'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து'.. விஜய் சேதுபதி பட சுவாரசியத்தை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மாமனிதன்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும் குவித்தது.
'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து'.. விஜய் சேதுபதி பட சுவாரசியத்தை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி
Published on

கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீனு ராமசாமி, அதன்பின்னர் தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் படங்களை இயற்றி தனக்கான இடத்தை பிடித்தார். மாமனிதன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, 'தர்மதுரை' எனக்கு ஏழாம் தேசிய விருது பெற்றுத் தந்த படமாகும் இதில் இடம்பெற்ற 'ஆண்டிபட்டிக் கணவாக்காத்து' பாடல் 10கோடிப் பார்வையாளர்களைக் கடந்திருப்பது பெருமை மற்றும் பெருமிதம் என்று பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த பதிவை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி, மாமனிதன் திரைப்படத்தை பாவலர் பிரதர்ஸ் திரு,பாஸ்கர் திரு,இளையராஜா திரு,கங்கையமரன் அவர்கள் பிறந்த பண்ணைப்புரத்தில் பதிவு செய்தோம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த வைகை அணையின் மையத்தில் இருக்கும் 'மெட்டூர்' என்ற இலக்கிய ஸ்தலத்தில் 'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து' பாடலை தர்மதுரை படத்திற்காக பதிவு செய்தோம். மூத்தோர்கள் அன்பே ஆசிகள்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com