என் மலர்
சினிமா செய்திகள்
- செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
- இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
'8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பம்பர்'. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.

கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.
- ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இந்த பாடல் தற்போது 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- புதுமுக இயக்குனர் பைஜூ பரவூர் ’ரகசியம்’ என்ற படத்தை இயக்கி வந்தார்.
- இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மலையாள திரையுலகின் புதுமுக இயக்குனர் பைஜூ பரவூர் (வயது 42). இவர் 'ரகசியம்' என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வந்தது. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை இயக்குனர் பைஜூ பரவூருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பைஜூ பரவூர் இயக்கிய முதல் படம் வெளியாகும் முன்பு அவர் மரணத்தை தழுவியது அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- டான், பிரின்ஸ், சர்தார், வாரிசு, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ஷோபி.
- இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் ஈர்த்து வருகிறது.
கமலின் வசூல்ராஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடன இயக்குனராக அறிமுகமானவர் டான்ஸ் மாஸ்டர் ஷோபி. அதன்பின்னர் திருப்பாச்சி, சச்சின், ஆறு, குருவி, வில்லன், சிங்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான டான், பிரின்ஸ், சர்தார், வாரிசு, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் ஷோபியின் பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதன்படி புராஜெக்ட் கே படத்தில் நடிக்கவுள்ள பிரபாஸ் மற்றும் கமல்ஹாசனின் புகைப்படங்களை ரசிகர் ஒருவர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்று எடிட் செய்திருக்கிறார். இதனை பகிர்ந்த ஷோபி, இது Fan Made-னு நினைக்குறேன்.. இருந்தாலும்..! தீயாய் இருக்கிறது என்று குறிப்பிடும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கங்குவா படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இதில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சியின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்ததாகவும் இதனை ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய பிரேம் ரக்ஷித் வடிவமைத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் பாடல் மற்றும் பாடலின் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளதாகவும் இதில் சூர்யாவின் தோற்றமும் அவருடைய திரை ஆளுமையும் மிக நேர்தியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் 'டெவில்' படத்தில் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
- இந்த படத்தின் முதல் பாடல் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் இசையமைத்துள்ள "டெவில்" படத்தின் முதல் பாடலான "கலவி" பாடலை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளது. இது தொடர்பான மேக்கிங் புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் முதல் பாடலே இப்படியா? என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘தங்கலான்’.
- இப்படத்தின் ஒத்திகையின் போது விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்தது.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது. இதைத்தொடர்ந்து விக்ரம் சிறிது காலம் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தங்கலான்' திரைப்படத்தில் நடிகர் விக்ரம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் சென்னை படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மதுரையில் ஒரு வாரம் நடைபெறவுள்ளதாகவும் இத்துடன் 'தங்கலான்' படப்பிடிப்பு நிறைவடையும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நடிகர் விஜய் ஆண்டனி ’கொலை’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 'கொலை' திரைப்படத்தின் அப்டேட் வருகிற 28-ஆம் தேதி காலை 10.5 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
- யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர் டி.டி.எப் வாசன்.
- இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், யூடியூபர் டி.டி.எப் வாசன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். அதாவது, இவர் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் 29-ஆம் தேதி டி.டி.எப்.வாசன் பிறந்தநாள் அன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் விஜய் தற்போது 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் அதிகமான விஜய் ரசிகர்கள் சூந்துள்ளனர். ரசிகர்களை காண்பதற்காக விஜய், கேரவனில் இருந்து வெளியே வந்து கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் விஜய்யை சூழ்ந்து கொண்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அப்போது ஆந்திர போலீசார் விஜய்யின் பாதுகாப்பை கருதி ரசிகர்களை கட்டுப்படுத்தினர்.
- கன்னட திரையுலகின் இளம் நடிகர் சூரஜ் குமார்.
- இவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாசின் மகன் ஆவார்.
கன்னட திரையுலகின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாசின் மகன் நடிகர் சூரஜ் குமார் (24). இவர் கடந்த சனிக்கிழமை தன் இரு சக்கர வாகனத்தில் மைசூரில் இருந்து ஊட்டிக்கு சென்றுள்ளார். அப்போது பேகுர் அருகே உள்ள மைசூர்- குண்ட்லுப்பேட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த சூரஜ் குமார் மைசூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சூரஜ் குமாரின் உயிரை காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்கள் பலத்த சேதமடைந்த அவரின் வலது காலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் அவரது மனைவி நேரில் சென்று பார்த்துள்ளனர்.
இளம் நடிகரான சூரஜ் குமார் திரையுலகிற்காக தன் பெயரை துருவன் என்று மாற்றிக் கொண்டார். நடிகர் சூரஜ் குமார் இயக்குனர் அனூப் அந்தோணி இயக்கத்தில் 'பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும், இவர் அடுத்ததாக மலையாள நடிகை பிரியா வாரியர்வுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- நடிகர் சசிகுமார் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை இயக்குனர் ஆர்டிஎம் இயக்குகிறார்.
தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய சசிகுமார், தற்போது படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, பேட்ட உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது.

இதையடுத்து சசிகுமார் காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நவீன் சந்திரா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.
It's the First Schedule Wrap for #FiveStarCreations - #ProductionNo11 ?
— Five Star Creations LLP (@5starcreationss) June 26, 2023
Starring @SasikumarDir @Naveenc212 @iYogiBabu
Written & Directed by @RDM_dir#KasthuriRaja @kathiresan_offl @onlynikil pic.twitter.com/iknHItTTc4






