துல்கர் சல்மானுக்காக களம் இறங்கிய சிம்பு

துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மானுக்காக களம் இறங்கிய சிம்பு
Published on

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.

'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com