என் மலர்
சினிமா செய்திகள்
- திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் பி.சி.ஸ்ரீராம்.
- இவர் தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே, ஐ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதளத்தில் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் ஒரு நாளிலேயே மின்சார விநியோகத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் செயல்பாட்டிற்கு என்ன நேர்ந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தப்படும். நகரம் முழுவதும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால் இது போல் நடக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.

'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- பேருந்து ஓட்டுநர் பணியை துறந்த கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் புதிய காரை பரிசாக வழங்கினார்.
- ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை என்று கமல் கூறினார்.
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதற்கிடையே, தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியானது. கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்தபோது டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் புதிய காரை பரிசாக வழங்கினார். அதன்பின்னர் பேசிய கமல், ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை. வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை மீண்டும் தொடரவிருக்கிறார் என்றார்.
- தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
- இப்படத்தின் இடண்டாம் பாகம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் ராஜன் கதாப்பாத்திரத்தை தனி படமாக வெளியிட வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாக இன்றுவரை இருக்கிறது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் பலரின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், வடசென்னை 2 படம் குறித்து பேசியுள்ளார். அதில், தற்போது விடுதலை 2ஆம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதன்பின் வடசென்னை 2 ஆம் பாகத்தை இயக்குவேன் என்று உறுதியளித்தார். இந்த அறிவிப்பு வடசென்னை 2 படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
- இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மாமனிதன்.
- இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும் குவித்தது.
கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீனு ராமசாமி, அதன்பின்னர் தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் படங்களை இயற்றி தனக்கான இடத்தை பிடித்தார். மாமனிதன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, 'தர்மதுரை' எனக்கு ஏழாம் தேசிய விருது பெற்றுத் தந்த படமாகும் இதில் இடம்பெற்ற 'ஆண்டிபட்டிக் கணவாக்காத்து' பாடல் 10கோடிப் பார்வையாளர்களைக் கடந்திருப்பது பெருமை மற்றும் பெருமிதம் என்று பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த பதிவை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி, மாமனிதன் திரைப்படத்தை பாவலர் பிரதர்ஸ் திரு,பாஸ்கர் திரு,இளையராஜா திரு,கங்கையமரன் அவர்கள் பிறந்த பண்ணைப்புரத்தில் பதிவு செய்தோம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த வைகை அணையின் மையத்தில் இருக்கும் 'மெட்டூர்' என்ற இலக்கிய ஸ்தலத்தில் 'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து' பாடலை தர்மதுரை படத்திற்காக பதிவு செய்தோம். மூத்தோர்கள் அன்பே ஆசிகள்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.
- செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
- இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
'8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பம்பர்'. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.

கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் வெற்றி பேசியதாவது, முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன். தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன். இயக்குனர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர் நினைத்தது போலப் படம் வந்துள்ளது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
- நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'.
- இப்படத்தில் நடிகர் கமல் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும், இதில் அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'புராஜெக்ட் கே' படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது குறித்து கமல், "50 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும் இருந்தபோது தயாரிப்புத் துறையில் அஸ்வினி தத் என்ற பெயர் மிகப்பெரிதாக இருந்தது. 50 வருடங்களுக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் இணைகிறோம் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'புராஜெக்ட் கே' படத்தில் நடிகர் கமல் வாங்கவுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்காக கமலுக்கு ரூ.150 கோடி சம்பளம் வழங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியானது.
- இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சர்ச்சைகளும் எழுந்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள "நா ரெடி" பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் போதைப் பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என சென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆண்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.

தமிழக அரசும் காவல்துறையும் போதை பொருள் சம்மந்தமாக விழிப்புணர்வு நடத்தி வரும் நிலையில் ரவுடிசத்தை ஊக்கவிக்கும் வகையில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளதால் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
- இதனை நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.
துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதனை வெளியிடவுள்ள பிரபலம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- சூப்பர் சிங்கர் சீசன் 9 வின்னர் டைட்டிலை அருணா தட்டிச் சென்றார்.
- 3-வது இடம் பிடித்த பிரசன்னாவுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
சென்னை:
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று 9-வது சீசன் சமீபத்தில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சூப்பர் சிங்கர் 9 சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப்போட்டியில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், சீசன் 9 வின்னர் டைட்டிலை அருணா தட்டிச் சென்றார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது.
பிரியா ஜெர்சன் இரண்டாவது இடமும், பிரசன்னா 3-வது இடம் பிடித்தனர்.
- மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
- இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற "அலைகடல்" பாடலை "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் சிவாங்கி பாடியிருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இந்த பாடலை பாடிய பாடகி அண்டாரா நாண்டி, இந்த வீடியோவை பகிர்ந்து, இதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் அழகாக பாடியிருக்கிறாய் என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பான ஹாஷ்டாக் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
- விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 முதல் 6 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் சென்னை மற்றும் தலக்கோணத்தில் சிறு சிறு படப்பிடிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவடைந்த பின்னர் விஜய் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் தளபதி68 படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.






