என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
செட்டிச்சார்விளை குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம் அர்ச்சிப்பு விழா நடந்தது. விழாவில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து வைத்தார்.
செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம் புதுப்பித்து அர்ச்சிப்பு விழா மற்றும் கொடியேற்றம் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் கோட்டார் மறை மாவட்ட முன்னாள்ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி புதுப்பிக்கப்பட்ட புதிய ஆலயத்தை ஜெபித்து அர்ச்சித்து திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து வியாகுலமாதா புதிய குருசடியையும் அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றினார். பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் முன்னிலை வகிக்தார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசு ரத்தினம், மறை மாவட்ட செயலர் ரசல்ராஜ், அருட்பணி கிலாரி ஆகியோர் சிற்பக் கலைஞர் ஜான் குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து நினைவுபரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் ரதி ஏஜென்சி உரிமையாளரும், தி.மு.க. மேற்கு மாவட்ட துணை செயலாளருமான ஜான் கிறிஸ்டோபர் உள்பட பங்கு மக்கள், பங்கு பேரவையினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவானது அரசு வழிகாட்டிதலின்படி அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு பேரவை துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் ததேசாள், துணை செயலாளர் ஜஸ்டின் தாஸ், பொருளாளர் செல்வன் கபரியல் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

கருட வாகனத்தில் எழுந்தருளியிருந்த கள்ளழகர் பெருமாளுக்கு வர்ண குடை பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்களுடன் சாத்தப்பட்டது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் சுந்தரராச பெருமாளுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வர்ண குடை சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நேற்று மதுரை கீழமாரட் வீதி நவநீதகிருஷ்ணன் பஜனை கூடத்தின் சார்பில் கள்ளழகருக்கு வர்ண குடை எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த குடையானது 4 மாசி வீதிகளின் வழியாக தல்லாகுளம் பெருமாள் கோவில் சென்றது. அங்கிருந்து புறப்பாடாகி அழகர்கோவில் ஆண்டாள் சன்னதி முன்பாக இந்த வர்ண குடை கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. பின்னர் அங்குள்ள மண்டப வளாகத்தில் ஏற்கனவே கருட வாகனத்தில் எழுந்தருளியிருந்த கள்ளழகர் பெருமாளுக்கு இந்த குடை பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்களுடன் சாத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் அரசு வழிகாட்டுதல் படி கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதின் காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் முக கவசம் அணிந்து அனுமதிக்கப்பட்ட பட்டர்களும், கோவில் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் துணை ஆணையர் அனிதா மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஆத்தூர் அருகே புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாதா தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் அருகே புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா நடந்தது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. கடந்த 1-ந்தேதி மணப்பாடு மறைவட்ட குரு இருதயராஜ் தலைமையில் நடந்த திருப்பலியில் சிறுவர்களுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. மாலையில் நற்கருணை பவனி, மாலை ஆராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் திருப்பலி, தூய ராஜகன்னி மாதாவுக்கு மகுடம் அணிவித்தல், மதியம் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இரவில் ராஜகன்னி மாதா தேர் பவனி நடைபெற்றது.
விழாவின் சிகர நாளான நேற்று காலையில் ராஜகன்னி மாதா தேரின் முன்பாக திருப்பலி நடைபெற்றது. காலையில் திருவிழா திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தூய ராஜகன்னி மாதா தேர் பவனி நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குதந்தை பிராங்கிளின் தலைமையில், ஊர் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரத்திற்கு சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனையில் தமிழக அமைச்சர், கேரள மந்திரிகள் முன்னிலையில் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய சாமி சாலைகள் ஆண்டுதோறும் கொண்டு செல்லப்படுவது வழக்கம். பூஜைகள் முடிந்த பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு கொண்டு வரப்படும். இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை சென்றடைந்தது.
நேற்று காலை 7 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னரின் உடைவாளை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார் எடுத்து கொடுக்க மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன், கேரள அறநிலையத்துறை மந்திரி ராதாகிருஷ்ணன், கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி ஆகியோர் பெற்றுக்கொண்டு குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரிடம் வழங்கினர். அவர் ஊழியர் சுதர்சன குமாரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. மேள தாளங்கள், வாத்திய குழுவினரின் வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் புறப்பட்டன. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர்தூவினர்.
ஊர்வலத்தில் மன்னரின் உடைவாளை ஏந்தியபடி தேவசம் போர்டு ஊழியர் முன் சென்றார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டே போலும் இந்த ஆண்டும் யானை ஊர்வலம், கேரள போலீசாரின் பாதுகாப்பு, பேண்டு வாத்திய வரவேற்பு உள்பட எந்த நிகழ்ச்சிகளும் இடம்பெறவில்லை.
ஊர்வலத்தில் செல்லும் பக்தர்களுக்காக மன்னரின் சார்பில் பிடிபணம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், தேவசம் அறங்காவலர்குழு தலைவர் சிவகுற்றாலம், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன், கோவளம் எம்.எல்.ஏ. வின்சென்ட், நெய்யாற்றின்கரை எம்.எல்.ஏ. அன்சலன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் கொல்லக்குடி முக்கு, மேட்டுக்கடை வழியாக கேரளபுரம் மகாதேவர் மற்றும் அதிசய விநாயகர் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து சரஸ்வதி அம்மன் அருகில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கும், முன்னுதித்த நங்கை மற்றும் முருகன் சிலைகள் கேரளபுரம் மகாதேவர் கோவிலுக்கும் ெகாண்டு செல்லப்பட்டன. அங்கு சிலைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்பு ஊர்வலம் திருவிதாங்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, காட்டாத்துறை, சாமியார்மடம், இரவிபுதூர்கடை, பம்மம், மார்த்தாண்டம் வழியாக மதியம் குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது. நேற்று இரவு கோவிலில் சிலைகள் தங்கவைக்கப்பட்டன.
ஊர்வலத்தில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் தமிழக போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை சாமிசிலைகள் ஊர்வலம் குழித்துறையில் இருந்து மீண்டும் புறப்பட்டு கேரள எல்லையான களியக்காவிளையை சென்றடைகிறது. அங்கு கேரள அரசு சார்பில் பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் இரவு சாமி சிலைகள் நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்க வைக்கப்படும்.
அங்கிருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடைகிறது.
அதன்பிறகு தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் கோட்டைக்ககம் உள்ளே உள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் எழுந்தருள்வார். வேளிமலை முருகன் ஆரிய சாலை சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டஅம்மன் கோவிலிலும் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் நடக்கிறது.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று விரதம் இருந்து பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள்.
தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். நம்பிக்கையோடு ’நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். அதிலும், `சோமவாரம்’ எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும்; சோதனைகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும்.'
நம்பிக்கையோடு 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். அதிலும், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும். சோதனைகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும்.
பிரதோஷ தினத்தன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு சூடக் கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேதனம் செய்யலாம். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.
14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள்.
இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை சிக்கெனப் பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!

திருவாரூர் தேரை ‘ஆழித்தேர்’ என்று வர்ணிப்பார்கள். தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும்.
* எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆழித்தேர், 4 நிலைகளையும், 7 அடுக்குகளையும் கொண்டது.
* தேரை இழுத்துச் செல்வது போல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை.
* தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும்.
‘திருவாரூர் தேரழகு’ என்பது சொல் வழக்கு. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இது.
* ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே..’ என்ற திருநாவுக்கரசரின் பதிகம் மூலம், கி.பி. 5-ம் நூற்றாண்டு காலத்திலேயே திருவாரூர் தேர் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.
* திருவாரூர் தேரை ‘ஆழித்தேர்’ என்று வர்ணிப்பார்கள். கடல் போன்று பரந்து விரிந்தது என்பதால் இந்தப் பெயர் வந்தது.
* அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 30 அடி. விமானம் வரையான தேர்ச்சீலை அலங்காரப் பகுதியின் உயரம் 48 அடி, விமானம் 12 அடி, தேர் கலசம் 6 அடி என முழுமையான அலங்காரத்துடன் திகழும் ஆழித்தேரின் உயரம் 96 அடி.
* தேர் அலங்காரத்திற்காக 5 டன் பனஞ்சப்பைகள், 50 டன் மூங்கில், 10 டன் சவுக்கு கம்புகள், ஒரு டன் கயிறு, ½ டன் துணிகள் மற்றும் சிறுசிறு பொம்மைகள் பயன்படுத்தப்படுகின்றன.
* அலங்கரிக்கப்படாத நிலையில் தேரின் எடை 220 டன். அலங்கரிப்பட்டதும், அதனை எடை 350 டன்னை எட்டிவிடும்.

ஏழுமலையான்,தனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம்தான், அதிலும் சனிக்கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-
மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது பற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.
அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.
குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.
பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.
அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்‘ என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான். தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டைமன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.
உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தி யின் பெருமையை என்று பிறர்கூற அறிகின் றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்’ எனக் கூறியிருந்தார்.
அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.

கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) மகாளய அமாவாசை வருகிறது.
இந்த நாளில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதாலும், கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாகி, அதனால் கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதாலும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
அதன்படி வருகிற 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்களில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் வழிபடவும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு செல்லவும், நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்படுகிறது.
கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்...கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் அமாவாசை வழிபாட்டில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.
புத்திர் பலம் யசோ தைரியம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம்
வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
இந்த ஸ்லோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒரு வித மனவலிமை பெருகுவதை உணர முடியும்.
புத்திர் பலம் - அறிவில் வலிமை, யசோ - புகழ், தைர்யம் - துணிவு, நிர்பயத்வம் - பயமின்மை, அரோகதா - நோயின்மை, அஜாட்யம் - ஊக்கம், வாக் படுத்வம் - பேச்சு வலிமை, ச - இவையெல்லாம், ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால், பவேத் - பிறக்கின்றன.
நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) அங்குரார்ப்பணம் நடக்கிறது. முதல் நாளான நாளை பவித்ரா பிரதிஷ்டா செய்யப்படுகிறது. நாளை மறுநாள் பவித்ரா சமர்ப்பணம் மற்றும் பவித்ரா ஹோமங்கள் நடக்கிறது. 4-ந் தேதி மஹா பூர்ணாஹூதி, பவித்ரா விசுஜாரனா நடைபெறும்.
பவித்ரோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

இந்த கோவிலில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றும், தனித்தன்மையுடனும் இருக்கின்றன. இங்குள்ள ஒரு அதிசய நந்தியே இதற்கு சான்றாக கூறலாம்
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ளது, பாதேஷ் என்ற ஊர். இங்கு பாதேஸ்வரர் மகாதேவ் திருக்கோவில் உள்ளது. இந்தக்கோவில் எட்டு பெரிய குகைகளையும், பல சிறிய குகைகளையும் உள்ளடக்கிய பெரிய வளாகம் போல் காட்சியளிக்கிறது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்லப்படும் இந்த ஆலயத்தில் ஆயிரம் சிவலிங்கங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த ஆலய வளாகத்தில் ஒரு வித்தியாசமான சிலையையும் நாம் காண முடியும். நந்தியின் வடிவத்தில் இருக்கும் இந்த வித்தியாசமான சிலையை, அக்னி பகவானின் உருவம் என்கிறார்கள். வேதத்தில் அக்னி பகவானுக்கு இரண்டு தலைகளும், மூன்று கால்களும், ஏழு கைகளும் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தில் கூறப்பட்ட வடிவமைப்புக்கேற்ற வகையில் இந்த சிலை இருப்பதால், இதனை அக்னி பகவான் என்றே வழிபட்டு வருகின்றனர்.
நேராக நின்று பார்க்கும் போது, மனித முகம், சற்று சாய்வாக பார்க்கும்போது நந்தியின் முகம் என இரண்டு முகங்கள் தெரியும். நேராக நின்று பார்க்கும்போது மனித கால்கள் இரண்டு, நந்தியின் கால் ஒன்று என மொத்தம் மூன்று கால்களும், இடது பக்கமாக நின்று பார்க்கும்போது நந்தியின் கால்கள் இரண்டு, மனித கால் ஒன்று என மொத்தம் மூன்று கால்களும் தென்படும். (இதில் ஏதாவது ஒரு பக்கத்தைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்). அதே போல் கரங்களும் 7 இருப்பதை பார்க்கலாம். நேராக நின்று பார்க்கும்போது இந்த 7 கரங்களும் தெளிவாகத் தெரியும்.
இது ஒரு சிவாலயம் என்பதால், நந்தியின் வடிவத்தில் அக்னி பகவானின் சிலையை வடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அரசு வழிகாட்டுதலின்படி வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு நடைமுறைகளுக்கு உட்பட்டு கஞ்சமலை சித்தேஸ்வரர் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. அரசு வழிகாட்டுதலின்படி வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) அமாவாசை உற்சவத்தில் சாமி தரிசனம் செய்ய அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அன்றைய தினமும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே 6-ந் தேதியும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை உள்ளதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தவும், குளிக்கவும், பொங்கல் வைக்கவும், வழிபாடு செய்யவும், அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.