சிவாங்கியை பாராட்டிய "பொன்னியின் செல்வன்" பாடகி

மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
சிவாங்கியை பாராட்டிய "பொன்னியின் செல்வன்" பாடகி
Published on

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற "அலைகடல்" பாடலை "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் சிவாங்கி பாடியிருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இந்த பாடலை பாடிய பாடகி அண்டாரா நாண்டி, இந்த வீடியோவை பகிர்ந்து, இதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் அழகாக பாடியிருக்கிறாய் என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பான ஹாஷ்டாக் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com