என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பரங்குன்றம் கோவிலில் வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
    திருப்பரங்குன்றம் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடை திறப்பில் நேர மாற்றம் என்பது வாடிக்கையான ஒன்றாகும்.

    அதேபோல வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) மார்கழி மாதம் பிறக்கிறது. அன்று முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

    பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் மார்கழியை முன்னிட்டு பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் மாதமான மார்கழி நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 13-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    ஆரூத்திரா தரிசனத்தை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதி (திங்கள்கிழமை) அன்று மட்டும் கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மார்கழி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    மார்கழி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களான பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி, பட்டத்து விநாயகர் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும். இந்த நடைதிறப்பு, பூஜை முறைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி வரை நடைபெறும். மேலும் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வருகிற 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.

    அதேபோல் பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில்களில் ஜனவரி 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இவ்வாறு பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும்.
    நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று ஒளிவீசும் தேகத்துடன் வளமுடன் வாழ்வோம்.

    யாதேவீ ஸர்வபூதேஷு
    காந்திரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
    நமோ நமஹ

    எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய அம்சமாக உறையும் ஆரோக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

    தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் கீழே விழுந்து நமஸ்கரிப்பது சம்பிரதாயம்.
    நெல்லையப்பர் கோவிலில் வருகிற 19-ந் தேதி தாமிர சபையில் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. 20-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், நடராஜருக்கு தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் மேளதாளம் முழங்க வீதி உலா நடந்தது.

    வருகிற 19-ந் தேதி தாமிர சபையில் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. வருகிற 20-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை பெரிய சபாபதி சன்னதி முன்பு திருவெண்பாவை வழிபாடு நடக்கிறது.
    இங்கு வந்து கருணாகரப் பெருமாளை வணங்கி பிரார்த்தனை செய்தால் அவர்களுடைய தீராத வியாதிகள் மட்டுமல்ல, மனக்குறைகளும் நீங்கி வாழ்வாங்கு வாழ்வார்கள்.
    மூலவர்: கருணாகரப் பெருமாள்
    தாயார்: பத்மாமணி நாச்சியார், ரமாமணி நாச்சியார்
    உற்சவர்: கருணாகரப் பெருமாள்
    தீர்த்தம்: அக்ராய தீர்த்தம்
    ஊர்: காஞ்சிபுரம்

    தலவரலாறு:

    திருக்காரகத்திலுள்ள கருணாகரப் பெருமாள் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலின் உள்ளேயே தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு திருக்காரகம் என்று பெயர் வந்ததன் காரணத்தை அறிய முடியவில்லை. கார்க முனிவர் செய்த தவத்தின் பயனால் இறைவன் திருக்காட்சியை காட்டி அருளியது போல் தெரிகிறது.

    இதன் காரணமாகவே “திருக்கார்கம்” என்று ஆனதாகவும் பிற்காலத்தில் அப்பெயர் மருவி “திருக்காரகம்” என்று ஆனதாகவும் தெரிகிறது. திருமங்கையாழ்வார் “உலகமேத்தும் காரகத்தாய்” என்று மங்களாசாசனம் செய்திருப்பதால் அக்காலத்தில் தனியாக மிக பிரம்மாண்டமான கோவில் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

    அக்காலத்தில் பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சி பகை அரசர்களின் படையெடுப்பின் போது, இக்கோவில் அழிக்கப்பட்டிருக்கலாம். அழிவுற்ற ஆலயத்தின் இறைவனின் திருமேனியை மட்டும் வேறொரு கோவிலில், அதாவது தற்போது உள்ளதைப் போல சன்னிதி அமைத்து வழிபாடு செய்திருக்கலாம்.

    மூலவர் தரிசனம்:

    இத்தல இறைவனை கார்க முனிவர் தரிசனம் செய்துள்ளார். இங்கு மூலவர் சன்னிதியின் மேல் உள்ள விமானம் வாமன விமானம் ஆகும். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

    அக்ராயர் என்ற அரசனுக்கு ஏற்பட்ட கொடுமையான நோய் குணமாகாமல் தவித்த பொழுது இந்த தலத்திலுள்ள புஷ்கரணியில் நீராடி கருணாகரப் பெருமாளை பிரார்த்தனை செய்தால் கொடிய நோய் விலகிவிடும் என்று சொன்னதின் பேரில் இந்ததலத்திற்கு வந்தார் அக்ராயர்.

    தனக்கென்று ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் நீராடி பெருமாளை பிரார்த்தித்தார். பெருமாளும் அக்ராயருக்குத் தரிசனம் கொடுத்து அவரது தீராத நோயினை நீக்கியதாகச் செவிவவழிச் செய்தி உண்டு.

    பரிகாரம்:

    தீராத நோய் என்று வந்தால் மருத்துவரிடம் செல்வதை விட திருமாலிடம் சரணடைவது தான் புத்திசாலித்தனம். அக்ராயர் அப்படிச் செய்து தான் கொடிய நோயிலிருந்து குணமானார்.

    தீராத நோய் கொண்டவர்கள், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், மன நோயாளிகள், எதிர்பார்த்து ஏமாந்து போனவர்கள், அதிர்ச்சியினால் பேச முடியாமல் போனவர்கள், நரம்புத்தளர்ச்சி, தோல் வியாதி போன்ற தோல் சம்பந்தமான வியாதி உள்ளவர்கள் சரணடைய வேண்டியது இந்த கருணையே வடிவான “ஸ்ரீமந் நாராயணரான எம்பெருமான் கருணாகரப் பெருமாளைத் தான்”.

    இங்கு வந்து கருணாகரப் பெருமாளை வணங்கி பிரார்த்தனை செய்தால் அவர்களுடைய தீராத வியாதிகள் மட்டுமல்ல, மனக்குறைகளும் நீங்கி வாழ்வாங்கு வாழ்வார்கள்.

    கருணாகரப் பெருமாள் :

    எம்பெருமானின் திருநாமம் இத்திருக்கோவிலில் “கருணாகரப் பெருமாள்”. எம்பெருமானின் அருளையும், தரிசனத்தையும் நினைத்த மாத்திரத்திலேயே நாம் பெற்றிடலாம். அவ்வளவு கருணை மிகுந்தவன். ஏன்? எதற்காக?

    உண்மையான பக்தர்கள் தன்னிடம் சரணாகதி அடைந்துவிட்டாலே, அவர்களுக்கு வரும் துன்பங்களையும் கண்டு தனக்கு வந்தது போல் ஏற்றுக்கொண்டு உடனே அவர்களுக்கு ஓடோடி உதவி புரிவதில் எம்பெருமானுக்கு நிகர் அவர் மட்டுமே.

    தன் பக்தனுக்காக மட்டுமின்றி தன்னை நினைப்போர்க்கே கருணை செய்யும் எம்பெருமான் பூலோகத்தில் இத்திருத்தலத்தில் கருணையே உருவான “கருணாகரப் பெருமாளாக” நமக்கு அருள் செய்வதற்குக் காட்சி கொடுத்துக் கொண்டிஅருள்மிகு கருணாகரப் பெருமாள் திருக்கோவில்:-  திருக்காரகம்.ருக்கிறார்.

    இத்தல இறைவனை வணங்கினால் நமக்கு சகல நோய்களையும் நீக்கி, மனக்குறைகளையும் நீக்கி நல்வாழ்வு வாழ அருள்புரிவார் என்பதில் ஐயமில்லை.

    ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருளும் திருத்தலம். உலகளந்த பெருமாள் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.

    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் உள்ளது இந்த திருக்கோவில். நடந்து சென்றே இந்த கோவிலை அடையலாம்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 17-ந்தேதி முதல் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை நடைபெறும். கோவிலில் ஒரு மாத காலம் திருப்பாவை பாராயணம் பாடப்படும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் முக்கிய விழாக்களில் ஒன்றான தனுர்மாத விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் மதியம் 12.26 மணிக்கு தொடங்கும் தனுர் நாழிகையை முன்னிட்டு 17-ந் தேதி முதல் நடத்தப்படும் சுப்ரபாதத்துக்கு பதிலாக திருப்பாவை நடைபெறும். தனுர் மாதத்தில் சூரிய உதயத்திற்கு 1½ மணி நேரத்திற்கு முன்பு விஷ்ணுவுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர்.

    திருப்பாவை ஆழ்வார் திருமறையின் ஒரு பகுதி. குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் மிகவும் பிரபலம். கோவிலில் ஒரு மாத காலம் திருப்பாவை பாராயணம் பாடப்படும். திருப்பாவை சேவை தனிமையில் நடக்கிறது.
    கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கோவில் மூடப்பட்டது. பக்தர்கள் பலர் வெளியே நின்று சாமியை தரிசனம் செய்தனர்.
    கனமழை காரணமாக வேலூர் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. இதனால் கோட்டையின் உட்புறத்தில் தாழ்வான இடத்தில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் வரத்தொடங்கியது. அளவுக்கு அதிமாக தண்ணீர் வந்ததால் கடந்த மாதம் கோவில் மூடப்பட்டது.

    உற்சவர் சாமிகள் வெளியே எழுந்தருள செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவிலில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டதால் மீண்டும் கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். எனவே நேற்று முதல் மீண்டும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கோவில் மூடப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக உற்சவர் சாமிகள் கோவில் வெளியே வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் பலர் வெளியே நின்று சாமியை தரிசனம் செய்தனர்.
    எந்த தோஷமாக இருந்தாலும் பெண் ஜாதகத்திற்கே பார்க்க வேண்டும். பெண் என்பவள் புனிதமானவள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லும் நற்பண்பு மிக அவசியம்.
    திருமணத்திற்கு வரன் பார்க்க தொடங்கியவுடன் முதல் வரிசையில் நிற்கும் தோஷம் செவ்வாய் தோஷம். நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய் உடலின் ரத்த அணுக்கள், ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர். ரத்த அணுக்களின் மூலக் கூறுகளை நிர்ணயித்து பிரிக்க கூடிய சக்தி உடையவர். அது மட்டுமல்ல ஒருவரின் ரத்தத்தை கொண்டு ஆண், பெண் என பாலினத்தையும் தீர்மானிக்கலாம்.

    ஆண் ஜாதகத்தில் செவ்வாயை கொண்டு ஆண்மை வீரியத்தையும், பெண் ஜாதகத்தில் மாதவிடாய் சுழற்சி, கருப்பையின் செயல்பாடு மற்றும் மாங்கல்ய பாக்கியம் போன்றவற்றையும் அறியலாம். ஒருவரின் வீடு வாகன யோகம் பற்றியும் செவ்வாயின் நிலை கொண்டே அறிய முடியும். இத்தகைய செவ்வாய் திருமணம் தொடர்பான பாவங்களான 2, 4, 7, 8, 12--ல் அமர்வது தோஷம் என்று கருதப்படுகிறது.

    அதாவது குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாமிடம், கற்பு எனும் ஒழுக்கத்தைக் குறிக்கும் நான்காமிடம், வாழ்க்கைத் துணை, களத்திர ஒற்றுமையை சொல்லும் ஏழாம் இடம், கணவனின் ஆயுளைக் குறிக்கும் எட்டாமிடம், இல்லற இன்பத்தை கூறும் பனிரெண்டாம் இடம் ஆகிய பாவங்களில் செவ்வாய் அமர்ந்தால் அந்த இடங்கள் நல்ல பலனைத் தராது என்பதால் தோஷமாக கருதப்படுகிறது.

    அதேபோல செவ்வாய் ஏழில் இருந்தால், தனது கொடிய எட்டாம் பார்வையால் இரண்டாமிடத்தைப் பார்ப்பார். நான்கில் இருந்தால் நான்காம் பார்வையாக ஏழாமிடத்தையும், பனிரெண்டில் இருந்தால் எட்டாம் பார்வையாக ஏழாமிடத்தையும், எட்டில் இருக்கும்போது நேரிடையாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும், இரண்டில் இருந்தால் எட்டாமிடத்தையும் பார்த்துக் கெடுப்பார் என்பதாலும் இது தோஷம் எனச் சொல்லப்பட்டது.

    மேலும் எந்த தோஷமாக இருந்தாலும் பெண் ஜாதகத்திற்கே பார்க்க வேண்டும். பெண் என்பவள் புனிதமானவள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லும் நற்பண்பு மிக அவசியம்.

    ஒரு குடும்பத்தை நல்வழிப்படுத்தும் கடமை, மனப்பக்குவம் வேண்டும். அதே போல் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் ஒரே ஒரு முறை மட்டுமே ஏற வேண்டும் என்பதே நமது பாரம்பரியம். ஒரு முறை மட்டும் அமையும் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொடுக்க வேண்டும் என்பதால் முன்னோர்கள் பெண்ணின் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் நின்ற நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவே தற்காலத்தில் ஆணுக்கும் பார்க்கப்படுகிறது. ஆண்-பெண் இருவருடைய ஜாதகங்களில் ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இளைய சகோதரனைக் குறிக்கும்.

    பெண் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும். பெண்ணுக்கு கிரகம் செவ்வாய் பாதிக்கப்பட்டால் திருமண வாழ்வு மன சங்கடத்தை தரும். ஆணுடைய ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்படைந்தால் உடன் பிறந்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். மனைவிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் செவ்வாய் தோஷத்தை கவனமுடன் ஆய்வு செய்வது நல்லது.

    மேலும் முற்காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை நிர்வகித்து வந்ததால் ஆண்களின் துணை தேவைப்பட்டதால் கணவரை அனுசரித்து வாழ்ந்தார்கள். தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் சம்பாதிப்பதால் கணவரை அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கட்டான சூழலில் தனியாக வாழத் துணிந்து விடுகிறார்கள் என்பதால் தற்காலத்தில் ஆணின் ஜாதகத் திலும் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத் துவம் கொடுத்து திருமணம் நடத்த வேண்டிய நிலைக்கு சமுதாயம் உந்தப்பட்டு விட்டது. அத்துடன் செவ்வாய் தோஷம் அனைவருக்கும் பாதிப்பை தராது.

    1, 2, 4, 7, 8, 12 ஆகிய பாவங்களில் நிற்கும் செவ்வாயின் நிலை என்ன? அவர் லக்ன ரீதியான சுபரா அல்லது பாவியா? சுபபலன் தருவாரா அல்லது அசுப பலன் தருவாரா? செவ்வாயுடன் இணைந்த கிரகம், பார்த்த கிரகம், நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும் பலன்கள் மாறுபடும். செவ்வாய் தசை எப்பொழுது வருகிறது போன்ற பல்வேறு காரணிகளை சரி பார்த்தே செவ்வாய் தோஷ பலனை தீர்மானிக்க வேண்டும் என்பதால் செவ்வாய் நின்ற நிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டியது இல்லை. செவ்வாய் 90 சதவீதம்ஜாதகத்தினருக்கு நன்மையே செய்வார். 10 சதவீதம் ஜாதகமே செவ்வாய் தோஷத்தால் பாதிப்பை சந்திக்கும். தோஷத்தை ஏற்படுத்தும் பாவகங்களில் செவ்வாய் இருந்தாலும் சில விதி விலக்குகளும் உண்டு.

    செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாய் பாதிப்பை ஏற்படுத்தாது. உச்சம் பெற்ற செவ்வாய் மிதுன, கும்ப லக்னத்திற்கு மட்டும் தோஷமாகும். கடகம் செவ்வாயின் நீச வீடு. நீசம் பெற்ற செவ்வாய்க்கு வலிமை குறைவதால் தோஷமில்லை. நீசம் பங்கமானால் தோஷமாகும்.

    மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு லகன ரீதியான சுப கிரகம் என்பதால் செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்தாது. செவ்வாய் லக்ன சுபரின் சாரம் பெற்றால் தோஷமாகாது செவ்வாய்க்கு குருவின் சம்பந்தம், பார்வை இருந்தால் பாதிப்பு இருக்காது.

    சனி, ராகு/கேதுக்களுடன் செவ்வாய் இணையும் போது செவ்வாய் தோஷ வீரியம் சற்று அதிகமாகும். அஸ்தமன செவ்வாய்க்கு வலிமை இல்லை என்பதால் தோஷம் இல்லை. செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் தோஷம் பாதிக்காது. மேலே கூறிய அனைத்து நிலைகளிலும் செவ்வாய் தோஷம் விலக்கு பெற்றாலும் அனுபவத்தில் செவ்வாய் தோஷம் 90 சதவீதம் நற்பலன்களையே வழங்குகிறது.

    ஒருவருக்கு செவ்வாய் நல்ல யோகம் தரும் நிலையில் 3,6,8,12-ல் மறையாமல் இருந்தால் மட்டுமே ஒரு ஆணால் உற்சாகமாக அனைத்து செயல்களி லும் ஈடுபட முடியும். சகோதரர்களின் ஆதரவு கிடைக் கும். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவி னர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வீடு, வாகனம், பொன்பொருள் சேர்க்கை, அரசு வழி ஆதாயம் கிடைக்கும். கால்நடை அபிவி ருத்தி விவசாயத்தில் மேன்மை உண்டாகும். ஆண் ஜாதகத்தில் செவ்வாய் மறைவு பெற்றால் சொத்து சுகம் இருக்காது. இருந்தாலும் பயனற்று போகும். உறவுகள் பகையாகும்.

    பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால் புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து குடும்ப உறுப்பினர்களை தன் வசப்படுத்தி முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குண்டம் இறங்கவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    கோபி அருகே உள்ள பாரியூரில் பிரசித்திபெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழாவுக்காக வருகிற 30-ந் தேதி பூச்சாட்டப்படுகிறது. அடுத்த மாதம் 13-ந் தேதி குண்டம் விழா நடைபெறுகிறது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவில் முறைதாரர்கள் மற்றும் பூசாரிகள் மட்டும் இறங்குகிறார்கள்.

    இதேபோல் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெற இருந்த தேரோட்டமும், 15-ந் தேதி நடக்க இருந்த மலர் பல்லக்கு ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஆனால் ஜனவரி 22-ந் தேதி மறுபூஜை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் திருவிழா கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    அனுமதியுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் மழையின் காரணமாகவும், நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகம் இருந்ததாலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதாலும், நீரோடைகளில் நீர்வரத்து குறைவாக இருப்பதாலும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி நாளை (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கோவில் நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அனுமதியுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணிந்து கோவிலுக்கு வரவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.
    இறைவன் நம் மீது காட்டும் மன்னிப்பும், இரக்கமும் நாம் அதை பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கே. ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அவருடைய நாஜி படை முகாமில் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு நண்பர்கள் இரு வேறுபட்ட மனநிலையில் இருந்தனர். அந்த இருவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகு பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்டனர்.

    அப்போது முதலாமவர் மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதற்கு காரணம், தன்னை கொடுமைப்படுத்தியவர்களை அவர் மன்னித்து விட்டார். அதனால் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. இரண்டாமவர், சோர்ந்து நோய்வாய்ப்பட்டு மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அவர், பகைவர்களை மன்னிக்கவில்லை.

    ‘மன்னிப்பு‘ என்ற மதிப்பீட்டிற்கு ‘உரு‘ கொடுத்தவர் இயேசு. இறைவன் நமக்குத்தரும் மன்னிப்பு அனுபவம் என்பது சுழற்சியானது. அவர் நமக்கு கொடுத்ததை நாமும் பிறருக்கு கொடுக்க வேண்டும். இந்த சுழற்சி நின்று விடும் போது மனிதநேயமும், பிறரன்பும் இல்லாமல் போய்விடும். நம்மில் பலர் உடலில், உள்ளத்தில், உறவுகளில் நோயாளிகளாக இருக்கின்றோம்.

    இந்த நோய்களுக்கு காரணிகளாக இருப்பது அறியாமை, பிடிவாதம், மனக்கசப்பு, பகை, வெறுப்பு, கோபம் ஆகியவையே. இதற்கு காரணமானவர்களை நாம் மன்னிக்கும் போது மன்னித்தவர்களை ஏற்று, அன்பு செய்து, அவர்களுக்கு உதவும்போது வானக தந்தையின் மக்களாக நாம் சான்று பகரமுடியும். (மத் 5:45)

    நண்பர்களையும், பகைவர்களையும் ஒரே விதமாக பார்க்கும் மனப்பக்குவம் மன்னிப்பின் முழுமையை காட்டுகிறது. மன்னிக்கும் போது மனதில் ஆற்றல் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மன்னிப்பு ஒரு அருமருந்து. நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்காத போது நம்மை இறைவன் மன்னிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? “பிதாவே, இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்“ (லூக் 23:34) என்றார் இயேசு.

    எனவே, பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். நாம் மாறினால் இந்த உலகமே மாற்றமடையும். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

    டி.செபாஸ்டின், வேதியர், புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல்.
    ×