என் மலர்
நீங்கள் தேடியது "suraj kumar"
- கன்னட திரையுலகின் இளம் நடிகர் சூரஜ் குமார்.
- இவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாசின் மகன் ஆவார்.
கன்னட திரையுலகின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாசின் மகன் நடிகர் சூரஜ் குமார் (24). இவர் கடந்த சனிக்கிழமை தன் இரு சக்கர வாகனத்தில் மைசூரில் இருந்து ஊட்டிக்கு சென்றுள்ளார். அப்போது பேகுர் அருகே உள்ள மைசூர்- குண்ட்லுப்பேட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த சூரஜ் குமார் மைசூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சூரஜ் குமாரின் உயிரை காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்கள் பலத்த சேதமடைந்த அவரின் வலது காலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் அவரது மனைவி நேரில் சென்று பார்த்துள்ளனர்.
இளம் நடிகரான சூரஜ் குமார் திரையுலகிற்காக தன் பெயரை துருவன் என்று மாற்றிக் கொண்டார். நடிகர் சூரஜ் குமார் இயக்குனர் அனூப் அந்தோணி இயக்கத்தில் 'பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும், இவர் அடுத்ததாக மலையாள நடிகை பிரியா வாரியர்வுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.






