

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
'சுப்ரமணியபுரம்' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதை சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார். அதில், 15 ஆண்டுகள் ஆன இப்படம் என்னை கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் படத்தை இயக்க மிகவும் ஊக்கப்படுத்தியது. சசிகுமார் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.