என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivaangi"

    • மலையாள நடிகரான மேத்யு தாமஸ் அடுத்ததாக லவ்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இத்திரைப்படம் வரும் மே 2 ஆம் தேதி வெளியாகிறது.

    சில மாதங்களுக்கு முன் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ். மலையாள நடிகரான இவர் அடுத்ததாக லவ்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் மே 2 ஆம் தேதி வெளியாகிறது.

    இப்படத்தை திலீஷ் கருணாகரன் இயக்கியுளார். இவர் இதற்கு முன் சால்ட் அன் பெப்பர், இடுக்கி கோல்ட் மற்றும் மாயநதி படங்களுக்கு இணை எழுத்தாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    இப்படம் 3டியில் வெளியாக இருக்கிறது. இது ஒரு ஃபேண்டசி நகைச்சுவை திரைப்படமாக அமைந்துள்ள்து. படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஈ- பேசுவது கதாநாயகனான மாத்யூவிற்கு மட்டும் கேட்கிறது. அந்த லவ்லி என்ற ஈ- க்கும் மாத்யூக்கும் உள்ள நகைச்சுவை காட்சிகள் மற்றும் ஜெயிலில் இருக்கும் மேத்யு தாமஸிற்கு ஒரு பந்தமாக இருப்பது அந்த ஈ மட்டும் தான். இந்த லவ்லி என்ற ஈ கதாப்பாத்திரத்திற்கு தமிழ் பின்னணி பாடகியான சிவாங்கி குரல் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் உன்னிமாயா பிரசாத், மனோஜ், அஸ்வதி ராமசந்திரன், பிரஷாந்த் முரளி, பாபுராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
    • இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



    பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற "அலைகடல்" பாடலை "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் சிவாங்கி பாடியிருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இந்த பாடலை பாடிய பாடகி அண்டாரா நாண்டி, இந்த வீடியோவை பகிர்ந்து, இதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் அழகாக பாடியிருக்கிறாய் என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பான ஹாஷ்டாக் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

    ×