என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை ஆயிரத்தெட்டு உரு வீதம் ஒரு மண்டலம் செபம் செய்யக் கொடுமையான வறுமை பீடித்திருக்கும் இல்லத்திலும் பொன்மாரி பொழியும்.
பவுர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த யந்திர வழிபாட்டினை தொடங்க வேண்டும். பூஜை ஆரம்பிக்கும் அன்று மாலையில் நீராடிவிட்டு புதுப்பட்டு உடுத்தி பூஜை அறையில் அமர்ந்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு செப்புத் தகட்டில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள யந்திரத்தை வரைந்து அபிஷேகம் செய்து ஒரு பீடத்தின் மீது வைத்து, பொட்டிட்டு மலர்ச்சரம் அணிவித்து அதன் எதிரே நைவேத்தியப் பொருட்களான சுண்டல், சர்க்கரை, கற்கண்டு, தேன், இளநீர், பானகரம், பொரிகடலை, அவல் பாயாசம் ஆகியவைகளை வாழை இலையில் வைத்து அத்துடன் தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து தூப தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை ஆயிரத்தெட்டு உரு வீதம் ஒரு மண்டலம் செபம் செய்யக் கொடுமையான வறுமை பீடித்திருக்கும் இல்லத்திலும் பொன்மாரி பொழியும்.
மூலமந்திரம்
‘ஓம் நமோ பகவதே சொர்ணாகர்சண
பைரவாய தன தான்ய விரித்திகராய
சீக்கிரம் வசியம் குருகுரு ஸ்வாகா!’
மூலமந்திரம்
‘ஓம் நமோ பகவதே சொர்ணாகர்சண
பைரவாய தன தான்ய விரித்திகராய
சீக்கிரம் வசியம் குருகுரு ஸ்வாகா!’
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாகன சேவைகளும் ஏகாந்தத்தில் மட்டுமே கடைபிடிக்கப்படும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் மேள தாளங்களுடன் கோவிலில் கஜ உருவம் தாங்கிய கொடி ஏற்றப்பட்டது.
கோவில் அதிகாரி வீரபிரம்மம் கூறுகையில் கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாகன சேவைகளும் ஏகாந்தத்தில் மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றார். கோவில் தாசில்தார் ஸ்ரீமதி கஸ்தூரி பாய், சீனிவாசுலு, பிரபாகர் ரெட்டி, அர்ச்சகர் ஸ்ரீபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு வழக்கமாக அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இ்ந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் சதுரகிரி, சாப்டூர் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும், வனத்துறையினர் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வழக்கம்போல் நடைபெறக்கூடிய சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெறும் எனவும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்....திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்ட கொப்பரை இறக்கப்பட்டது
9-ம் திருவிழா அன்று மாலை பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து மாதாவின் திருவுருவ சப்பர பவனி தொடங்கி புனித அமல அன்னை ஆலயத்தை வந்தடைகிறது.
பணகுடி புனித அமல அன்னை ஆலய திருவிழா பங்கு குரு இருதயராஜ் அடிகள் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு திருநாளிலும் காலை ஜெபமாலை, திருப்பலியும், மாலை மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
9-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து மாதாவின் திருவுருவ சப்பர பவனி தொடங்கி புனித அமல அன்னை ஆலயத்தை வந்தடைகிறது. அதன்பின் ஆடம்பரமாலை ஆராதனையும், 10-ம் திருவிழா (8-ந்தேதி) அன்று காலை ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை அமல அன்னை ஆலய பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியிலிருந்து இறக்கப்பட்டது. ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் மை பக்தர்களுக்கு வழங்கப்படும்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 19-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அந்த மகா தீபம் அன்றில் இருந்து தொடர்ந்து நேற்று அதிகாலை வரை 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தது. மகா தீபத்திற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், காடா துணி ஆகியவை அவ்வப்போது மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தீபத் திருவிழாவின்போது நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள் மகா தீபத்தை காண நேற்று முன்தினம் இரவு வரை திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்தனர். மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதை மற்றும் உள்ளூர் மக்கள் அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை வரை மகா தீபம் காட்சி அளித்தது.
மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை நேற்று காலை 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மலையில் இருந்து கோவிலுக்கு தீப கொப்பரை கொண்டு வரும் வழிநெடுகிலும் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். தொடர்ந்து மாலை கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வருகிற 20-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் மை (தீப மை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு வைக்கப்படும். பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும்.
ஐயப்பனை அன்னதான பிரபு என்பார்கள். ஐயப்பன் கோவில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம். வசதி படைத்தவர்கள் நிச்சயமாக அன்னதானம் செய்ய வேண்டும். தானம் செய்வதற்கு முன் படுக்கை பூஜை அல்லது வெள்ளம்குடி பூஜை நடத்த வேண்டும். கன்னி ஐயப்பன்மார்கள் இந்த பூஜையை கட்டாயம் செய்ய வேண்டும்.
சபரிமலைக்கு இருமுடி கட்டு ஏந்தி புறப்படுவதற்கு முன் கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் இந்த பூஜையை நடத்த வேண்டும். வீட்டின் கிழக்குப்பாகத்தில் ஏழு கோல் சதுரத்தில் பந்தல் அமைக்க வேண்டும். பந்தலை அலங்கரித்து நடுவில் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும்.
மண்டபத்தில், ஐயப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும். மேலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர்சுவாமி, ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும். நடுப்பாகத்தில் ஐயப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும்.
கிழக்கு திசையை நோக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காயை வைக்க வேண்டும். அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் ஆழி அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் விறகுகளை அடுக்கி ஆழி வளர்க்க வேண்டும். பூவரசு அல்லது பலர் விறகுகளை ஆழியில் போட வேண்டும்.
ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்திய பிறகு ஆழியை ஏற்ற வேண்டும். அனைத்து ஐயப்பன் மார்களும் ஆழியை வலம் வர வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான ஐயப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜை நடத்தலாம்.
விரத காலத்தில்... எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் ஏற்படுதல் ஆகியவையே ஐயப்ப விரதத்தின் தத்துவம், உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
கற்பூர தீபம் ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.

கடன் கழுத்தை நெரிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும் என்பது ஐதீகம்.
கடன் கழுத்தை நெரிப்பவர்கள் குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும். சுப செயலான நகை வாங்குவது, தொழில் தொடங்குவது, நடவு செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம். திருமணத்தை நடத்தக் கூடாது. அது போல் கடன் வாங்குவது, பிரேதத்தை தூக்குவது போன்ற அசுப நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கிழமைகள் குளிகை நேரம்
ஞாயிறு 3 மணி முதல் 4.30 மணி வரை
திங்கள் 1.30 மணி முதல் 3 மணி வரை
செவ்வாய் 12 மணி முதல் 1.30 மணி வரை
புதன் 10.30 மணி முதல் 12 மணி வரை
வியாழன் 9 மணி முதல் 10.30 மணி வரை
வெள்ளி 7.30 மணி முதல் 9 மணி வரை
சனி 6 மணி முதல் 7.30 மணி வரை
கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தினசரி குளிகை கால காலத்தை பயன்படுத்தி கடனை திரும்பச் செலுத்தினால் விரைவில் கடன் தீரும். மிகக் குறிப்பாக செவ்வாய்கிழமை பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள் சனிக்கிழமை காலை 6- மணி முதல் 7.30 மணிக்குள் கடனில் சிறுபகுதியை கொடுத்தால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கடன் அடைபடுவதை காணலாம்.

கோவிலில் நடந்த குங்கும லட்சார்ச்சனையை ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதில் 413 வீடுகளை சேர்ந்த பக்தர்கள் டெலிவிஷனில் பார்த்து தரிசனம் செய்தனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை அலங்கரித்து வைத்து ேநற்று காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பிரதான அர்ச்சகர்கள் பத்மாவதி தாயாருக்கு லட்சுமி அஷ்டோத்தரம் மற்றும் லட்சுமி சஹஸ்ர நாமங்களை ஓதி குங்கும லட்சார்ச்சனையை நடத்தினர்.
கோவிலில் நடந்த குங்கும லட்சார்ச்சனையை ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதில் 413 வீடுகளை சேர்ந்த பக்தர்கள் டெலிவிஷனில் பார்த்து தரிசனம் செய்தனர்.
அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மய்யா பங்கேற்று தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு குங்கும லட்சார்ச்சனை நடப்பது வழக்கம். பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நடத்த குங்கும லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. கும்குமம் இந்துக்களின் மங்கல பொருள். வீடு, கோவில்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமணமான பெண்கள் தங்களின் ெநற்றியிலும், மாங்கல்யத்துக்கும் குங்குமம் வைப்பார்கள், என்றார்.

ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளில் மேதாவிவிலாசம் பெறுவதற்கு வேண்டுபவர்கள் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்ய வேண்டும்.
ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா
நீலாப்ஜ-தாடியீ-வீணா
சாலி- பாசாக்ஷஸுத்கரம்
தததுச் சிஷ்ட- நாமாயம்
கணேச: பாது மேசக
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா
நீலாப்ஜ-தாடியீ-வீணா
சாலி- பாசாக்ஷஸுத்கரம்
தததுச் சிஷ்ட- நாமாயம்
கணேச: பாது மேசக
கர்நாடக மாநிலத்தில் சிற்பங்களுக்குப் பெயர் பெற்ற பேளூர், ஹலபேடு ஆலயங்கள் இருக்குமிடத்துக்குச் சற்றுத் தள்ளி பெலவாடியில் வீரநாராயணர் ஆலயம் அமைந்துள்ளது.
வீரநாராயணர் கோவில் (Veera Narayana temple), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி எனும் ஊரில் அமைந்துள்ளது.
போசளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200ல் போசளர் கட்டிடக்கலை நயத்தில் கட்டிய கோயிலாகும். வீரநாராயணர் கோவில், சிக்மகளூர் நகரத்திற்கு தென்கிழக்கில் 29 கிமீ தொலைவில் உள்ளது. பேளூர் மற்றும் ஹளேபீடு போன்ற உலக பாரம்பரியக் களங்கள், வீரநாரயணர் கோயிலுக்கு அண்மையில் உள்ளது.
சன்னதிகள்
வைணவக் கோயிலான வீரநாராயணர் கோயிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான 8 அடி உயர நாராயணனின் முக்கியச் சன்னதி, 7 அடி உயர புல்லாங்குழல் இசைக்கும் வேணுகோபாலன் சன்னதி மற்றும் யோக நரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளது.
வீரநாராயணர் வெகு கம்பீரமாக காட்சி தருகிறார். கண்களிலும் வீரம் தெறிக்கிறது. நான்கு கரம் கொண்டவராக, தாமரை ஒன்றின்மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எட்டடி உயரம் அந்தச் சிற்பத்தின் கம்பீரத்தை அதிகமாக்குகிறது. அந்த சாளக்கிராமத்தைச் சுற்றிலும் கருடன், காளிங்க நர்த்தனம் ஆடும் கண்ணன் உருவங்கள் காட்சியளிக்கின்றன. கீழே அதே கல்லில் சிறிய அளவில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் காட்சியளிக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 28 அன்று ஏழு வாசல்களையும் கடந்து பெருமாளின்மீது சூரியக் கதிர்கள் படும். அது ஓர் அற்புதக் காட்சி.
ஏழடி உயரத்தில் அமர்ந்த வடிவத்தில் காட்சி தருகிறார் யோக நரசிம்மர். கையில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கிறார். இரு புறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் இங்கும் காட்சியளிக்கின்றனர். முக்கிய உருவத்தின் தலைக்கு மேற்புறத்தில் உள்ள அரை வளைவுப் பகுதியை சிற்பக் கலையில் பிரபாவதி என்பார்கள். யோக நரசிம்மரைச் சுற்றியுள்ள பிரபாவதியில் திருமாலின் பத்து அவதாரங்களும் காட்சியளித்து வியக்க வைக்கின்றன.
இக்கோயிலின் இரண்டு சன்னதிகளுக்கிடையே அமைந்த திறந்த வெளி மண்டபத்தில் 70 செவ்வகம் மற்றும் சதுர வடிவ அமைப்புகள் கொண்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் இரண்டு முடிய மண்டபங்களின் ஒன்றில் 36 செவ்வக அமைப்புகளும், ஒன்றில் 9 செவ்வக அமைப்புகளும் கொண்டுள்ளது. இக்கோயிலின் மூன்றாவது சன்னதி மிகவும் பழைமை வாய்ந்தது. பழைய சன்னதியின் சுவர்கள் பழைமையாக இருப்பினும், இதன் கூரைகள் அழகிய கட்டிட நயத்தில் உள்ளது. இக்கோயில் வளாகம் 59 புஜைக்கான மணி வடிவ குவிமாடங்களுடன், பல தூண்களுடன் உள்ளது. கொண்டுள்ளது.
இக்கோயிலின் இரண்டு புதிய சன்னதிகள் இரண்டு வேறுபட்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஒரு சன்னதி விண்மீன் உருவில் அமைந்துள்ளது. இச்சன்னதியின் கோபுரக் கலசங்கள் அழகிய பானை வடிவத்தில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று சிறு அழகிய தளங்கள் கொண்ட கோபுரத்தில் இக்கலசங்கள் உள்ளது.
கிருஷ்ணர் காளிங்கன் எனும் பாம்பின் தலை நின்று நர்த்தனம் புரியும் சிற்பம் மற்றும் கருடச் அழகிய நுண்ணிய வேலைபாடுகள் கொண்டது.
இந்த ஆலயத்துக்கு மூன்று விமானங்கள்; அதாவது மூன்று கருவறைகள். ஒவ்வொன்றிலும் ஒருவித திருமாலின் வடிவம். கூரைப்பகுதி சாய்வாகக் கட்டப்பட்டிருக்கிறது. யானைகளின்மீது ஹொய்சாளர்களுக்குத் தனிப் பிரியம் என்கிற அளவுக்கு அங்கே, இங்கே என்று பல யானை உருவங்கள் காட்சிதருகின்றன.
பழைய கருவறை என்பது நுழைந்தவுடன் நேரே இருப்பது. அங்கு ஒரு திறந்த மண்டபமும், மூடப்பட்ட மண்டபமும் காணப்படுகின்றன. அவற்றை அடைவதற்கு இருபுறமும் உள்ள பளபளவென்ற தூண்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று காலையில் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உற்சவர் சாமி மற்றும் அம்மன் ராஜகோபுரத்திற்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் அகழி தண்ணீர் கடந்த 12-ந்தேதி புகுந்தது. கோவில் வளாகத்தில் உள்ளே இருக்கக்கூடிய குளம் பகுதி முழுவதுமாக தண்ணீர் தேங்கியது. இதையடுத்து படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்தது.
முட்டி அளவு தண்ணீரில் பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். அகழி நீர்மட்டம் உயர்ந்ததால் கோவிலுக்குள்ளும் நீர்மட்டம் உயர தொடங்கியது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது அபிஷேக நீர் செல்லும் வழியாக கோவிலுக்குள் தண்ணீர் வந்ததால் அதை மூடி விட்டுஉள்ளே இருக்கக்கூடிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.
ஊற்று மற்றும் தொடர் மழையால் மீண்டும் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கிக் கொண்டே இருந்தது.
நேற்று அம்மன் சன்னதி கருவறைக்குள் தண்ணீர் புகுந்தது. தண்ணீரில் நின்று கொண்டு அர்ச்சகர்கள் அம்மனுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்ததால் இன்று காலையில் மூலவர் ஜலகண்டேஸ்வரர் சன்னதி பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்தது.
கோவிலுக்குள் பல்வேறு வழிகளில் தண்ணீர் வருகிறது. சுரங்கப்பாதை அமைந்துள்ள இடம், தண்ணீர் வெளியேறும் குழாய் ஊற்று போன்றவற்றிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.
இதனால் இன்று காலையில் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் பாசி பிடித்து வழுக்கி விழ கூடிய சூழ்நிலை உள்ளது. தண்ணீரும் அசுத்தம் அடைந்து வருகிறது.
இதனால் இன்று காலையில் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
உற்சவர் சாமி மற்றும் அம்மன் ராஜகோபுரத்திற்கு வெளியே சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
கோவில் கருவறைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் சுற்றுப்பிரகாரத்தில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தண்ணீரும் மாசடைந்து வருகிறது.
உள்ளே சென்றால் பகதர்களுக்கு அவதி ஏற்படும். தண்ணீர் வடியும் வரை கோவில் பூட்டப்பட்டிருக்கும். கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்தப் பிரசித்தி பெற்ற பூஜையை நிகழ்த்த, சபரிமலை கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பணம் கட்டிவிட்டால் மற்ற ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து கொள்ளும்.
சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலின் சிறப்பானதும் தலைமயானதுமான பூஜை, பதினெட்டாம் படி பூஜை தான், அதிகம் செலவு ஆகும் பூஜையும் இதுதான். மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த பூஜை, வேறு எந்த கோவில்களிலும் இல்லாத ஒன்று. பதினெட்டு படிகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு புராணம் என்று 18 புராணங்கள் உண்டு என்பது ஐதீகம். ஒவ்வொரு படியையும் ஒரு மலை தெய்வம் என்று சங்கல்பித்து படி பூஜை நடத்தப்படுகிறது.
1. சபரி மலை, 2. பொன்னம்பல மேடு, 3. கவுண்ட மலை, 4. நாக மலை, 5. சுந்தர மலை, 6. சிற்றம்பல மேடு, 7. கல்கி மலை, 8. மாதங்க மலை, 9. மைலாடும் மலை, 10. ஸ்ரீ மாத மலை, 11. தேவர் மலை, 12. நீலக்கல் மலை, 13. தலப்பாறை மலை, 14. நீலி மலை, 15. கரி மலை, 16. புதுச்சேரி, 17. அப்பாச்சி மேடு, 18. இஞ்சிப் பாறை என்னும் பதினெட்டு மலைகளின் தெய்வங்களை சாந்திபடுத்தவே பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படுகிறது.
சபரிமலையில் இரவு அத்தாழ பூஜைக்கு முன்பு பதினெட்டாம்படி பூஜை நடக்கும். விசேஷமுள்ள இந்த பிரதான பூஜையை, சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமைப் புரோகிதர் மட்டுமே செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்ட பதினெட்டுப்படி பூஜைக்கு பக்தர்களிடமிருந்து பேராதரவு பெருகியதால் பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட்டன.
ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரும் நாட்களில் பதினெட்டும்படி பூஜை நடத்த மாட்டார்கள். தற்சமயம் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படுகிறது.
இந்தப் பிரசித்தி பெற்ற பூஜையை நிகழ்த்த, சபரிமலை கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பணம் கட்டிவிட்டால் மற்ற ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து கொள்ளும். கலசத் துணிகள், படி பூஜையின்போது தலைமை புரோகிதர் அணிய வேண்டிய உடைகள், கற்பூரம், சாம்பிராணி, 18 தேங்காய்கள் உதிரிப் பூக்கள், பூமாலைகள், 36 நிலை விளக்குகள் இவைகள் பூஜைக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள்.
இந்தப்படி பூஜை நடத்தி முடிய சுமார் மூன்றுமணி நேரம் ஆகும். ஐந்து அடி நீளமும், ஒன்பது அடி அகலமும் உள்ள பஞ்சலோகத் தகடு அடிக்கப்பட்ட படிகளின் நடுவில் பட்டுத்துணி விரித்து பூக்கள் வைக்கப்பட்டு (தாமரைப் பூவும் அடக்கம்) பூக்களின் மேல் தேங்காய் ஒன்றும் வைக்கப்படும். ஒவ்வொரு படிகளின் இரு புறத்திலும் இரண்டு நிலை விளக்குகளின் திரி கொளுத்தி வைப்பார்கள். பூக்கள், பூமாலைகளைக் கொண்டு பதினெட்டுப்படிகளும் அதன் பக்க சுவர்களும் அலங்கரிக்கப்படும்.
பதினெட்டுப் படிகளில் கீழாக இருக்கும் முதல் படியின் கீழே தளத்தில் அமர்த்து சபரிமலை சந்நிதானத்தை நோக்கியவாறு பதினெட்டுப்படி பூஜைகளை தலைமை புரோகிதர் நிர்வகிப்பார். ஒவ்வொரு படியிலும் பிரத்யேக பூஜை நடத்தப்படும். பூஜை நடக்கும் போது நடை திறந்திருக்கும். படி பூஜை நிறைவுற்று, அத்தாழ பூஜையும் நடத்தி முடிந்த பிறகு தான் நடை அடைக்கப்படும்.
பதினெட்டுப்படி பூஜையை அதிக அளவில் நடத்துபவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஐயப்ப பக்தர்கள் தான்.