என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வித்யாலட்சுமி, தனலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, மோட்சலட்சுமி, வீரியலட்சுமி, ஜெயலட்சுமி, சௌபாக்கிய லட்சுமி என்று அஷ்டலட்சுமிகள் அழைக்கப்படுகிறார்கள்.
    சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உமாதேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் வெள்ளிக்கிழமை விரதம் எனப்படும். அரக்கர்களால் அவதிப்பட்ட தேவர்கள் அம்பாளை நோக்கி தொழுது வேண்டினர். அப்போது அம்பாள் அவர்களுக்கு அபயம் அளித்து அரக்கர்களை வதம் செய்தாள். தேவர்களையும், முனிவர்களையும் காத்து ரட்சித்தாள். இதை முன்னிட்டே அம்பாளை தொழும் வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    தனம், தான்யம் என்ற அஷ்ட ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மகாலட்சுமி அஷ்டலட்சுமியாக விளங்குகிறாள். வித்யாலட்சுமி, தனலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, மோட்சலட்சுமி, வீரியலட்சுமி, ஜெயலட்சுமி, சௌபாக்கிய லட்சுமி என்று அஷ்டலட்சுமிகள் அழைக்கப்படுகிறார்கள்.

    எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால், நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும். சகல சித்தியும் தரும் ஆதிலட்சுமி, சிறப்புகள் வழங்கும் சந்தான லட்சுமி, அரச போகம் தரும் கஜ லட்சுமி, செல்வம் தரும் தன லட்சுமி, பசி தீர்க்க உணவளிக்கும் தான்ய லட்சுமி, கவலையைப் போக்கும் மகாலட்சுமி, வெற்றியைத் தரும் விஜய லட்சுமி, வீரம் கொடுக்கும் வீர லட்சுமி ஆகிய எட்டு வகை லட்சுமிகளையும் விரதமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வருகைப்பதிகம் பாடவேண்டும்.

    தன லட்சுமியின் அருளைப் பெற வேண்டுமானால், வசதி இல்லாதவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். தான்ய லட்சுமியின் அருளைப் பெற, பசியோடு வருபவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

    வித்யா லட்சுமியின் அருள் கிடைக்க, படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு புத்தகம், பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும். இதுபோல அந்தந்த லட்சுமிக்கு விரத வழிபாடுகளையும், அவை மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்பாடுகளையும் செய்தால் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
    இன்று முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை காரணமாக ராமேசுவரம் கோவிலில் கடந்த இரண்டு நாட்களாகவே வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.
    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை காரணமாக ராமேசுவரம் கோவிலில் கடந்த இரண்டு நாட்களாகவே வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.

    குறிப்பாக தற்போது மகாளய பட்சம் நடந்து வருவதால் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜை செய்ய அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பூஜை செய்யவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அது போல் நேற்றும் அக்னி தீர்த்த கடற்கரையில் பூஜை செய்ய மற்றும் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பிரகாரத்தில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதனிடையே வருகின்ற 6-ந் தேதி அன்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை வருகின்றது. ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை விட மகாளய அமாவாசை மிகவும் முக்கியமாக இருப்பதால் அன்று வழக்கம்போல் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி, தர்ப்பண பூஜை செய்து கோவிலில் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு தடையும் விதிக்காமல் அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்களும் மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட இந்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழாவை முன்னிட்டு வண்ண பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசா தேர்பவனி ஆலய வளாகத்தில் நடந்தது.
    காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலி மட்டும் நடத்தப்பட்டது.

    விழாவின் இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு ஆலய பங்குதந்தை பெஞ்சமின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு பங்குதந்தை ஜெயப்பிரகாஷ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து வண்ண பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித குழந்தை தெரசா தேர்பவனி ஆலய வளாகத்தில் நடந்தது.

    இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு பேரவை மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    வருகிற 7-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதால் அன்று முதல் அலிபிரி நடைபாதையில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மலையடிவாரத்தில் உள்ள அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்வார்கள். இந்த நடைபாதையின் மேற்கூரைகள் பழுதடைந்திருந்ததால் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் கடந்த சில மாதங்களாக அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    தற்போது மேற்கூரை சீரமைப்பு பணிகள் முடிவந்துள்ளது. இதனை தேவஸ்தான அதிகாரி கே.எஸ்.ஜெவஹர் ரெட்டி பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது கூடுதல் அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி உடனிருந்தார்.

    ஆய்வின்போது ஜவஹர் ரெட்டி கூறியதாவது:-

    அலிபிரி முதல் திருமலை வரையிலான நடைபாதையின் கூரை அமைக்கும் பணிகள் நன்கொடையளர்களின் உதவியுடன் நிறைவடைந்துள்ளது. இதனால் நடைபாதையில் பக்தர்கள் செல்வதற்கு வசதியாக இருக்கும். நடைபாதையில் பக்தர்களைஅனுமதித்த பிறகும், வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் வருகிற 7-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதால் அன்று முதல் அலிபிரி நடைபாதையில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    அப்போது தேவஸ்தான அதிகாரிகள் கோபிநாத், நாகேஸ்வர ராவ், ஜெகதீஸ்வர் ரெட்டி, மல்லிகார்ஜூனா, சுகாதாரஅலுவலர் தேவி ஆகியோர் உடனிருந்தனர்.
    தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதா் ஆலய பெருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி மட்டும் முக்கிய வீதிகளில் நடந்தது.
    தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதா் ஆலய பெருவிழா, கடந்த 20-ந் தேதி சிறுமலர் குருமடம் சகாயஜோசப் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆராதனை, நற்கருணை ஆசீர் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா அன்று தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.

    10-ம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா் செல்வம் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு பாடற்திருப்பலி நடந்தது. விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலயத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சப்பர பவனி மட்டும் முக்கிய வீதிகளில் நடந்தது. நிகழ்ச்சியில் பாதிரியார்கள் மரியஅரசு, தோமாஸ், ஞானப்பிரகாசம், சூசைராஜா, பனிமயம், சர்ச்சில், மார்ட்டின், தினேஷ் மற்றும் திரளான பங்கு மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட், உதவி பங்கு தந்தை மாா்ட்டின் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
    மகாமுனிவர், இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகாசக்தியைத் தோற்றுவித்தார்.
    ஒருவரது கண் பார்வை சாதாரணமாக, இயல்பாக இருக்கும் பட்சத்தில் அதனால் எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால். அதே கண்பார்வை பொறாமை, வயிற்றெரிச்சல், தீய எண்ணம் என்ற உணர்வுகளை தாங்கி, அதனால் எழுகின்ற எண்ண அலைகளைக் குவித்து, கண்களின் மூலம் தீர்க்கமாகப் பார்க்கப்படும் போது, அது மிகவும் வலிமையாகப் பாய்ந்து மிகக் கெடுதலான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

    அகஸ்திய மகாமுனிவர், இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகாசக்தியைத் தோற்றுவித்தார். அவர் தான் கண் திருஷ்டி கணபதி.

    இவர் முப்பத்து மூன்றாவது மூர்த்தமாக இந்த உலகில் உதயமான சர்வ மகாசக்தி கணபதி ஆவார். இந்தக் கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டில் குறிப்பாக வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையில் மற்றவர்கள் கண் பார்வை படுமாறு வைத்தும் வணங்கலாம்.

    வியாபார ஸ்தலம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் வைத்து வழிபடலாம். கண் திருஷ்டி கணபதியின் தோற்றம், போர்க்களம் சென்று எதிரிகளை வென்று திரும்பி வந்த போர்க்கோலத் தோற்றம்.

    இந்தச் சிறப்பான வடிவம் கொண்ட கண் திருஷ்டி கணபதியை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.
    எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. சிதறுகாய் உடைக்கும் வழக்கம் உருவான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை தடுத்து நிறுத்தினான்.

    உடனே விநாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற தேங்காய்களை எடுத்து வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு.

    விநாயகர் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. இதன் மூலம்தான்
    குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டுமென்று விரும்புபவர்கள் திருவோண நட்சத்திரத்தின் போது விரதம் இருந்து இரட்டைப்பிள்ளையாரை வழிபாடு செய்ய வேண்டும்.
    ஒவ்வொரு மாத ரோகிணி நட்சத்திரத்தின் போது விரதம் இருந்து சந்தனத்தை தங்கள் கைகளாலேயே அரைத்து இரட்டைப் பிள்ளையார்கள் செய்து வணங்கினால் கடன் தொல்லைகள் நீங்கும்.

    ஒவ்வொரு மாத சதுர்த்தியின் போது விரதம் இருந்து தம்பதியர்கள் இரட்டைப்பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து அந்தக் கொழுக்கட்டையை பக்தர்களுக்கு தானமாகக் கொடுத்தால் தங்கம் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
     
    குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டுமென்று விரும்புபவர்கள் திருவோண நட்சத்திரத்தின் போது விரதம் இருந்து இரட்டைப்பிள்ளையாருக்கு பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்து, இரண்டு மாம்பழங்களை ஏழ்மை நிலையில் உள்ள தம்பதியர்க்கு தானமாகக் கொடுத்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும்.

    சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து இரட்டைப் பிள்ளையாரை வழிபடுபவர்கள் லட்சுமியின் அருளுக்குப் பார்த்திரமாவார்கள். இரட்டை விநாயகரை தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

    கன்னியாகுமரி உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
    கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1,008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நேற்று 1,008 சங்காபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

    இதனையொட்டி காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு 1,008 சங்குகளை சிவலிங்க வடிவில் வைத்து அபிஷேகம் நடந்தது. நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜபெருமாள் சிவகாமி அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்தனர்.
    திருமலையில் திருமலைநாத நீராஜனம் மேடையில் பாலகண்ட பாராயணம் நடந்தது. அப்போது பாலகண்டத்தின் 142 வசனங்களை வேதபண்டிதர்கள் படித்தார்கள்.
    உலக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி திருமலைநாத நீராஜனம் மேடையில் பாலகண்ட பாராயணம் நடந்தது. அப்போது பாலகண்டத்தின் 142 வசனங்களை வேதபண்டிதர்கள் படித்தார்கள்.

    பாலகண்ட பாராயண நிகழ்ச்சியை எஸ்.வி. வேத பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆச்சார்ய ராமகிருஷ்ண சோமயஜூ, தர்மகிரி வேதபாடசாலை, எஸ்.வி.வேதபல்கலைக்கழகம், எஸ்.வி.உயர்வேத நிறுவன வேதபண்டிதர்கள் மற்றும் சமஸ்கிருத பல்கலைக்கழக அறிவியல் பண்டிதர்கள் கலந்துகொண்டனர்.

    தேவஸ்தான கூடுதல் அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆச்சார்யா முரளிதர சர்மா, தேவஸ்தான ஆகமஆலோசகர் மோகனரங்காச்சார்யலு ஆகியோர்கலந்து கொண்டனர்.
    திருவிதாங்கூர் சமஸ்தான அரண்மனை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதும், 18-ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரை நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.
    பாரத நாட்டின் பாரம்பரியத்தை அடையாளமாக கொண்டதுதான் விழாக்கள். தேசம் பரந்து விரிந்து இருந்தாலும் அனைவரது கலாசாரமும் ஒன்றுதான் என்பதை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஆங்காங்கே பரவிக்கிடப்பதை எப்போதும் நாம் பார்க்க முடியும்.

    அதிலும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடரும் ஆன்மிக விழா என்றால் அதில் அதிக சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஒரு ஆன்மிக திருவிழா, குமரி மாவட்டத்தையும் கேரள மாநிலத்தையும் தொடர்பு படுத்தி இன்றளவும் நடந்து கொண்டு இருப்பது தனிச்சிறப்பு என்றால் மிகையாகாது. அது மக்களின் வரவேற்பை பெற்றிருப்பது வரலாற்றின் சிறப்பம்சம் ஆகும்.

    பத்மநாபபுரம் அரண்மனை

    மன்னராட்சி காலத்தில் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இணைந்து இருந்தது. 14-ம் நூற்றாண்டில் திருப்பாப்பூர் முப்பன் என்ற மன்னன் களிமண்ணால் பத்மநாபபுரத்தில் ஒரு அரண்மனையை கட்டினார். அதன்பின்னர் மன்னர் ரவி குலசேகர பெருமாள் இந்த அரண்மனையை வேணாட்டின் தலைநகரமாக ஆக்கிக்கொண்டார். அதை தொடர்ந்து 18-ம் நூற்றாண்டில் மன்னர் அனுஷம் திருநாள் மார்த்தாண்டவர்மா தற்போதுள்ள பத்மநாபபுரம் அரண்மனையை கலை நுட்பத்துடன் கட்டினார். அங்கிருந்து மன்னர் ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வந்தார்.

    அன்றைய கால கட்டத்தில் அம்மனுக்கு உகந்த நவராத்திரி விழாவை மன்னர்கள் மட்டுமே கொண்டாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விழாக்களை மராட்டியம் மற்றும் மேற்கு வங்கம், கர்நாடகா (மைசூர் அரண்மனை) போன்ற மாநிலங்களில் அக்கால மன்னர்கள் சீரும், சிறப்புமாக கொண்டாடி உள்ளனர். அதனால்தான் வடமாநிலங்களில் தசரா இன்னமும் பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெற்று வருகிறது.

    பத்மநாபசாமி என அழைக்கக்கூடிய பெருமாள் மீதும், கிருஷ்ணர் மீதும் திருவிதாங்கூர் மன்னர்கள் மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டவர்கள் என்பதில் எள்முனை அளவும் சந்தேகமில்லை. அதற்கு அவர்கள் தினந்தோறும் வழிபாடு செய்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுமே சான்று. அது மட்டுமின்றி தாங்கள் சமஸ்தான ஆட்சியில் இருந்தபோதிலும், பத்மநாபசாமிதான் ஆட்சி செய்வதாகவும், அவருடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்து வருவதாகவும் கூறி அக்கால மன்னர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் தங்களது பெயருக்கு முன்பு பத்மநாபதாச என்ற அடைமொழியை சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    நவராத்திரி விழா

    இறைபக்தியில் சிறந்து விளங்கிய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் நவராத்திரி விழாவையும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இதற்காக பத்மநாபபுரம் அரண்மனையின் ஒரு பகுதியில் நவராத்திரி மண்டபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த மண்டபம் அக்கால கட்டிடக்கலை நுணுக்கத்துக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அதில் உள்ள கல் சிற்ப வேலைப்பாடுகள், இன்றும் பளபளக்கும் வகையில் காட்சியளிக்கும் கருந்தளம் ஆகியவை மன்னர்கள் கலைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை பறைசாற்றுவதாக உள்ளது. அந்த மண்டபத்துக்கு முன்புறம் சரஸ்வதி கோவிலும் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில்தான் 10 நாள் நவராத்திரி பூஜைகள் நடந்துள்ளது. நவராத்திரி மண்டபத்தில் நடனம் உள்ளிட்ட சமஸ்தானத்தின் கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த விழாவுக்காக அந்த காலத்திலேயே சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் (குமாரகோவில் குமாரசுவாமி கோவில்) ஆகிய சாமி சிலைகளை ஊர்வலமாக பத்மநாபபுரம் அரண்மனைக்கு எடுத்துச் சென்று அங்குள்ள சரஸ்வதி அம்மன் கோவிலில் வைத்து நவராத்திரி விழா பூஜைகளை நடத்தியுள்ளனர்.

    சாமி சிலைகள் ஊர்வலம்

    பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தான அரண்மனை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதும், 18-ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரை நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இதற்காக குமரி மாவட்டத்தின் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனும், குமாரகோவிலில் இருந்து வேளிமலை முருகனும், பத்மநாபபுரம் அரண்மனை அருகில் தற்போது தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மனும் என 3 சாமி சிலைகள் ஆண்டுதோறும் நவராத்திரி விழா தொடங்குவதற்கு முன்பு திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த சாமி சிலைகளுக்கு முன்பு மன்னர் உடன் செல்வதை குறிக்கும் வகையில் மன்னர் மார்த்தாண்டவர்மா பயன்படுத்திய உடைவாளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கையில் தாங்கி பிடித்தபடி செல்வார். சாமி சிலைகள் ஊர்வலத்தில் மன்னர் மார்த்தாண்ட வர்மா உடன் வருவதாகக் கருதி, அவருடைய வாள் அவருடைய பிரதிநிதிகளால் கொண்டு செல்லப்படுகிறது என்று கேரள மாநில அதிகாரிகளால் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையைச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர் அந்த வாளை பெற்று பத்மநாபசாமி கோவில் அருகில் உள்ள நவராத்திரி விழா நடைபெறும் நவராத்திரி மண்டபத்தில் பூஜைக்கு வைப்பார்கள். அதாவது நவராத்திரி விழாவுக்கு 3 நாட்களுக்கு முன்பு சுசீந்திரத்தில் இருந்து தமிழக -கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி தொடங்கும். இந்த ஊர்வலத்தின்போது தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். அன்று மாலை பத்மநாபபுரத்தில் உள்ள நீலகண்டசாமி கோவிலில் முன்னுதித்த நங்கை அம்மன் சாமி சிலை வைக்கப்படும். மறுநாள் காலை அங்கிருந்து முன்னுதித்த நங்கை அம்மனும், குமாரகோவிலில் இருந்து வேளிமலை முருகன் சாமி சிலையும் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை சென்றடையும்.

    வரவேற்பு

    பத்மநாபபுரம் அரண்மனையின் 4-வது தளத்தில் உள்ள உப்பரிகை மாளிகையில் உள்ள பூஜை அறையில் பாதுகாக்கப்படும் மார்த்தாண்டவர்மா மன்னரின் உடைவாள் கேரள மாநில அறநிலையத்துறை மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அதைத்தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகளும் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்லும். கேரள மாநில போலீசார் அணிவகுப்புடன், பேண்டு வாத்தியம் முழங்க சாமி சிலைகளின் ஊர்வலம் தொடங்கும். அன்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் 3 சாமி சிலைகளும் வைக்கப்படும்.

    மறுநாள் காலையில் அங்கிருந்து சாமி சிலைகள் புறப்படும். குமரி- கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள மாநில அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். இதில் அம்மாநில அரசின் வருவாய்த்துறை, காவல்துறை, தேவசம்போர்டு, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து வரவேற்பு அளிக்கின்றனர். அதன்பிறகு ஊர்வலம் தொடர்கிறது. அன்று மாலை ஊர்வலம் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையில் உள்ள கிருஷ்ணன் கோவிலைச் சென்றடைகிறது.

    மூலவர் சரஸ்வதி அம்மன்

    அங்கிருந்து மறுநாள் காலை புறப்பட்டு திருவனந்தபுரத்தை சாமி சிலைகள் சென்றடைகின்றன. அதில் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை மட்டுமே மூலவர் சாமி சிலையாக கருதப்படுகிறது. அந்த சிலை மட்டும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பகுதியில் உள்ள கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்தில் 10 நாட்களும் பூஜைக்காக வைக்கப்படுகிறது. வேளிமலை முருகன் சிலை ஆரியசாலையில் உள்ள தேவி கோவிலிலும், முன்னுதித்த நங்கை அம்மன் சிலை செந்திட்ட அம்மன் கோவிலிலும் நவராத்திரி பூஜைக்கு வைக்கப்படுகின்றன. நவராத்திரி விழாவின் இறுதிநாளில் வேளிமலை முருகன் பரிவேட்டைக்குச் சென்று திரும்புவார். அதன்பிறகு அங்கிருந்து 3 சாமி சிலைகளும் புறப்பட்டு குமரி மாவட்டத்தை வந்து சேரும்.

    இந்த ஊர்வலத்தின்போது தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சாமி சிலை குமரி மாவட்டத்தில் இருந்து யானை மீது பவனியாகச் செல்லும். மற்ற இரண்டு சாமி சிலைகளும் பல்லக்கில் வைத்து எடுத்துச் செல்லப்படும். அப்போது மேளதாளங்கள் முழங்க, முத்துக்குடை மரியாதையுடன் கொண்டு செல்லப்படும். வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் சாத்தி வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.

    உறவுப்பாலம்

    ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் சாமி சிலை ஊர்வலத்திலும் சில மாற்றங்களை கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தமிழக அரசும், கேரள அரசும் கொண்டு வந்துள்ளன. அதன்படி சாமி சிலைகளை பல்லக்கு வாகனத்தில் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழாவுக்கான சாமி சிலை ஊர்வலம் வருகிற 2-ந் தேதி சுசீந்திரத்தில் இருந்து தொடங்குகிறது. மறுநாளான 3-ந்தேதி பத்மநாபபுரத்தில் இருந்து 3 சாமி சிலைகளும் திருவனந்தபுரத்துக்கு புறப்படுகிறது.

    மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த நிலையில், ஒரு மாநில (கேரளா) ஆட்சி நிர்வாகத்தில் இருந்த பகுதி மற்றொரு மாநில (தமிழகம்) ஆட்சி நிர்வாகத்துக்கு வந்த பிறகும் பல ஆண்டு காலமாக இந்த சாமி சிலைகளின் ஊர்வலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது இரு மாநிலங்களின் உறவுக்கு பாலமாகவும், இரு மாநில மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஆண்டுகள் கடந்தாலும், ஆட்சியாளர்கள் மாறினாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நவராத்திரி விழா ஆண்டாண்டு காலத்திற்கும் தொடரும் நிகழ்வாக உள்ளது.
    மாங்கல்ய தோஷம் என்ற குறைபாடு பல பெண்களுக்கு திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்த தவறுகிறது. அல்லது திருமணத்திற்குப் பிறகு மிகுதியான சங்கடங்களைத் தருகிறது.
    ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுள் ஸ்தானம் மற்றும் தாம்பத்திய உறவு பற்றியும் கூறும் இடமாகும்.

    2-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 8-ம் இடத்தைப் பார்க்கும். 8-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 2-ம் இடத்தைப் பார்க்கும். 2-ம் இடத்திற்கும் 8-ம் இடத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் 2, 8-க்கு தொடர்புடைய பாவ கிரகங்கள் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துகிறது.

    அதன் படி 2,8-ம் இடத்தில் ஆட்சி, உச்சம், நீச கிரகம் நின்றாலும் செவ்வாய், சனி சம்பந்தமாக இருந்தாலும் சனி, செவ்வாயுடன் ராகு,கேது இணைந்து இருந்தாலும் அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சேர்ந்து இருப்பது சூரியன்,ராகு,கேது, சனி, செவ்வாய் போன்ற அசுப கிரகங்கள் நிற்பதும், நீச, அஸ்தங்கம்,வக்ரம் பெற்ற கிரகம் அமர்வதும் மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8- ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி உண்டாகும். 8--ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி ஏற்படும்.
    ×