என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் கடந்த 17-ந்தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது.

    வெளிக்கோடை திருநாள் 22 -ந்தேதி தொடங்கியது. வெளிக்கோடை திருநாளின் நிறைவு நாளான நேற்று இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து உள்கோடை மண்டபத்திற்கு இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது.
    கிருஷ்ணன் குறித்த எட்டு ஸ்லோகங்கள், கிருஷ்ணாஷ்டகம் எனப்படும். இப்படியாக எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டகத்தை பாராயணம் செய்து, கிருஷ்ண பகவானை வணங்குவது மிகுந்த பலன்களைத் தரும்.
    'நம் வாழ்வில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல நல்ல பலன்கள் அனைத்தையும் எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம். தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!

    கிருஷ்ணாஷ்டகம்

    வசுதேவ ஸூதம் தேவம்

    கம்ஸ சாணூர மர்த்தனம்

    தேவகீ பரமானந்தம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: வசுதேவரின் குமாரன்... கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

    அதஸீ புஷ்ப ஸங்காசம்

    ஹாரநூபுர சோபிதம்

    ரத்ன கங்கண கேயூரம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன். ரத்தினம் இழைத்த கையில் அணியும் அணிகலன்களை தோள்களில் அணிந்தவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

    குடிலாலக ஸம்யுக்தம்

    பூர்ண சந்த்ர நிபானனம்

    விலஸத் குண்டல தரம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன். முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன். பளீர் என ஒளிருகிற குண்டலங்கள் அணிந்தவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

    மந்தார கந்த ஸம்யுக்தம்

    சாருஹாஸம் சதுர்ப்புஜம்

    பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் திகழ்பவன். அழகான புன்னகையைத் தவழவிடுபவன். நான்கு திருக்கரங்களை உடையவன். மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்... உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

    உத்புல்ல பத்ம பத்ராக்ஷம்

    நீல ஜீமூத ஸந்நிபம்

    யாதவானாம் சிரோ ரத்னம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள் : மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்... தாமரைக் கண்ணன். நீருண்ட மேகத்தைப் போன்றவன். யாதவர்களின் ரத்தினமாகவும் முடிசூடா மன்னனாகவும் திகழ்பவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணரை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

    ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம்

    பீதாம்பர ஸூசோபிதம்

    அவாப்த துளசீ கந்தம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன். பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன். துளசியின் பரிமளத்தைக் கொண்டிருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

    கோபிகாநாம் குசத்வந்த்வ

    குங்குமாங்கித வக்ஷஸம்

    ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பின் அடையாளத்தை மார்பில் கொண்டவன். ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடம் தந்தவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

    ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம்

    வநமாலா விராஜிதம்

    சங்க சக்ரதரம் தேவம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவன். அகன்ற மார்பை உடையவன். வனமாலையைச் சூடிக் கொண்டிருப்பவன். சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

    க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம்

    ப்ராதருத்தாய ய படேத்

    கோடி ஜந்ம க்ருதம் பாபம்

    ஸ்மரணேன விநச்யதி

    பொருள்: எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு ஸ்லோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் பாராயணம் செய்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். வீடு மனை யோகம் கிடைத்து, குறும்புக் கண்ணனைப் போல் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை தெப்பக்குளத்தில் சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி தீர்த்தவாரி நடைபெற்றது.
    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று தீர்த்தவாரி நடைபெறும்.

    இந்த ஆண்டு நேற்று சித்ரா பவுர்ணமியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை தெப்பக்குளத்தில் சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தொட்டில் குழந்தை ரூபத்தில் குலம் செழிக்க, குலம் தழைக்க, புத்திர பாக்கிய பெரும்பேறு சந்தான விருத்தி நல்கி பேரருள் வழங்கும் தலமாக விளங்குகிறது.
    சோழமண்டலத்தில் தேவார பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. இவற்றுள் கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம் தேவார வைப்புத் தலமாகும்.

    புத்திர தோஷம் என்பது குழந்தை இல்லாதது முதல் பிறந்த குழந்தைகள் பெற்றோரை பேணி பாதுகாக்காதது வரையிலான பல கட்ட தோஷங்களாக கூறப்படுகிறது. நன்மக்கட்பேறு எனும் சற்புத்திர சந்தான பாக்கியம், குழந்தை உண்டாவது முதல் அந்த குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகி குடும்ப தலைவராகி தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வதுபோல் தங்களை பெற்றெடுத்த பெற்றோர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்யும் அனைத்து வகையான குணங்களுடன் கூடிய குழந்தை பாக்கியத்தை அருளும் பிரார்த்தனை தலமாகும்.

    குழந்தைப் பேற்றிற்காக யாகம், ஹோமம் செய்வது இக்காலகட்டங்களில் இயலாத காரியம். எனவே கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்தான சுந்தரேஸ்வரரை வழிபடவே புத்திர பாக்கியம் உண்டாகும் என நம்பப்படுகிறது. ஏழை, எளியவர்கள் புத்திர பாக்கியம் பெறுவதற்காகவும், கடவுள் நம்பிக்கை உள்ள செல்வந்த பெருமக்களும் ஒரு சிறிய உரிய பரிகார வழிபாட்டின் மூலம் சற்புத்திர சந்தான பாக்கியம் பெறுவதற்காகத்தான் கொத்தங்குடி திருத்தலத்தில் அருள்மிகு சந்தான சுந்தரேஸ்வரர் தொட்டில் குழந்தை ரூபத்தில் அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார்.

    மீனாட்சி அம்மைக்கும், சுந்தரேஸ்வரருக்கும் அர்ச்சனை வழிபாடு செய்து விட்டு பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவதற்காகவே பிறந்த குழந்தை ரூபத்தில் வடிவெடுக்கும் சந்தான சுந்தரேஸ்வரரை சிவாச்சாரியார் மூலம் இரு கரம் தாங்கி ஏந்திக்கொண்டு தெய்வக் குழந்தையின் தொட்டில் அருகில் அடியில் அமர்ந்து கொண்டு தாயாகப் போகும் தங்களின் தாய் மடியில் ஸ்ரீசந்தான சுந்தரேஸ்வரரை சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு பத்திரமாக எழுந்து தொட்டியில் உதிரிப் பூ மெத்தை படுக்கையில் குழந்தையை கிழக்கு மேற்காக வைத்து தொட்டிலை மெதுவாக ஆட்டி விட்டு சந்தான சுந்தரேஸ்வரருக்கு மனப்பூர்வமாக வேண்டி முதற்கட்ட பரிகார வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

    சந்தான சுந்தரேஸ்வரரின் பெருங்கருணையால் புத்திர பாக்கியம் குழந்தைப் பேறு பெற்றவர்கள், தங்களின் குழந்தை தொட்டில் குழந்தையாக உள்ள பருவ காலத்திலேயே கொத்தங்குடி தலத்திற்கு மீண்டும் வந்து குழந்தையும், தெய்வமும் ஒன்று என்ற அனுபவ மொழிக்கு ஏற்ப தாங்கள் ஏற்கனவே செய்த முதற்கட்ட வேண்டுதல் பிரார்த்தனை பரிகாரத்தின் தொடர்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து இரண்டாவது கட்ட பரிகாரமாக சந்தான சுந்தரேஸ்வரருக்கு உரிய தெய்வ தொட்டிலில் தங்களின் கைக்குழந்தையை கிழக்கு-மேற்காக உதிரிப்பூ மெத்தையில் படுக்க வைத்து நன்றி கடன் செலுத்தி இரண்டாம் கட்ட பரிகாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக மாத்தூர்- நன்னிலம் சாலையில் கொத்தங்குடி ஆத்துப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
    தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள்அமலுக்கு வந்தன. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் கடைசி நாளான நேற்று (திங்கட்கிழமை) தீர்த்தவாரி நடைெபற்றது. பொற்றாமரைக்குளத்தில் இந்த தீர்த்தவாரி நடந்தது. இரவில் ரிஷப வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரர் ஆடி வீதிகளை வலம் வந்தனர். இதற்கிடையே நேற்று பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் வாசல் அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோவில் வாசல் முன்பு திருமணங்கள் நடைபெற்றன.

    பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்லாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
    ராமேசுவரம் :

    தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும் அரசு அறிவித்தது.

    இந்த உத்தரவு நேற்று நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடவும் நேற்று முதல் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

    அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடினர்.

    இதனால் கோவிலின் உள்ளே சுவாமி, அம்பாள் சன்னதி பிரகாரங்கள், பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் பக்தர்கள் இல்லாமல் கோவிலின் உட்பகுதி முழுவதும் வெறிச்சோடியே காணப்பட்டன.

    ராமேசுவரத்திற்கு நேற்று மிகவும் குறைவானவர்களே வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலின் வாசல் பகுதியில் நின்று சாமியை தரிசனம் செய்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். கோவிலில் தினமும் சுவாமிக்கு நடைபெறும் 6 கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன.
    கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம் தேவார வைப்புத் தலமாகும். திருஞானசம்பந்தர் க்ஷேத்திர கோவை பதிகத்தில் கொத்தங்குடி என இத்தலத்தை குறிப்பிட்டு அருளியுள்ளார்.
    சோழமண்டலத்தில் தேவார பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. இவற்றுள் கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம் தேவார வைப்புத் தலமாகும். திருஞானசம்பந்தர் க்ஷேத்திர கோவை பதிகத்தில் கொத்தங்குடி என இத்தலத்தை குறிப்பிட்டு அருளியுள்ளார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் கிழக்கே கொத்தங்குடி கிராமத்தில் ஆலயம் அமைத்து ஆராதித்து அருள் பெற்றுள்ளனர். தேவாதி தேவர்களும், மகா முனிவர்களும், ஆன்றோர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    பக்தர்களுக்கு உன்னதமான பக்தி பலன்களையும், செல்வங்களையும் வாரி வழங்கி மிகப்பெரிய ஆவுடையாருடன் மிக அழகான பானத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார் சுந்தரேஸ்வரர். இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சுந்தரேஸ்வரர் திருமேனி ஆனது சதுரஸ்ரவ்ருத்தம் என்ற அரியதொரு மூர்த்தமாக காட்சி அளிக்கிறது. இத்தலத்தில் பீமன் மானசீகமாக பூஜை செய்ததால் பீமேஸ்வரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

    இவ்வாலயத்தில் பூக்களை மாலையாகக் கட்டி சூட்டுவதை விட உதிரியாக அதையே புஷ்பார்ச்சனை(புஷ்பாபிஷேகம்) இறைவனுக்கு செய்வதே தல சிறப்பாகும். இத் தலமானது மனிதன் எக்காலத்திலும் கர்வம் கொள்ளலாகாது என்பது கிருஷ்ண பகவான் அர்ஜுணனுக்கு உணர்த்தப்பட்ட திருத்தலம்.

    கொத்தங்குடி தலத்தில் அருளாட்சி செய்யும் மீனாட்சி அம்மை பக்தர்களின் குறைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை பல்வேறு தேவைகளை சுந்தரேஸ்வரரிடம் பக்தர்களுக்காக பரிந்து எடுத்துக்கூற, அதனை இறைவன் செவிமடுத்து கேட்பதற்கு ஏற்ப சற்றே தலை சாய்ந்து இருப்பது போல் இறைவன் திருமேனி அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

    புத்திர தோஷம் என்பது குழந்தை இல்லாதது முதல் பிறந்த குழந்தைகள் பெற்றோரை பேணி பாதுகாக்காதது வரையிலான பல கட்ட தோஷங்களாக கூறப்படுகிறது. நன்மக்கட்பேறு எனும் சற்புத்திர சந்தான பாக்கியம், குழந்தை உண்டாவது முதல் அந்த குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகி குடும்ப தலைவராகி தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வதுபோல் தங்களை பெற்றெடுத்த பெற்றோர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்யும் அனைத்து வகையான குணங்களுடன் கூடிய குழந்தை பாக்கியத்தை அருளும் பிரார்த்தனை தலமாகும்.

    கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தொட்டில் குழந்தை ரூபத்தில் குலம் செழிக்க, குலம் தழைக்க, புத்திர பாக்கிய பெரும்பேறு சந்தான விருத்தி நல்கி பேரருள் வழங்கும் தலமாக விளங்குகிறது.

    ஜனக மகாராஜன் நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாமல் சஞ்சலப்பட்டு பின் யாக பூமியை உழுதபோது கிடைத்த மழலைச் செல்வம் தான் சீதை. தசரதர் பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து அமிர்தம் பெற்று பிறந்தவர்கள்தான் ராம, லட்சுமண, பரத, சத்துருக்கணர்கள். அதைப்போல மலையத்துவஜனின் குறைதீர்க்க பிறந்தவள் மீனாட்சி.

    குழந்தைப் பேற்றிற்காக யாகம், ஹோமம் செய்வது இக்காலகட்டங்களில் இயலாத காரியம். எனவே கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்தான சுந்தரேஸ்வரரை வழிபடவே புத்திர பாக்கியம் உண்டாகும் என நம்பப்படுகிறது. ஏழை, எளியவர்கள் புத்திர பாக்கியம் பெறுவதற்காகவும், கடவுள் நம்பிக்கை உள்ள செல்வந்த பெருமக்களும் ஒரு சிறிய உரிய பரிகார வழிபாட்டின் மூலம் சற்புத்திர சந்தான பாக்கியம் பெறுவதற்காகத்தான் கொத்தங்குடி திருத்தலத்தில் அருள்மிகு சந்தான சுந்தரேஸ்வரர் தொட்டில் குழந்தை ரூபத்தில் அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார்.

    இந்த ஆலயத்தின் நிர்வாக பணிகளை மீனாட்சி-சுந்தரேசுவரர் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதன் தலைவராக கே.ஜெயராமன், செயலாளராக வி.ரகுபதி, பொருளாளராக பி.மணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்களாக விஜய், சுவாமிநாதன், முரளிதரன், ஆலோசகராக சங்கரன் ஆகியோர் உள்ளனர். மற்றும் ஆலய அர்ச்சகர் சுந்தரேஸ்வரர் சிவாச்சாரியார் மற்றும் கொத்தங்குடி கிராமவாசிகள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.

    பரிகார பூர்த்தி செய்யும் முறை

    சந்தான சுந்தரேஸ்வரரின் பெருங்கருணையால் புத்திர பாக்கியம் குழந்தைப் பேறு பெற்றவர்கள், தங்களின் குழந்தை தொட்டில் குழந்தையாக உள்ள பருவ காலத்திலேயே கொத்தங்குடி தலத்திற்கு மீண்டும் வந்து குழந்தையும், தெய்வமும் ஒன்று என்ற அனுபவ மொழிக்கு ஏற்ப தாங்கள் ஏற்கனவே செய்த முதற்கட்ட வேண்டுதல் பிரார்த்தனை பரிகாரத்தின் தொடர்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து இரண்டாவது கட்ட பரிகாரமாக சந்தான சுந்தரேஸ்வரருக்கு உரிய தெய்வ தொட்டிலில் தங்களின் கைக்குழந்தையை கிழக்கு-மேற்காக உதிரிப்பூ மெத்தையில் படுக்க வைத்து நன்றி கடன் செலுத்தி இரண்டாம் கட்ட பரிகாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    கோவிலின் சிறப்புகள்

    ஆண்டுதோறும் பங்குனி பவுர்ணமி முதல் நாளில் இருந்து நான்கு நாட்களுக்கு சூரிய உதயத்தில் இருந்து சூரிய பகவான் தன் அருள் கரங்களால் இறைவன் மீது பற்றொளி வீசுவது தனிச்சிறப்பாகும்.

    1300 ஆண்டுகள் பழமையான தலம். தேவாரத்தில் திருஞான சம்பந்தர் போற்றிய வைப்புத்தலம். பீமன் இத்தல இறைவனை பூஜித்ததால் பீமேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்தான பாக்கியம் அருளும் தலம்.

    மானசீகமான பூஜையே உயர்ந்தது என்று உணர்த்திய தலம். பக்தர்களின் குறைகளை செவிமடுத்து கேட்பதால் இறைவன் சற்றே தலை சாய்ந்து இருப்பது சிறப்பாகும்.

    சுந்தரேஸ்வரர் திருமேனியானது சதுரஸ்ரவ்ருத்தம் என்ற அரியதொரு சிவ வடிவம் ஆகும்.

    முதற்கட்ட பரிகார முறை

    மீனாட்சி அம்மைக்கும், சுந்தரேஸ்வரருக்கும் அர்ச்சனை வழிபாடு செய்து விட்டு பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவதற்காகவே பிறந்த குழந்தை ரூபத்தில் வடிவெடுக்கும் சந்தான சுந்தரேஸ்வரரை சிவாச்சாரியார் மூலம் இரு கரம் தாங்கி ஏந்திக்கொண்டு தெய்வக் குழந்தையின் தொட்டில் அருகில் அடியில் அமர்ந்து கொண்டு தாயாகப் போகும் தங்களின் தாய் மடியில் ஸ்ரீசந்தான சுந்தரேஸ்வரரை சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு பத்திரமாக எழுந்து தொட்டியில் உதிரிப் பூ மெத்தை படுக்கையில் குழந்தையை கிழக்கு மேற்காக வைத்து தொட்டிலை மெதுவாக ஆட்டி விட்டு சந்தான சுந்தரேஸ்வரருக்கு மனப்பூர்வமாக வேண்டி முதற்கட்ட பரிகார வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

    கோவில் நடை திறக்கும் நேரம்

    ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் மாத பிரதோஷங்கள், நவராத்திரி மற்றும் சிவராத்திரி சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும். மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். தினமும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் பரிகாரம் செய்து வழிபடலாம்.

    கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக மாத்தூர்- நன்னிலம் சாலையில் கொத்தங்குடி ஆத்துப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
    நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்தில் வேதவல்லி சமேத வேதநாராயணசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை உற்சவர்களான வேதவல்லி சமேத வேதநாராயணசாமிைய திருச்சி வாகனத்தில் வைத்து கோவிலை வலம் வந்து கொடிமரத்துக்கு அருகில் வைத்தனர்.

    காலை 9.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை மிதுன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடியை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. விழாவில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து விழாவின் 2-வதுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, நாளை (புதன்கிழமை) காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 29-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 30-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன (கருடசேவை) வீதிஉலா.

    அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை தேரோட்டம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவுவதால், அதற்கு பதிலாக சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது. பின்னர் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணிவரை சாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் வேதநாராயணசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தனித்தும், உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி தினமும் காலை 8 மணியில் இருந்து காலை மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மூடப்பட்டதால் வாசலில் வைத்து காது குத்துதல், முடிகாணிக்கை போன்றவற்றை பொதுமக்கள் செலுத்தி விட்டு் சென்றனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் தியேட்டர், வணிக வளாகங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கோவில்கள், வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.

    தஞ்சை பெரிய கோவில் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளதால் கடந்த 16-ந் தேதியே மூடப்பட்டது. இதர கோவில்களான புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், கோடியம்மன் கோவில் மற்றும் அனைத்து கோவில்களும் நேற்று முதல் மூடப்பட்டன.

    இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். மாலைகள் மற்றும் சூடம் வாங்கி வந்த பொதுமக்கள் மாலைகளை கோவில் முன்பாக உள்ள கேட்டில் தொங்க விட்டுவிட்டு அதன் அருகில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு விட்டு சென்றனர்.

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சிலர் முடி காணிக்கை செலுத்திவிட்டு தங்கள் குழந்தைகளுக்கு காது குத்துவதாக வேண்டி இருந்தனர். அதன்படி நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது உறவினர் மற்றும் குடும்பத்தினர் என 10 பேருடன் தங்களது குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தி காது குத்துவதற்காக வந்தார்.

    அவர் தாம்பூலத்தட்டுகளில் பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய். மாலை உள்ளிட்டவைகளும் எடுத்து வந்திருந்தார். ஆனால் கோவில் மூடப்பட்டு இருந்ததால் கோவிலின் அருகே முடி காணிக்கை செலுத்திவிட்டு கோவில் வாசலில் வைத்து தங்களது குழந்தைக்கு காது குத்தி நேர்த்திக் கடனை செலுத்தினார்.

    கோவில் மூடப்பட்டு உள்ளதால் கோவிலை சுற்றி கடை வைத்திருந்த வியாபாரிகள் எந்த வியாபாரமும் இல்லாமல் கடையை திறந்து வைத்தபடி காத்து கிடந்தனர்.

    இதேபோல் கோடியம்மன் கோவிலுக்குவந்த பக்தர்களும் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் கோவிலின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
    மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கோவில் பிரகாரத்தில் கள்ளழகர் சித்திரை திருவிழா பக்தர்களின்றி நடத்தப்பட்டது.
    அழகர்கோவில் :

    மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் வைகை ஆற்றில் இறங்குவது மதுரையின் முத்தாய்ப்பு நிகழ்ச்சி. ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவாக மீனாட்சி அம்மன், அழகர்கோவிலில் இந்த விழாக்கள் மிக விமரிசையாக நடைபெறும்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை காண பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரையில் கூடுவதுண்டு. இதனால் அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் மதுரை வைகை ஆற்றில் திரண்டு நிற்பது வழக்கம்.

    ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டு இந்த விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் அனைத்து கோவில்களிலும் வழிபாடுகள், திருவிழாக்கள் நடைபெற்றன. இதனால் மதுரையின் சித்திரை திருவிழாவும் மிக விமரிசையாக கொண்டாடப்படும். அதில் பங்கேற்கலாம் என பொதுமக்கள் மகிழ்ச்சியுற்று இருந்தனர்.

    ஆனால் கொரோனா 2-வது அலை காரணமாக கோவில்களில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களின்றி பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாணம், சட்டத்தேரோட்டம் போன்றவை நடைபெற்றது. ஆனால் திருவிழாக்கள் முடிந்த பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசித்தனர்.

    இந்த நிலையில் கொரோனா 2-வது அலை மேலும் வேகம் எடுத்ததால் கோவிலில் வழிபாட்டுக்கும் அரசு தடை விதித்தது. இதனால் மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கோவில் பிரகாரத்தில் கள்ளழகர் சித்திரை திருவிழா பக்தர்களின்றி நடத்தப்பட்டது.

    விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது.

     கள்ளழகர் வெள்ளை பட்டு உடுத்தி மாதிரி வைகை ஆற்றில் இறங்கினார்

    இதற்காக கோவில் உள் பிரகாரத்தில் ஆடிவெள்ளி எனும் மூலிகை நந்தவனத்தில் தத்ரூபமாக மாதிரி வைகை ஆறு அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் வைகை ஆற்றிலிருந்து லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஆறு போல நீர் நிரப்பப்பட்டிருந்தது. அதில் தத்ரூபமாக தாமரை குளம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது.

    இதில் இறங்குவதற்காக கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி, பச்சை சாத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை, கிளி, பட்டு கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து கை பாரமாக கள்ளழகரை தூக்கி வந்தனர். தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தபோதிலும் ஏராளமானோர் திரண்டு வந்திருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதவிர அழகர்கோவிலின் கோட்டை வாசலான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் முன்பும் ஏராளமானோர் திரண்டு நின்றனர். அவர்கள் அங்கேயே சூடம் ஏற்றி வழிபட்டனர். சிலர் முடி காணிக்கை செலுத்தினர்.

    கள்ளழகர் இந்த ஆண்டு வைகை ஆற்றில் இறங்காவிட்டாலும் அந்த பகுதியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். அதில் சிறுவர்கள் கள்ளழகர் வேடம் அணிந்து தண்ணீரை துருத்தி நீரை பீய்ச்சி அடித்தனர். வைகை ஆற்று கரையிலும் பக்தர்கள் மொட்டைபோட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    வைகை ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டிருந்ததால் பலரும் அதில் ஆனந்த குளியல் போட்டனர்.
    கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நாகை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
    கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழகத்தில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், அழகு நிலையங்கள், சலூன், சினிமா தியேட்டர்கள், பார்கள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து நாகை நீலாயதாட்சியம்மன் கோவில், எட்டுக்குடி முருகன் கோவில், நாகை வெளிப்பாளையம் அகதீஸ்வரர் சிவன் கோவில், நாகூர் நாகநாதர்கோவில், நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில், கடம்பாடி மகாலட்சுமி சாய்பாபா கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், நாகூர் ஆண்டவர் தர்கா, நாகை ஊசி மாதா ஆலயம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் வாசலில் நின்று பிரார்த்தனை செய்தனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. இந்த பேராலயத்திற்கு எதிரே வங்க கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

    இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்கள் மற்றும் கடற்கரையில் கூட்டம் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஆலயங்களில் நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    அதன்படி வேளாங்கண்ணி பேராலயத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. இதை தொடர்ந்து பேராலயத்தின் முன் கதவு சாத்தப்பட்டு பக்தர்கள் இன்றி திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் பேராலய. வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

    கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×