என் மலர்
சினிமா செய்திகள்
- 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.
- இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டானர். இதையடுத்து 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.

இந்நிலையில் 'மாமன்னன்' படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்து இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று!! நெஞ்சமே நெஞ்சமே, ஐயா ஏ.ஆர்.ரகுமான் தலைவா! நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம். என்ன ஒரு வரிகள் என்று பதிவிட்டுள்ளார்.
- ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் மேலும் ஒரு இயக்குனர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுராக் காஷ்யப் இதற்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
- இப்படம் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாகும்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்திற்கு மகாராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படபிடிப்பு நேற்று முன்தினம் முதல் புதுவை அதன் சுற்றுப்பகுதியில் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக கனமழையால் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. புதுவை அய்யங்குட்டி பாளையம் பீர் பேக்டரி அருகே ரூ 15 லட்சத்தில் தனி வீடு செட் அமைக்கப்பட்டு அதில் சூட்டிங் நடந்தது. விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சூட்டிங் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார்.
- மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் தற்போது 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதைதவிர ஷாருக்கான் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஷாருக்கான் அமெரிக்கா சென்றிருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காயம் ஏற்பட்டதால் மேற்கொண்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பிவிட்டார். அவர் தற்போது மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருவதாகவும் மருத்துவர்கள் ஷாருக்கானின் இல்லத்திற்கு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.
- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அனிமல்'.
- இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். சமீபத்தில் 'அனிமல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், 'அனிமல்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
- விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’கொலை’.
- இப்படம் வருகிற ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், 'கொலை' படத்தின் மூன்றாவது பாடலான யார் நீ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை எம்.எஸ்.கிர்ஸ்ணா, அஞ்சனா ராஜகோபாலன் குரலில் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாமன்னன் பட குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் பா. இரஞ்சித் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

உண்மையாகவே தனித்தொகுதி எம்.எல்.ஏ க்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திமுக கட்சியில் இன்று வரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம். ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு.
அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். `பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.

பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பா.இரஞ்சித்தின் பதிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, "யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்கு நடந்தாலும் தவறு தவறுதான். அந்த தவறை திருத்திக் கொள்ள எங்கள் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் எங்களை வழிநடத்தி இருக்கிறார்கள். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினும் அப்படிதான் வழி நடத்துகிறார்" என்று கூறினார்.
- சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'.
- இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதை சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதை சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார். அதில், 15 ஆண்டுகள் ஆன இப்படம் என்னை கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் படத்தை இயக்க மிகவும் ஊக்கப்படுத்தியது. சசிகுமார் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
- அரசியலுக்கு நடிகர் விஜய் வருவது கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகி வருகிறது.
- அதை கருத்தில் கொண்டுதான் தொகுதி வாரியாக நலத்திட்ட பணிகளை அவரது நற்பணி மன்றத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகி வருகிறது. அரசியலில் வலுவாக காலூன்ற வேண்டும் என்று நடிகர் விஜய் விரும்புகிறார். அதை கருத்தில் கொண்டுதான் தொகுதி வாரியாக நலத்திட்ட பணிகளை அவரது நற்பணி மன்றத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்பு நடிகர் விஜயகாந்த் அரசியலில் காலடி எடுத்து வைத்தபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினார். முதல் 2 தேர்தல்களிலும் அவர் சுமார் 10 சதவீத வாக்குகளை குவித்தார். 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவர் நிறுத்திய வேட்பாளர்கள் பிரித்த வாக்குகள் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்யும் வகையில் இருந்தன.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் நிறுத்தும் வேட்பாளர்களும் இதே போன்று தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்ற ரகசிய கருத்து கணிப்பு தமிழகம் முழுவதும் சமீபத்தில் ஒரு நிறுவனத்தால் நடத்தப்பட்டது. அந்த முடிவுகள் ஆச்சரியப்படும் வகையில் உள்ளன. பெரும்பாலான தொகுதிகளில் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.
சராசரியாக தமிழகம் முழுவதும் 7 முதல் 10 சதவீதம் வாக்குகளை நடிகர் விஜய் நிறுத்தும் வேட்பாளர்களால் பிரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பெரும்பாலான தொகுதிகளில் நடிகர் விஜய்க்கு தற்போது 3 முதல் 4 சதவீத ஆதரவே உள்ளது. அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவரது பேச்சுக்கள், வாக்குறுதிகள் அவருக்கு இருக்கும் ஆதரவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
விஜய் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியுமா? என்பது கேள்வி குறியே என்று முதல் கட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் நடிகர் விஜய் தொடக்கத்திலேயே கூட்டணி சேர்ந்தால் தான் சாதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விஜய் கூட்டணி சேருவாரா? என்பது யாருக்கும் தெரியாது.
- இயக்குனர் சசிகுமார் 'சுப்ரமணியபுரம்', 'ஈசன்' போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் தற்போது நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சசிகுமாரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் 'ஈசன்' திரைப்படத்தை இயக்கி மற்றுமொரு வெற்றியை கொடுத்தார்.
பின்னர், இயக்கத்திற்கு சிறுது இடைவெளிவிட்ட சசிகுமார் நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, பேட்ட உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது.

சுப்பிரமணியபுரம்
இந்நிலையில், 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சசிகுமார் தான் மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது. சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. நீங்கள் இந்த படத்தை கொண்டாடினீர்கள். இந்த முக்கியமான நாளில் நான் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளேன் என்பதை தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகை நயன்தாரா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- 'டெஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

டெஸ்ட்
'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, நடிகை நயன்தாரா அடுத்ததாக டியூட் விக்கி என்ற யூடியூபர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டு உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இதில் ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து 'சலார்' திரைப்படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் ஒரு புதிய யூனிவர்ஸை உருவாக்குகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதாவது, கே.ஜி.எப். இரண்டாவது பாகத்தின் கிளைமேக்ஸில் யஷ் சென்ற கப்பல் மீது அதிகாலை 5 மணிக்கு தான் தாக்குதல் நடக்கும் என்று சுட்டிக்காட்டும் ரசிகர்கள் இதன் தொடர்ச்சியாக 'சலார்' இருக்குமோ என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.






