டு அலகு ஒன்றுஉண்டு;
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.
விளக்கம்:-
வீட்டைப் போல விளங்கும் இந்த உடம்புக்கு, தலைக்கு மேல் முகடு ஒன்றும் இல்லை. தலைக்குக் கீழே விளிம்பும் இல்லை. இரண்டு கால்கள் இருக்க, உடம்பை இறுக்கிக் கட்டத் தவறி விட்டனர். ஓலை கொண்டு வீட்டை மேய்ந்தவர், இடையை கட்ட மறந்துபோயினர். படைப்பவனின் பணியால் உருவான வெறும் கோவில் போன்றது இந்த உடம்பு. இதனை உணர்ந்து நல் உணர்வு பெற வேண்டும்.
பாடல்:-
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோன்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவி நற்காரணி தானே.
விளக்கம்:-
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவளாக அன்னை ஆதிபராசக்தி இருக்கிறாள்.
அந்த சக்தியின் அருளால், அயன் என்னும் பிரம்மன், அரி என்னும் திருமால், அரன் என்னும் சிவன் என பல தெய்வங்கள் தோன்றி, வெவ்வேறு (படைத்தல், காத்தல், அழித்தல்) பணிகளைச் செய்வர்.
பொன்னில் இருந்து பல அணிகலன்கள் உருவாவது போல, அந்த சக்தி, தன்னுடைய ஆருயிரில் இருந்து பலவற்றைத் தெய்வமாக்குவாள். மூவருக்கும் அவளே முதன்மையானவள் ஆவாள்.

நாளை கள்ளழகருக்கு (21-ந்தேதி) உற்சவ சாந்தி நடத்தப்படுகிறது. அத்துடன் மதுரை சித்திரை திருவிழா முடிவுக்கு வருகிறது.
புகழ்பெற்ற கள்ளழகர் சித்திரை திருவிழா மதுரையில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அழகர் மலையில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் வழிநெடுக பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
16-ந்தேதி கள்ளழகர் பச்சைபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் நடந்தது. தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். பக்தர்களுக்கு தசாவதார கோலங்களில் அழகர் அருள்பாலித்தார். அதன்பிறகு பல்வேறு மண்டகப்படி களுக்கும் சென்ற கள்ளழகர் நேற்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர் மலை நோக்கி புறப்பட்டார்.
வழிநெடுக அவருக்கு பக்தர்கள் கோவிந்த கோஷத்துடன் வரவேற்பு அளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு பூக்களை தூவி கள்ளழகரை மனமுருகி வணங்கி வழியனுப்பினர். கருப்பண்ண சுவாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனதை தொடர்ந்து பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகருக்கு புதூர், மூன்றுமாவடி, சுந்தரராஜன்பட்டி பகுதி மண்டகப்படிகளில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு அப்பன் திருப்பதியில் பக்தர்கள் கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்தனர். அதன்பிறகு கள்ளந்திரி வழியாக பக்தர்கள் புடைசூழ அழகர்மலையை சென்றடைந்தார் கள்ளழகர். நாளை (21-ந்தேதி) உற்சவ சாந்தி நடத்தப்படுகிறது. அத்துடன் மதுரை சித்திரை திருவிழா முடிவுக்கு வருகிறது.

விண்ணவர் போற்றும் திருமலைவாசனின் அடியார்கள் வார நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேலாகவும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் அருள்நிறை திருமலையாம் திருப்பதிக்கு வருகை புரிகிறார்கள்.
திருப்பங்களைத் தரும் ஆலயங்களில் முக்கிய இடம், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு உண்டு. தினசரி இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டும். திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவம் என்பது மிகவும் பிரபலமான திருவிழா என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சகல உயிரினங்களையும் படைப்பவர் பிரம்மா. அவரது படைப்பு களாக இருக்கும் அனைத்து உயிர்களும் நலமாகவும், வளமாகவும் வாழ, பிரம்மாவால் நடத்தப்படும் உற்சவம் `பிரம்மோற்சவம்' ஆகும். இந்த விழாவானது பத்து நாட்களுக்கு குறையாமல் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரையில் நடப்பது வழக்கம்.
தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவருவதை பிரசவம் என்கிறோம். அதேபோல், ஆலயத்தின் கருவறையில் மூலமூர்த்தியாக எழுந்தருளியுள்ள எல்லாம் வல்ல பரம்பொருளின் இறைசக்தியை, உற்சவரின் திருமேனிக்கு எழுந்தருளச்செய்து சுவாமி வீதி உலா வருகிற இனிமையான வைபவம் உற்சவம் ஆகும். பொதுவாக, கோவில்களில் பன்னிரண்டு மாதங்களிலும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாத உற்சவம் ஒரு கோவிலிலும், கார்த்திகை மாத உற்சவம் மற்றொரு கோவிலிலும் என்று கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதன் முக்கிய அம்சமாக சுவாமி திருவீதி உலா வருவது வழக்கம். அதாவது கடவுளே பக்தர்களை நாடித்தேடி வந்து அருள்புரிவதாக ஐதீகம்.
விண்ணவர் போற்றும் திருமலைவாசனின் அடியார்கள் வார நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேலாகவும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் அருள்நிறை திருமலையாம் திருப்பதிக்கு வருகை புரிகிறார்கள். வருடத்தில் உள்ள 365 நாட்களில் 425 விதவிதமான திருவிழாக்கள் மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடத்தப்படும் அரிய பெருமை திருமலை வேங்கடவனுக்கல்லாமல் வேறு தெய்வ மூர்த்திக்கு இருக்குமா என்பது சந்தேகமே..! இவை அனைத்துக்கும் மகுடம் சூட்டும் விதமாக, செப்டம்பர் மாதம் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவம் மிகவும் முக்கியமான விழாவாக கருதப்படுகிறது. அந்த விழாவில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகை புரிகிறார்கள்.
சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோவில் ஒன்றை எழுப்பினார். சுவாமியைத் தரிசிப்பதற்காக வந்த முப்பத்துமுக்கோடி தேவர்கள் கூடியிருக்கும் தருணத்தில் பெருமாளுக்கு பெரும் விழா நடத்த அனுமதி வேண்டினார் பிரம்மன். அதற்கு பரம்பொருளும் இசைந்தது. அன்றுமுதல் தொடங்கியதுதான் திருமலையின் பிரம்மோற்சவம்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஜம்புகேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தைப்பற்றி இங்கே பார்ப்போம்.
மூலவர்: ஜம்புகேஸ்வரர்
உற்சவர்: சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்: வெண் நாவல்
தீர்த்தம்: நவ தீர்த்தங்கள், காவிரி
சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், தேவாரப்பாடல்கள் இடம்பெற்ற 274 சிவாலயங்களில் 60-வது தலம் ஆகும்.
சிவன் கட்டளைப்படி, அம்பாள் பூமியில் மானிடப்பெண்ணாக அவதரித்தார். அப்போது காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டார். அந்த லிங்கத்தில் எழுந்தருளி, சிவபெருமான் அம்பாளுக்குகாட்சிகொடுத்தார். இதனால் இத்தலம் பஞ்ச பூததலங்களில் ‘நீர் தலம்’ ஆனது.
இத்தல இறைவனான ஜம்புகேஸ்வரர், இங்கே சுயம்புமூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார்.
தனக்கு ஏற்பட்ட பாவத்தைப்போக்க பிரம்மதேவன் இத்தல இறை வனை வழிபட்டுள்ளார். அதேபோல் விலங்குகளில் யானை , சிலந்தி வழிபட்ட தலமாக இந்த திருத்தலம் உள்ளது.
அம்மனின் 51 சக்தி பீடங்களில், இத்தலம் ‘ஞான சக்தி பீட’மாக உள்ளது.
இங்குள்ள ஜம்புகே ஸ்வரரை , அம்பாள் அகிலாண்டே ஸ்வரி தினமும் உச்சிகாலப்பொழுதில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே அந்த நேரத்தில்
அம்மனுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை , கிரீடம், மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க, சிவன் சன்னிதிக்கு சென்று பூஜை செய்வார். இதனை அம்பாள் பூஜிப்பதாகவே கருதுகிறார்கள்.
சுவாமி சன்னிதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி, நின்ற நிலையில் வீணை இல்லாமல் காட்சி தருகிறார். அருகில் கார்த்திகை , ரோகிணியுடன் சந்திரன் வீற்றிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் ஆடிவெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.
நாவல் மரத்துக்கு ‘ஜம்பு’ என்று பெயர் உண்டு. அந்த மரத்தின் கீழ், அம்பாள் பிடித்த நீர் லிங்கம் அமைந்ததால், இத்தல இறைவன் ‘ஜம்புகே ஸ்வரர்’ ஆனார்.
ஜம்புகேஸ்வரர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தின் எதிரே வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் வழியாகத்தான் இறைவனை தரிசிக்க வேண்டும்.
குபேரன் பூஜித்த குபேரலிங்கம், ஜம்பு தீர்த்தங் கரையில் அமைந்துள்ளது. இவருக்கு ஆனி மாத பவுர்ணமி அன்று முக்கனியைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
கணவன் - மனைவி ஒற்றுமைக்கு, நல்லவரன் அமைய, விவசாயம் செழிக்க , தண்ணீர் பஞ்சம் நீங்க இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருவானைக்காவல் திருத்தலம்.

புத்தம்புதிய மண் பாத்திரத்தில் வைத்து எடுத்து செல்லும் தயிர் சாதம் மட்டும் குலசேகர ஆழ்வார் படியை தாண்டி திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
திருமலை மடைப்பள்ளியில் சுவாமிக்கு நிவேதனம் தயாராவதை சீனிவாசப் பெருமாளின் தாயாரான வகுளவல்லி மேற்பார்வை செய்வதாக ஐதீகம். வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, கேசரி பாத், சர்க்கராபாத், ஜீராபாயசம், மோளா, ஹோரா, கதம்பசாதம், பகாளாபாத், பருப்பு வடை, பானகம், அப்பம், ஜிலேபி, மனோகரம், ஹோலிபூ, தேன்குழல், கயாபடி, வட்டபடி, மாவுதோசை, நெய்தோசை, வெல்லதோசை, லட்டு ஆகிய நிவேதனங்கள் தயாராகின்றன. மேலும், சித்ரான்னம், வடை, முறுக்கு, அதிரசம், போளி, மௌகாரம், பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவையும் பெரிய அளவில் தினமும் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. சிறப்பு நிவேதனமான லட்டு உலகப்புகழ் பெற்று விளங்குவது யாவரும் அறிந்ததே. பல்வேறு வகையான பட்சணங்கள், திருமலையின் பெரிய மடைப்பள்ளியில் தயார் செய்யப்பட்டு அடியார்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
ஆனால், திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுவது வெறும் தயிர் சாதம் மட்டும்தான். அதுவும் மண் பாத்திரத்தில் வைக்கப்பட்டதாக இருக்கும். புத்தம்புதிய மண் பாத்திரத்தில் வைத்து எடுத்து செல்லும் தயிர் சாதம் மட்டும் குலசேகர ஆழ்வார் படியை தாண்டி திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. திருமலையானுக்கு ஒவ்வொரு நாளும் புதிய மண் சட்டியில் பிரசாதம் நிவேதிக்கப்படுகிறது. தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்புஉள்ள குலசேகரப்படியை தாண்டிச் செல்வதில்லை. அவனுக்கு படைக்கப்பட்ட தயிர் சாதம் மற்றும் மண் சட்டி ஆகியவற்றை பிரசாதமாக பெறுவது சாதாரணமான விஷயமல்ல. அவ்வாறு கிடைப்பது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்களால் கருதப்படுகிறது.

கல்லூரிக்கு அனுப்பி உங்களை படிக்க வைப்பதற்காக உங்கள் பெற்றோர் எத்தகைய தியாகங்களை செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள்.
குழந்தாய் இளமை முதல் நற்பயிற்சியை தேர்ந்து கொள். முதுமையிலும் ஞானம் பெறுவாய்(சீராக் 6:18)
கல்லூரிதான் ஒரு மனிதன் மரியாதை உணர்வோடும், உண்மையோடும் வாழ்வதற்கான வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கும் இடம். கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் நாள் முதல் நீங்கள் ஒரு குழந்தை அல்ல. மாறாக நீங்கள் ஒரு முதிர்ச்சி பெற்ற மனிதர். ஏராளமான நல்லவற்றை நீங்களும் கற்று கொண்டு பரந்து பட்ட இவ்வுலகில் சவால்களை எதிர்கொள்ள பயிற்சி எடுக்கும் மாபெரும் தளம். உங்கள் பொறுப்பு மிகப்பெரியது என்பதை உங்களுக்கு உணர்த்துகின்ற இடம். உங்கள் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் உங்களை பொறுத்து அமைந்திருக்கிறது என்று எடுத்து சொல்லுகின்ற இடம்.
பள்ளியில் பயின்ற காலத்தை காட்டிலும், கல்லூரியில் உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் உங்களை தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள். மக்கள் பலரும் உங்களை நம்பி இருக்கின்றனர். உங்கள் பெற்றோர் உங்களை முழுமையாக நம்பி இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பற்றி எத்தனையோ கனவுகளை வளர்த்து கொண்டிருக்கூடும். அவை அனைத்தையுமே நனவாக்க மன உறுதியையும் கல்லூரியிலிருந்து நீங்கள் பெற்று கொள்கிறீர்கள்.
கல்லூரிக்கு அனுப்பி உங்களை படிக்க வைப்பதற்காக உங்கள் பெற்றோர் எத்தகைய தியாகங்களை செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள். வீணாக பொழுது போக்காதீர்கள். உங்கள் வாழ்வில் நெருக்கடியான பருவம் இது என்பதை உணர்ந்திருங்கள். உள்ளத்தில் உறுதியான தீர்மானமும், விழிப்புணர்வும் கொண்டு தொடர்ந்து வாழ்வில் முதிர்ச்சி பெற்றவர்களாக உருமாறுங்கள்.
கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி அலைய வேண்டியது இருக்கும். எனவே முடிந்த அளவுக்கு அறிவு கூர்மை உடையவர்களாக உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை உருவாக்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை தொடர்ந்து உங்கள் உள்ளத்தில் கொண்டிருங்கள்.
-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.