கொலை படத்தில் மும்முரம் காட்டும் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி ’கொலை’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.
கொலை படத்தில் மும்முரம் காட்டும் விஜய் ஆண்டனி
Published on: 

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 'கொலை' திரைப்படத்தின் அப்டேட் வருகிற 28-ஆம் தேதி காலை 10.5 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com