என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நீங்கள் தொடங்கிய காரியங்களில் ஏற்படும் இழுபறி பிரச்னைகள் தீர, தினமும் அந்த காரியத்தை தொடங்கும் முன் கணபதியின் 108 போற்றி துதிகளை பாடி தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
முழுமுதல் கடவுள் விநாயக பெருமாள் அனைத்து வினைகளையும் தீர்த்து நல் வழி அருள்பவர். நமக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிச்சயம் அதற்கான தீர்வு உண்டு. நாம் எந்த விஷயத்தை தொடங்கினாலும் அதற்கான சரியான நேரத்தில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். அப்படி நீங்கள் தொடங்கிய காரியங்களில் ஏற்படும் இழுபறி பிரச்னைகள் தீர, தினமும் அந்த காரியத்தை தொடங்கும் முன் கணபதியின் 108 போற்றி துதிகளை பாடி தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
1. ஓம் அத்தி முகனே போற்றி
2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
3. ஓம் அம்மையே அப்பா போற்றி
4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
5. ஓம் அமரர்கள் கோனே போற்றி
6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
7. ஓம் அங்குச பாஸா போற்றி
8. ஓம் அரு உருவானாய் போற்றி
9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி
10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி
13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி
14. ஓம் ஆதி மூலமே போற்றி
15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
16. ஓம் ஆரா அமுதா போற்றி
17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
18. ஓம் இடையூறு களைவாய் போற்றி
19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
21. ஓம் ஈசனார் மகனே போற்றி
22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி
23. ஓம் உத்தமக் குணாளா போற்றி
24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
25. ஓம் உண்மை நெறியாளா போற்றி
26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி
31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
33. ஓம் எண்குண சீலா போற்றி
34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி
36. ஓம் ஏக நாயகனே போற்றி
37. ஓம் எழில் மிகு தேவே போற்றி
38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி
40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி
43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
44. ஓம் முழு முதற் பொருளே போற்றி
45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி
46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
47. ஓம் கணத்து நாயகனே போற்றி
48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
49. ஓம் கலைஞானக் குருவே போற்றி
50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
51. ஓம் கற்பக களிறே போற்றி
52. ஓம் கண்கண்ட தேவே போற்றி
53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி
54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி
55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
57. ஓம் சர்வ லோகேசா போற்றி
58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
59. ஓம் சுருதியின் முடிவே போற்றி
60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
62. ஓம் நாதனே ,கீதா போற்றி
63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி
65. ஓம் தரும குணாளா போற்றி
66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
67. ஓம் தூயவர் துணைவா போற்றி
68. ஓம் துறவிகள் பொருளே போற்றி
69. ஓம் நித்தனே ,நிமலா போற்றி
70. ஓம் நீதி சால் துரையே போற்றி
71. ஒம் நீல மேனியனே போற்றி
72. ஓம் நிர்மலி வேனியா போற்றி
73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
80. ஓம் முத்தியை தருவாய் போற்றி
81. ஓம் வேழ முகத்தாய் போற்றி
82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி
84. ஓம் வேதாந்த விமலா போற்றி
85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி
86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
87. ஓம் செல்வம் தருவாய் போற்றி
88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி
90. ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி
91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி
92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
93. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி
94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி
95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி
96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
98. ஓம் அமிர்த கணேசா போற்றி
99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
100. ஓம் வலம்புரி விநாயகா போற்றி
101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி
102. ஓம் சித்தி விநாயகா போற்றி
101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
104. ஓம் சுந்தர விநாயகா போற்றி
105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி
106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி
107. ஓம் ஆபத் சகாயா போற்றி
108. ஓம் அமிர்த கணேசா போற்றி
கணபதியை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்.

வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
களக்காடு வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கடந்த 27-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி முடிவடைவதை முன்னிட்டு, வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படும் என்றும், அன்று முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
இதேபோல் திருக்குறுங்குடி வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
இதையொட்டி கடந்த 27-ந்தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து, 31-ந்தேதி சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் முடிவடைந்தவுடன் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்கு யானைகளில் தீர்த்தம் கொண்டு வந்தனர்.
நேற்று காலையில் பரிவார கலசங்களுக்கு கலாகர்ஷணம், பஞ்சமூர்த்தி பூஜைகளும் நடைபெற்று, பின்னர் மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
யாகசாலை பூஜையை திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம்26-வது குரு சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
அப்போது பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் மற்றும் ஹோம குண்டங்களில் வைக்கப்பட்டுள்ள பூரண கும்பங்களுக்கு மகா தீபாராதனை நடந்தது.
முன்னதாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைக்கு பூரண கும்பங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
தொடர்ந்து யாகசாலையில் கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்து முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் காலம், நாளை(சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு 4-ம் காலம், மாலை 5 மணிக்கு 5-ம் காலம் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.
தொடர்ந்து நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 5 மணிக்கு பரிவார யாகங்கள், பூர்ணாகுதி நடந்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து 7 மணிக்கு பிரதான மூர்த்திகளுக்கு மகாபூர்ணாகுதி நடந்து, காலை 7.15 மணிக்கு கடம் புறப்பாடும், 8.15 மணிக்கு கோபுரங்கள், விமானங்களுக்கும், 8.30 மணிக்கு மூலமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் மாலை 4 மணிக்கு மகாஅபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து வருகிற 8-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற இருக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

நாம் எல்லாரும் மரணமே நமக்கு வரக்கூடாது என்று விரும்புவோம், ஆனால் இயேசுவோ, மரணம் அடைய வேண்டும் என்றே விரும்பி அதற்காகவே பிறந்தவர்.
இயேசுவுக்கு அன்பானவர்களே.. சமீபத்தில் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடிய நாம், கிறிஸ்துவின் மனநிலையோடு இருப்பதே முக்கியம். ‘கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையராவீர்கள்’ என்று, உரோமையர்; 8:10 சொல்லுகிறது. கிறிஸ்துவுக்குள் இருந்த மனநிலை உங்களுக்குள்ளும் இருக்கட்டும் என்று வேதம் சொல்லுகிறது. இயேசு இந்த உலகில் வாழ்ந்தபோது அவருடைய வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியது. இந்த நாளில் அவற்றைக் குறித்து சிந்தித்து, அவரைப் போல வாழ முயற்சி செய்வோம்
இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவரும், இந்த உலகம் மிகவும் நல்லவர்கள், நேர்மையானவர்கள், பணக்காரர்கள், படித்தவர்கள் என்று யாரை அடையாளம் காட்டுகிறதே, அவர்களுடனே நட்பு பாராட்ட விரும்புகிறோம், ஆனால் இயேசுவோ, நீதீமான்களை அல்ல பாவிகளையே தேடிவந்தேன் என்று சொல்லுகிறார்; மேலும் (மத்தேயு 9:11) இதைக்கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து உங்கள் போதகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் உண்பதேன் என்றனர் என்ற வார்தையின் படி, அவர் பல காரணங்களால் பிறரால் புறக்கணிக்கப்பட்டவர்களை தேடி சென்று அவர்களையும் இறைவனின் பார்வைக்கு உகந்தவர்களாய் உயர்த்தி வைத்தார்.
நாம் எப்போதும் சுயநலத்தோடு நம்மைப்பற்றி மட்டுமே சிந்தித்து, கொண்டு இருக்கிறோம். ஆனால் தனது பிறப்பு முதல் இறப்பு மட்டுமல்ல, இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்று இறைவனின் அருகில் வீற்றிருக்கும் இந்நாளிலும், மற்றவர்களின் வாழ்வு உயர வேண்டும், துயரபடுவோர் விடுதலை பெற வேண்டும், உலகில் உள்ள ஒவ்வொருவரும் மீட்பை பெற்று பரலோகத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு பிறருக்கு நன்மை செய்பவராக திகழ்கிறார்.
சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்று சொல்லி தனது வரிப்பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்தியதன் வாயிலாக, ஒவ்வொருவரும் இறை சட்டத்தையும், உலக சட்டத் திட்டங்களையும் மீறாமல் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதை வெறும் வார்த்தையால மட்டும் அல்ல செயலாலும் வலியுறுத்தி கூறுகிறார்.
பிரச்சினைக்குரிய தருணங்களிலும் இயேசு தனது வல்லமையை அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் தனது வாழ்விலும், மரணத்திலும் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதிலே ஆர்வமாய் இருந்தார். அதனால் தான் அவர், ‘‘அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்’’ என்று கூறினார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அவருக்கு இருந்த ஆர்வத்தினால்தான், சாவை ஏற்கும் அளவிற்கு அதுவும் பிறரால் இழிவாக கருதப்பட்ட சிலுவை சாவையே ஏற்கும் அளவிற்கு கீழ்படிந்தார் என்று வேதம் சொல்லுகிறது.
இயேசுவின் பிறப்பும் மாட மாளிகையிலே அல்லது வசதி படைத்த இடத்திலோ இல்லாமல் எளிமையான ஒரு மாட்டுத் தொழுவத்தில் அமைந்தது. அதே போல் அவரது இறப்பிற்கு பிறகு அவர் உடல் வைக்கப்பட்ட இடம் அவருக்கு சொந்ததமானதாக இருக்கவில்லை.
நாம் எல்லாரும் மரணமே நமக்கு வரக்கூடாது என்று விரும்புவோம், ஆனால் இயேசுவோ, மரணம் அடைய வேண்டும் என்றே விரும்பி அதற்காகவே பிறந்தவர். நாம் எல்லாரும் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்வோம். ஆனால் இயேசுவை கைது செய்ய வந்தபோது, இயேசுவின் சீடர் சீமோன் பேதுரு, தனது வாளை உருவி ஒரு போர்வீரரின் காதை வெட்டினார்.
அப்போது இயேசு, சீமோன் பேதுருவை நோக்கி, “உன் வாளை உன் உறையில் போடு. நான் கேட்டால் பன்னிரண்டு பெரும்படைகளை என் தந்தை அனுப்புவார்” என்று சொன்னார். (ஒரு பெரும் படை என்பது 6000 வீரர்களை கொண்டது. அந்த படையில் இருக்கும் ஒரு வீரர், ஒரே இரவில் 1,85,000 எதிரிகளை வீழ்த்தினார் என்று வேதம் சொல்லுகிறது). அந்த இக்கட்டான நிலையிலும், இயேசு தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் தன்னை தாழ்த்தி தந்தையின் சித்தத்திற்கு தம்மையே கையளித்தார்.
இந்த உலகம் பெருமையாக கருதுவதை எல்லாம் ஆண்டவர் வெறுத்து நமக்கு ஒரு உன்னதமான வாழ்வை வெளிப்படுத்தி சென்று இருக்கிறார். எனவே நாமும் இறைவனின் சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த உலகில் வாழும் ஏழை, எளிய, இந்த சமூகத்தால் புறக்கணித்து தள்ளப்பட்ட மக்களை நேசித்து இயேசு பிறப்பின் உன்னத நோக்கத்தை நமது வாழ்வில் இந்த புத்தாண்டிலிருந்து வெளிப்படுத்துவோம்.
சி.கிறிஸ்டோ, சென்னை.

பழனி முருகன் கோவிலில், சீர்வரிசை பொருட்களை படைத்து பழங்குடியின மக்கள் வழிபட்டனர். பாரம்பரிய நடனம் ஆடி அவர்கள் அசத்தினர்.
பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தைப்பூசத்திருவிழா முடிவடைந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அதன்படி நேற்றும் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக பஸ்நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், தேன், தினைமாவு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை மூங்கில்நார் கூடைகளில் பெண்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தனர்.
பின்னர் பாதவிநாயகர் கோவில் முன்பு சீர்வரிசை பொருட்களுடன் குறவர் கூத்து, வேலன் ஆட்டம், காவடி ஆட்டம் உள்பட பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். இது, அங்கு வந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து முருகன் கோவிலுக்கு சென்று சீர்வரிசை பொருட்களை படைத்து வழிபட்டனர். இதுகுறித்து வனவேங்கை கட்சி மாநில தலைவர் இரணியன் கூறுகையில், குறவர் மகள் வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்ததால் தாய் வீட்டு சீதனமாக மலைப்பகுதியில் விளையும் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தரிசனம் செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் வழிபட உள்ளோம். பூர்வீக தமிழ்குடி மக்களாகிய எங்களுக்கு அறுபடை வீடுகளில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது பழனி பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தி, கோகிலாவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

இன்றைய சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகப்பெருமானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வேதனையும் துக்கமும் காணாமல் போகும்.
சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி விசேஷம். முருகப்பெருமானுக்கு மாதந்தோறும் சஷ்டியும் கார்த்திகையும் சிறப்பு வாய்ந்தது. பெருமாளுக்கு ஏகாதசியும் மகத்துவம் வாய்ந்தது. அதேபோல், விநாயகப் பெருமானை வழிபட சங்கடஹர சதுர்த்தி நாள் மிக முக்கியமானதொரு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி நாளில், காலையில் இருந்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். மேலும் அம்மன் ஆலயங்கள், சிவாலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளுக்கும் சென்று வழிபடலாம்.
அப்போது, பிள்ளையாரப்பனுக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம். அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது..
இன்று 4.2.22 வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி. தை மாத சங்கடஹர சதுர்த்தி. ஆகவே, இன்றைய தினம், சங்கடஹர சதுர்த்தியில், மாலையில் ஆலயம் செல்லுங்கள். ஆனைமுகனை வணங்குங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்களை வழங்கி வழிபடுங்கள்.
உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான்! கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார். நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவார். இழந்த உத்தியோகத்தையும் பதவியையும் கெளரவத்தையும் பெற்றுத் தருவார் பிள்ளையாரப்பன்!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 22 - ந்தேதியில் இருந்து மார்ச் மாதம் 3 - ந்தேதி வரை நடக்கிறது. பிப்ரவரி மாதம் 20 - ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. தூய்மைப்பணி முடிந்ததும் மாலை 3 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பிரம்மோற்சவ விழா வாகனச் சேவை விவரம் வருமாறு: -
22 - ந்தேதி மாலை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு ஹம்ச வாகனச் சேவை, 23 - ந்தேதி காலை சூரிய பிரபை வாகனச் சேவை, இரவு சந்திர பிரபை வாகனச் சேவை, 24 - ந்தேதி காலை பூத வாகனச் சேவை, இரவு சிம்ம வாகனச் சேவை, 25 - ந்தேதி காலை மகர வாகனச்சேவை, இரவு சேஷ வாகனச் சேவை, 26 - ந்தேதி காலை திருச்சி உற்சவம், அதிகார நந்தி வாகனச் சேவை, 27 - ந்தேதி காலை வியாக்ரா வாகனச் சேவை, இரவு யானை வாகனச் சேவை, 28 - ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனச் சேவை, இரவு குதிரை வாகனச் சேவை.
மார்ச் மாதம் 1 - ந்தேதி காலை தேரோட்டம் (போகி தெரு), இரவு நந்தி வாகனச் சேவை, 2 - ந்தேதி காலை புருஷா மிருக வாகனச் சேவை, மாலை சிவன் - பார்வதி திருக்கல்யாண உற்சவம், இரவு திருச்சி உற்சவம், 3 - ந்தேதி காலை நடராஜர் ராவணாசூர வாகனச் சேவை, சூரிய பிரபை வாகனச் சேவை, திரிசூல ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான சோமஸ்கந்தர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதில் பங்கேற்று வழிபட பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து ஏகாந்தமாக நடக்கிறது.

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த ஆலயத்தில் அருளும் குருவாயூரப்பன், பலருக்கும் அருள் செய்தவர்.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த ஆலயத்தில் அருளும் குருவாயூரப்பன், பலருக்கும் அருள் செய்தவர். அந்தக் கதைகள் அனைத்தும் தல வரலாற்றில் உள்ளன. அப்படி ஒன்றை இங்கே பார்ப்போம்.
குருவாயூரப்பனின் மீது அதிக பக்தி கொண்டவராக இருந்தார் ஒரு மூதாட்டி. அவர் தினந்தோறும் காலையும், மாலையும் குருவாயூரப்பனின் சன்னிதிக்கு வந்து அவரை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை நேர தரிசனம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பெருங்காற்றுடன் கன மழை பெய்தது. அந்த நாட்களில் சாலையோர விளக்குகள் கிடையாது என்பதால், அந்த மூதாட்டி இருளில் வழிதவறிவிட்டார். அதனால் வருத்தம் அடைந்த மூதாட்டி, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு தென்பட்ட ஒரு சிறுவன், “என்ன பாட்டி வழி தவறி விட்டீா்களா? கவலைப்படாதீர்கள். நான் கொண்டு போய் உங்களை வீட்டில் சேர்த்துவிடுகிறேன்” என்று கூறினான்.
ஓரமாக ஒதுங்கக்கூட இடம் இல்லாத காரணத்தால் இருவரும் நனைத்தபடியே மூதாட்டியின் வீட்டை அடைந்தனர். வீட்டிற்கு வந்ததம், சிறுவனுக்கு நன்றி கூறிய மூதாட்டி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுவன் “கோபாலன்” என்று பதிலளித்தான்.
உடனே மூதாட்டி, அந்தச் சிறுவனின் தலையை துவட்ட துணி கொடுத்ததோடு, “நீ செய்த உதவிக்கு கைமாறாக, நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றார்.
“எனக்கு எதுவும் தேவையில்லை. மழையில் நனைந்ததால் உடை முழுவதும் நனைந்து விட்டது. ஈரமான இந்தத் துணியால் குளிர் வாட்டுகிறது. எனக்கு ஒரு கவுபீனம் (கோவணம்) மட்டும் தாருங்கள்” என்று கேட்டான் சிறுவன்.
தன்னிடம் இருந்த சிவப்பு நிற புடவையில் சிறிய பாகத்தைக் கிழித்து அந்தச் சிறுவனிடம் கொடுத்தாள், மூதாட்டி. அதைப் பெற்றுக்கொண்ட சிறுவன், மழை விட்டதும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
அடுத்த நாள் காலையில் குருவாயூரப்பனின் சன்னிதியை திறக்க வந்த அர்ச்சகர், மூலவருக்கு சிவப்பு நிற கோவணம் அணிவிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதற்கு முந்தைய தினம்தான் கண்ணன் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. இப்போது வெறும் கோவணத்தோடு இறைவன் காட்சியளிப்பது கண்டு அவர் திகைத்துப் போனார்.
வழக்கம்போல காலை தரிசனத்திற்காக கோவிலுக்கு வந்த மூதாட்டி இந்த நிகழ்வைக் கண்டு ஆனந்தம் அடைந்தாள். நேற்று இரவு தனக்கு வழிகாட்டியாக வந்தது குருவாயூரப்பன் என்பதை நினைத்து மகிழ்ந்தாள். முன்தினம் இரவு நடந்த அனைத்தையும் அர்ச்சகருக்கும், அங்கிருந்த அனைவருக்கும் மூதாட்டி கூறினாள். அதற்குச் சான்றாக, தன்னிடம் இருந்த கிழிக்கப்பட்ட சிவப்பு நிறப் புடவையைக் காட்டினாள்.
அந்த புடவையில் இருந்து கிழிக்கப்பட்ட சிறிய பகுதியே, குருவாயூரப்பனின் உடலில் கவுபீனமாக இருப்பதைக் கண்டு அனைவரும் வியந்து போயினர். இறைவனின் அருளையும், திருவிளையாடலையும் நினைத்து ஆனந்தப்பட்டனர்.
அந்த நிகழ்வுக்குப் பிறகு, குருவாயூரப்பனுக்கு இரவு நேர பூஜையில் சிவப்பு நிற கவுபீனம் சாற்றும் வழக்கம் நடை முறைக்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.

திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோவில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது.
புராண பெயர்(கள்): மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி
மூலவர்: உத்வாகநாதர், அருள்வள்ளநாதர்
தாயார்: கோகிலா
தல விருட்சம்:கருஊமத்தை
ஊர்: திருமணஞ்சேரி
மாவட்டம்: மயிலாடுதுறை
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது.
சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25 வது தேவாரத்தலம் ஆகும்.
இங்கு நவகிரகங்கள் கிடையாது. மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோவிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோவில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.
ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள். பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோவில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது. திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை என்பது மிகவும் பிரசித்தமானது. இந்த கல்யாண அர்ச்சனைக்கு (திருமணத்திற்கு முன்பாகவும் திருமணம் முடிந்த பிறகும்) இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மற்றும் மஞ்சள், குங்குமம், சூடம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சர்க்கரை வாங்கி வரவேண்டும். கல்யாண அர்ச்சனை என்பதால் இதில் குறிப்பாக கற்கண்டு இருந்தாக வேண்டும்.
கோவிலுக்குள் இருக்கும் மற்ற மூர்த்திகளையெல்லாம் வணங்கி விட்டு கல்யாணசுந்தரர் சன்னதி முன்பாக இருக்கும் பெரிய ஹாலில் நீண்ட வரிசையாக அமர்கிறார்கள். இதில் கல்யாண வரம் வேண்டுவோர் ஒருவரிசையாகவும், இத்தலத்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத்தம்பதிகள் ஒருவரிசையாகவும் அமர்கிறார்கள். பின்பு பூஜைக்குரிய சாமான்களை அர்ச்சகர் வாங்கிக் கொண்டு கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்கிறார்.சுவாமி மீத சாத்திய மாலையில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறார். தம்பதிகள் தங்களுக்குள் அந்த மாலையை மாற்றிக் கொள்கின்றனர். திருமண வரம் வேண்டி அமர்ந்திருப்போருக்கு அவர்களது கழுத்தில் மாலை அர்ச்சகரால் அணிவிக்கப்படுகிறது.
இங்கு அர்ச்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும், மாலை சந்தோசத்தையும்,விபூதி இஷ்டபூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாச்சத்தையும், மஞ்சள் சுபகாரிய அனுகிரகத்தையும் அளிக்கிறது என்று பொருள்.அர்ச்சனை செய்த பின் தரப்படும் மாலையை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இங்கு தரப்படும் எலுமிச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாறு பிழிந்து ஆகாரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.பின் விரைவில் கல்யாணம் நடக்கும்.கல்யாணம் நடந்தபின் அந்த பழைய மாலையை திரும்பவும் எடுத்து வந்து தம்பதிகள் சமேதமாக இத்தலத்தில் கல்யாணசுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.
அமாவாசை அன்று இத்தலத்துக்கு வர வேண்டும்.இத்தலத்தில் ராகுபகவான் முழு உருவத்தோடு இருக்கிறார்.மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது விசேசம்.இவருக்கு அம்மாவாசை அன்று பால் அபிசேகம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்த பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் கண்டிப்பாக கூடிய விரைவில் கிடைக்கப்பெறுவர். குழந்தை பிறந்தவுடன் இத்தலத்திற்கு மீண்டும் வருகிறார்கள். ஆண்குழந்தைவரம் வேண்டி அதுபடி கிடைக்கப்பெற்றவர்கள் சுவாமிக்கு தண்டக் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.பெண் குழந்தைவரம் வேண்டிக் கொண்டவர்கள் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.ஆசைக்கு குழந்தைவரம் வேண்டியவர்கள் ஓசைக்கு மணிவாங்கிக் கட்டுகிறார்கள்.விளக்கு போல் பிரகாசிக்க குழந்தைவரம் வேண்டியவர்கள் விளக்குகள் வாங்கி வைத்து வழிபடுகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கையும் போடுகிறார்கள்.
சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.
இத்தலவரலாற்றோடு தொடர்புடைய ஊர்கள்: தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது. அக்காட்டில் அம்பிகை பசு உரு ஏற்றும், கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததாகவும் திருக்குளம்பத்தில் ஈசன் பசுவின் குளம்புத்தழும்பை ஏற்றதாகவும், திருவாடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டதாகவும், திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக வேள்வியில் உமை மங்கை தோன்றினார் எனவும் அறிய கிடக்கின்றன. திருவேள்விக் குடியில் திருமணத்திற்காக கங்கணதாரணமும் மங்கள நாமமும் செய்து குறுமுலைப்பாளையில் பாலிகை ஸ்தாபனமும் செய்தும், எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர் கொண்டழைத்தும், திருமணஞ்சேரியில் எம்பெருமான் உமையாளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம் இது.ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சப்த சாகரம் என்பது ஏழு கடலும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்ததாக ஐதீகம்.
சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார்.இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார்.பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார். ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.

பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், லிங்க வடிவில் அம்மன் அருள் பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 28-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.
21 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. சாமி உத்தரவின்பேரில், பழனி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தோப்பில் இருந்து நேற்று முன்தினம் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது.
பின்னர் பழனி வையாபுரிகுளத்துக்கு கம்பம் கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 ரதவீதிகளில் கம்பம் சுற்றி வந்து நேற்று அதிகாலை கோவிலை வந்தடைந்தது. பின்பு 2 மணிக்கு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. அதன்பிறகு கம்பத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் பால், மஞ்சள்நீரை ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியை காண இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில், வருகிற 8-ந்தேதி கொடியேற்றமும், பூவோடு வைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 15-ந்தேதி இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வருகிற 16-ந்தேதி மாலை 4.30 மணி அளவில் நடக்கிறது. 17-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் திருவிழா முடிவடைகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

வழிவிடுவேல்முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் விநாயகருக்கு பழங்களை கொண்டும், கரும்புச்சாறு, பால், இளநீர், திருநீறு, சந்தனம், ஜவ்வாது என்று பல்வேறு பொருட்களை கொண்டும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவிலுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்ட தினத்தையொட்டி பழனி பாதயாத்திரை குழுசார்பில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி வழிவிடுவேல்முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, சப்போட்டா உள்ளிட்ட பழங்கள் கொண்டும், கரும்புச்சாறு, பால், இளநீர், திருநீறு, சந்தனம், ஜவ்வாது என்று பல்வேறு பொருட்களை கொண்டும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பழனி பாதயாத்திரை குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

எல்லாக் கோவில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.
* மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் சாலையில் 15 கிலோமீட்டரில் உள்ளது, கழுகத்தூர். இங்குள்ள சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.
* சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிவபுரி எனும் திருநெல்வாய். இந்த ஊரை அடுத்த திருக்கழிப்பாலை என்ற இடத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலை, காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக் கல்லால் ஆனது.
* திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
* எல்லாக் கோவில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.
* திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது.
* ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆதிரத்தினேஸ்வரர் கோவிலிலும், சென்னை திரிசூலம் கோவிலிலும், தட்சிணாமூர்த்தி வீராசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
* திருவொற்றியூர், தியாகராஜர் - வடிவுடையம்மன் கோவில் வாசலுக்கு முன்புள்ள பக்க மண்டபத்தில் வடக்கு நோக்கி 9 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட பிரமாண்ட வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.